மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 23: 1945 முதல்கணக்குத் தீர்ப்பதற்கான நேரம் சமீபமாயிருக்கிறது
“மதத்தை ஒழித்துக்கட்டுவதுதான் மக்களின் மகிழ்ச்சிக்கு முதலாவது தேவை.”—கார்ல் மார்க்ஸ், 19-ம் நூற்றாண்டு ஜெர்மன் மனித சமூக ஆய்வாளர் மற்றும் பொருளியலர்
தன் குடும்பத்தின் இரு உறவுகளிலும் அநேக யூத குருவர்க்க மூதாதையர்களைக் கொண்டிருந்தபோதிலும், கார்ல் மார்க்ஸ் ஆறாவது வயதில் ஒரு புராட்டஸ்டன்ட்டாக முழுக்காட்டப்பட்டார். ஆனால் சிறு வயதிலேயே அவருக்கு மதத்தின் மீதும் அரசியல் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. மனிதவர்க்கம் எப்போதாவது சந்தோஷத்தை முயன்று அடைய வேண்டுமென்றால், மதத்திலும் அரசியலிலும் அடிப்படையான மாற்றம் ஏற்பட வேண்டும் என சிலர் வாதாடினர்.
பைபிள் இக்கருத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் மார்க்ஸ் எடுத்துரைத்த அடிப்படையான மாற்றங்கள் உண்மையான முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. நம்முடைய சந்ததியில் சம்பவிக்கும் என்று பைபிள் முன்னறிவித்த மாற்றங்கள், நிரந்தரமான வெற்றியால் முடிசூட்டப்படும். இதைக் குறித்து எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
குறிப்பாக 1914-ம் ஆண்டு முதற்கொண்டு, பொய் மதத்தின் இரத்தப்பழி நெருக்கடியான நிலைகளை எட்டியிருக்கிறது. அதிகரித்துக்கொண்டே செல்லும் அசட்டை மனப்பான்மையாலும், பொதுமக்களின் ஆதரவு குறைந்து கொண்டே செல்வதாலும் அப்போதிலிருந்து பொய் மதம் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. (இத் தொடர் கட்டுரைகளில் இதற்கு முன்னால் வெளியிட்ட இரண்டு கட்டுரைகளைப் பாருங்கள்.) மெய் மதத்தை அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒவ்வொரு வருடமும் குறிப்பிடத்தக்க விதத்தில் மெய் மதம் அதிக செழிப்பாக ஆகியிருக்கிறது.
ஆனால் இனி வரப்போவது என்ன? மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம் என்ன என்று முன்பு ஒருபோதும் இல்லாத விதத்தில் இப்போது கேட்பது பொருத்தமானதாயிருக்கிறது.
பைபிள் என்ன சொல்கிறது?
நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு சம்பவங்கள் இவ்விஷயத்தின் பேரில் விளக்கம் அளிக்கின்றன. இஸ்ரவேல் பொய் மதத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக, அந்தத் தேசத்துக்கு விரோதமாகக் கடவுளின் நியாயத்தீர்ப்பு வரும்படியான ஒரு எதிர்காலத்தை அது எதிர்ப்பட்டது. யூத ஒழுங்கு முறையோடு அழிந்து போகமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள மெய் மதத்தை அப்பியாசித்தவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயேசு தன் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப் புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.”—லூக்கா 21:20, 21.
பொ.ச. 66-ல் ரோம சேனைகள் எருசலேமைச் சூழ்ந்துகொண்டன. எருசலேம் பட்டணம் அழிவுக்காகத் தீர்க்கப்பட்டிருப்பது போல் காட்சியளித்தது. ஆனால் திடீரென்று ரோம சேனைகள் பின்வாங்கிச் சென்றுவிட்டன. இது கிறிஸ்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிச் செல்லும்படியான ஒரு வாய்ப்பை அளித்தது. நான்கு வருடங்களுக்குப் பின்பு ரோமர்கள் திரும்பி வந்து, மறுபடியும் பட்டணத்தை முற்றுகையிட்டபோது விசுவாச துரோகிகளான இஸ்ரவேலர்கள் இறுதியில் பட்டணத்துக்குள் இருந்த பெரும் எண்ணிக்கையான ஆட்கள் உயிரிழந்தனர், பட்டணம் பிடிக்கப்பட்டது. மசாதா என்ற யூதர்களின் கடைசி புகலிடம் மூன்று வருடங்களுக்குப் பின்பு வீழ்ந்துபோனது. என்றபோதிலும், உண்மை கிறிஸ்தவர்கள் அப்பியாசித்த மெய் மதம் தொடர்ந்து நீடித்திருந்தது.
