உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 3/8 பக். 17-20
  • பயனுள்ள அந்தக் கற்பனைக் கோடுகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயனுள்ள அந்தக் கற்பனைக் கோடுகள்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீங்கள் இருக்குமிடத்தை மிக நுட்பமாக குறிப்பிடுவது
  • வரலாற்றைக் கொண்ட கோடுகள்
  • பிரயாணமும் கால மண்டலமும்
  • இன்னும் அத்தியாவசியமானது
  • கோட்டை கடத்தல்
    விழித்தெழு!—2002
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
  • எப்போது அவர்கள் அதை வாசிக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பயனடைகின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
விழித்தெழு!—1995
g95 3/8 பக். 17-20

பயனுள்ள அந்தக் கற்பனைக் கோடுகள்

பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்

உலகப் படத்தை அல்லது புவி உருண்டையைப் பாருங்கள். அதன்மேல் எல்லா இடங்களிலும் செங்கோடுகள் மற்றும் கிடைக்கோடுகளின் ஒரு வலைபோன்ற அமைப்பை நீங்கள் கவனிக்கிறீர்களா? உலகப் படத்தின் மத்தியில் கிடைநிலையில் செல்லும் கோடு பூமத்தியரேகை என்பதை நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற கோடுகளைப் பற்றி என்ன? அவை என்னவாக இருக்கின்றன?

இந்தக் கோடுகள் அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் என்றழைக்கப்படும் கோடுகளாகும். உங்கள் தேசப்படத்தில் கிடைநிலையில் செல்லும் அட்சரேகைகள் அல்லது இணை கோடுகள் பூமத்தியரேகையிலிருந்து அதே தொலைவிலுள்ள புள்ளிகளைப் புவியின் மேற்பாகத்தில் இணைகின்றன. மறுபட்சத்தில் தீர்க்கரேகைகள் ஒரு துருவத்திலிருந்து மற்றொன்றுவரையாக வடக்கிலிருந்து தெற்கில் செல்வதாக வரையப்பட்டிருக்கின்றன. பள்ளியில் நீங்கள் புவியியல் பாடங்கள் கற்றுக்கொண்டதிலிருந்து இந்த அளவு உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் இந்தக் கோடுகளின் அமைப்பின் நோக்கம் என்ன? அது எவ்வாறு வேலைசெய்கிறது? அது எவ்வாறு ஆரம்பமானது?

நீங்கள் இருக்குமிடத்தை மிக நுட்பமாக குறிப்பிடுவது

இப்படிப்பட்ட அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகளின் பிணைக்கப்பட்ட ஓர் இணைப்பு வரைச்சட்டமிருப்பதால், அச்சுத்தூரங்கள் என்றழைக்கப்படும் இரண்டு அளவைகள் மூலமாக புவியின் மேற்பாகத்திலுள்ள ஒவ்வொரு இடத்தையும் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, அட்சரேகை 40°42’ வடக்கு மற்றும் தீர்க்கரேகை 74°0’ மேற்கு என்ற குறிப்பை வைத்து நீங்கள் தேசப்படத்தில் நியூ யார்க் நகரத்தைக் கண்டுபிடித்துவிடலாம். இது பூமத்தியரேகைக்கு வடக்கே 40 டிகிரி 42 நிமிடங்களிலும், இங்கிலாந்து, லண்டனிலுள்ள கிரீன்விச் ஆய்வு கூடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கரேகையான, உலகமனைத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பிரதான தீர்க்கரேகைக்கு மேற்கே 74 டிகிரியில் நகரம் அமைந்துள்ளது என்று பொருள்படுகிறது.a இந்த அச்சுத்தூரங்களோடு நொடிகள் சேர்க்கப்படுமானால், ஒரு நகரத்தினுள் இருக்கும் கட்டடங்களைக்கூட கண்டுபிடித்துவிடலாம். உதாரணமாக, நியூ யார்க் நகரிலுள்ள சிட்டி ஹால் அட்சரேகை 40°42’45” வடக்கு மற்றும் தீர்க்கரேகை 74°0’23” மேற்கிலும் அமைந்திருக்கிறது.

