உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 அக்டோபர் பக். 8
  • சுத்தமாக இருப்பவர்களை யெகோவா நேசிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுத்தமாக இருப்பவர்களை யெகோவா நேசிக்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • சுத்தம் உண்மை அர்த்தம் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சுத்தம் எவ்வளவு முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சுத்தமான மக்களைக் கடவுள் நேசிக்கிறார்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • சுத்தம் ஏன் முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 அக்டோபர் பக். 8
ராஜ்ய மன்றத்தில் இருக்கும் கழிவறையை ஒரு சகோதரர் சுத்தம் செய்கிறார்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சுத்தமாக இருப்பவர்களை யெகோவா நேசிக்கிறார்

பொதுவாக, சுத்தமாக இருப்பது எப்படி என்பதைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, ‘கையை கழுவு. வீட்டைக் கூட்டி சுத்தமாக வை. பாத்திரத்தைக் கழுவு. குப்பையைக் கொட்டிவிட்டு வா’ என்றெல்லாம் சொல்வார்கள். சுத்தமாக இருப்பது சம்பந்தமாக பெற்றோர் சொல்லிக்கொடுக்கிற விஷயங்கள் எல்லாமே பரிசுத்தமான நம் கடவுள் சொன்னவைதான். (யாத் 30:18-20; உபா 23:14; 2கொ 7:1) நம்முடைய உடலையும் பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது, யெகோவாவுக்கு நாம் புகழ் சேர்க்கிறோம். (1பே 1:14-16) நம்முடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்படி வைத்திருக்கிறோம்? சிலரைப் போல, தெருக்களிலும் பூங்காக்களிலும் குப்பைகளை வீசுகிறோமா? நாம் இந்தப் பூமியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிந்தளவு முயற்சி செய்கிறோம். (சங் 115:16; வெளி 11:18) சுத்தமாக இருப்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா இல்லையா என்பதை நாம் செய்கிற சின்னச் சின்ன விஷயங்கள்கூட காட்டிவிடும். உதாரணத்துக்கு, சாக்லேட் பேப்பர், ஜூஸ் பாட்டில், சூயிங் கம் போன்றவற்றை நாம் எங்கே தூக்கிப்போடுகிறோம் என்பதை யோசித்துப்பார்ப்பது முக்கியம். எல்லா விதத்திலும், நம்மை “கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு” செய்ய நாம் விரும்புகிறோம்.​—2கொ 6:3, 4.

சுத்தமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கிறார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • பொருள்களைச் சுத்தமாக வைக்காததற்குச் சிலர் என்னென்ன சாக்குப்போக்குகளைச் சொல்லலாம்?

  • சுத்தத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?

  • ஒரு வார்த்தைகூட பேசாமல் நம்மால் எப்படி யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுக்க முடியும்?

ஒரு அப்பா, தன்னுடைய மகனின் அழுக்கான காரில் ஏறுகிறார்; சுத்தமாக இருப்பதைப் பற்றி யெகோவா சொல்லியிருக்கிற விஷயங்களை மகனிடம் அப்பா சொல்கிறார்; பூர்வ இஸ்ரவேலில் குருமார்கள் இரண்டு பேர், கைகால்களைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்படும் செம்புத் தொட்டிக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள்; மகன் தன் காரைச் சுத்தம் செய்துவிட்டார்; அதிலிருந்து, வெளி ஊழியத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இறங்கிப் போகிறார்கள்

யெகோவாவைப் போல், நானும் என் வாழ்க்கையில் எப்படிச் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்