இப்போது, நம்முடைய சந்ததியில், முழு பொய் மத உலகப் பேரரசும் அழிவுக்கு எதிரே நேருக்கு-நேர் நிற்கிறது. “சூழ்ந்திருக்கும் சேனைகள்” தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்குத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. பாக்ஸ் ரோமனாவை (ரோம சமாதானம்) காத்துக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதல் நுற்றாண்டு ரோம சேனைகளைப் போன்று, இன்று சூழ்ந்திருக்கும் சேனைகளுங்கூட ஒரு அமைதி காக்கும் சாதனமாயிருக்கிறது. நவீன கால எருசலேமாகிய கிறிஸ்தவ மண்டலத்தோடும், மகா பாபிலோனின் மீதி பாகத்தோடும், இறுதியில் கணக்குத்தீர்ப்பதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குள் இருக்கும் ராணுவ சக்திகள், யெகோவா உபயோகிக்கப்போகும் கருவியாக இருக்கும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 17:7, 16.
இது எப்போது நடக்கும்? ஒன்று தெசலோனிக்கேயர் 5:3 பதிலளிக்கிறது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.”
“சமாதானம் என்னும் தொத்து நோய்”
1988-ம் ஆண்டின் போது, முன்னாள் ஐ.மா. செயலாளர் ஜார்ஜ் ஷுல்ட்ஸ், “சமாதானம் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது” என்று சொன்னார். ஒரு “சமாதான தொத்துநோய்” என்பதாக அயல்நாட்டுக் கொள்கை வல்லுநர் ஒருவர் கூறினார். டை ஜீட் (die zeit) என்ற பிரசித்திப்பெற்ற ஜெர்மன் வாராந்தரப் பத்திரிகை இவ்வாறு கேட்டது: “பெரும் அழிவுகளால் நிறைந்திருக்கும் இந்த நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகள் மட்டும் அழிவின் முடிவுக்கும், சமாதானமான சகாப்தம் ஆரம்பமாவதற்குமான காலமாக இருக்குமா?” டைம் (Time) பத்திரிகை இவ்வாறு சொன்னது: “ஈரான்-ஈராக், கம்ப்பூச்சியா, ஆப்கானிஸ்தான், தெற்கு ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமாதானம் பயமுறுத்துகிறது.”
1989-ம் ஆண்டும்கூட சமாதான பேச்சுக்களால் நிறைந்திருந்தது. பிப்ரவரி மாதத்தில் சுடூட்ஷ் ஜீட்டங் (Suddeutsche Zeitung) என்ற ஜெர்மன் செய்தித்தாளின் தலையங்கக் கட்டுரை இவ்வாறு சொன்னது: “சுமார் 1985 முதற்கொண்டு நாம் வல்லரசுகள் தங்கள் கிழிக்கும் நகங்களை அடக்கிவைத்திருப்பதைவிட அதிகம் செய்திருக்கும் காலப்பகுதியில் வாழ்கிறோம். . . . இன்று இரண்டு வல்லரசு நாடுகளும் பூமியில் ஒன்றுகூடாத இடம் வெகு குறைவே . . . என்னவாயிருந்தாலும், வரப்போகும் காரியத்துக்கான முன் அடையாளம் இவ்வளவு சாதகமாக இருந்ததில்லை, இருதரத்தாரும் கருத்தார்ந்த விதத்தில் ஒரே சமயத்தில் சரியான திசையில் அநேக படிகளை எடுத்திருக்கின்றனர்.”
