உலகத்தைக் கவனித்தல்
புதிய பைபிள் மொழிபெயர்ப்புகள்
முழு பைபிள் அல்லது அதன் பகுதிகள் இப்பொழுது உலகிலுள்ள மக்கள் தொகயில் 98 சதவீதத்தினருக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளது, இதன் பகுதிகள் அல்லது முழுமையாக இது 1,928 வித்தியாசமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஃபிரெஞ்சு செய்தித் தாள் லா க்ரோக்ஸ், 1989-ல் பைபிளின் 21 புதிய மொழிபெயர்ப்புகள் பிரசுரிக்கப்பட்டதாக அறிவிப்பு செய்கிறது. பாப்புவா நியு கின்னியின் சிலப் பகுதிகளில் பேசப்படும் சிதைவுள்ள ஆங்கிலத்தின் ஒரு வகையான டாக் பிஸின்; ட்ருக் தீவிலும் தென் பசிப்பிக்கிலுள்ள மற்ற தீவுகளிலும் பேசப்படும் ட்ருக்கீஸ்; தென் கிழக்கு ஆசியாவின் சீன மொழியாக இல்லாத சைனோ-திபெத்து மொழியான லாகூ; பங்ளாதேஷில் பேசப்படும் பாம் ஆகியவை புதிய மொழிபெயர்ப்புகளில் அடங்கியுள்ள மொழிகளாகும். சோவியத் யூனியனிலுள்ள சில பகுதிகளிலும் ஸ்கண்டிநேவியாவிலும் பேசப்படும் லாப்பிஷ் மொழியிலும், நாடோடிகளின் மொழியாகிய ரோமேனியிலும் மொழிபெயர்ப்பதற்கு இப்பொழுது வேலை நடந்து கொண்டிருக்கிறது. (g90 7/8)
நிலநடுக்கத்தால் பார்வை
ஆஸ்திரேலியாவிலுள்ள நியு காஸிலில் வாழ்ந்து வரும் 84 வயதான ஒருவரின் பார்வை, ஒரு சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட, பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் விளைவாக மீண்டும் கிடைத்தது. மூன்று ஆண்டுகளாக, அவளால் வெறுமென உருவங்களை மாத்திரமே பார்க்க முடிந்தது, ஆனால் நிலநடுக்கத்துக்குப் பின்பு அவளால் செய்தித்தாளையும் கூட படிக்க முடிகிறது. நிலநடுக்கத்தின் அதிர்ச்சியினால் இயக்குநீர் (adrenaline) அவளுடைய கண்களுக்குப் பாய்ந்து வர இது அவளுடைய பார்வையை மீட்டுத்தர உதவியாக இருந்திருக்கக்கூடும் என்பதாக அவளுடைய மருத்துவர் கருத்து தெரிவிக்கிறார். அவள் இவ்வாறு சொல்வதாக தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்தித்தாள் குறிப்பிடுகிறது: “நான் வெறுமென தெளிவாக பார்த்தேன். ஒரு சில நொடிகளில் அது அவ்வாறு நிகழ்ந்தது. என் கண்கள் அகலமாக விரிந்து திறந்தது போல எனக்கு இருந்தது. ஆனால் அவை அவ்வாறு இல்லை, ஆனால் என்னால் பார்க்க முடிந்தது. அப்போது முதற்கொண்டு அது அவ்வாறே இருந்து வருகிறது.” (g90 6/22)
தாய் பால் பாதுகாப்பளிக்கிறது
தங்கள் குழந்தைகளுக்கு தாய் பாலூட்டும் தாய்மார்கள் குறிப்பிடத்தக்க நற்பயனை அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்—தொற்று நோய்க்கு வாய்ப்பு குறைவு—ஸ்காட்லாந்து, டன்டீயிலுள்ள நைன் வெல்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ பள்ளியின் பேராசிரியர் பீட்டர் ஹையின் தலைமையிலான மருத்துவக் குழு முடிவுக்கு வருகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்-ல் வெளியிடப்பட்ட, முதல் ஆண்டின் போது குழந்தைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை முதல் 13 வாரங்களுக்கு தாய் பால் குடிக்கும் குழந்தைகள், புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளை அவதியுறச் செய்யும் வயிறு–குடல் சம்பந்தப்பட்ட நோய்களினால் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே அவதியுறுகிறார்கள் என்பதாக அறிவித்தது. தாய் பால் குடிப்பது, அதேவிதமாக, சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குறைப்பதில் சிறிய அளவு பாதிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த நற்பயன்களை பிள்ளைகள் பெற்றுக்கொள்ள, தாய்மார்கள், “குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது தாய் பாலூட்ட வேண்டும்” என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர். (g90 7/8)