இந்தக் கோடுகளின் குறிப்பை வைத்து தூரங்கள்கூட கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக கடல்துறை சார்ந்த தூரம் என்பது தீர்க்கரேகையின் ஓரமாக அட்சரேகையில் ஒரு நிமிடமாக இருக்கிறது. ஒரு துருவம் என்பது 90 டிகிரி அல்லது பூமத்தியரேகையிலிருந்து 5,400 நிமிடங்கள் (90 × 60 = 5,400), அட்சரேகையாக இருப்பதன் காரணமாக, கடல்துறை சார்ந்த தூரம் என்பது துருவத்திலிருந்து பூமத்தியரேகை வரையாக உள்ள தூரத்தில் 1/5,400 ஆகும். இவ்வாறாக, சராசரி கடல்துறை சார்ந்த தூரம் 1.8532 கிலோமீட்டர்.

துல்லியமாக ஒரு இடத்தை நுட்பமாக குறிப்பிட முடிவது, விசேஷமாக மாலுமிகளுக்கு நிச்சயமாகவே ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் ஆகும். ஆனால் இப்படிப்பட்ட ஒரு முறை வெற்றிபெறுவதற்கு அது குறிப்பிட்ட சில திட்டப்புள்ளிகளைக் கொண்டிருக்க வேண்டும். அட்சரேகைகளை அளப்பதற்கு பூமத்தியரேகை அடிப்படைக் கோடாக நியாயமாகவே தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு–மேற்கு தீர்க்கரேகை அளவைகளுக்குத் திட்டப்புள்ளியாக, பிரதான தீர்க்கரேகையின் சரியான இடமாக கிரீன்விச்சைத் தெரிந்துகொண்டதற்குக் காரணம் என்ன? உண்மையில், மனிதன் தேசப்படங்களில் உருவாக்கியிருக்கும் இந்தக் கற்பனையான கோடுகள் எவ்விதமாக ஏற்பட்டன?

வரலாற்றைக் கொண்ட கோடுகள்

பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, கிரேக்க வானாராய்ச்சியாளர் ஹிப்பார்கஸ் புவியின் மேற்பரப்பிலுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க இந்தக் கற்பனைக் கோடுகளின் கருத்தைப் பயன்படுத்தினார். கிழக்கிலும் மேற்கிலும் சரியான இடங்களைக் கண்டறிவதற்குக் கிரேக்கத் தீவாகிய ரோடிஸின் ஊடாகச் சென்ற ஒரு கோட்டினைத் தெரிந்துகொண்டார். பொ.ச. இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வானாராய்ச்சியாளரான க்ளாடஸ் தாலமியே இன்று உபயோகத்திலுள்ள ஒரு அமைப்புக்கு ஒத்த ஒன்றினை உருவாக்கியதாக பொதுவாக கருதப்படுகிறார். அவருடைய அட்சரேகைகள் பூமத்தியரேகைக்கு இணையாக இருந்தன. அவருடைய நாட்களில் மேற்கத்திய உலகின் இறுதி முனையின் ஃபார்ச்சுனேட் ஐல்ஸ் என்றழைக்கப்பட்ட கானரி தீவுகள் ஊடாகச் செல்லும் ஒரு கோடு தீர்க்கரேகைக்கு அவருடைய ஆரம்ப இடமாக இருந்தது.