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, காரியங்கள் அவ்வளவு பிரகாசமாக காணப்படவில்லை. “1983-ம் ஆண்டு முழுவதும், உலக முழுவதிலுமுள்ள மதத்தலைவர்கள் ‘சமாதானம், சமாதானம்’ என்று அறிவித்தனர், ஆனால் அப்போது சமாதானம் இருக்கவில்லை” என்று ராய் லார்சன் என்ற பத்திரிகை ஆசிரியர் குறிப்பிட்டார். அப்போதிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆச்சரியமூட்டும் உலக சம்பவங்கள் 1 தெசலோனிக்கேயர் 5:3-ன் நிறைவேற்றமா? நாம் சொல்ல முடியாது. இருத்தபோதிலும், இன்று டிசம்பர் 1991-ல் முன்பு இருந்ததைவிட “சமாதானமும் பாதுகாப்பும்” ஏற்படுவதற்கு அருகாமையில் இருக்கிறது.
மதத் தலைவர்கள் கடினமாக உழைக்கின்றனர்—எதற்காக?
லார்சன் காண்பிக்கிறபடி, சமாதானத்தை நாடுவதில் மதத் தலைவர்கள் செயலற்றவர்களாய் இருக்கவில்லை. தன்னுடைய 1983-ன் மதிப்பீட்டைத் தொடர்ந்து சொல்பவராய், ஜான் பால் II மத்திய அமெரிக்காவுக்கும், கரீபியனுக்கும் சென்ற “சமாதான யாத்திரையை” பற்றி லார்சன் குறிப்பிடுகிறார். அந்த வருடத்தின் போது, கத்தோலிக்க பிஷப்புகளின் ஐ.மா. தேசிய மாநாடு குரு மக்களுக்கு எழுதிய “சமாதானத்தின் சவால்” என்ற தலைப்பையுடயை கடிதத்தை ஏற்றுக்கொண்டது. அதற்குச் சிறிது காலத்துக்குப் பின்னர், 100 நாடுகளிலிருந்து, 300-க்கும் மேற்பட்ட சர்ச்சுகளின் பிரதிநிதிகள், உலக சர்ச்சுகள் கழகத்தின் ஆறாவது பொது மாநாட்டில் ஒன்றுகூடி அதே போன்ற ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தனர். “பூகோள ரீதியில் சமாதானத்தோடு முன்னீடுபாடு” என்று லார்சன் அழைத்த ஒன்றில் அநேக புராட்டஸ்டன்ட் போதனையாளர்களும் கூட ஈடுபட்டிருந்தனர்.
அது ஸ்தபிக்கப்பட்ட 1948-ம் ஆண்டின் போதும், அதனுடைய 1966-ம் ஆண்டின் மாநாட்டின் போதும், சர்ச்சுகளின் உலக கழகம், அழிவுண்டாக்கும் நவீன கால ஆயுதங்களை உபயோகிப்பதற்கு எதிராகப் பேசியது. அநேக குருமார்களும், இறை நூல் பேராசிரியர்களும், ஜெர்மன் புராட்டஸ்டான்ட் இறைநூல் ஆசிரியர் ஹெல்மட் கால்பிட்சர் போன்று மனிதர்களும் சமாதானத்துக்காக ஆயுதங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். “அவர் சமாதானத்துக்காக எப்போதும் முயற்சி செய்து கொண்டிருக்கும், அரசியலில் ஈடுபாடுள்ள இறை நூல் ஆசிரியர். அவருடைய போதனையின் மூலமாகவும், அரசியல் ஈடுபாடுகள் மூலமாகவும், அநேக இறைநூல் ஆசிரியர்கள் மீதும் சர்ச்சுக்குள் இருக்கும் சமாதான இயக்கத்தின் மீதும் அதிக பலமாக செல்வாக்கு செலுத்தியிருக்கிறார்,” என்று 1989-ன் ஆரம்பத்தில், அவருடைய 80-வது பிறந்த நாளன்று ஒரு சுவிஸ் புராட்டஸ்டன்ட் வாரந்தர பத்திரிகை அவரைப் புகழ்ந்தது. 1986-ம் ஆண்டைச் சர்வதேச சமாதான ஆண்டாக மகா பாபிலோன் ஆதரித்தது என்பது ஆச்சரியமாயில்லை. ஐக்கிய நாட்டு சங்கம் அந்த ஆண்டிற்கு அப்பெயரைக் கொடுத்தது. “உலக முழுவதிலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ள வேண்டும்,” என்று அதனுடைய உரிமைப் பத்திரம் அழைக்கிறது. அந்த வருடத்தின் போது, கத்தோலிக்க போப், கேன்டர்பரியைச் சேர்ந்த ஆங்கிலிக்கன் ஆர்ச்பிஷப், கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்பவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்துக்கள் முகமதியர்கள், ஆப்பிரிக்க ஆவியுலகக் கோட்பாட்டாளர்கள், அமெரிக்காவில் பிறந்தவர்கள் (இந்தியர்), யூதர்கள், சீக்கியர்கள், பார்சி சமயத்தவர், ஷின்டோ சமயத்தவர், சமண சமயத்தவர் ஆகியோர் உட்பட 700 மற்ற மதத் தலைவர்கள் சமாதானத்துக்காக ஜெபம் செய்வதற்கு ரோம் தேசத்துக்கு அருகே உள்ள அசிஸி என்ற இடத்தில் ஒன்றுகூடினர்.
