பார்வையற்றவர்களுக்குப் பணம் இல்லை
உலகின் பார்வையற்றவர்களில் எண்பது சதவீதத்தினர் வளர்ந்துவரும் தேசங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தென்கிழக்கு ஆசியாவிலே இவர்கள் மிகுந்து காணப்படுகிறார்கள். அங்கே, ஒவ்வொரு 25 பேரிலும் ஒரு நபர் பார்வையற்றவராக அல்லது ஓரளவே பார்வையுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு செய்கிறது. முக்கிய காரணங்கள் யாவை? சத்துணவு குறைவுபடுதலும் மோசமான உடல் நலத்தின் விளைவாக நோய் பரவுதலும்.
இன்டர்நேஷனல் சாமன்வெர்க்கிங் என்ற ஆலந்து நாட்டு பத்திரிகையின்படி, ஆண்டுக்கு ஐ.மா.வின் இரண்டு ஆயிரம் மில்லியன் டாலர்கள் (3,200 கோடி ரூபாய்) கொண்டு, அது வளர்ந்துவரும் தேசங்களில் பார்வையிழப்புக்கு எதிராக திறம்பட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இந்தத் தொக நாள் ஒன்றுக்கு உலக அரசாங்கங்கள் இராணுவ நோக்கங்களுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தபோதிலும் தேவையான நிதியைத் தன்னால் திரட்ட இயலவில்லை என்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது.
ஆகவே பணம் பற்றாக்குறையினால் அது இப்பொழுது செய்யமுடிவதெல்லாம் விட்டமின் A மாத்திரைகளை பிள்ளைகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் பார்வையிழப்பை தவிர்ப்பது மட்டுமே ஆகும். இந்தியா, இந்தோனீஷியா, பங்ளாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸிலுள்ள சுமார் 4,00,000 பிள்ளைகள் விட்டமின் A குறைவினால் ஏற்படும் கண் நோய்களினால் அவதியுறுகின்றனர். ஆனால் இப்போதிருக்கும் வேகத்தில் 2000 ஆண்டுக்குள் உலகில் 840 இலட்சம் பார்வை இழந்தவர்களும் ஓரளவு பார்வையிழந்தவர்களும் இருப்பார்கள் என்பதாக உலக சுகாதார அமைப்பு வருத்தத்துடன் முன்னறிவிக்கிறது. (g90 2/8)