உலகத்தைக் கவனித்தல்
நீண்ட ஆயுளின் இரகசியம்
சராசரி வாழ்க்கைக் காலம் பெண்களுக்கு 81.77 வருடங்களையும், ஆண்ளுக்கு 75.91 வருடங்களையும் எட்டுவதுடன், நீண்ட வாழ்நாளின் ஒரு புதிய, உலக உச்சநிலைப் பதிவு ஜப்பானியர்களால் அமைக்கப்பட்டுள்ளது. வல்லுனர்கள் இதை ‘குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் மரணங்களின் குறைவுக்கு’ உரித்தாக்குகிறார்கள் என மெய்னிசி டெய்லி நியுஸ் குறிப்பிடுகிறது. தி டெய்லி யொமியுரி பத்திரிகை பிரகாரம், ஜப்பானில் அதிக வயதுள்ளவரும் அந்நாட்டின் நூறு வயதான 3,298 பேரில் ஒருவருமான வாக்கா ஷிரஹாமா 112 வயதில் அவர்களது நீண்ட வாழ்நாளின் இரகசியம், “ஒரு சுறுசுறுப்பான, மிதமான மற்றும் நேர்மையான வாழ்க்கை வாழுவதே,” என்று கூறினார்கள். வேறொரு பேட்டியில் அவர்கள் மேலும் கூறினதாவது: “விருப்பு வெறுப்புகளில்லாமல் எல்லா வகையான உணவுகளையும் அருந்துங்கள், அதிக தூக்கத்தைப் பெறுங்கள், மேலும் புன்னகையோடிருக்க மறவாதீர்கள்.” (g90 12/22)
க்ளாங்ஸ் கால்வாய்களைச் சுத்தம் செய்யுங்கள்
கழிகள் மேல் உயரே அமைந்த வீடுகளை வரிசையாகக் கொண்ட க்ளாங்ஸ் எனும் பாங்காக்கின் அதிக நடமாட்டம் காணப்படும் கண்கவரும் கால்வாய்ப் பகுதிகள் தாய்லாந்தின் தலைநகரத்தைப் பிரசித்திபெறச் செய்ய உதவியிருக்கின்றன. “நீர்வழிகளில் சில கழிவுகள் மற்றும் சாக்கடை நீராலான கூழ் போன்ற அழுகிய நிலையிலுள்ள வடிகுட்டைகளாக மாற்றப்பட்டிருக்கினறன” என ஏஷியாவீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. க்ளாங்ஸின் நெடுகே உள்ள வீடுகளில் பல பாங்காக்கின் கழிவுநீரமைப்போடு இணைக்கப்பட்டில்லை. மேலும் குப்பை வண்டிகளால் சென்றெட்டப்பட முடியாதவை. விளைவு: க்ளாங் கால்வாய்களுக்கு நீரளிக்கும் தாய்லாந்தின் பெரிய கேயோ ஃப்ரேயோ நதியில் தினமும் 140 டன்கள் கழிவு நீரும், குப்பையும் சென்றடைகின்றது. கழிவுகளால் நிறைந்து உயிரை ஆதரிக்கும் பிராணவாயுவை இழந்த சில க்ளாங் கால்வாய்கள் நதியோரம் வசிப்பவர்கள் சகித்துக்கொள்ள கடினமாயிருக்கும் நாற்றத்தைக் கொடுக்கின்றன. க்ளாங் கால்வாய்களைச் சுத்தம் செய்ய ஓர் எழுச்சி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.” தொண்டர்கள் பெருந்திரளாக இந்த இயக்கத்திற்கு பிரதிபலித்திருக்கின்றனர்” என்று ஏஷியாவீக் குறிப்பிடுகிறது. (g90 12/22)
விமான விபத்துகள்
