எமது வாசகரிடமிருந்து
தலைப் பேன் ஒரு பள்ளிச் செவிலியராக, நான் தலைப் பேன் என்ற பொருளை ஒவ்வொரு நாளும் கையாண்டு வருவதால், தங்களுடைய கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலில் பெரும்பகுதியை ஒப்புக்கொள்கிறேன். (நவம்பர் 8, 1990) எதிர்பாராத காரியம், தலைப் பேனை ஒழித்திட மிகத் திறமையாகச் செயல்படக்கூடிய முறை பிள்ளைக்கு மொட்டை அடித்தல் என்று ஆலோசனை கூறுகிறீர்கள். பேனை ஒழித்திட ஒரு பிள்ளைக்கு மொட்டை அடிப்பது அதிகப்படியானதும் அவசியமற்றதுமாயிருக்கிறது என்பதை நான் தனிப்பட்டவிதத்தில் காண்கிறேன். தலையுச்சியில் மண்ணெண்ணை தேய்ப்பதையும் நான் பரிந்துரை செய்வதில்லை. அது நச்சுத்தன்மை வாய்ந்ததும், தீப்பற்றக்கூடியதுமாயிருக்கிறது, மற்றும் தீக்கு இறையான ஒரு பிள்ளையை விட தலைப் பேன்களைக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் மேல். C.M., இங்கிலாந்து
இந்தக் குறிப்புகளை நாங்கள் போற்றுகிறோம். “விழித்தெழு!” மருத்துவ சிகிச்சை முறைகளைப் பரிந்துரை செய்வதில்லை. ஆனால் எமது பத்திரிகை உலகரீதியில் விநியோகிக்கப்படுவதாலும், நவீன சிகிச்சை முறைகளைப் பெற்றிடும் நிலையிலில்லாத மக்களால் வாசிக்கப்படுவதாலும், பேனை ஒழிப்பதில் வெற்றிகரமாயிருந்திருப்பதாய்ச் சிலர் உரிமைபாராட்டும் வீட்டு சிகிச்சை முறைகளை நாங்கள் வெறுமென அறிக்கை செய்திருக்கிறோம். என்றபோதிலும், நவீன மருத்துவ துறை அதிகாரிகள் பேன் பிடித்த தலைமுடியை சிரைத்துவிடுவதை சிபாரிசு செய்வதில்லை, இது மன சம்பந்தமான பாதிப்புடையது எனவும் அவசியமற்றது எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். தலைமுடி அளவுக்கு மிஞ்சி நீளமாக இருந்தால் அல்லது தலைமுடியை சீவமுடியாதபடிக்கு அது சிக்கிச் சடையாகிவிட்டிருந்தால் மட்டுமே தலைமுடியை வெட்டுவது அவர்களால் சிபாரிசு செய்யப்படுகிறது. மேலும் தலையுச்சியில் மண்ணெண்ணை தேய்ப்பதையும் இன்றைய மருத்துவத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்வதில்லை. உதாரணமாக, மியாமி மருத்துவ பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் டேப்ளின் “விழித்தெழு!”விடம் சொல்லும்போது, இந்தப் பழக்கத்தைப் பழங்காலத்தினதாகத் தான் கருதுவதாகக் கூறினார்.—ஆசிரியர்.
பாதுகாப்பான உணவு நான் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு பயண ஊழியராகப் பணிபுரிகிறேன், என் மனைவியும் உடன் வருகிறாள். உணவின் பேரில் கவனம் சம்பந்தமாக ஏராளமான விதிமுறைகளால் எங்களை உபசரிப்பவர்கள் பாரமடைந்திடுவதை நாங்கள் விரும்புவதில்லையாதலால், எங்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் கட்டுரை எங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறது என்பதை நீங்கள் நன்றாகவே ஊகிக்கக்கூடும்! (ஜூலை 8, 1990) கடவுளுடைய மக்களுக்கு நன்மையாயிருக்கும் அனைத்துக் காரியங்களையும் குறித்து நீங்கள் சிந்தனை செய்வதற்காக நாங்கள் உண்மையிலேயே உங்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம்.
R.P., வெனீஜுலா
வசைமொழி பேசுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எவ்வாறு வசைமொழி பேசும் தூண்டுதலை எதிர்க்கலாம்?” என்ற கட்டுரை சரியான நேரத்தில் கிடைத்தது! (பிப்ரவரி 8, 1991) கிறிஸ்தவ மதத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு துணை இருக்க, என்னுடைய நாவைக் கட்டுப்படுத்த இதைத்தான் என்னால் செய்ய முடிகிறது. வசைமொழி பேசும் அந்த எண்ணங்கள்தாமே நான் வெட்கப்படவும் கடவுளுடைய அன்பைப் பெற்றிட தகுதியற்றவனாக உணரும்படியும் செய்திருக்கிறது. வசைமொழி பேசும் அந்தச் சோதனையை எதிர்த்துப்போராடுவதற்கு அவசியமான வழிநடத்துதலை இந்த அருமையான கட்டுரை எனக்குத் தந்தது.
