உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 2/1 பக். 3-4
  • சுத்தம் எவ்வளவு முக்கியம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுத்தம் எவ்வளவு முக்கியம்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • சுத்தம் உண்மை அர்த்தம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சுத்தம் ஏன் முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • சுத்தமாக இருப்பவர்களை யெகோவா நேசிக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • சுத்தமான மக்களைக் கடவுள் நேசிக்கிறார்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 2/1 பக். 3-4

சுத்தம் எவ்வளவு முக்கியம்?

சுத்தம் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் பலவிதமாக பதிலளிப்பர். உதாரணமாக, கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டு வா என ஒரு குட்டிப் பையனிடம் அவனுடைய அம்மா சொன்னால், குழாயைத் திறந்து கையை நனைத்து உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டால் போதும் என அவன் நினைக்கலாம். ஆனால் அது போதாது என்பது அம்மாவுக்குத் தெரியும். அம்மா அவனை குழாயடிக்கு மறுபடியும் இழுத்துச் சென்று நிறைய சோப்பும் தண்ணீரும் போட்டு கைகளையும் முகத்தையும் அழுத்தித் தேய்த்து கழுவி விடுவார்​—⁠வீல் வீல் என்று கத்தினாலும்சரி!

சுத்தம் பற்றிய தராதரங்கள் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியாக இல்லை. சுத்தத்தைப் பற்றி பல தரப்பட்ட கருத்துக்களுடன்தான் மக்கள் வளர்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் பல நாடுகளில் பள்ளிக்கூட சுற்றுச்சூழல் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ஆகவே பிள்ளைகள் சுத்தமான பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்ள அது பெரிதும் உதவியாக இருந்தது. இன்று சில பள்ளி மைதானங்களில் குப்பைக்கூளங்களும் கழிவுப்பொருட்களும் அந்தளவு நிறைந்து காணப்படுவதால், அவை விளையாடுவதற்கோ உடற்பயிற்சி செய்வதற்கோ உரிய இடமாக இருப்பதற்கு மாறாக குப்பை மேடாகவே காட்சி அளிக்கின்றன. வகுப்பறையின் நிலை? ஆஸ்திரேலியாவில் உயர்நிலை பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்த டாரன் இவ்வாறு கூறினார்: “இப்போது வகுப்பறையிலேயே குப்பைக்கூளத்தைக் காண முடிகிறது.” “குப்பையை பொறுக்குங்கள்” அல்லது “சுத்தம் செய்யுங்கள்” என்ற கட்டளைகளை சில மாணவர்கள் தண்டனையாக நினைக்கிறார்கள். ஆசிரியர்கள் சிலர் இதை உண்மையிலேயே தண்டனையாக பயன்படுத்துவதுதான் பிரச்சினையே.

மறுபட்சத்தில், வயது வந்தவர்களும்கூட தினசரி வாழ்க்கையில் அல்லது வியாபார உலகில் சுத்தத்திற்கு நல்ல முன்மாதிரிகளாக எப்போதும் இருப்பதில்லை. உதாரணமாக, பொது இடங்கள் பல, பார்க்க சகிக்காத அளவுக்கு மிகவும் மோசமாக இருக்கின்றன. சில தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் தூய்மைக்கேட்டை உண்டுபண்ணுவது மனிதர்கள்தான், உயிரற்ற தொழிற்சாலையும் வியாபாரமும் அல்ல. உலகெங்கிலும் சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதன் அநேக பாதிப்புகளுக்கும் பேராசையே முக்கிய காரணம் என்றாலும், அசுத்தமான பழக்க வழக்கங்களும் பங்கு வகிக்கின்றன. இந்த முடிவைத்தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் காமன்வெல்த் டைரக்டர் ஜெனரல் ஆதரித்தார். அவர் கூறியதாவது: “பொதுவாக, சுகாதார பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம், தனி ஒரு மனிதனும் தனி ஒரு மனுஷியும் தனி ஒரு குழந்தையும் சுத்தமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்காததுதான்.”

