உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 9/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “மெளனமாயிருக்கக் கூலி”
  • தாய்க்கு ஆவலைத் தூண்டும் புத்திமதி
  • அற்புதமான தண்ணீர்?
  • ஆயுத வியாபாரம்
  • பைபிள் அச்சடிப்பு
  • மலேரியாவை மருந்துகளால் குணப்படுத்துவது கடினமாகிறது
  • அலுவலக திருடர்கள்
  • சீனாவின் மக்கள்தொகை வளருகிறது
  • காதலுக்கு எதிராக எய்ட்ஸ்
  • நுண்ணிய கருவிகள்
  • தாய்லாந்தில் எய்ட்ஸ்
  • வன்முறை குடும்பத்தைப் பாதிக்கும்போது
    விழித்தெழு!—1993
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1990
  • உலகைகவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 9/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

“மெளனமாயிருக்கக் கூலி”

சராசரியாக ஐந்து வருட காலம் வெளிவந்த மாதர் பத்திரிகைகளை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் (AMA) ஆய்வு செய்து, புகைபிடித்தலினால் ஆரோக்கியத்திற்கு விளையும் தீங்குகளை வெளிப்படுத்தும் தகவல்களை அவை தணிக்கை செய்வதாக வெளிப்படுத்தியது. ஆய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் எடை குறைப்பு, திட்ட உணவின் பேரிலான கட்டுரைகள் புகைபிடித்தலின் பேரிலான கட்டுரைகளைவிட பத்து மடங்கு அதிகமாக இருந்தன. AMA சங்கத்தின் தலைமை செயலாளர் புகைபிடித்தலின் ஆபத்துகளை வேண்டுமென்றே இப்பத்திரிகைகள் அசட்டை செய்வதாகக் குற்றஞ்சாட்டி புகையிலை விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று புதுப்பிக்கப்பட்ட அழைப்பு விடுத்தார். “மெளனமாயிருக்க இப்பத்திரிகைகளுக்குக் கூலி கொடுக்கப்படுகிறது அவைகள் மெளனமாயிருக்கின்றன. அது வெட்கப்படுவதற்குரிய பொறுப்பற்ற செயலாய் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.

தாய்க்கு ஆவலைத் தூண்டும் புத்திமதி

ஒரு ரோமன் கத்தோலிக்க தாய் ஆஸ்திரேலிய செய்தித் தாளாகிய சண்டே டெலிகிராஃப்-ல் (Sunday Telegraph) ஒரு பகுதிக்கு ஆசிரியராகப் பணிபுரியும் ஒரு கத்தோலிக்கப் பாதிரியினிடம் புத்திமதி கேட்டு எழுதியபோது அவளுக்கு அநேகமாக எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது. அவளுடைய விவாகமான மூத்த மகள் கத்தோலிக்க மதத்தில் வளர்க்கப்பட்டிருந்தபோதிலும் யெகோவாவின் சாட்சியாக ஆகிவிட்டதைக் குறித்து வருத்தத்தை அவள் தன் கடிதத்தில் எழுதியிருந்தாள். பாதிரியின் பதிலில் ஆவலைத் தூண்டும் புத்திமதி இருந்தது. அவர் எழுதியதில் ஒரு பகுதி: “வாழ்க்கையின் தன்னுடைய பாதையை அமைத்துக்காள்ள . . . அவளுக்கு சுயாதீனம் வேண்டும். அவள் ஏதோ ஒரு மதத்தைக் கடைப்பிடிக்கிறாள் என்ற உண்மையின் மூலம் ஆறுதல் அடையுங்கள். கடைப்பிடிக்காத கத்தோலிக்கராயிருப்பதைவிட கடைப்பிடிக்கும் யெகோவாவின் சாட்சியாக இருப்பது மேலானது.” (g89 7/8)

அற்புதமான தண்ணீர்?