கிழக்கிலும் மேற்கிலும் சரியான இடங்களை அளவிடுவதற்கு பிரதான தீர்க்கரேகையைத் தெரிவு செய்வதன்பேரில் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்று 1884 வரையாக அடையப்பெறவில்லை. அந்த ஆண்டில் வாஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்ற சர்வதேச தீர்க்கரேகை மாநாடு 25 தேசங்களிலிருந்து 41 பிரதிநிதிகளைக் கூட்டிச்சேர்த்தது. தேவையான வானாராய்ச்சியைப் பிரதான தீர்க்கரேகையில் செய்வதற்கு எல்லா வசதிகளையும் உடைய ஒரு ஆய்வுக்கூடத்தின் வழியாகச் செல்லும் கோட்டினைப் பிரதிநிதிகள் தேர்வுசெய்ய விரும்பினர். மிகப் பெரும்பான்மையர் இங்கிலாந்துக்கு அருகே உள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் கோட்டினைத் தேர்ந்தெடுத்தனர்.

பிரயாணமும் கால மண்டலமும்

தீர்க்கரேகையின் இடமாக கிரீன்விச் தெரிவுசெய்யப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. 18-வது நூற்றாண்டு முதற்கொண்டே, லண்டனின் சுறுசுறுப்பான துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் தலைவர்கள் அட்லான்டிக்கைக் கடந்து மேற்கு திசையில் பயணிக்கையில் சூரியன் அதன் உச்சியை ஒவ்வொரு நாளும் தாமதமாக அடைவதைக் கவனித்து வந்தனர். புவியானது ஒவ்வொரு 24 மணிநேரத்துக்கும் 360 டிகிரி சுழலுவதால், ஒரு மணிநேர வித்தியாசம் கிரீன்விச்சிலிருந்து 15 டிகிரி தீர்க்கரேகையை பிரதிநிதித்துவம் செய்தது என்பதை அறிந்திருந்தார்கள். இதன் காரணமாக, கிரீன்விச் ஆய்வுக்கூடத்திலுள்ள திட்ட கடிகாரம் இயக்கும் மிகச் சரியான காலமானியைப் பயன்படுத்தி, கிரீன்விச் நேரத்துக்கும் உள்ளூர் நேரத்துக்குமிடையே உள்ள வித்தியாசத்தை வெறுமனே கவனிப்பதன் மூலம் திறந்த சமுத்திரத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை நிர்ணயிக்க முடியும். உதாரணமாக, சூரியன் கிரீன்விச் நேரம் பிற்பகல் 3:30-க்கு அதன் உச்சியை எட்டும் இடத்தில் (உள்ளூர் நேரம் 12:00 நடுப்பகல்) அவர்கள் இருந்தால் ஒரு எளிய கணக்கின் மூலம் அவர்கள் கிரீன்விச்சுக்கு மேற்கே 52.5 டிகிரி (15 × 3.5), அதாவது அவர்கள் நியூபெளண்ட்லாந்தின் கிழக்குக் கரையோரமாக இருப்பதை நிர்ணயித்துவிடலாம். அவர்கள் அதே அட்சரேகையில் இருக்கும்பட்சத்தில் இது இப்படியாக இருக்கும்.

ஒரே அட்சரேகையில் இருக்கையில் அல்லது இணையான திசையில் பயணிப்பது எளிய வேலையாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக வட கோளார்த்தத்திலுள்ள கப்பலோட்டிகள் இரவில் பெரும்பாலான நட்சத்திரங்கள் இடம் பெயர்ந்து செல்வதோடு ஒப்பிடுகையில் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் இருப்பதாக தோன்றியதைக் கவனித்தனர். அடிவானத்துக்கு மேலே அந்த நட்சத்திரத்தின் உயரத்தை அளவிடுவதன் மூலம் தாங்கள் வடக்கேயும் தெற்கேயும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றனர் என்பதை மதிப்பிட ஆரம்பித்தனர். திறந்தவெளி சமுத்திரத்தில், அந்த நட்சத்திரம் அதே உயரத்தில் இருந்தவரையில் தாங்கள் கிழக்கே அல்லது மேற்கே பயணிப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