ஆனாலும், சுத்தம் என்பது தனிப்பட்ட விஷயம், வேறு யாரும் அதில் தலையிடக் கூடாது என சிலர் நினைக்கலாம். அது உண்மையா?

உணவு விஷயத்தில் சுத்தம் மிக மிக முக்கியம், அதை கடையில் வாங்கி சாப்பிட்டாலும் சரி, உணவகத்தில் அல்லது நண்பரின் வீட்டில் சாப்பிட்டாலும் சரி. நாம் சாப்பிடும் உணவை தயாரிப்பவர்களும் அதை பரிமாறுகிறவர்களும் சுத்தத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவர்களுடைய கைகளோ நம்முடைய கைகளோ அழுக்காக இருந்தால், பல நோய்கள் வர காரணமாகிவிடலாம். நாம் சுத்தத்தை எதிர்பார்க்கும் இடமாகிய ஆஸ்பத்திரிகளைப் பற்றி என்ன? டாக்டர்களும் நர்ஸுகளும் தங்கள் கைகளை கழுவாதிருப்பதே ஆஸ்பத்திரியில் நோய்கள் தொற்றுவதற்கு காரணம் என்றும் அதை குணமாக்குவதற்கு ஆண்டுதோறும் 46,000 கோடி ரூபாய் வரை செலவாகிறது என்றும் த நியூ இங்லண்டு ஜர்னல் ஆஃப் மெடிசன் கூறுகிறது. அசுத்தமான பழக்கத்தால் எவரும் நம்முடைய ஆரோக்கியத்தை ஆபத்திற்குள்ளாக்குவதை நாம் விரும்ப மாட்டோம்.

அதே போல் நமக்கு சப்ளை செய்யப்படும் தண்ணீரின் தூய்மையை​—⁠வேண்டுமென்றோ கவனக்குறைவாகவோ⁠—⁠யாராவது கெடுத்துவிட்டால் அதுவும்கூட மிகவும் சீரியஸான விஷயம். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் மற்றவர்களும் ‘சிரிஞ்சுகளை’ பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்து விடுவதால் கடற்கரையோரத்தில் வெறுங்காலில் நடப்பது எந்தளவுக்குப் பாதுகாப்பானது? ஒருவேளை இதையெல்லாம்விட அதிக முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது: நம்முடைய சொந்த வீட்டில் நாம் சுத்தத்தைக் கடைப்பிடிக்கிறோமா?

சூயெலன் ஹாய், அழுக்கை விரட்டுதல் (ஆங்கிலம்) புத்தகத்தில் இவ்வாறு கேட்கிறார்: “நாம் முன்பு போலவே இப்போதும் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமா?” அவரே பதிலளிக்கிறார்: “இல்லை என்றுதான் நினைக்கிறேன்.” சமுதாய மதிப்பீடுகள் மாறிவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறுகிறார். மக்கள் வீட்டில் செலவிடும் நேரம் குறைந்துவிடவே, சுத்தம் செய்ய யாரையாவது வேலைக்கு வைக்கிறார்கள். இதன் காரணமாக, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைப்பது என்பது இப்போதெல்லாம் அவர்களுக்கு தனிப்பட்ட அளவில் முக்கியத்துவமுள்ளதாக இல்லை. “ஷவரை நான் சுத்தம் செய்வதில்லை, ஆனால் என்னை சுத்தமாக வைத்துக்கொள்கிறேன்” என்றார் ஒருவர். “வீடு அசுத்தமாக இருந்தாலும் நானாவது சுத்தமாக இருக்கிறேனே.”

ஆனால் சுத்தம் என்பது வெறும் வெளித்தோற்றத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான அனைத்து விஷயங்களையும் உட்படுத்தும் நன்னெறி அது. ஒழுக்கத்தையும் வழிபாட்டையும் உட்படுத்தும் நம் மனநிலையை அல்லது இருதய நிலையையும் அது குறிக்கிறது. எப்படி என்று நாம் பார்க்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்