எய்ட்ஸ் ஓர் அபாயமாக இல்லாதபோது
1984, அக்டோபர் 3-ம் தேதி மாலை, சிறுவன் கில் போர்க், உரிய காலத்துக்கு ஏழு வாரங்களுக்கு முன்பு பிறந்தான். அவனுடைய சின்னஞ்சிறு நுரையீரல், சரிவர செயல்படுவதற்கு பக்குவப்படாதிருந்தது, ஆகவே, 35 மைல்கள் தொலைவில் இப்படிப்பட்ட கவலைக்கிடமாக நோயுற்றிருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு துணைக்கருவிகளைக் கொண்டிருந்த ஆரஞ் கன்டியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவன் மாற்றப்பட்டான்.
மருத்துவர், கில்லுக்கு குறைவுபடும் இரத்தத்துக்கு இரத்தமேற்றுவது அவசியமாக இருக்கும் என்பதாக விளக்கினார்; மற்றபடி அவன் மரித்துப் போக எல்லாச் சாத்தியமும் இருந்தது. பெற்றோர்களுக்கு அது வெகு கடினமாக இருந்தபோதிலும், தங்கள் குழந்தைக்கு இரத்தமேற்ற அனுமதிக்கக்கூடாது என்பதாக பைபிள் அடிப்படையில் அவர்கள் செய்திருந்த தீர்மானத்தில் உறுதியாக இருந்தனர். (ஆதியாகமம் 9:4, 5; லேவியராகமம் 17:10–14; அப்போஸ்தலர் 15:28, 29) மருத்துவர் புரிந்துகொள்கிறவராகவும் ஒத்துழைப்பவராகவும் இருந்தார். என்றபோதிலும் நிலைமை முழுவதும் கவலைக்கிடமானதாகிவிட்டால், தான் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, இரத்தமேற்றப் போவதாக அவர் சொன்னார்.
குறிப்பிடத்தக்கவகையில், கில் சீரான முன்னேற்றத்தைக் காண்பித்தான், ஒன்பதாவது நாளுக்குள், மூச்சு விடுவதற்கு உதவியாக வைக்கப்பட்டிருந்த கருவி அகற்றப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பின், பெற்றோர் அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய வண்ணமாக, அவன் மகிழ்ச்சியான ஆரோக்கியமான குழந்தையாக வளர்ந்துவந்தான். ஆனால் அதுதானே கதையின் முடிவாக இல்லை.
1989-ல், ஆரஞ் கன்டியின் குழந்தைகள் மருத்துவ மனையில் கில் இருந்த அதே சமயத்தில் அங்கிருந்த அநேக குழந்தைகளுக்கு கறைப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதனால் எய்ட்ஸ் நோய் கண்டிருப்பதாக லாஸ் ஆன்ஜலஸ் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பு செய்தது. மருத்துவமனை, எய்ட்ஸ் நச்சுக்கிருமிக்கு பரிசோதனையை நடத்துவதற்காக சுமார் 3,000 பிள்ளைகளின் குடும்பங்களோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தது.
உடனடியாக கில்லின் பெற்றோர் தங்களுக்கு தெரியாமல் அவனுக்கு இரத்தமேற்றப்பட்டிருக்குமா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள மருத்துவ மனையோடு தொடர்பு கொண்டனர். விரைவில், அவனுக்கு எந்த இரத்தமும் ஏற்றப்படவில்லை என்றும் அவனுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் அபாயமில்லை என்றும் அவர்களுக்கு உறுதியளிக்கும் விவரம் மருத்துவமனையிலிருந்து கிடைத்தது. “நாங்கள் உண்மையாகவே முழங்காலில் விழுந்து யெகோவாவுக்கு நன்றி செலுத்தினோம்” என்று பெற்றோர்கள் விளக்கினார்கள். “அவருடைய நீதியான சட்டங்களையும், இப்படிப்பட்ட ஒரு சோதனையை எதிர்ப்படுகையில் நம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள நமக்கு பெலத்தைக் கொடுப்பதற்குமே.”