மாற்றம் செய்வதற்கு சிறந்த வழிகளாக இல்லாதவை
நடத்தையின் விதங்கள் நிலைநாட்டப்பட்டுவிட்டால், மாற்றம் எவ்வாறு கொண்டு வரப்பட முடியும்? நிரந்தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் யாரிடம் செல்லக்கூடும்? என்ன வழிமுறைகளை உபயோகப்படுத்தலாம்?
இன்று உபயோகப்படுத்தப்பட்டு வரும் சில உக்கிரமான நடவடிக்கைகளை நாம் இப்போது சிந்திப்போம்.
அரசியல் அழுத்தம்
குறிக்கோள்களையும், நடத்தை சம்பந்தப்பட்ட சட்டங்களையும் கட்டுப்படுத்த விரும்பும் ஆட்சிமுறைகளின் கீழ் இன்று லட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட அரசாங்கங்கள் மாற்றத்தை உண்டாக்குவதற்கு தங்கள் அதிகாரத்தை உபயோகிக்கின்றன—சில அரசாங்கங்கள் சூழ்ச்சித் திறமையுடன் அதை செய்கின்றன. வேறு சில அரசாங்கங்கள் கட்டாயப்படுத்தி வற்புறுத்துகின்றன. அச்சுறுத்தல், சிறைதண்டனை, சித்திரவதை போன்ற சிந்தனையை மாற்றும் முறைகளை சில அரசாங்கங்கள் உபயோகிக்கின்றன. செய்தித் துறையின் மீதும், மற்ற கல்வி அமைப்புகள் மீதும் கட்டுப்பாட்டை பிரயோகிப்பதன் மூலம், முன்பு நிலைநாட்டப்பட்டிருந்த எல்லா பொதுக் கருத்துக்களுக்கும் பதிலாக, தற்போது ஆட்சி செய்யும் உயர்மட்டக் குழுவின் விருப்பத்திற்கு இசைவாக இருக்கும் பொதுக் கருத்துக்களை வைக்க முயற்சி செய்கின்றன. எல்லா கருத்து வேறுபாடுகளும் கட்டாயப்படுத்தி ஒழிக்கப்பட்டுவிடுகின்றன. சீர்ப்படுத்துவதற்கு எவராவது விருப்பமற்றவராக இருந்தால், திகிலடையச் செய்யும் வகையில் அவரை நடத்துவர். அது அந்தத் தனிப்பட்ட நபரின் ஆவியை முறித்துவிடுகிறது.
மனநோய் அறுவை மருத்துவமும், மின் ஆற்றலைக் கொண்டு தூண்டுதலும்
மூளையின் சில பாகங்கள் திட்டவட்டமான மனநிலைகளையும், நடத்தை முறைகளையும் பாதிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையின் அந்தப் பகுதியில் இருக்கும் மூளை திசுக்களை நீக்கிவிடுவதை அல்லது அழித்துவிடுவதை மனநோய் அறுவை மருத்துவம் உட்படுத்துகிறது. ஒரு முறை அதை நீக்கிவிட்டால், உங்களுடைய மூளையின் அந்தப் பகுதி மறுபடியும் செயலாற்ற முடியாது. அது கட்டுப்படுத்திய எந்த நடத்தையும் மறைந்து விடும்.
தவறிழைக்கும் ஆபத்தான பால் சம்பந்தமான நடத்தையை உடையவர்கள் மீது விசேஷமாக இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஆயிரக்கணக்கில் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு சிறிய மின்வாய்கள் அவர்களுடைய மூளைக்குள் ஆழமாக செருகி வைக்கப்பட்டன. அது அந்தப் பகுதியில் மூளை செய்யும் வேலையை தூண்டி எழுப்பியது அல்லது தடை செய்தது. மூளையின் அப்பகுதியினால் கட்டுப்படுத்தப்படும் நடத்தையை பாதிக்கும் தூண்டுதல்களை அது மாற்றியமைக்கிறது என்பதாக சொல்லப்படுகிறது.
மருந்துகள்
மனநோய் மருத்துவத்தில் மருந்துகளை உபயோகிப்பது மிகவும் பரவலாயுள்ளது. அது அடிக்கடி தேவைப்படுகிறது. அமைதிப்படுத்துவதற்கும், உறக்கம் வரவைப்பதற்கும், உணர்ச்சியூட்டுவதற்கும், மூளையில் இருக்கும் இரசாயன சமநிலையற்ற நிலைகளை சரிசெய்வதற்கும் மருந்துகள் இருக்கின்றன. சிறைச்சாலைகளிலும், மற்ற திருத்தம் செய்யும் நிலையங்களிலும் தண்டனையாக உபயோகப்படுத்துவதற்கும்கூட மருந்துகள் இருக்கின்றன. அபோமார்பின், அனெக்டின் என்பவை அப்படிப்பட்ட இரண்டு மருந்துகள் ஆகும்.
ஏற்கமுடியாதவை என கருதப்படும் நடத்தையையுடைய சிறைக் கைதிகளுக்கு அபோமார்பின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. அது கடும் குமட்டல் உணர்ச்சியையும், வாந்தியையும் ஏற்படுத்துகிறது. சிறைக் கைதி மறுபடியும் மோசமாக நடந்துகொண்டால், அபோமார்பின் கூடுதலாக கொடுக்கப்படும் என்று அவனிடம் சொல்லப்படுகிறது. இது வெறுப்பூட்டும் நோய் நீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அனெக்டின் என்ற மருந்து தவறான நடத்தையையுடைய சிறைக்கைதியில் காசம் சார்ந்த அடைப்பு உணர்ச்சியை உண்டாக்குகிறது. தான் சாகப் போவதாக அவன் நினைக்கிறான். அவன் மறுபடியும் தவறாக நடந்து கொண்டால், அவனுக்கு அனெக்டின் இன்னும் அதிகம் கொடுக்கப்படுகிறது.
உங்களுடைய நடத்தை முறைகளை மாற்றுவதற்கு இப்படிப்பட்ட வழிகளையா நீங்கள் உபயோகிப்பீர்கள்?
மேலே சொல்லப்பட்டிருக்கும் அநேக வழிமுறைகள் சுயதெரிவை மீறுகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் மீது கொண்டுள்ள செல்வாக்கையும் கூட அவைகள் உட்படுத்துகின்றன. ஆனால் எப்போதுமே அந்த நபரின் நலனை மனதில் கொண்டு அப்படி செய்வதில்லை. அரசியல் அதிகாரம் தனது சொந்த நலனை தேடுகிறதா அல்லது தனிப்பட்ட நபரின் நலனை தேடுகிறதா? மனநோய் அறுவை மருத்துவத்தில் யார் அறுவைக் கத்தியை பிடித்திருப்பது? மின் ஆற்றலைக் கொண்டு தூண்டும் போது யார் மின்விசையை கட்டுப்படுத்துவது? வெறுப்பூட்டும் நோய் நீக்கம் எவ்வளவு நீண்டதாய் இருக்கிறது? அந்த நோய் நீக்கம் செய்பவரை நம்ப முடியுமா?
அதிக ஏற்கத்தகுந்த வழிமுறை ஒன்றை நாம் சிந்திப்போம். (g91 7⁄8)