ஈயம் சுமக்கும் ஓர் உலகம்
ஐக்கிய மாகாண விமானப்படையிலுள்ள ஓர் அதிகாரி திடீரென்று காரணம் கூறப்படமுடியாத வகையில் உடல்தன்மையில் மாற்றங்களுக்கு உட்பட்டார். அவர் எடையில் 14 கிலோ இழந்தார். அவரால் தூங்க முடியவில்லை. அவரது மனைவி இரத்த சோகை மற்றும் உடலில் நீரிழப்பால் பாதிக்கப்பட்டாள். என்ன நேரிட்டுக் கொண்டிருந்தது? இருவரும் இன்னொரு நாட்டில் வாங்கியிருந்த உண்கலங்கள் சரியாக மெருகிடப்படாதிருந்தன. அவற்றிலிருந்து ஈயம் அத்தம்பதியரின் உணவில் ஈயத்தைக் கசிய ஆரம்பித்தன.
இன்னொரு சம்பவத்தில், ஒரு பெண் குழந்தையின் வளர்ச்சி ஏறக்குறைய நின்றுவிட்டது. மேலும், அவள் உணவை சரியாக ஜீரணிக்க முடியவில்லை. ஏன்? அவள் வீட்டின் குழாய் நீர் ஈயத்தால் மாசுபடுத்தப்பட்டிருந்தது. ஓர் இரண்டு வயது சிறுவன் அவனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தின் மண்ணிலிருந்து ஈயத்தின் நச்சுப் பாதிப்புக்குள்ளானான். அருகிலுள்ள நெடுஞ்சாலையிலிருந்து வரும் எரி பொருள் எண்ணெய்ப் புகை புழுதியை ஈயத்தால் கறைப்படுத்தியிருக்கிறது.
எந்தளவுக்குக் கவலைக்குரிய ஒரு பிரச்னை?
ஈயம் நச்சுத்தன்மையுள்ளது என மனிதன் நூற்றாண்டுகளாக அறிந்திருக்கிறான். சில வரலாற்றாசிரியர்கள், ஈயத்தின் நச்சுப்படுத்தல் ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றுகூட நினைக்கின்றனர். அவர்களது திராட்சரசக் குடுவைகள், பாத்திரங்கள், ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றில் ரோமர்களின் பரவலான ஈயத்தின் உபயோகம், முக்கியமாக அவர்களது திராட்சரசம் மிகப் பரவலான சரீர மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை விளைவித்திருக்கக்கூடும்.
இன்றைய நாளைப் பற்றியதென்ன? செசில் மருத்துவ பாடநூல் என்ற புத்தகத்தில் டாக்டர் டொனால்டு லூரியா, “ஒரு விதத்தில் நாமெல்லாருமே ஈயத்தால் நச்சுப்படுத்தப்பட்டிருக்கிறோம்,” என்று பதிலளிக்கிறார். தொழில் புரட்சிக்கு முன் வசித்த மக்களைவிட, இன்றைய தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளின் மக்கள் ஏறத்தாழ ஒரு நூறு மடங்கு அதிகமான ஈயத்தைத் தங்கள் உடல்களில் கொண்டிருக்கிறார்கள். எனினும் பொதுவாக மக்கள் மத்தியில் மிகப்பரவலான நோய்க்குக் காரணமாக இதுவரையிலும் இது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை என மருத்துவர்கள் விழித்தெழு!விற்கு உறுதியளிக்கிறார்கள்.
ஈயம் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தானது. பெரியவர்களைவிட அவர்கள் அதை வெகு எளிதாக ஈர்த்துக்கொள்கிறார்கள். அது அவர்களுடைய மன வளர்ச்சி மற்றும் திறன்களை ஒருவேளை நிரந்தரமாகக்கூட பாதிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆண்டும் ஈயத்தின் நச்சுப்படுத்தல் ஏறத்தாழ 1,40,000 அமெரிக்கக் குழந்தைகளின் புத்திக்கூர்மையை ஐந்து அறிவுத்திற அளவெண்கள் (IQ POINTS) வரைக்கும் குறைக்கலாம்.
