உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 7/8 பக். 23-24
  • செய்தி–பசியுள்ள ஒரு நூற்றாண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செய்தி–பசியுள்ள ஒரு நூற்றாண்டு
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இன்று செய்திக்கான வேட்டை
  • எதிர்காலத்தில் செய்தி
  • கூட்ட—உலகை ன்பர்க் மாற்றிய மனிதர்!
    விழித்தெழு!—1998
  • தொலைக்காட்சி உலகத்தை எவ்வாறு மாற்றியிருக்கிறது
    விழித்தெழு!—1992
  • நீங்கள் பெறும் செய்திகளை நீங்கள் நம்பலாமா?
    விழித்தெழு!—1991
  • ஒப்பற்ற புத்தகம்
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 7/8 பக். 23-24

செய்தி–பசியுள்ள ஒரு நூற்றாண்டு

20-ம் நூற்றாண்டில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களுடைய முன்னோர்கள் இருந்ததைவிட செய்திகளின் விஷயத்தில் அதிக காலத்தோடொட்டிய வளர்ச்சியை அனுபவித்துவருகின்றனர். என்றபோதிலும், நாம் பெற்றுக்கொள்ளும் செய்தி எப்பொழுதும் திருத்தமானது என்பதாக நாம் உண்மையில் நம்பியிருக்க முடியுமா? விளம்பரதாரர்கள், அரசியல்வாதிகள் அல்லது மற்றவர்களுடைய அக்கறைகளுக்கு சாதகமாய் இருக்கும்பொருட்டு, செய்திகள் சில சமயங்களில் கையாளப்படுகிறது என்று நம்புவதற்கு காரணம் இருக்கிறதா? மேலும் பொதுவான செய்தி சாதனங்கள் மூலமாகப் பெறப்படமுடியாத முக்கியமான செய்திகளை நாம் தவற விட்டுக்கொண்டிருக்கிறோமா? விழித்தெழு! இப்படிப்பட்ட கேள்விகளை பின்வரும் கட்டுரைகளில் சிந்திக்கும்.

மக்கள் எப்போதுமே தங்களைச் சுற்றி நடைபெற்று வரும் காரியங்களைப் பற்றிய செய்திகளை விரும்புகிறார்கள். குறிப்பிடத்தக்கதாக நிகழும் எதையும் பற்றி உடனடியாக தகவல் அறிவிக்கப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். பெர்சிய படையின் தோல்வியை அறிவிக்க பொ.ச.மு. 490-ல் ஏதென்ஸுக்கு சுமார் 25 மைல்கள் ஓடிச்சென்று தூதுரைத்தவர் ஒரு படைவீரராக இருந்தார். அங்கு வந்து சேர்ந்த போது வெற்றியை அறிவித்த பின்னர் மாரத்தானில் அவர் மரித்துப் போனதாகச் சொல்லப்படுகிறது.

இன்று, சுமார் 60 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளும் 140 கோடி வானொலி பெட்டிகளும் ஒரு சில மணிநேரங்கள் அல்லது நிமிடங்களுக்கு முன்பும்கூட நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய உலகளாவிய செய்திகளை வீட்டுக்குள் கொண்டுவருகின்றன. ஒரு சில நிகழ்ச்சிகள் அவை நிகழ்ந்துகொண்டிருக்கும் போத நேர்முக ஒளிப்பரப்பில் காணப்படுகின்றன. மேலும் அநேக லட்சக்கணக்கான செய்தித்தாள்களும் லட்சக்கணக்கான பத்திரிகைகளும் செய்தி–பசியுள்ள உலகை திருப்தி செய்ய மிகப் பல மொழிகளில் தினமும் அச்சிடப்படுகின்றன.

550-க்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்பாக அச்சு எழுத்துக்களை மாற்றிப் பொருத்திடும் ஓர் அச்சுமுறையைக் கண்டுபிடித்த ஜோஹனஸ் கட்டன்பர்க்கின் அச்சகம், அச்சடிக்கப்பட்ட செய்தி வேகமாக பரவுவதை கூடியகாரியமாக்கியது. என்றபோதிலும், ஆரம்பக் கால செய்தித்தாள்களின் விற்பனை பரப்பு கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது, அவைகளின் உயர்ந்த விலையின் காரணமாக, அவைகளை வாங்கக்கூடியவர்கள் பணக்காரர்களாக மட்டுமே இருந்தனர்.