திட்ட புள்ளியாக கிரீன்விச் தெரிவுசெய்யப்பட்டதில் இங்கிலாந்துக்கு மற்ற நன்மைகளும் இருந்தன. அங்கே ரயில் பயண வருகையோடு, தேசத்திற்குள் நேரங்களின் வித்தியாசங்களைப் போக்குவது அவசியமானது. 11:33 மணி ரயிலைப் பிடிப்பதற்காக எக்ஸ்டர் ரயில் நிலையத்துக்கு வந்துசேரும் பயணி அது சுமார் 14 நிமிடத்துக்கு முன்பே புறப்பட்டுவிட்டதை அறியவரும்போது எத்தனை ஏமாற்றமாக இருந்தது! பிரச்சினை? அவர் எக்ஸ்டர் நேரத்தைப் பயன்படுத்தினார்; ரயில்வே நேரம் லண்டன் நேரமாக இருந்தது. கிரீன்விச்சைத் திட்ட நேரமாக நாடு முழுவதும் ஏற்றுக்கொள்வது அந்தச் சிக்கல்களுக்கு முடிவுகட்டியது.

ஐக்கிய மாகாணங்களில் இன்னும் பெரிய பிரச்சினைகள் இருந்தன. பல்வேறு ரயில்பாதைகள் பல்வேறு நேரங்களைக் கடைப்பிடித்தன. இந்த நிலைமை 1883-ல் ரயில்பாதையின் பொது நேர மாநாட்டை நடத்துவதற்கு வழிநடத்தியது. சுமார் 15 டிகிரி தீர்க்கரேகை அல்லது நேரத்தில் ஒரு மணிநேரம் அளவுள்ளதும் ஐக்கிய மாகாண கண்டத்தை உள்ளடக்கும் நான்கு மண்டலப் பிரிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு மண்டலத்திற்குள் இருக்கும் எல்லா பட்டணங்கள் அதே நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுதியாக இந்த மண்டல ஏற்பாடு உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயிற்று. உலகம் 24 கால மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. மையப்புள்ளி 0 மண்டலமாக, கிரீன்விச் தீர்க்கரேகையின் இருபுறங்களிலும் 7 1/2 டிகிரி பரந்து காணப்பட்டது. ஒருவர் கிழக்கு நோக்கி பயணித்திருக்கையில், ஒவ்வொரு மண்டலத்தின் வழியாக கடந்துசெல்லும் போதும் அவர் தன்னுடைய கடிகாரத்தை ஒரு மணிநேரம் தாமதமாக வைப்பார். மேற்கு நோக்கி பயணிக்கையில் தன் கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்கூட்டியே வைப்பார்.

கிரீன்விச்சிலிருந்து உலகம் முழுவதிலும் பாதிவழியில், அக்கறையூட்டும் ஒரு நிலைமை ஏற்படுகிறது. இங்கே 180 டிகிரி தீர்க்கரேகையில், கோட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குக் காலத்தில் 24 மணிநேர வித்தியாசம் இருக்கிறது. இதன்விளைவாக, தேசிய எல்லைகளுக்கு இடமளிப்பதற்காக சிறிய வித்தியாசங்களோடுகூட, 180 டிகிரி தீர்க்கரேகை சர்வதேச தேதி கோடாக ஆனது. மேற்கு திசையில் இந்தக் கோட்டைக் கடந்துவருகையில் ஒரு பயணி ஒரு நாளை இழந்துபோவார். அதேவிதமாக, கோட்டைக் கடந்து கிழக்கு திசையில் பயணிக்கையில், பயணி ஒரு நாளைப் பெறுகிறார்.