ஒரு பெரிய விமான தயாரிப்பாளரான போயிங் விமான விபத்துகளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான எண்ணிக்கை மற்றும் காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார். தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறபடி, அந்தத் தயாரிப்பாளர், 1950-களின் பிற்பகுதியிலிருந்து நிகழ்ந்துள்ள 850 பெரிய அளவு விபத்துகளைக் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார். “விமானிகள் குழுக்களின் தவறுகள் 72 சதவிகிதத்திற்கும் அதிகமான விபத்துகளைக் கடந்த பத்து ஆண்டுகளில் விளைவித்துள்ளன,” என போயிங் உரிமைபாராட்டுகிறார். விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போதைய விகிதத்தில் தொடர்ந்து அதிகரிக்க, விபத்துகளின் எண்ணிக்கை அதைவிட துரித விகிதத்தில் குறையத் தவறினால், அடுத்த பத்தாண்டின் மத்தியில், மொத்த விளைவு தயாரிக்கப்படும் எல்லா வகை விமானங்களுக்கும் ஆண்டுதோறும் இப்பொழுது இருக்கும் சராசரி 15-லிருந்து, 20 பெரிய விபத்துகளாக இருக்கும் என அறிக்கை குறிப்பிட்டது. (g90 12/22)
பணியாட்கள் ஈடுபடும் திருட்டு
குற்றச்செயல், பிரிட்டிஷ் தொழில்துறைக்கு ஆண்டொன்றுக்கு 9,000,000,000 டாலருக்கும் அதிகமாக நஷ்டமேற்படுத்துகிறது என பிரிட்டிஷ் தொழில்துறைக் கூட்டுக்குழுவின் பொது இயக்குனர் ஜான் பான்ஹாம் உறுதியாய்க் கூறுகிறார். இம்மொத்தக் கணக்கில் இரண்டிலிருந்து மூன்று ஆயிரம் மில்லியன் டாலர்கள், வேலையாட்கள் திருட்டினாலாகும். ஒரு சமீப சுற்றாய்வின் விளைவுகளைக் குறிப்பிடுவதாய் லண்டனின் டெர்லி டெலிகிராஃப், சந்திக்கப்பட்டோரில் 85 சதவீதத்தினர் வணிக நிறுவனத்தினின்று திருடுவதற்காக ஓர் உடன் வேலையாளைத் தங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்ய மாட்டார்கள் எனக் காண்பிக்கிறது. பிற நேர்மையற்ற பழக்கங்களில் மனப்பான்மைகள் வயதுடன் மாறுபடுவதாய் வாக்கெடுப்பு குறிப்பிட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட வேலையாட்களில் பாதிக்கும் மேலானோர். நிறுவனத்தின் தொலைப்பேசிகளைத் தனிப்பட்ட தொலைப்பேசிப் பேச்சுத் தொடர்புகளுக்கென பயன்படுத்துவதை ஏற்க முடியாததெனக் கண்டபோது, 16 முதல் 24 வயது பிரிவினரில் நால்வரில் ஒருவருக்கும் குறைவானோரே மறுப்புத் தெரிவித்தனர். மேலும், இந்த இளைய பிரிவில் 19 சதவீதத்தினர் மட்டுமே வணிக நிறுவன பணிக்குத் தொடர்பற்ற காரியங்களைப் பேச வேலை நேரத்தைப் பயன்படுத்துவதை “நேரத்தின் திருட்டு” எனக் கருதினர். (g90 11/22)
செல்வத்தைக் காக்கப் புத்தர்கள்
ஜப்பானின் நகை வியாபாரிகள், புத்தரின் பொற்சிலைகள் திடீரென அவர்களின் அதிக விற்பனையாகும் பொம்மைகளாயிருக்கின்றன என அறிவிக்கின்றனர். ஏன்? ஒரு புதிய வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் தங்கத்தாலான பொருட்கள் விலை குறைந்திருக்கிறது. கூடுதலாக, இம் மத சிலைகள் பரம்பரைச் சொத்து வரியினின்று விலக்களிக்கப்பட்டிருக்கின்றன எனும் ஒரு பரவலான நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவைகளின் மத முக்கியத்துவம் மற்றும் பயனுக்காக அன்றி, சட்டத்தை ஏமாற்ற