“லூர்துவிலுள்ள தண்ணீரின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் பற்றி வித்தியாசமான கருத்துகளை போப்பும் லூர்துவின் பேராயரும் கொண்டிருக்கின்றனர். அவற்றை அவர்கள் ஒரே நாளில் வெளிப்படுத்தினர்,” என்று இத்தாலிய செய்தித்தாளான லா ஸ்டம்பா (La Stampa) சமீபத்தில் தெரிவித்தது. ஃபிரான்சிலுள்ள லூர்து மாதா பூசை ஒன்றில் போப் பேசுகையில், அந்த ஊற்றில் இருந்து வெளிவரும் தண்ணீர் “மரியாளின் அற்புதமான, மிக தாராளமான, இயற்கைக்கு மாறான செய்கையின் மெய்யான கருவியாயிருக்கிறது என்றும் அற்புதமான தன்மையுடைய லூர்துவிலுள்ள ஊற்றின் தண்ணீர்” இயேசு ஒரு முறை ஒரு மனிதனை சுகப்படுத்த உபயோகித்த சீலோவாம் குளத்திற்கு ஒப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். இருப்பினும் அதே நாளில் லூர்தின் பேராயர் அத்தண்ணீர் ஆதாயத்திற்கு விற்கப்படுவதைப் பற்றி கவலையுடன் சொன்னார்: “அது மந்திர சக்தியிள்ள தண்ணீர் அல்ல, உண்மையில் அதை ‘அற்புதமான தண்ணீர்’ என்று அழைப்பது மோசம்போக்குவதாயிருக்கிறது.” அந்தத் தண்ணீர் “கிருமிகள் அற்று சுத்தமாயிருப்பதில்லை. ஊறிவரும் மண்படிவங்கள் அதன் தூய்மையைக் கெடுத்துவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டதாயிருக்கிறது,” என்று இத்தாலியன் பனோரமா பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால் லூர்துவில் உள்ள தண்ணீரை வியாபாரம் செய்பவர்களுக்கு அத்தண்ணீர் “டெச்சாஸில் அல்லது ஈரானில் எண்ணெய் இருப்பதைப் போன்றே பணம் சம்பாதிக்க முக்கிய வழியாக இருக்கிறது,” என்று பனோரமா பத்திரிகை கூறுகிறது.

ஆயுத வியாபாரம்

ஜெர்மன் குடியரசில் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்று துப்பாக்கிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள், வெடி மருந்துகள், இராணுவ மின் அணுக் கருவிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுதல் ஆண்டுக்கு 3,000 கோடி ஜெர்மன் மார்க்குகள் மதிப்புள்ளவை அல்லது அத்தேசத்தின் மொத்த ஏற்றுமதியில் 5 சதவீதம் இருப்பினும், இராணுவ பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஜெர்மனி ஐந்தாவது ஸ்தனத்தையே வகிக்கிறது. ஐக்கிய மாகாணங்கள், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ், இங்கிலாந்து போன்றவை முன்னணியில் உள்ளன. இக்கருவிகளெல்லாம் எங்கே போகின்றன? ஹாம்பர்கில் உள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் சொல்கிறபடி 1973-க்கும் 1980-க்கும் இடையே ஜெர்மனியால் ஏற்றுமதி செய்யப்பட்ட தளவாடங்களின் 60 சதவீதம் யுத்தங்களில் அல்லது உள்நாட்டு கலவரங்களில் ஈடுபட்டிருந்த தேசங்களுக்குச் சென்றன. “சுமார் 3,00,000 ஆட்கள் ஈடுபட்டிருக்கும் போரயுத தொழிலைப் போல வேறு எந்தத் தொழிலும் இந்த அளவுக்கு பொது மக்களின் பார்வைக்கு மறைக்கப்பட்டதாயில்லை,” என்று ஜெர்மன் பத்திரிகையான சடூட்ஷெ ஜீடுங் (Suddeutsche Zeitung) சொல்கிறது.

பைபிள் அச்சடிப்பு

குறைந்தபட்சம் பைபிளின் சில பாகங்களாவது அச்சடிக்கப்பட்டிருக்கும் மொழிகள் கடந்த வருடம் 23-ஆக உயர்ந்து மொத்த எண்ணிக்கையை 1907-ஆக ஆக்கியது. முழு பைபிளும் இப்பொழுது 310 மொழிகளில் முன்பிருந்ததைவிட அதிகமாக 7 மொழிகளில் கிடைக்கிறது. இப்புதிய மொழிகளில் கரோ பட்டக், இக்கேகுசி, குஸ்கோ குவேசுவா, மாலவி சி டோங்கா, ஓட்ஜிஹரேரோ, ரூகுவோங்காலி, டைகிரே போன்றவை அடங்கும்.

