உலகத்தைக் கவனித்தல்
மறைமுக புகை குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கிறது
ஒவ்வொரு ஆண்டும் 10-லிருந்து 20 ஆஸ்திரேலிய குழந்தைகளின் மரணத்திற்கு, புகைபிடிக்கும் பெற்றோர்களே காரணமாகலாம் என்று தி வீக்எண்ட் ஆஸ்திரேலியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 500 குழந்தைகளை பற்றிய ஆராய்ச்சியை இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. குழந்தைகளின் நோயிற்கு அவர்களை கவனிப்பவர்களின் சிகரெட் புகையை சுவாசிப்பதே காரணம் என்பதை அதிக இரசாயன சான்றுகளுடன் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். மறைமுக புகைக்கும், சீத சன்னிக்கும், குழந்தையின் காசத்திற்கும், சளிக்காய்ச்சலுக்கும், SIDS-ற்கும் (திடீர் குழந்தை மரண நோய்குறி) தொடர்பு இருப்பதையும் அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. “புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மிகவும் கவலைக்குரியது” என்று அது முடிக்கிறது.
போப்பின் ஆட்சிப்பரப்பை (டையோசிஸ்) பற்றிய அறிக்கை
ரோமைச் சேர்ந்த மத ஆதிபத்தியத்திற்குள் வரும் பகுதிகளின் மதகுருமார், அவர்களுடைய பிஷப்பான போப்பிடம், இந்த வருடம் அவருடன் அவர்கள் நடத்திய வருடாந்தர கூட்டத்தில், அறிக்கையிட சில சோர்வூட்டும் செய்திகளைக் கொண்டிருந்தனர். அவெனீர் என்ற கத்தோலிக்க செய்தித்தாளின்படி, “பயமுண்டாக்கும் வகையில் அவர் கண்காணிப்பிலுள்ள பகுதியில் கிறிஸ்தவ பண்புகள் குறைந்து வருவதையும் 3 சதவீதமே நற்கருணை பெற வருவதையும், திருமணம் செய்ய விரும்புவோரில் 90 சதவீதம் ‘மதத்தைப் பற்றி ஒன்றும் அறியாததையும்’” குறித்து ஒரு மதகுரு புலம்பினார். அந்த மதகுரு தொடர்ந்து கூறுகிறார், “சென்ற வருடம் 18 சவ அடக்கங்கள் நடைபெற்றன, ஆனால் யாருமே அதற்கான ஆலய வழிபாட்டு சடங்குகளை வேண்டுமென்று கேட்கவில்லை.” “பரவலான வளர்ச்சியை கொண்டிருந்த” யெகோவாவின் சாட்சிகள் அங்கு இருந்தது அந்த மதகுருமார் எதிர்ப்படுகிற மற்றுமொரு பிரச்னையாகும் என்று அவெனீர் மேலும் கூறியது. “ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் ரோமை தங்கள் தலைநகராக ஆக்கியுள்ளார்கள்” என்று ஒரு கவலைப்படும் மதகுரு தவறாக கூறியுள்ளார்.
மரணந்தரும் பயிர்
ஐ.மா.-வின் மாநில அரசுத்துறையின்படி, போதை மருந்துகளின் உலக உற்பத்தியானது மிகவும் தீவிரமாய் வளர்ந்து வருகிறது. 1987-லிருந்து 1988 வரை, பின்வரும் அறுவடைகள் அதிகரித்தன: கஞ்சாச்சருகு 22 சதவீத அளவு, அபினி 15 சதவீத அளவு, சணல் செடியின் கொழுந்துகளும் இளம் பகுதிகளும் (ஹஷீஷ்) 11 சதவீத அளவு, நான்கு நாடுகளிலிருந்து வரும் கொக்கா 7.2 சதவீத அளவு. அதிகம் பேர் கைது செய்யப்பட்டாலும், அதிக அளவில் போதை மருந்து கைப்பற்றப்பட்டு அவற்றின் பயிர் அழிக்கப்பட்டாலும், சர்வதேச கூட்டுறவை வாக்களித்த பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் இந்த மரணம் விளைவிக்கும் பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தி நியு யார்க் டைம்ஸின் படி, மாநில அரசுத்துறையின் அறிக்கையானது “போதைப் பொருட்களை எதிர்த்து ஐக்கிய மாகாணங்கள் தனியே போரிட திறனற்ற தன்மையை ஒத்துக்கொள்ளும் வருடாந்தர காரியமாக உள்ளது.”
