மக்கள் விழிப்புடன் இருக்க உதவும் மரம்!
சுவீடன் விழித்தெழு! நிருபர்
உங்கள் கைகளில் நீங்கள் பிடித்துக்கொண்டிருக்கும் விழித்தெழு! பத்திரிகை காடுகளில் ஆரம்பத்தைக் காணும் ஒரு செயல்முறையைத்தான் பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. அடிமரங்கள் காகிதத்துக்குத் தேவையான மூலப்பொருளைத் தருகின்றன. இதுதான் அதன் ஆரம்பம். ஆனால் நாம் இப்பொழுது படங்களைக் கொண்ட ஒரு பயணத்தைத் தொடங்கி, ஒரு மரம் எப்படி விழித்தெழு! போன்ற ஒரு பத்திரிகையாக ஆகின்றது என்பதைக் காண்போம்.
முதல் படத்தில் பார்க்கும் அந்தக் கருவி ஒரு நவீன மரம் வெட்டும் இயந்திரம். அது மரங்களை வெட்டுவது மட்டுமின்றி, அதன் கிளைகளையும் தரித்துவிடுகிறது. மேலும் பெரிய மரக்கட்டைகளைப் பொருத்தமான அளவுக்கு அறுத்துவிடுகிறது. இந்த மரக் கட்டைகள் லாரிகள் அல்லது இரயில் மூலம் காகிதத் தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. முழுமையாக சரக்கேற்றப்பட்ட லாரி ஒரு சமயத்தில் 20 டன்கள் ஏற்றிச்செல்கின்றன. இந்த அறிக்கைக்காக விழித்தெழு! விஜயம் செய்த அந்தக் காகிதத் தொழிற்சாலையில் மரம் ஏற்றிவரும் லாரி 15 நிமிடத்துக்கு ஒன்று என்ற கணக்கில் நாள் முழுவதும் வந்துகொண்டேயிருக்கிறது. ஒரு முழு பகுதியுமே பக்கம் 19-லுள்ள கடைசி படத்தில் நீங்கள் பார்ப்பதுபோல் இராட்சத இயந்திர இடுக்கிகளால் வேகமாக இறக்கப்பட்டுவிடுகின்றன.
ஒரு விழித்தெழு! பத்திரிகைக்கு அதைப் போன்ற அநேக மரங்கள் தேவை. ஒவ்வொரு ஆண்டும் அவ்வளவு காகிதங்கள் பயன்படுத்தப்படுவதால், அநேக மரங்கள் வெட்டப்படவேண்டும். என்றபோதிலும், சுவீடனில் இது கவனமாகக் கட்டுப்பாடுடன் இயக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. வெட்டப்படும் மரங்களுக்குச் சரிசமமான நிலப்பகுதியில் மரங்கள் மறுபடியும் நடப்பட்டால்தானே அதிகாரிகள் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குகின்றனர். இவ்விதமாய் சுவீடனின் காடுகள் தொடர்ந்து குறைநிரப்பப்பட்டு வருகின்றன.
பக்கம் 19-லுள்ள படம் காகித இயந்திரத்தினுள்ளிருக்கும் செயலமைப்பைக் காட்டுகிறது. தாள் செய்வதற்குரிய கூழ் ஒரு முனையில் போடப்பட்டு, மறு முனையில் தாள் வெளியே வருகிறது. ஆனால் தாள் செய்வதற்கான கூழ் எப்படி செய்யப்படுகிறது?
முதலில் மரம் தேவையான நீளத்துக்கு வெட்டப்பட்டு, அதன் பட்டைகள் இராட்சத வட்டுருளைகளில் நீக்கப்படுகின்றன. பின்பு அந்த மரக்கட்டைகள் அவற்றின் பருமன் மற்றும் நீளத்திற்கு ஏற்ப பிரித்தெடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில தராதரங்களைப் பூர்த்திசெய்யும் மரங்கள் அவற்றைக் கூழாக அறைத்திடும் இயந்திரங்களில் போடப்பட்டு தாள் செய்வதற்கான கூழாக மாற்றப்படுகிறது. இது காகித உற்பத்திக்காக இந்தத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் நான்கு வித்தியாசமான கூழ் வகைகளில் ஒன்று. எஞ்சியிருக்கும் மரம் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, வெப்ப இயந்திரக் கூழும், கந்தகியக் கூழும் உண்டுபண்ணப் பயன்படுத்தப்படுகின்றன. நான்காவது வகை கூழ் தாள்கள் திரும்பக் கூழாக்கப்படுவதிலிருந்து வருகிறது.
அரைக்கப்பட்ட மரக்கூழ், வெட்டப்பட்ட மரங்கள் மிகப் பெரிய அரவைக்கல்களுக்கிடையே அழுத்தத்தின்கீழ் செலுத்தப்பட்டு, தண்ணீர் கலந்து அரைப்பதிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. இதன் பலன்தான் இயந்திரம் மூலம் கிடைக்கப்பெறும் மரக்கூழ்.
வெப்ப இயந்திரக் கூழ், மரச் சீவல்களை உயர்ந்த அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்படுத்தி, இப்படியாக நாரிழைகள் பிரிக்கப்பட்டு உண்டாக்கப்படுகிறது. இது இயந்திர முறைக் கூழைவிட நீளமான பலமான நாரிழைகளை அளிக்கிறது.
