உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 7/8 பக். 5
  • ஏன் மாற வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் மாற வேண்டும்?
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • உங்களை நீங்கள் எவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்
    விழித்தெழு!—1992
  • உண்மையில் நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடித்தல்
    விழித்தெழு!—1992
  • இப்போதே உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள்!
    விழித்தெழு!—1996
  • “தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 7/8 பக். 5

ஏன் மாற வேண்டும்?

நம்மில் ஒரு சிலரே, நமக்கு குறிப்பிடத்தக்க பெலவீனங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ள விரும்புவோம். ராபர்ட் பெர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞனின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயிருக்கின்றன: “மற்றவர்கள் நம்மைக் காண்பது போல், நாம் நம்மைக் காண்பதற்கு ஏதாவது ஒரு சக்தி நமக்கு திறமையை கொடுத்தால்”! ஆம், மற்றவர்களில் இருக்கும் குறைகளைக் கண்டு பிடித்து அவர்கள் எவ்வாறு முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதைக் காண்பிக்க நாம் உடனடியாக புத்திமதி கொடுக்க விரைகிறோம். ஆனால் நம்முடைய நடத்தையை மாற்றிக்கொள்வதற்கு ஏதாவது ஆலோசனை நமக்கே தேவைப்படுமேயென்றால் அது நம்மை புண்படுத்தலாம். அது உங்களுடைய உணர்ச்சிகளை புண்படுத்துமா?

அனைவரும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் இருக்கும் ஒரு பரிபூரணமான உலகை நாம் சற்று கற்பனை செய்து பார்க்கலாம்; அதிகாரத்தில் இருப்பவர்களும்கூட தயவாகவும், பிறர் நலத்தை எண்ணிப் பார்ப்பவர்களாகவும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் விருப்பமுள்ளவர்களாயும் இருக்கின்றனர்; அங்கு பேராசை இல்லை, தன் அயலானை எவருமே தன்னலத்துக்காக சுரண்டுவதில்லை; அன்பாக கவனிக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்படிந்திருக்கின்றனர்; திடீர் கோப எழுச்சிகள் அங்கு இல்லை—வன்முறை இல்லை, குற்றச்செயல் இல்லை, ஒழுக்கங்கெட்ட நடத்தை இல்லை; ஜனங்கள் நம்பத் தகுந்தவர்களாகவும், இயற்கையாகவே பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் இருக்கின்றனர்; பாதுகாப்போடும் மனநிறைவோடும் அங்கு வாழ்க்கையை அனுபவித்து களிக்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு கற்பனை உலகம் இருக்குமேயானால், அப்படிப்பட்ட ஓர் உலகத்துக்குள் பொருந்துபவர்களாக நீங்கள் உங்களை காண்கிறீர்களா? அப்படிப்பட்ட ஓர் உலகம் பூமிக்கு விரைவில் வர இருக்கிறது என்பது தான் பைபிளிலிருந்து வரும் நற்செய்தி. ஆகையால் இப்போது ஒரு முக்கியமான கேள்வி என்னவெனில்: இப்படிப்பட்ட ஒரு வனப்புமிக்க சமுதாயத்துக்குள் பொருந்துவதற்கு உங்களை தகுதியற்றவர்களாய் ஆக்கக்கூடிய ஏதாவது நடத்தை சம்பந்தமான பண்புகள் உங்களுக்கு இருக்கின்றனவா? அப்படிப்பட்ட பரதீஸில் வாழ்வதற்கு தகுதி பெற முயற்சி செய்வதற்கு எவ்வளவு கடினமாக உழைப்பது பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?—ஏசாயா 65:17-25; 2 பேதுரு 3:13.

இப்போதும்கூட, அப்படிப்பட்ட ஒரு புதிய உலகம் வருவதற்கு முன் உங்களுடைய நடத்தை, மனநிலை ஆகியவற்றைக் குறித்து நீங்கள் ஏதாவது செய்தால் உங்களுடைய வாழ்க்கை முன்னேற்றமடையக் கூடுமா? அப்படியென்றால், ஏன் மாற்றம் செய்யக்கூடாது? அவ்வாறு செய்வது கூடிய காரியம். திட்டவட்டமான பாதிப்புகள் உங்களுடைய நடத்தையை முதலில் உருவாக்கி வடிவமைத்தன என்பதை நினைவில் வையுங்கள். ஆகையால் அதிக கட்டுப்பாடும் அக்கறையும் எடுப்பதன் மூலம், இப்போதும்கூட உங்களுடைய நடத்தையை நீங்கள் திரும்பவும் மாற்றியமைக்க முடியும்.

என்றபோதிலும், நீங்கள் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கலாம்: ‘ஆனால் நான் உண்மையிலேயே மாற முடியுமா? முன்பு நான் அநேக முறைகள் முயற்சி செய்து பார்த்து தோல்வியடைந்திருக்கிறேன். நான் எப்போதும் இருப்பது போலவே இருக்கிறேன். அதைக் குறித்து நான் செய்வதற்கு எதுவுமில்லை!’

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருந்த பவுலை சிந்தித்துப் பாருங்கள். (ரோமர் 7:18-21) கிறிஸ்தவர்களின் வன்முறையான, சுயநீதியுள்ள எதிராளியாய் இருந்ததிலிருந்து பவுல் மாறி, தானே ஒரு கிறிஸ்தவராக ஆனார். அவர் மாற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினதால் அவர் மாறினார். தடங்கல்கள் அல்லது பரம்பரை பண்பியல்புகளின் பாதிப்புகள் காரணமாக அவர் விட்டுவிடவில்லை. தன்னுடைய பழைய ஆள்தன்மையை மாற்றவே முடியாது என்று அவர் நம்பவில்லை. அது அவருடைய பங்கில் அதிக முயற்சியை தேவைப்படுத்தியது. ஆனால் அவர் அதிக உதவியைப் பெற்றார்.—கலாத்தியர் 1:13-16.

இந்த உதவி எங்கிருந்து வந்தது? (g91 7⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்