நான்கு-கால் கோழிகள்
வறுத்த கோழி தொழிலுக்கு எது மிகவும் உகந்தது என கருதப்படுமோ அது ஜப்பானின் ஹிரோஷிமாவிலுள்ள சில இளநிலை-உயர்நிலை ஆசிரியர்களுக்கு கடினமான வேலையானது. ஒரு கோழியின் படத்தை வரையுமாறு 153 மாணவரிடம் சொல்லப்பட்டபோது, 12 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நான்கு கால்களுடைய கோழிகளுடன் வந்தார்கள். உருவமைப்புக்கான ஒன்பது குறிப்புகளுக்காக பரிசோதிக்கும்போது “மூன்று பிள்ளைகள் மட்டுமே கோழிகளைத் திருத்தமாக வரைந்திருந்தனர்” என்று அசாஹி ஷிம்பன் என்ற செய்தித்தாள் கூறுகிறது. சுற்றாய்வை நடத்திய ஆசிரியர் “இயற்கையுடன் கொண்டுள்ள தொடர்பு முன்பை காட்டிலும் இன்று குறைவாக உள்ளது” என்று விளக்குகிறார்.
தாய்லாந்து காடுகளை பாதுகாக்கிறது
குறைந்து வரும் அதன் காடுகளை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, தாய்லாந்து அரசாங்கம் சமீபத்தில் அந்த நாட்டில் மரங்கள் வெட்டுவது அனைத்தையும் தடை செய்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு தாய்லாந்தில் 70 சதவீதமாக இருந்த காடுகள் இப்பொழுது 18 சதவீதமாக குறைந்திருக்கிறது என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். வன பாதுகாப்பாளர் தற்போதைய எண்ணிக்கையை 12 சதவீதம் வரை குறைந்து போடுகின்றனர். நாட்டின் தெற்கே 350 பேரை கொன்ற, அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் சேற்றுச்சரிவுகளுக்கும் பொதுவாக சட்ட விரோதமான மரம் வெட்டுதலே காரணம் என்று சொல்லப்பட்டது. மரம் வெட்டும் தொழிலதிபதிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியிலும் ஒரு தடையை அமுல்படுத்த இந்தப் பேரழிவு அரசாங்கத்திற்கு உதவியது.
விருத்தசேதனம் செய்வதன் நன்மைகள்
விருத்தசேதனம் பற்றிய விஷயத்தில், குழந்தை நல மருத்துவத்தின் அமெரிக்க கல்வி நிலையம் தன் நிலைநிற்கையை மாற்றிகொள்ள வேண்டியிருந்தது. புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளை வழக்கமாக விருத்தசேதனம் செய்யத் தேவைப்படுத்தும் “எந்தச் செல்லுபடியான மருத்துவ ரீதியான அறிகுறிகளும் இல்லை” என்று அந்த வகுப்பினர் 1971-ல் நம்பினர். ஆனால், அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளோ விருத்தசேதனமானது அதிக அபாயகரமானதாகக்கூடிய சிறுநீரகம் மற்றும் சிறுநீர் குழாயை பாதிக்கும் நோய்களைத் தடுக்க உதவலாமென்று காட்டியுள்ளன. ஓர் ஆராய்வில், விருத்தசேதனமாகாத பையன்கள் விருத்தசேதனமாகிய பையன்களைவிட 11 தடவை அதிகமான அளவில் சிறுநீர் குழாய் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புடன் இருந்தார்கள். “விருத்தசேதனம் பலத்த மருத்துவரீதியான நன்மைகளையும் பலன்களையும் கொண்டுள்ளது” என்று அந்தக் குழந்தை நல கல்வி நிலையம் இப்போது கூறுகிறது. விருத்த சேதனத்தைத் தேவைப்படுத்தும் மோசேயின் நியாயப்பிரமாணத்தால் கிறிஸ்தவர்கள் கட்டப்படவில்லையென்றாலும், அதற்கு கீழ்ப்படிந்த பூர்வீக இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் நடைமுறையான நன்மையளித்தது என்று புதிய கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சீனாவில் கிறிஸ்தவமண்டலம்
நியூஸ் டைஜெஸ்ட் என்னும் ஓர் அதிகாரப்பூர்வமான சீன செய்தித்தாளை குறிப்பிட்டு, தி நியூ ஜிலாந்து ஹெரால்ட் கூறுகிறது: “சமீப ஆண்டுகளில் சீனாவில் கிறிஸ்தவம் வளர்ந்து ஆதரவு பெற்றுள்ளது.” மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நாட்டில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட பெரும்பாலானவர்கள் முதியோர்கள், படிக்காதவர்கள் மற்றும் கொஞ்சம் படித்தவர்கள் மத்தியில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சீனாவின் எழுபது இலட்சம் பேரின் பெரும் பகுதி ஏறக்குறைய அவர்களில் 25 சதவீதம் மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்களாகிய “அறிஞர்களாக” இருப்பதாக மிகவும் அண்மையில் நடந்த ஒரு சுற்றாய்வு காட்டுவதாக டைஜெஸ்ட் கூறுகிறது. (g89 6/22)