உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 1/8 பக். 31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போராயுதங்கள் விற்பனை
  • பைபிள்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது
  • சாட்சிகளின் வளர்ச்சி இத்தாலியின் கத்தோலிக்கரைக் கலங்கவைக்கிறது
  • கொம்பில்லாத காண்டான்
  • ஜெபங்களுக்குச் சம்பளம்
  • குடிப்பதா வேண்டாமா
  • அந்த விலையேறப்பெற்ற கொம்புகளுக்கு—கீழுள்ள விலங்கு
    விழித்தெழு!—1995
  • கென்யாவின் அநாதை காண்டாமிருகக் குட்டிகள்
    விழித்தெழு!—1998
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
  • உலகிலேயே மிக நீளமான குகை பாதை
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 1/8 பக். 31

உலகத்தைக் கவனித்தல்

போராயுதங்கள் விற்பனை

ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன: வளர்ந்துவரும் நாடுகளில் யாருக்கு அதிகமான ஆயுதங்களை விற்பனைச் செய்ய முடிகிறது? அமெரிக்க விற்பனை 1988-ல் 66 சதவீதமாக உயர்ந்தது, அதாவது 9.2 ஆயிரம் மில்லியன் டாலர், இது 9.9 ஆயிரம் மில்லியன் டாலர் சோவியத் விற்பனைக்கு ஏறக்குறைய சமமாக இருந்தது—அதே காலப் பகுதிக்கு சோவியத் விற்பனை 47 சதவீதம் குறைவாக இருந்தது. வளரும் நாடுகளுக்கு போரயுதங்கள் மொத்த விற்பனையில் இருவரும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வருவது ஃபிரான்சும் சீனாவும், இவர்கள் கடந்த ஆண்டில் 3.1 ஆயிரம் மில்லியன் டாலர் மதிப்புள்ள போரயுதங்களை வளரும் நாடுகளுக்குக் கொடுத்திருக்கின்றனர். மத்திய கிழக்குத்தான் மிகப் பெரிய விற்பனைக் களம். கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட எல்லாப் போரயுதங்களிலும் மூன்றில் இரண்டு பங்கு இந்நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டது. (g89 11/22)

பைபிள்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது

சோவியத் யூனியனில் பைபிள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. 18 மாதங்களில் இருபது இலட்சம் பிரதிகள் அனுப்பப்பட்டபோதிலும், தேவை தொடர்ந்து இருந்துவருகிறது. லண்டன் சர்ச் டைம்ஸ் பத்திரிகையில் அறிக்கைசெய்யப்பட்டதுபோல், “1917-ன் புரட்சி முதலான காலப்பகுதி முழுவதும் இருந்ததைவிட 1988-ல் சோவியத் யூனியனில் அதிகமாக பைபிள்கள் இறக்குமதி செய்யப்பட்டது.” முந்திய ஆண்டுகளிலிருந்ததற்கு மாறாக ஐக்கிய பைபிள் சங்கத்திலிருந்து கூடுதல் பைபிள்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதிகள் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. (g89 12/8)

சாட்சிகளின் வளர்ச்சி இத்தாலியின் கத்தோலிக்கரைக் கலங்கவைக்கிறது

“ரோமன் கத்தோலிக்க வட்டாரங்களில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய எச்சரிப்புகள் அடிக்கடி பிரசங்கப் பொருளாகிவிட்டிருக்கின்றன,” என்கிறது தி கத்தோலிக் ஸ்டண்டர்டு அண்டு டைம்ஸ். “சர்ச்சுக்கு அதிக கவலையாக இருப்பது என்னவென்றால், சாட்சிகளின் எண்ணிக்கையில் வளர்ச்சியும் புதிய ஆட்களைச் சேர்ப்பதில் அவர்களுடைய மும்முரமான, தெளிவாகவே வெற்றிகரமான முறைகளுமாகும்.” 1989-ன் ஆரம்பப்பகுதியில் கத்தோலிக்க மதக் கல்விச்சாலையின் பேராசிரியர் திருவாளர் லொரன்ஸோ மினுட்டி, போப் ஜான் பால் II-விடம் கூறினதாவது, “யெகோவாவின் சாட்சிகள் சர்ச்சுகளை மட்டுப்படுத்தும் ‘துன்னெலிகள்’ என்றும் அவர்களை ஒரு ‘கொள்ளைநோய்க்கும்’ ஒப்பிட்டார்.” ஒரு கொள்ளைநோயைத் தடுப்பதற்கான முயற்சியைப்போன்ற ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகக் கேட்டுக்கொண்டார். மினுட்டியின்படி, ரோமில் ராஜ்ய மன்றங்களின் எண்ணிக்கை 1982-ல் 10-ஆக இருந்தது 1989-ல் 66-ஆக அதிகரித்திருக்கிறது, மாறாக கத்தோலிக்கரல்லாத மற்ற அனைவருக்கும் 44 ஆலயங்களும் சர்ச்சுகளும்தான் இருக்கின்றன. “போப்புகளும் சர்ச்சுகளும் இருக்கும் தேசத்தில் சாட்சிகளுடைய வெற்றியின் இரகசியம் அவர்களுடைய சுவிசேஷக வைராக்கியம்,” என்று அந்தச் செய்தித்தாள் கூறியதுமட்டுமின்றி, “இத்தாலியில் ஒரு புதிய கத்தோலிக்க சுவிசேஷகத்”திற்கான அழைப்பையும் விடுத்தது. (g89 12/8)