குறைந்த அளவுகளில் ஈயம் லட்சக்கணக்கான வீடுகளுக்குள் குடிநீர் மூலமாக கசிந்திருக்கிறது, ஏனெனில் 1940-கள் வரையாக ஈயக் குழாய்கள் பொதுவாக பயன்படுத்தப்பட்டன. அன்றுமுதல் பயன்படுத்தப்பட்டச் செம்பு குழய்களுங்கூட ஈயம் கொண்ட பற்றுப்பொருளால் இணைக்கப்பட்டன, என்றாலும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, சில இடங்களில் ஈயம் இல்லாத இணைப்புப் பொருளைத் தேவைப்படுத்தும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலுள்ள நீர் சேமிப்புத் தொட்டிகள் ஈயத்தின் ஊற்று முலமாகக் காணப்பட்டிருக்கின்றன. உள்ளூர் நீர் ஈயத்தைக் கரைத்திடும் பண்புடையதாய் இருந்தால், குழாய்களின் இணைப்பிலுள்ள ஈயத்தைக் கரைத்து அதைக் குழாயினூடேயும் உங்கள் குவளைக்குள்ளும் எடுத்துச் செல்லும்.
மண் மற்றும் புழுதிகூட, ஈயத்தைக் கொண்டுள்ளன. உதிர்ந்து விழும் பெயின்ட் துணுக்குகள் மற்றும் தொழில் துறையின் ஈய உருக்கிகள் ஒரு பங்கை வகித்திருக்கின்றன. ஒரு பெரிய குற்றவாளி எரிபொருள் எண்ணெயாகும். 1920-களில் ஓர் இயந்திரத்தில் இன்ஜின் அடிவாங்குவதைத் தவிர்ப்பதற்காக ஈயம் எரிபொருள் எண்ணெயோடு சேர்க்கப்பட்டது. எனவே, கார்களும், தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான டன்கள் ஈயத்தைக் காற்றில் உமிழ்ந்திருக்கின்றன; அது நமது கிரகத்தின் தூசி மற்றும் அழுக்கிலும் படிந்திருக்கின்றன. ஈயம் தாங்கிய தூசி நமது உணவு சிலவற்றின் மேல் கூட வந்து படியலாம்.
ஏதாவது நம்பிக்கை?
1960-கள் மற்றும் 70-களில் ஒரு தெளிவான எச்சரிக்கை ஈயத்தின் அபாயங்களுக்கு எதிராக ஒலிக்கப்பட்டது; அப்போதிருந்து பல முக்கிய சீர்திருத்தங்கள் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. பெயின்ட்டிலுள்ள ஈய உட்பொருள் பெருமளவு குறைக்கப்பட்டு வந்திருக்கிறது. பல நாடுகள் ஈயம் கலந்த எரிபொருள் எண்ணெயை ஒழிப்பதில் முன்னேற்றத்தைச் செய்திருக்கின்றன—குறிப்பிடத்தக்க விளைவுகளுடன். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், மனித இரத்தத்திலுள்ள ஈயத்தின் அளவு, சராசரியாக, மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது. ஐரோப்பாவில் அங்குள்ள கிட்டத்தட்ட எல்லா எரிபொருள் எண்ணெயும் 2000 ஆண்டுக்குள் ஈயமற்றதாகிவிடும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாகக், கடுமையான ஈய நச்சுப்படுத்தலின் நிகழ்வுகள் குறைந்துள்ளன. அப்படியானால், ஏன் இன்னும் அச்சத்திற்குக் காரணமிருக்கிறது? ஏனெனில் முன்பு அவர்கள் பாதுகாப்பானது எனக் கருதிய ஈயத்தின் அளவுகளை இப்போது அபாயகரமானதாக விஞ்ஞானிகள் காண்கிறார்கள். மேலும் எவ்விதத்திலும் மனிதன் ஈயத்தைச் சுற்றுபுறத்துக்குள் போடுவதிலிருந்து நிறுத்தியிருக்கவில்லை. மனிதன் இன்னும் 4,00,000 டன்கள் ஈயத்தை வளிமண்டலத்துக்குள் ஒவ்வொரு வருடமும் உமிழ்கிறான் என்று கணக்கிடும் ஒரு சமீபத்திய அறிக்கையை FDA நுகர்வோர் இயக்கம் எடுத்துக்காட்டுகிறது.