விரைவில் எழுத்துரிமை சர்ச்சைக்குரிய ஒரு விஷயமானது. உதாரணமாக ரெனோடாட்டின் கெஸட் ஃபிரான்ஸ் நாட்டு அரசனின் அங்கீகாரத்தோடு 17-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது, அரசு உத்தரவின்படியே பெரும்பாலான செய்தி அச்சிடப்பட்டது. அக்காலத்திலிருந்த வெகு சில பத்திரிகை எழுத்தாளர்களே தேசத்தின் ஆட்சியாளர்களை எதிர்க்க துணிச்சலுள்ளவர்களாக இருந்தனர்.

இன்று செய்திக்கான வேட்டை

முக்கியமாக அச்சகங்கள் இயந்திரமயமானதாலும், விசேஷமாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தினசரி செய்தித்தாள்களின் கணிசமான விற்பனையின் காரணமாகவும், 19-ம் நூற்றாண்டின் முடிவு, செய்தி சாதனங்களில் திடீர் அதிகரிப்பைக் கொண்டுவந்தது.

விரைவில் புதிய உத்திகள் குறிப்பாக வானொலி, செய்திகளை வெளி நாடுகளில் பரப்ப பயன்படுத்தப்பட்டு வந்தது. 1917-ல் உதாரணமாக ருஷ்யப் புரட்சியின் போது விரைப் போர் கப்பல் அரோரா-வின் வானொலி ஒலிப்பரப்பனுப்பீட்டிக் கருவி, பெட்ரோகிராட்டின் (இப்பொழுது லெனின்கிராட்) குடிமக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டியது.

இரண்டாம் உலகப் போரின்போது, வானொலி, விசேஷமாக நாசி ஜெர்மனிக்கு பிரச்சாரத்துக்கு ஆற்றல்மிக்க ஒரு சாதனமானது. அந்தப் போரின் போது, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் ஒலிபரப்பு கார்ப்பரேஷன் ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கும் உலகிற்கும் பன்னாட்டு செய்திகளையும்கூட ஒலிபரப்பியது.

இரண்டாம் உலகப் போருக்கு முற்பட்ட காலங்களில் தொலைக்காட்சி பரிசோதனை செய்யப்பட்டு வந்தபோதிலும், போரினால் அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்தது. என்றபோதிலும் அது விரைவில் செய்தி சாதனமாக மலர்ந்தது. இன்று, தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.

சமீப பத்தாண்டுகளில், பத்திரிகை துறை அநேக தனித்துறைப் பிரசுரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, செய்திகளை அலசிய வாராந்தர பத்திரிகைகள் பிரசுரிக்கப்பட்டன. இளம் வயது ஆட்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஆட்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இடைஇடையே வேலைக்குச் செல்பவர்களுக்கு நேரப் போக்களித்து மகிழ்விக்கும் பத்திரிகைகள் மிக நேர்த்தியான விற்பனைகளை அனுபவித்து மகிழ்கின்றன, வாரந்தர தொலைக்காட்சி நிகழ்ச்சி விமர்சன பத்திரிகைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஃபிரான்சில், உதாரணமாக, சுமார் 200 புதிய பத்திரிகைகள் ஆண்டுதோறும் வெளிவருகின்றன.

எதிர்காலத்தில் செய்தி

ஏற்கெனவே, தொலைப் போக்குவரத்து இணைப்புகள் வழியாக, வீடியோ காட்சி டெர்மினல்களில் செய்தி குறிப்பு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. தந்தி செய்தி மற்றும் துணைக்கோள் அமைப்புகள் இப்பொழுது (ஐக்கிய மாகாணங்களில் இருப்பது போல) ஒருசில தொலைக்காட்சி அலைவரிசைகளை அளிக்கின்றன. இவை இரவும் பகலும் செய்திகளை வெளியிட்ட வண்ணமாக இருக்கின்றன. எதிர்காலம் சர்வ தேசீய அளவில் இன்னும் அதிகத்தைக் கொண்டுவரும் என்பதாக சிலர் முன்னறிவிக்கின்றனர். இதன் காரணமாகவே, 20-ம் நூற்றாண்டு சரியாகவே செய்தி–பசியுள்ள நூற்றாண்டு என்று அழைக்கப்படலாம். ஆனால் செய்திகள் எப்பொழுதும் நம்பத்தக்கவையாக இருக்கின்றனவா? பல்வேறு தகவல் பணிகள், நேர்மையான, ஒரு பக்கமாக சாயாத செய்திகளை உறுதியளிக்கின்றனவா? (g90 8/22)

[பக்கம் 24-ன் படம்]

கட்டன்பர்க்கின் அச்சு எழுத்துக்களை மாற்றிப் பொருத்திடும் அச்சுமுறை அச்சகத்தின் கண்டுபிடிப்பு, செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புவது தொடர்பாக மாபெரும் வளர்ச்சிப் படியாக இருந்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்