போலி அறிவுத்திறன் ஒரு புழுவுக்குச் சமானம்
“கடந்த ஆண்டில் கணிப்பொறிகளை அல்லது கம்ப்யூட்டர்களை மனித மூளைக்கு நெருங்க கொண்டுவருவதற்கு நரம்புமைய அமைப்புகள் போன்ற சுற்றுகள், இணைச் செயலகங்கள், பன்முறைச் செயலகங்கள் மற்றும் வேறு வர்த்தக துறை மற்றும் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து ஏராளமான பேச்சு இடம்பெற்றிருந்ததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த முயற்சி உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது அல்லது புதிய தொழில்நுட்பம் உண்மையில் எதை சாதிக்கிறது என்ற ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். நரம்புமைய அமைப்புகள் போன்ற சுற்றுகள் நிறுவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நண்பர் என்னிடம் சொன்னதாவது, “உயிர்மனப்” பரிணாம ரீதியில், இன்றைய பொருட்கள் ஒரு புழுவுக்குச் சமானமாக அறிவுத்திறன் அளவில் ஒன்றுக்கொன்று போட்டியாக அமையக்கூடும். ஒரு புழுவுக்குத்தான் சமானமா என்று கேட்கிறீர்களா? ஆம், ஒரு புழுவுக்குத்தான். மனித மூளையின் அருஞ் செயல்களைச் செய்ய முற்படுவது . . . ஒரு மனித மூளையைத் தேவைப்படுத்துகிறது.”—கம்ப்யூட்டர் உவர்ல்டு, பிப்ரவரி 27, 1989, பக்கம் 21.
மூளை மின்னியல்ரசாயன தூண்டுதல்கள் மூலம் தகவல்களைத் தெரிந்துகொள்கிறது. “அப்படிப்பட்ட தூண்டுதல்கள் மிகவும் மெதுவாக இருப்பினும்—வினாடிக்கு ஏறக்குறைய 100 அடி—அவை மின் தூண்டுதல்களை உலோகக் குழாய்களின் வழியாய் செல்லும் மின் தூண்டுதல்களைவிட சிறந்து செயல்படுகின்றன, ஒரு வினாடிக்கு 100 கோடி அடிகள் பயணம்செய்யக்கூடியவை.” இன்று கிடைக்கப்பெறும் மிகவும் அதிசயமான கம்ப்யூட்டர்களில் ஒன்று தகவல்களை கையாளுவதற்கு 65,536 செயலகங்களைக் கொண்டிருக்கிறது, மற்றும் ஒரு துணி துவைக்கும் இயந்திரம் அளவானது. என்றாலும், “மனித மண்டையோட்டிற்குள் மூளை 1,50,000 மடங்குகள் அதிகமான செயலகங்களை நெருக்கமாக அடக்கியிருக்கிறது.” மிகவும் விலையுயர்ந்த கம்ப்யூட்டர் ஒரு தற்புனைவு அறிஞனாகத் திகழ்கிறது. நீங்கள் அதில் எண்களை செலுத்தும் வேகத்திலேயே கணக்குப்போடக் கூடியது, ஆனால் அதைப் பகுத்தறிவுக்குரிய தீர்மானத்தைச் செய்ய முயன்றுபாருங்கள், அது செயலிழந்துவிடுகிறது.
கம்ப்யூட்டர் உவர்ல்டு கட்டுரை இப்படியாக முடிக்கிறது: “இந்த முழு விளக்கத்தின் நோக்கம் என்னவென்றால், எந்த ஓர் அமைப்புமுறை கொண்ட கருவியும் அல்லது திட்டவியத்தைக் கொண்டு மனித மூளைக்கு ஈடுசெய்ய முயலுவது எவ்வளவு கடினம் என்பதை உங்களுக்குக் காட்டுவதுதான். மிகச் சாதாரண நிலைகளிலுங்கூட, மூளைதான் மூல கம்ப்யூட்டர், மற்ற எல்லா மாதிரிகளும்—அவற்றின் செயல்பாடுகள் என்னவாயிருந்தாலும்—ஒப்பிடப்படுகையில் ஊர்ந்து செல்லும் மாதிரிகளே.” (g90 5/22)