எதிர்காலத்தைப் பற்றியது என்ன? உலகத்தை ஈயத்தால் பூசுவதை மனிதன் தொடர்வானா? சந்தோஷமாகவே, பூமிக்கு செய்திருக்கும் பரந்த பாதிப்பை நிவிர்த்தி செய்ய மனித இனத்திற்காக நாம் நம்பிக்கையற்று மனமுறிவுடன் காத்திருக்க வேண்டியதில்லை. மனிதனின் என்றும் நம்பத்தகுந்த சிருஷ்டிகர், “பூமியைக் கெடுப்பவர்களைக் கெடுத்துப்போடு”வார் என்று வாக்களிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.
ஆனால் இப்போதைப் பற்றியது என்ன? உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில நடைமுறையான வழிகள் யாவை?
உங்களைப் பாதுகாக்க வழிகள்
நீர்: உங்கள் குழாய் நீரைக் குறித்து கவலை கொண்டிருக்க உறுதியான காரணங்களை நீங்கள் கொண்டிருந்தால், அதைப் பரிசோதிக்க நீங்கள் விரும்பலாம். உங்கள் வீட்டுக் குழாய்கள் நீரினுள் ஈயத்தைக் கசியச்செய்து கொண்டிருந்தால், ஓர் அதிக விலையுள்ள எதிர்மறை-சவ்வூடுபறவுதல் வடிகட்டி மட்டுமே பயனுள்ளவிதத்தில் அதை நீக்கும். சாதாரண தரமுள்ள கரித்துண்டு வடிகட்டிகள் ஈயத்தை அகற்றுவதில்லை. இருந்தாலும், நீரைப் பல நிமிடங்களுக்கு ஓடவிடுவதன் மூலம் ஈய உட்பொருளை நீங்கள் குறைக்கலாம். குறிப்பாக அது குழாய்களில் அதிக நேரம் தங்கியிருந்தால் அப்படிச் செய்ய வேண்டும். சூடான குழாய்-நீர் அதிக ஈயத்தைக் கொண்டிருப்பதால், அருந்துவதற்கும் உணவுதயாரித்தலுக்கும் அதைப் பயன் படுத்தாதீர்கள்.
உணவு: ஈயத்தைத் மூலக்கூறாகக் கொண்ட மெருகுப்பொருட்களையுடைய மண்பாத்திரங்கள், தேவையான உயர்ந்த வெப்பங்களில் சுடப்பட்டிராமல் இருக்கும்போது ஆபத்தானவை. பல நாடுகள் அவைகளின் மண்பொருள் தயாரிப்பைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டிராததால், அத்தகைய ஒரு நாட்டிலிருந்து மண்கலப்பொருட்களை நீங்கள் வாங்கினால் எச்சரிக்கையைக் கையாளுங்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களை உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்துவதைவிட உணவைச் சேமித்து வைக்க பயன்படுத்துவது அதிக ஆபத்தானது, ஏனெனில் நேரம் செல்லச் செல்ல அதிக ஈயம் வெளியே கசிகிறது. ஒரு மண்பாத்திரம் ஈயத்தால் கறைபட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அதை உணவு சேமிப்பதற்கல்லாமல் வெறுமென ஓர் அலங்காரப் பொருளாக உபயோகிக்க நீங்கள் விரும்பலாம்.
பழங்களையும் காய்களையும் கழுவுவது அவை மேல் படிந்திருக்கக்கூடிய ஈயப்புழுதியில் ஏறக்குறைய பாதியை அகற்றுகிறது. மேலும், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு இன்னொரு காப்பு முறையாகும். ஒரு நல்ல சமநிலையான உணவு துத்தநாகம், இரும்புச் சத்து, மற்றும் சுண்ணாம்புச் சத்து ஆகியவற்றைப் பொதுவாக சரியான அளவுகளில் அளிக்கிறது. இவை உடலின் ஈய அளவுகளைக் குறைவாக வைத்திருக்க உதவக்கூடும். ஈயத்தாலான விளையாட்டுப் பொருட்கள் அல்லது பெயின்ட் துகள் போன்ற எந்த ஈயப் பொருட்களையும் உங்கள் குழந்தைகள் வாயில் போடாதபடிக்குக் கவனமாயிருங்கள். ஈயப் புழுதி உட்புகக்கூடிய இடங்களில் அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கக்கூடாது.
இவ்வாறு, கடவுளுடைய புதிய உலகத்தில் ஈயத்தின் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை நாம் எதிர்பார்க்கும்போது, நம்மைப் பாதுகாக்க நாம் எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் சில இருக்கின்றன. (g90 8/8)