ஜனவரி 1989-ல் சிட்னி, ஆஸ்திரேலியா, சண்டே டெலிகிராஃப் (Sunday Telegraph) இவ்வாறு எழுதியது: “புத்த, கிறிஸ்தவ, இந்து, யூத, முகமதிய, சீக்கிய, தனியொருமை வாதி, பஹால், கன்பூசிய, சமண, ஷின்டோ, தாவ், ராஜ யோக, பார்சி,” ஆகிய மதங்களைச் சேர்ந்த அங்கத்தினர்கள், மதம் சமாதானம் ஆயிவற்றின் பேரில் நடந்த உலக மாநாட்டின் ஐந்தாவது கூட்டத்துக்காக மெல்பர்னில் கூடினர். குறிப்பிடத்தக்க விதத்தில், “85 தேசங்களிலிருந்து வந்த 600-க்கும் அதிகமான பிரதிநிதிகள் . . . மத சம்பந்தமான வித்தியாசங்களால் உண்டான விரோதங்கள், யுத்தம் செய்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக வெகுகாலமாக தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒப்புக்கொண்டனர்.”
சமாதானத்தைத் தேடுவதற்கான முயற்சியில் மதம் ஈடுபட்டிருக்கிறது என்பதை உறுதி செய்பவராய் முன்னாள் ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் செயலாளர் டேக் ஹாமர்ஷோல்ட் ஒரு முறை இவ்வாறு சொன்னார்: “ஐக்கிய நாட்டு சங்கமும், சர்ச்சுகளும் நற்பிரியமுள்ள எல்லா மனிதர்களின் முயற்சிகளிலும் பங்குகொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கின்றனர். பூமியில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு, அவர்களுடைய சமயக்கோட்பாடு அல்லது வணக்கமுறையை பொருட்படுத்தாமல் அவ்வாறு செய்கின்றனர்.”
இந்நிலையிலும்கூட, மகா பாபிலோனின் கண்டன ஊர்வலங்கள், பொது ஆர்ப்பாட்டங்கள், அரசியல் விவகாரங்களில் இரகசியமான முறைகளில் தலையிடுவது போன்ற காரியங்கள் அவளுடைய அழிவுக்கு அவளை வழிநடத்தும். இது ஏற்கெனவே பல பிணக்குகளை உண்டாக்கியிருக்கிறது.a தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டாமினிக் என்ற துறவியர் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட் நோலன் என்பவர் சமீபத்தில் இவ்வாறு ஒப்புக் கொண்டார்: “கடவுளுடைய சித்தத்திற்கு இசைய சமாதானத்தை அடைவதற்கான ஒரே திறம்பட்ட வழி, சண்டைக்குள் இறங்குவது ஆகும். . . . போரயுதக் குறைப்பை அடைவதற்கு, அரசாங்கத்துக்கு எதிராகச் சண்டை செய்வது தவிர்க்க முடியாததாயிருக்கிறது.”
