தூய்மையான ஒரு பூமி—இது நமக்குத் தேவை
பிரிட்டனின் விழித்தெழு! நிருபர்
லண்டனின் வாடகை வண்டி ஓட்டுநர் தங்களுடைய வாடகை வாகனங்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவ்வாறு செய்ய தவறுதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பட்டணத்தின் தெருக்களிலிருந்து அவை தடைச் செய்யப்படுவதில் விளைவடையக்கூடும். பெருஞ்சாலைகளின் நிலைமை மோசமாக இருந்தாலும், அநேக வண்டிகள் நாட்கணக்கில் அழுக்காக வைக்கப்பட்டிருந்தபோதிலும், லண்டனின் வாடகை மோட்டார் வாகனம் கறையின்றி தூய்மையாக இருக்கிறது. வாகனங்களின் பளப்பளப்பான மேற்பரப்பு ஓட்டுநர்களிலும் அவருடைய பயணிகளிலும் பெருமித மற்றும் சந்தோஷ உணர்ச்சிகள் வெளிவரச் செய்கின்றன.
இதேவிதமாக, நம்முடைய வீடு, நம்முடைய உடைகள், மற்றும் நம்முடைய உடைமைகள் தூய்மையாக இருக்கும்போது, அது நம்மில் ஒரு நல்லுணர்வை முன்னேற்றுவிக்கிறது. பள்ளிச் சிறுவன் ஒருவன் வீட்டினுள் நுழைந்து தன்னுடைய அழுக்கான மிதியடியிலிருந்து விரிப்பின்மேல் மண்ணின் தடத்தைவிட்டு செல்லுவதை ஒரு தாய் கண்டால், அந்தச் சிறுவனுக்கு ஐயோ!
உண்மையாகவே, நல்ல ஆரோக்கியம் சொந்த தூய்மையின்மேல் அதிக அளவில் சார்ந்ததாக இருக்கிறது. நம்முடைய சரீரம் ஒழுங்கான கவனிப்பையும் வியாதிக்கு கால்பிடியைக் கொடுக்கும் அழுக்கை நீக்குவதற்கு சுத்தப்படுத்துதலையும் தேவைப்படுத்துகிறது. நாம் நம்மையும் நமக்கு அருகாமையிலுள்ள சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு உபயோகிக்கும் தூய்மைப்படுத்தும் பொருட்கள், துப்புரவு செய்யும் பொருட்கள், தேய்ப்புப் பொருட்கள், சோப்புகள், சவர்க்காரக்குழம்பு, தொற்றுத்தடை மருந்துகள் ஆகிய இவைகளை விற்பதினால் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமான இலாபங்களை சம்பாதிக்கிறார்கள். நிச்சயமாகவே, அநேக ஜனங்கள் தூய்மைக்கான தேவையின் உணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு பட்டணத்தில் வாழ்கிறீர்களென்றால் இதுவே சொல்லப்படக்கூடிய முழு கதையாக இல்லை என்று நீங்கள் அறிவீர்கள்.
ஆபத்து—தூய்மைக்கேடு
நகரவாசிகள் தூய்மைக்கேட்டையும் மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறத்தையும் பற்றி நன்கு உணர்வுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இதை அவர்கள் தெருக்களில் நீக்கப்படாத குப்பை கூளங்கள், கவலையீனமாக வீசியெறியப்பட்ட குப்பை பொருட்கள், பொது கட்டிட சுவர்களின் மேல் கிறுக்கப்பட்ட ஒழுங்கற்ற சித்திரங்கள், எழுத்துக்கள் ஆகிய இவற்றின் மூலம் காண்கிறார்கள். இதை அவர்கள் நெருக்கமான போக்குவரத்திலிருந்து வரும் மூச்சடைக்கும் புகையையும் சில பட்டணங்களை வாதிக்கும் உறைப்பான புகைப்பனியையும் நுகருவதன் மூலம் அறிகிறார்கள்.
ஒருவேளை இதன் காரணமாக நகரங்களில் வாழும் அநேகர் நாட்டுப்புறங்களில் நேரத்தை செலவிடுவதற்கு சில வேளைகளில் முயற்சி செய்கிறார்கள். தூய்மையான காற்றினால் அவர்களுடைய நுரையீரல்களை நிரப்புவதிலும், ஒருவேளை ஒரு மலையிலிருந்து வரும் சிற்றோடையிலுள்ள படிகத் தெளிவாயிருக்கும் நீரைக் குடிப்பதிலும்கூட சந்தோஷமனுபவிக்கிறார்கள். மற்றவர்கள் கடற்கரைக்கு செல்லுவதிலும் மணலில் ஓய்ந்திருக்கவும் அல்லது சமுத்திரத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான குளிப்பினால் தங்களை குளுமையாக்கவும் விரும்புகிறார்கள்.
என்றபோதிலும், ஒரு நிமிடம் பொறுங்கள்! அழுக்கும் தூய்மைக்கேடும் அங்கேயும்கூட மறைந்திருக்கின்றன. ‘அது எவ்வாறிருக்க முடியும்? இது அவ்வளவு தூய்மையாக காணப்படுகிறதே’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். சரி, சற்று நெருக்கமாக அந்தத் “தூய்மையான” காற்றையும் “தெளிவான” நீரையும் நாம் நோக்குவோமாக. (g90 5⁄8)