ஒரு விதிவிலக்கை ஏற்படுத்துவது
தனிப்பட்ட பாதிரிகளை அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க பூசையின் சமயத்தில் சாராயம் கலக்காத மது பருக அனுமதிப்பது என்ற ஒரு நிலையான கொள்கை வத்திக்கனுக்கு உண்டு. ஆனால் சமீபத்தில் இத்தாலியில், ஃயூர்லி பகுதி முழுவதிலுமுள்ள பாதிரிமார்களுக்கு, திராட்சரசத்துக்குப் பதிலாக பூசையின் போது புளித்து பொங்க வைக்கப்படாத திராட்ச பழரசம் குடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏன்? கத்தோலிக்க ஹெரால்ட்-ன் பிரகாரம், பாதிரிமார்கள் அவர்களுடைய அணியில் குடி பழக்கத்துக்கு அடிமையானவர்கள், பூசையின் போது ஒரு தடவை உறிஞ்சுவதன் மூலம் “அதிகமாக குடிக்கும் பழக்கத்துக்கு மீண்டும் சென்று”விடக்கூடும் என்று அஞ்சியதன் காரணமாக, பாதிரிமார் இவ்விதம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கத்தோலிக்க செய்தித் தாள் மேலுமாக குறிப்பிட்டது: “ஃயூர்லி பகுதியின் சுற்றாய்வு மக்கள் தொகயில் 15 சதவீதத்தினருக்கு குடி பிரச்னை இருப்பதையும் அப்பகுதியிலுள்ள 400 பாதிரிகளில் அநேகர் உயர்-அபாய பிரிவில் இருப்பதையும் காண்பித்தது.” (g90 4/22)
குழந்தை உயிர் பிழைத்தல்
ஆலந்து நாட்டு பிறப்பு நிலைப் புள்ளி விவர ஆய்வு நிறுவனம் பிரசுரிக்கும் வெளியீடான டமாஸ்-ன் படி ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் சராசரியாக 3,81,000 குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் உயிர் வாழும் எதிர்பார்ப்பு, அவர்கள் எங்கே பிறக்கின்றனர் என்பதையே வெகுவாக சார்ந்திருக்கிறது. தங்கள் முதல் ஆண்டுக்குள் மரிப்பது 1,000 குழந்தைகளில் 5 மட்டுமே என்ற உலகிலேயே மிகக் குறைந்த சாவு வீதம் குறித்து ஜப்பான் பெருமை பாராட்டுகிறது. குழந்தை சாவு வீதம் மற்ற தேசங்களில் கணிசமாக உயர்வாக உள்ளது, முதல் ஆண்டுக்குள் ப்ரேஸிலில் 1,000-க்கு 71-ம் கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 1,000-க்கு 110 என்றும் இறக்கின்றன. ஒரு 1,000 குழந்தைகளுக்கு 194 மரணங்கள் ஏற்படும் ஆப்கானிஸ்தானில், குழந்தைகளுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் மோசமாக உள்ளன. உலகம் முழுவதிலும் சுமார் 31,000 குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மரிக்கின்றன. (g90 6/22)
தயவு செய்து பணம் வேண்டாம்!
தென் ஆப்பிரிக்கா, ஜொஹனஸ்பர்க்கில் தட்டு முட்டு சாமான் தொழிற்சாலை ஒன்றின் காட்சிக் கூடத்துக்குள் பிரவேசிக்கும் வாடிக்கையாளர்கள் கண்ணில் படும் அறிக்கை: “நாங்கள் பணம் ஏற்றுக்கொள்வதில்லை. காசோலைகள் அல்லது கடன் அட்டைகள் மட்டுமே.” ஜொஹனஸ்பர்க்கிலுள்ள ஒரு செய்தித்தாளான தி ஸ்டரின்படி பணத்தைக் கையாளுவது கொள்ளைக்காரர்களையும் திருடர்களையும் கவருவதால், சேம பெட்டகத்தில் பணத்தைக் கொண்டிருப்பதையோ அல்லது வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்வதையோ தவிர்க்க முதலாளி தீர்மானித்திருக்கிறார். இதன் காரணமாக எல்லா வியாபாரமும் காசோலை அல்லது கடன் அட்டை மூலமாகவே செய்யப்படுகிறது. வேலை செய்பவர்களும்கூட தங்கள் வாராந்தர கூலியை காசோலை மூலமாகவே பெற்றுக் கொள்கின்றனர். தன்னிடம் வேலை பார்ப்பவர்களைக் குறித்து “ஒவ்வொரு முறையும் அந்நியர் எவராவது உள்ளே நுழைகையில் அவர்கள் அசெளகரியமாக இருந்தார்கள், ஆனால் இப்பொழுது பணம் வேண்டாம் என்ற கொள்கை கொண்டு வரப்பட்டது முதற்கொண்டு அவர்கள் அதிக தளர்ந்த நிலையில் இருக்கிறார்கள்” என்பதாக முதலாளி சொல்கிறார். (g90 6/22)