வாங்கப்பட்டிருக்கும் புத்தரின் சிலைகளுக்கு வரிவிதிக்கப்போவதாக வரி நிறுவனம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நகை வியாபாரிகள் புத்தரை உருவாக்குவதில் உட்பட்டிருக்கும் உழைப்பு, அதன் விலையைத் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரைக்கும் அதிகரிக்கச்செய்து, அதை ஒரு ஞானமற்ற மூதலீடாகச் செய்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். (g90 11/22)
கரப்பான்பூச்சி கட்டுப்பாடு
“மனிதர்களைவிட கரப்பான்பூச்சிகள் ஓர் உயர்ந்த அளவு வெப்பக்கதிரியக்கத்தைத் தாங்கிக் கொள்ள இயலும்,” என்கிறார் ஐ.மா. வேளான்மை ஆராய்ச்சி சேவையின் ரிச்சர்டு பிரென்னர். “ஆனால், அவை வெப்பத்தைச் சீர்படுத்திட முடியாது. எனவே நாம் தாங்கக்கூடிய வெப்பம்—ஏனெனில் நமது உடல் வெப்பத்தைக் குறைவாக வைக்க நமக்கு வியர்க்கிறது—அவற்றைக் கொல்லும். இப்போது ஒரு கலிபோர்னியாவின் விஷப்பூச்சி கட்டுப்பாடு நிறுவனம் இவ்வுண்மையைக் கரப்பான்பூச்சிகளையும் பிற தொல்லைக் கொடுக்கும் பூச்சிகளையும் வீடுகளின்று அகற்றப் பயன்படுத்துகின்றனர். ஒரு பாதிக்கப்பட்ட வீடு ஒரு கான்வாஸ் கூடாரத்தில் மூடப்படுகிறது. உள்ளே புரோப்போன் விளக்குகளும் விசிறிகளும் அங்கு வெப்பத்தை கிட்டத்தட்ட 150 டிகிரி F-க்கு அதிகரிக்க வைக்கப்படுகின்றன. அவ் வெப்பத்தில் நான்கு மணிரேநத்திற்குப் பின், அக்கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் 50 டிகிரி C [122 டிகிரி F] அடைந்திருக்கும். இது கரப்பான்பூச்சிகள், எறும்புகள், ஈக்கள், உண்ணிகள், அந்துப் பூச்சிகள் மற்றும் கறையான்களைக்கூடக் கொல்லப் போதுமானது,” என்று நியு சயன்டிஸ்ட் கூறுகிறது. (g90 11/22)
“நன்மையானாலும் தீமையானாலும்”
இந்தியா டுடே, “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதகின்றன என்று சொல்லப்படுகிறது,” எனக் கூறுகிறது. “ஆனால் பட்டான் கிரமத்தில் இவ்விரு தம்பதியருக்குத் திருமணங்கள் பூமியில் பிரிக்கப்பட்டதாய்த் தோன்றுகிறது.” இரு தனிவேறு திருமணக் குழுவினர் அவைகளின் திருமணங்களுக்காக ஒரே சமயத்தில் நேரத்திற்கு வந்துசேர்ந்தபோது நிகழ்ந்தது. இருவருமே அவசரத்திலிருந்தனர். சடங்குகள் விரைவாகச் செய்யப்பட்டன. மணப்பெண்களின் முகங்களை மறைத்திருக்கும் நீண்ட திரைகள் அகற்றப்பட்டு, மணப்பெண்களின் மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதிர்ச்சி ஏற்பட்டது. “இம்மாற்றத்தின்மேல் மணப்பெண்கள் அதிர்ச்சியுற்றாலும், உறவினர், செய்யப்பட்டதை அழிக்க முடியாது என வற்புறுத்தினர்,” என இந்தியா டுடே கூறுகிறது. “எனவே இப்போது, நன்மையானாலும் தீமையானாலும் மரணம் அவர்களைப் பிரிக்கும் வரை அத்தம்பதியினர் ஒன்றாயிருக்க வேண்டும். (g90 11/22)