மகா பாபிலோன் சமாதானத்துக்காகத் தொடர்ந்து கூச்சலிடட்டும். போப் தன்னுடைய பாரம்பரிய அர்பி எட் ஆர்பி ([ரோம்] நகரத்துக்கும் உலகத்துக்கும்) ஆசீர்வாதத்தைக் கிறிஸ்மஸ், ஈஸ்டர் பண்டிகைகளின் போது தொடர்ந்து அளிக்கட்டும். அரசியல் சம்பந்தமான பகைகள் இப்போது அமைதியாயிருப்பது, “கிறிஸ்தவ” ஜெபங்களுக்குக் கடவுள் அளித்திருக்கும் பதில் என்று கடந்த வருட மே மாதத்தில் அவர் எண்ணியது போல் அவர் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருக்கட்டும். மகா பாபிலோன் சமாதானமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டும், தன் மீது கடவுளுடைய ஆசீர்வாதம் இருக்கிறது என்று உரிமை பாராட்டுவதுதானே கொண்டிருப்பது, அவளுடைய கடந்த கால இரத்தப்பழி நிறைந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவளை விடுவிக்காது. மனிதர்களுக்கு இடையேயும், மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையயேயும் சமாதானத்துக்கு மிகப் பெரிய தடையாய் இருக்கிறாள் என்று இது அவளை அடையாளங்காட்டுகிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதவர்க்கத்தின் ஒவ்வொரு பிரச்னைக்கும் அவள் காரணமாய் இருந்திருக்கிறாள். பொய் மதம், ஐக்கிய நாட்டுச் சங்கத்தோடு இணைந்து “சமாதானத்தையும் பாதுகாப்பையும்” கொண்டு வருவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்ற இக்காரியம்தானே அவளுடைய அழிவை விரைவு படுத்தும் என்பது என்னே ஒரு வஞ்சப் புகழ்ச்சி! பொய் மதத்தின் முடிவு, மெய் மதத்தின் கடவுளை மகிமைப்படுத்தும். கடவுள் இவ்வாறு சொல்கிறார்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவெட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.
நேரத்தை வீணாக்காதீர்கள்—உங்களுடைய ஜீவனுக்காக ஓடுங்கள்!
கணக்கு தீர்ப்பதற்கு பொய் மதத்தை அழைக்கும் காலம் அருகாமையில் இருக்கிறது! ஜீவனை இழந்து விடாமல் இருப்பதற்கு ஒரே வழி, தாமதமின்றி அவளை விட்டு நீங்குவதாகும். (வெளிப்படுத்துதல் 18:4) அழிவுக்காக கணிக்கப்பட்டிருக்கும் நேரம் ஏற்கெனவே நெருங்க ஆரம்பித்துவிட்டது.
கடவுளின் அழகான பூமி பொய் மதத்தையும், பொய்-மத சம்பந்தமான நாட்டுப்பற்றையும் அழித்து சுத்தப்படுத்திய பின்பு, தெய்வீக அரசாங்கத்தின் கீழ் மெய் மதம் மட்டுமே நிலைத்திருக்கும். இப்படிப்பட்ட பெரும் மாற்றங்களைத் தப்பிப்பிழைக்கும் நபர்களின் மனநிலை எவ்வளவு உணர்ச்சி மிகுந்ததாய் இருக்கும்! அவர்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்களா? ‘மெய் மதத்தின் நித்திய சிறப்புகளில்’ நீங்கள் என்றென்றுமாக களிகூர விரும்புவீர்களா? அப்படி விரும்புவீர்களென்றால், இத்தொடாச்சியான கட்டுரைகளில், கடைசி கட்டுரை ஜனவரி 8, 1992-ம் இதழில் இருப்பதை வாசிப்பதன் மூலம் எவ்வாறு என்பதைக் கற்றறியுங்கள். (g89 12/8)
[அடிக்குறிப்புகள்]
a இது எவ்விதம் நிகழும் என்பதை உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொசைட்டி பிரசுரித்த வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகம் விளக்குகிறது.
[பக்கம் 28-ன் படம்]
நியு யார்க்கில் ஐ.நா. தலைமையகம் மற்றும் ஓர் உலக சமாதான சிலை—மனிதன் பட்டயத்தைக் கொழுக்கலமாக அடிக்கிறான்
[பக்கம் 29-ன் பெட்டி]