கொம்பில்லாத காண்டான்

அத்துமீறி அனுமதியின்றி வனவிலங்குகளை வேட்டையாடுகிறவர்களின் முயற்சிகளை முறியடிப்பதற்குக் கடைசிக்கட்ட நடவடிக்கையாக, நமீபியாவின் வனத்துறை அதிகாரிகள் காண்டா மிருகங்களை அவர்களுக்கு மதிப்பற்றதாக்குவதற்காக அவற்றின் கொம்புகளை வெட்டிவிடும் செயலில் இறங்கியிருக்கிறார்கள். நகம் வெட்டுவதுபோன்று அச்செயல் வேதனையற்றது என்கிறார்கள் வனவிலங்கு பாதுகாவலர், ஏனென்றால் அவற்றின் கொம்புகள் வெறுமென அழுத்தமான முடிகள்தான், அவற்றிற்கு நரம்புகள் கிடையாது. கொம்புகளற்ற காண்டான்கள் அவற்றைத் தாக்கும் விலங்குகளிலிருந்தும் வேட்டையாடுகிறவர்களிலிருந்தும் தற்காப்பற்றதாகிவிடுகிறபோதிலும், ஆப்பிரிக்காவின் ஆபத்துக்குள்ளான கருப்புக் காண்டான்கள் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தக் கடுமையான நடவடிக்கை அவசியப்படுகிறது. பத்தாண்டுகளுக்குள்ளாக ஆப்பிரிக்காவின் கருப்பு காண்டான்களின் எண்ணிக்கை 15,000-லிருந்து 3,500-ஆகக் குறைந்துவிட்டிருக்கிறது என்று ஆப்பிரிக்க வனவாழ்வு பத்திரிகை அறிக்கைசெய்கிறது. நமீபியாவில் 100 காண்டான்கள் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டுவந்தது, கடந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களுக்குள் குறைந்தது 16 காண்டான்களாவது அந்த வேட்டைக்காரர்களுக்கு இறையாகிவிட்டன. கருப்பு காண்டான்களின் கொம்புகள் மருந்துக்குரிய தன்மைகள் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டு மதிக்கப்படுகின்றன, இவை இப்பொழுது சர்வதேச கருப்பு வியாபாரக் களத்தில் ஜோடி 50,000 டாலர் விலைபோகின்றன. (g89 11/22)

ஜெபங்களுக்குச் சம்பளம்

உறவினர்கள் குறைவாக இருக்கும் அல்லது உறவினர்களே இல்லாத வயதான ஜப்பானியர்களின் மிகப் பெரிய கவலை என்னவென்றால், அவர்களுடைய மரணத்துக்குப் பின்பு அவர்களுக்காக ஜெபிப்பதற்கு அல்லது அவர்களுடைய பிரேதக்குழிகளைக் கவனிப்பதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதே. என்றபோதிலும் புத்த மத ஆலயங்கள் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றன—ஒரு தொகக்கு. டோக்கியோவிலுள்ள ஓர் ஆலயம், அது இருக்கும்வரையில், எல்லா முக்கியமான பண்டிகைகளின்போதும் மரித்தவர்களில் எஞ்சியவற்றை எடுத்து மரித்த நபருக்காக ஜெபங்கள் செய்ய முன்வந்திருக்கிறது. அதற்குரிய தொக 3,500 அமெரிக்க டாலர்கள். செய்டாமா பிரிஃபெக்சர் அண்மையிலிருக்கும் ஒரு கல்லறை, ஜெபங்கள் செய்வதற்கும் கல்லறையைப் பராமரிப்பதற்கும் உத்தரவாதமளித்துள்ளது, 50 ஆண்டுகளுக்கு 4,800 அமெரிக்க டாலர்கள். ‘ஜெபங்களுக்குச் சம்பளம் கொடுத்தல்’ சேவையை நாடி ஏற்கெனவே தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன. (g89 11/22)

குடிப்பதா வேண்டாமா

தினந்தோறும் “அளவாக” அருந்தப்படும் மதுபானம் உண்மையிலேயே ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதா? ஆம், என்கிறார் ஜெர்மானிய குடியரசிலுள்ள உல்ம் பல்கலைக்கழக நரம்பியல் மருத்துவமனை மருத்துவர் H.H. கார்ன்ஹுபர். தினந்தோறும் மதுபானம் அருந்துவது, கொழுப்பு ஈரலினால் கையாளப்படுவதைப் பாதித்து அளவுக்கு மிஞ்சி கொழுப்பு உண்டாவதற்கு வழிநடத்துகிறது. இதன் மற்ற பக்க பாதிப்புகள்தான் நாடித் துடிப்பில் உயர்வு, இரத்த அழுத்தம் மற்றும் கொலாஸ்ட்ரால் அளவு கூடுதலாகும். “வரம்பு—ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஆரம்பிக்கும் நிலை—சிறிதளவு மதுபானம் அருந்துகிறவர்களுக்கும் அதிகமாக அருந்துகிறவர்களுக்கும் இடையில் இல்லை, ஆனால் அளவோடு அருந்துகிறவர்களுக்கும் மதுபானம் அருந்தாதவர்களுக்கும் இடையில்தான் இருக்கிறது,” என்று ஜெர்மன் செய்தித்தாள் ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜமீன் ஜீடங் குறிப்பிடுகிறது. (g89 11/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்