இன்னும் அத்தியாவசியமானது

கடற்பயணத்தில் தீர்க்கரேகையைக் காண உதவும் கருவியை கிரீன்விச்சில் சரிபார்த்து பின்னர் தீர்க்கரேகையை கணக்கிடுவதற்காக அதைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நாட்களெல்லாம் கடந்துவிட்டன. நவீன தொழில்நுட்பம் அவற்றையெல்லாம் மாற்றிவிட்டது. வானொலி கலங்கரைவிளக்கங்கள், ரேடார், சர்வதேச தொலைத்தொடர்புகள் அதிக துல்லியமான தகவலை அளிக்கின்றன. என்றபோதிலும், ஒரு விளக்கப்படத்தில் அல்லது நிலப்படத்தில் நீங்கள் இருக்குமிடத்தை நுட்பமாக குறிப்பிடுவது இன்னும் அந்த அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் என்ற கற்பனைக் கோட்டையே சார்ந்திருக்கின்றன. அந்த மிகவும் பிரயோஜனமான கற்பனைக் கோடுகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்.

[பக்கம் 20-ன் பெட்டி/படம்]

கிரீன்விச் திட்ட நேரம்

1675-ல் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்ல்ஸ் “கடற்பிரயாணத்தையும் வானியலையும் முன்னேற்றுவிப்பதற்காக இடங்களின் தீர்க்கரேகைகளைக் கண்டுபிடிப்பதற்கு” இப்பொழுது லண்டனிலுள்ள கிரீன்விச் நகரத்தில் “சிறிய ஒரு ஆய்வுக்கூடம்” அமைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். 4 மீட்டர் நீளமுள்ள ஊசல் குண்டுகளையுடைய புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாடக் கடிகாரங்கள் புவியின் சுழற்சியைப் பற்றி துல்லியமாக கணக்கிடுவதற்காக நிறுவப்பட்டன.

ராயல் ஆய்வுக்கூடத்திலுள்ள விஞ்ஞானிகள் புவி ஒரே சீராக அல்லது மாறாத வேகத்தில் சுழலுவதில்லை என்பதை விரைவில் கண்டுபிடித்தனர். இது ஏனென்றால் சூரியனைச் சுற்றி புவியின் கோள்பாதை முழுமையான வட்டமாக இல்லை, மேலும் புவியின் அச்சு சாய்ந்துள்ளது. இதன் காரணமாக சூரிய நாள்—நடுப்பகல் நடுப்பகலுக்குமுள்ள இடைவெளி—வருடம் முழுவதிலும் அளவில் வித்தியாசப்படுகிறது. கிரீன்விச் கடிகாரம் வேலைசெய்கையில், ஒரு நாளின் திட்ட அல்லது சராசரி நீளத்தை நிர்ணயிப்பது கூடியகாரியமாக இருந்தது.

நடுப்பகல் கிரீன்விச் திட்ட நேரம் என்பது கிரீன்விச் தீர்க்கரேகையில் சூரியன் அதன் உச்சியை எட்டும் நேரமாக இருக்கிறது (லத்தீன், மெரிடியானஸ், மதியம்). இந்த லத்தீன் வார்த்தையின் அடிப்படையில், நடுப்பகலுக்கு முன்னான நேரம் (A. M.) அல்லது முற்பகல் என்றும் நடுப்பகலுக்குப் பின்னான நேரம் (P. M.) அல்லது பிற்பகல் என்றும் ஆனது.

[படங்கள்]

மேலே: கிரீன்விச் ராயல் ஆய்வுக்கூடம்; வலது: கற்களினால் தளம்பாவப்பட்ட முற்றத்தில் பிரதான தீர்க்கரேகை

[அடிக்குறிப்புகள்]

a கோண அளவைகளில், ஒரு டிகிரி (°) 60 நிமிடங்களாக (’) பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு நிமிடமும் 60 விநாடிகளாக (”) பிரிக்கப்பட்டுள்ளது.

[பக்கம் 18-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உலக நேர மண்டலங்கள்

-11 4:00

-10 5:00

-9 6:00

-8 7:00

-7 8:00

-6 9:00

-5 10:00

-4 11:00

-3 12:00

-2 1:00

-1 2:00

0 3:00

+1 4:00

+2 5:00

+3 6:00

+4 7:00

+5 8:00

+6 9:00

+7 10:00

+8 11:00

+9 12:00

+10 1:00

+11 2:00

+12 3:00

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்