பைபிள் அநேக தேசங்களில் அச்சடிக்கப்பட்ட போதிலும் உலகின் மிகப் பெரிய பைபிள் ஏற்றுமதி தேசமாகக் கொரியா ஆகியிருக்கிறது. சென்ற வருடம் 43 இலட்சம் பைபிள்கள் 119 மொழிகளில் 91 தேசங்களுக்கு அனுப்பப்பட்டன என்று கொரியா டைம்ஸ் (Korea Times) சொல்லுகிறது. அத்தேசத்தின் பைபிள் ஏற்றுமதி வருடத்திற்கு 20 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கொரியாவுக்குள் இருக்கும் பைபிள் விநியோகிப்பு உலகத்திலேயே உயர்ந்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. இரண்டு வருடத்திற்குள் தனி தேசமாக பைபிள் உற்பத்தியின் மொத்த எண்ணிக்கையில் ஐக்கிய மாகாணங்களை எட்டிவிட கொரியா எதிர்பார்க்கிறது. (g89 7/22)

மலேரியாவை மருந்துகளால் குணப்படுத்துவது கடினமாகிறது

மலேரியாவைக் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் வழிகளைக் கண்டுபிடிக்க பல்லாண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் பின்னும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வியாதி அதிகரித்து வருவதாக தோன்றுகிறது. மேலுமாக, மருந்துகளால் அதைக் குணப்படுத்துவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைவரான டாக்டர் பிலிப் வான் ஹீர்டன் “மலேரியா கிருமி நம் உடலின் தற்காப்பு முறையை குழப்பிவிடுவதற்கு எல்லாத் தந்திரங்களையும் அறிந்திருக்கிறது” என்று சொன்னார். இப்பொழுது உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் திறம்பட்டவையாக இருக்கக்கூடும் என்றாலும் “மூன்றாம் உலக நாடுகளுக்கு உதவ முடியாதபடி அது அதிக விலையுயர்ந்ததாக இருக்கும்,” என்று அவர் சொன்னார். உலக சுகாதார ஸ்தபனத்தின் (WHO) பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்காவில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளை மலேரியா கொல்லுகிறது.

அலுவலக திருடர்கள்

வேலை செய்யுமிடங்களில் நடத்தப்படும் களவுகள் ஜெர்மன் குடியரசில் அதிகரித்திருக்கிறது. ஒரு வருடத்திற்குள் அலுவலகங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் 1,30,000 களவுகள் நடந்ததாகக் காவல் துறைக்குப் புகார் செய்யப்பட்டது. இதில் முக்கிய பிரச்னை: அநேக அரசு அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும், வெளி ஆட்கள் எவ்விட தடையுமின்றி போக முடிகிறது. அங்கே பூட்டப்படாத மேஜைகளும் அலமாரிகளும் திருடர்களுக்குத் திருட பகிரங்க அழைப்பைக் கொடுக்கிறது. இதற்குப் பரிகாரம்? வேலை செய்யுமிடங்களில் உங்களுடைய பணத்தையும், மதிப்புள்ள பொருட்களையும் பூட்டி வைத்திருங்கள் என்று போலீசார் ஆலோசனை கூறுகின்றனர்.

சீனாவின் மக்கள்தொகை வளருகிறது

ஏப்ரல் 14, 1989 அன்று உள்ளபடி சீனாவின் மக்கள்தொகை அதிகாரப்பூர்வமாக 110 கோடியாக உயர்ந்தது. இருப்பினும் மக்கள்தொகை எண்ணிக்கையைக் கோடிக்குள் திருத்தமாகக் கணக்கிட முடியாது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த அதிகரிப்பு சீன அதிகாரிகளுக்கு இரண்டு காரணங்கள் நிமித்தமாகக் கவலை அளிக்கிறது. முதலாவது, ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்கிற கொள்கை இதுவரை கிராமப்புறங்களில் தோல்வியடைந்துள்ளது. இரண்டாவது, விவசாய உற்பத்தி கடந்த நான்கு வருடங்களாக ஆண்டுக்கு 40 கோடி டன் தானியங்களிலேயே நின்று கொண்டிருக்கிறது. இது வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக்கு உணவளிக்கப் போதது. (g89 8/8)