C.D. ஐக்கிய மாகாணங்கள்
கற்பழிக்கப்படுவதைத் தவிர்த்தல் உங்களுடைய கட்டுரையில் (நவம்பர் 8, 1990) குறிப்பிடப்பட்டிருக்கும் பெண், “யெகோவாவின் உதவியால் . . . கற்பழிக்கப்படுவதைத் தவிர்க்க முடிந்தது,” என்று கூறினாள். அப்படியென்றால் கற்பழிக்கப்படுகிறவர்களுக்குக் கடவுளுடைய உதவி இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அவர் ஏன் ஒருவருக்கு உதவி மற்றொருவருக்கு உதவாமல் இருக்க வேண்டும்?
V.R., ஐக்கிய மாகாணங்கள்
கடவுள் தம்முடைய மக்களைத் தீங்கிலிருந்து அற்புதவிதமாகப் பாதுகாக்கிறார் என்று பைபிள் சொல்லவில்லை. இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டங்கள் அவருக்கு உண்மையாயிருக்கும் ஊழியர்கள் கற்பழிக்கப்படக்கூடும் என்பதைக் காண்பித்தது. (உபாகமம் 22:23–27) என்றபோதிலும், கடவுள் நமக்கு வேதப்பூர்வமான வழிநடத்துதலை அளித்திருக்கிறார், அதை நாம் பொருத்திப்பிரயோகிப்போமானால், அது நம்முடைய நலனுக்குரியதாய் இருக்கும். கற்பழிக்கப்படுவதை எதிர்த்திடுவதற்கான பைபிள் சார்ந்த ஆலோசனை அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பாக நிரூபித்தது. பொருத்தமாகவே, உதவியான இந்தத் தகவலை அளித்திருப்பதற்காக அவள் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்தாள்.—ஆசிரியர்.
புகைபிடித்தல் “மரணம் விற்பனைக்கு” என்ற இதழின் (செப்டம்பர் 8, 1990) அட்டைப்படம் உண்மையிலேயே மக்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. சங்கிலித் தொடர்பாய்ப் புகைக்கும் ஒரு வயதான பெண்மணியை நான் தவறாமல் சந்தித்து வருகிறேன். அவள் விழித்தெழு! பத்திரிகைக்குப் பல வருடங்களாக தவறாது சந்தா செய்து வருகிறாள், ஆனால் அவற்றின் கட்டுரைகளை வாசிப்பதோ அரிது. அண்மையில் நான் அவளை சந்திக்கச் சென்றபோது, அவளுடைய வீட்டில் நான் தாராளமாக சுவாசிக்க முடிந்ததுக் கண்டேன். ஆம், அவள் புகைப்பதை விட்டுவிட முயன்றுகொண்டிருந்தாள். அந்த இதழைப் பார்த்த போது, அவள் அட்டைப் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வாசித்தது மட்டுமின்றி, இப்பொழுது அவள் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கவும் ராஜ்ய மன்றத்துக்கு வரவும் விரும்புகிறாள். நம்முடைய பத்திரிகைகள் கண்கவரும் வகையில் அமைந்திருப்பதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
C.P., ஐக்கிய மாகாணங்கள்
வீட்டு வேலைகள் என்னுடைய சகோதரிகள் வீட்டில் வேலை செய்ய வேண்டியதில்லை, நான்தான் செய்யவேண்டியதாய் இருக்கிறது என்று நான் சிலசமயங்களில் பொறாமைப்படுகிறேன். ஆனால் வீட்டு வேலைகள் பேரில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரையை வாசித்தப் பிறகு (மார்ச் 8, 1990) சற்று நிம்மதியாக உணர்ந்தேன். அதில் ஒரு பத்தி இப்படியாகச் சொல்கிறது: “உன்னுடைய அன்பான ஒத்துழைப்பு பெற்றோருக்கு இருக்கும் அழுத்தத்தைத் தணிக்க உதவக்கூடும்.” உங்களுக்குத் தெரியுமா? நான் காரைச் சுத்தப்படுத்தப் போகிறேன்! அது உண்மை.
J.W., ஐக்கிய மாகாணங்கள்
நண்பர்களாக இருத்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நண்பர்களாக இருப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?” (மார்ச் 8, 1991) என்ற கட்டுரை நான் எந்த அளவுக்கு என் நட்புகளை முறித்துவிட்டிருந்தேன் என்பதை உணரும்படிச் செய்தது. என் நண்பர்களோடு மற்றவர்கள் பேசினாலுங்கூட நான் பொறாமைக் கொண்டேன்! நான் இப்பொழுது மாற்றங்களைச் செய்து வருகிறேன். பெரும் மதிப்புள்ள இந்தக் கட்டுரைகள் இந்தப் பத்திரிகையில் தோன்றுவது ஒருபோதும் நின்றுவிடாது என்று நம்புகிறேன்.
G.Z., பிரெஸில்
The last item Staying Friends has been replaced by me with Chores since the “Young People Ask ...” articles on Staying Friends does not seem to have appeared in the Tamil issue of March 8, 1990 or in other issues. The “Young People Ask ...” article in March 8, 1990 issue is on Chores, and the Readers’ view is taken from the English issue “From Our Readers” May 22, 1989. The Society may please decide to print or substitute the same.