கந்தகியக் கூழ் இரசாயன முறையில் தயாரிக்கப்படுகிறது. இது பெரிய கொள்கலங்களில் மக்னீசியம் பை-சல்ஃபைட் கந்தகியத்தில், ஒரு பிரஷர் குக்கரில் வேக வைப்பது போன்று மரச் சீவல்களை வேக வைப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. முதல் மூன்று வகை கூழ்களில் இம்முறைதான் தாள் செய்வதற்கான மிகவும் வலிமையான கூழைக் கொடுக்கிறது.
நான்காவது முறை, தாள்கள் திரும்பக் கூழாக்கப்படுவதன் மூலம் பெறப்படும் கூழ், பயனற்ற தாளிலுள்ள மை மற்றும் பசைகள் நீக்கப்பட்டு மறுபடியும் தாள் செய்வதற்காக மாற்றப்படும் கூழாகும்.
கடைசியில், வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பெரிய உருளைகளில் இருக்கும் தாள் வெட்டப்பட்டு உறையிடப்படுகிறது. நீளுருளைகளாக உறையிடப்பட்ட காகிதம் சென்றடைய வேண்டிய இடத்திற்கேற்ப பிரிக்கப்பட்டு லாரி, இரயில், அல்லது கப்பல் மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது.
அந்தத் தாள் இப்பொழுது அர்போகாவிலுள்ள அச்சாலைக்கு வந்துவிட்டது. அளவாக வெட்டப்பட்ட தாள்கள் அச்சிடப்படும் சுவீடனின் புதிய முழு-வண்ண அச்சு இயந்திரத்திற்காக அந்தத் தாள் உருளைகள் அவற்றை தேவையான அளவுக்கு வெட்டும் இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. இந்த அச்சு இயந்திரம் மணிக்கு 15,000 அச்சுப் பதிப்புகளை உண்டுபண்ணும் திறம் கொண்டது.
ஒவ்வொரு வெளியீடும் சுவீடனிலும் அயல்நாடுகளிலும் இருக்கும் சந்தாதாரருக்கு அனுப்பப்படுகிறது. அதோடுகூட, பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காகப் பத்திரிகைக் கட்டுகள் நாடு முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தக் கட்டுகளின் ஆயிரக்கணக்கான பத்திரிகைகளை சாட்சிகள் மக்களை அவர்களுடைய வீடுகளிலும் மற்ற இடங்களிலும் சந்திக்கும்போது அவர்களிடம் அளிக்கின்றனர்.
ஆம், காட்டிலுள்ள அந்த அடிமரம் அது கடைசியாக சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்துவிட்டது—விழித்தெழு! பத்திரிகையை. விழித்தெழு! பத்திரிகை பைபிள் தீர்க்கதரிசனத்தின் வெளிச்சத்தில் இந்த உலகச் சம்பவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதன் பேரில் வாசகருக்குத் தகவலளித்து அவர்களை விழித்திருக்கச் செய்யும் கட்டுரைகளை உட்படுத்தியுள்ளது என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இப்படியாக இது மனிதனின் சிருஷ்டிகரைக் குறித்தும் நம்முடைய நாளுக்கான அவருடைய நோக்கத்தைக் குறித்தும் அறிந்துகொள்ள வாசகருக்கு உதவுகிறது. இப்படிப்பட்ட அறிவு, நம்முடைய காலத்தில் சம்பவிக்கும் காரியங்களின் பொருளை நீங்கள் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவியாயிருப்பதோடு, ஒரு மேன்மையான எதிர்காலத்துக்கான பலமான நம்பிக்கையைக் கட்டிடவும் உதவியாயிருக்கும். (g90 2/8)
[பக்கம் 19-ன் பெட்டி/வரைப்படம்]
காகித இயந்திரம்
அ. காகித இயந்திரத்தை அடையும் கூழ் நீராளக் கஞ்சி போன்று காணப்படுகிறது; இது ஒரு மெல்லிய திரையாக அநேக கெஜ மென் கம்பி வலையில் கடத்தப்படுகிறது. இந்தக் கட்டத்தில் அந்தக் கூழ் 99 சதவீத தண்ணீரைக் கொண்டிருக்கிறது. இயந்திரத்தின் வழியாய் ஏறக்குறைய 230 அடி நீண்ட பயணத்தைச் செய்கையில் இந்தத் தண்ணீரில் பெரும்பகுதி நீக்கப்பட்டுவிடும்.
ஆ. அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் பகுதியில் தண்ணீர் அளவு ஏறக்குறைய 60 சதவீதத்துக்குக் குறைக்கப்பட்டுவிடுகிறது. தண்ணீர் அழுத்த முறையோடுகூட காற்றுறிஞ்சுதல் முறை மூலமும் தண்ணீர் வடிக்கப்படுகிறது.
இ. உலரும் பகுதியில் காகிதம் நீராவி வெப்ப உருளைகளில் உலர்த்தப்படுகிறது.
ஈ. மெருகேற்றப்படுவதன் மூலம் காகிதம் நேர்த்தியாக்கப்படுகிறது, காதிதத்தை உருளைகளுக்கிடையே செலுத்துவதன் மூலம் இப்படிச் செய்யப்படுகிறது. காகிதம் கடைசியில் நீளுருளைகளில் சுற்றப்படும்போது, எஞ்சியிருப்பது 5 சதவீதம் தண்ணீர் மட்டுமே.
[வரைப்படம்] (முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
முதல் பெட்டி கம்பிப் பகுதி அழுத்தும் பகுதி உலரும் பகுதி மெருகேற்றுதல்
ஈர முனை உருளைகளில் சுற்றுதல்
[பக்கம் 20-ன் படங்கள்]
சுவீடனில் அர்போகாவிலுள்ள கிளைக்காரியாலயம்
காகித உருளைகள் அடுக்கப்படுகின்றன