காதலுக்கு எதிராக எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயைப் பற்றிய பயம் விவாக நோக்குடன் பழகும் பழங்கால காதல் சந்திப்பு முறையைக் கொண்டுவருகிறது என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ்டின் செவிலியர் பள்ளியின் பேராசிரியர் கூறுகிறார். “எய்ட்ஸ் கொள்ளைநோய் அமெரிக்க கலாச்சாரத்தில் ஒரு திருப்பு முனையைப் பலவந்தப்படுத்தியிருக்கிறது,” என்கிறார் மருத்துவர் பெவர்லி ஹால். “நாம் உண்மையாகவே நம்முடைய மதிப்பீடுகளை இப்பொழுது கூர்ந்து நோக்க வேண்டும். “1943-ல் சிபிலிஸ் மேக நோய்க்கு நான் ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடித்தது முதல் பாலின உறவுகள் மூலம் கடத்தப்படும் வியாதிகளுள் இப்படிப்பட்ட ஒரு கொள்ளை நோயை ஐக்கிய மாகாணங்கள் இதுவரை எதிர்ப்பட்டதில்லை.” இருப்பினும், “இளைஞரிடையே மேக நோய்களில் அதிகரிப்பு இருக்கிறது. எய்ட்ஸ் நோயின் அச்சுறுத்தலின் காரணமாக பாலின உறவுகள் கல்லூரி மாணவரிடையே குறைந்துவிடவில்லை என்பதை இது காட்டுகிறது” என்று ஹால் மேலும் கூறுகிறார்.

நுண்ணிய கருவிகள்

நுண்ணுயிர்களை உபயோகிக்க ஆச்சரியமூட்டும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். பிரித்தெடுக்க முடியாத கசடுகளோடு சேர்ந்திருக்கும் தங்கத்தின் நுண்ணிய துகள்களை விடுவிக்க பாக்டீரியாக்களை அல்லது நுண்கிருமிகளை உபயோகிக்கும் நிறுவனங்கள் விஷ இரசாயனங்களையும், தொழிற்சாலை கழிவுகளையும் சுத்தப்படுத்த நுண்ணுயிர்களை உபயோகிக்கும் முறைகளை கண்டுபிடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு முறை அலாஸ்காவின் கரையோரப் பகுதியில் கடலில் சிந்தப்பட்ட எண்ணெயைச் சுத்தப்படுத்த பரிசோதிக்கப்பட்டது. காதுகளில் பொருத்திக் கொள்ளக்கூடிய சிறு ஒலிபெருக்கிகளின் ஒரு பாகத்தை உற்பத்தி செய்யவுங்கூட நுண்ணுயிரிகளை ஜப்பானியர் உபயோகிக்கின்றனர். இப்பாக்டீரியாக்களுக்கு குறிப்பிட்ட வகையான சில சர்க்கரைகளை உணவாகக் கொடுத்தால் அது மெல்லிய வலையாகப் பின்னக்கூடிய நுண்ணிய நார்களை உண்டுபண்ணுகிறது. இந்த வலையானது பின்னர் உலர்த்தப்பட்டு நெருக்கமாக அமைக்கப்பட்டு, இறுதியில் நுண்ணிய ஒலிபெருக்கியில் உபயோகிக்கப்படும் இடையீட்டுத்தாள்களாக உருப்பெறுகிறது. இவை தரமான இடையீட்டுத்தாள்களைவிட 10 மடங்கு திறனுள்ள தாள்களாகச் செய்யப்படுகிறது!

தாய்லாந்தில் எய்ட்ஸ்

1989-ம் ஆண்டை “எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போரடும் ஆண்டக,” தாய்லாந்து அரசு குறிப்பிட்டது. உலக சுகாதார ஸ்தபனத்தின் (WHO) பிரகாரம் எய்ட்ஸ் விளைவிக்கக்கூடிய HIV கிருமியால் (மனிதனில் நோய்த் தற்காப்புக் குறை ஏற்படுத்தும் கிருமிகளால்) சுமார் 25,000 மக்கள் தாய்லாந்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரிட்டன் பத்திரிகையான தி எக்கானமிஸ்ட்-ன் (The Economist) பாங்காக் நிருபர் போத மருந்து துர்ப்பிரயோகமும், அதிகரித்து வரும் ஓரின, கலப்பின விபசாரத் தொழிலும் இவ்வியாதியை வளர்த்துக்கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். வகுப்பறைகளில் ஆலோசனை கொடுப்பதன் மூலமும், சுவரொட்டிகளிலும், வானொலியிலும், விளம்பரங்கள் மூலமும் பாதுகாப்பாய் வாழும் முறைகளை அரசாங்கம் பரப்பி வருகிறது. சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரத்தத்தை முழு பரிசீலனை செய்வதன் பேரிலும் அரசாங்க முயற்சிகள் ஊன்ற வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. (g89 8/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்