உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 8/8 பக். 26
  • ஒரு சின்னஞ்சிறு பேருருவம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு சின்னஞ்சிறு பேருருவம்
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • அவ்வளவு புதிரானது, ஆயினும் அவ்வளவு அழகானது
    விழித்தெழு!—1996
  • நம் அழகிய பூமியில் இன்பம் காணுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 8/8 பக். 26

ஒரு சின்னஞ்சிறு பேருருவம்

நம்முடைய சூரிய மண்டலத்தில் சூரியன் ஒரு பெரிய உருவமாக இருக்கிறது. இதற்குள் 13,00,000 பூமிகள் பொருந்தும் அளவிற்கு அவ்வளவு பெரியதாக இருக்கிறது. ஆனால் நம்முடைய நட்சத்திர மண்டலத்திலுள்ள மிகப் பெரிய அளவிலான சில நட்சத்திரங்களுக்கு ஒப்பிட சூரியன் உண்மையில் ஒரு மிகச் சிறிய உருவமாகவே தென்படுகிறது.

உதாரணமாக, நம்முடைய சூரியன் இருக்கும் இடத்தில் மிகப் பெரிய அளவிலான பல்வேறு நட்சத்திரங்களை வைத்துப் பார்ப்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள். பூமியின் முழு சுற்றுப்பாதையை மூடிக்கொள்ளும் அளவிற்கு பெரிய நட்சத்திரங்கள் சில இருக்கின்றன. நாம் அந்த நட்சத்திரத்திற்குள் இருப்போம்! பீடெல்கீஸ் (Betelgeuse) என்றழைக்கப்படும் நட்சத்திரம் ஏறக்குறைய வியாழன் என்ற கிரகம் வரை பரந்திருக்கக்கூடியதாக இருக்கிறது. வேகமாக பாய்ந்து செல்லும் ஒரு துப்பாக்கி குண்டின் வேகத்தைக் காட்டிலும் சுமார் 20 மடங்கு அதிகமான வேகத்தில் பிரயாணம் செய்து, வாயேஜெர் 2 என்ற விண்வெளிக் கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டு சனி கிரகத்தை அடைய நான்கு ஆண்டுகள் எடுத்தது; அவ்வளவு தொல தூரத்தில் சனி கிரகம் இருந்தபோதிலும், சூரியன் இருக்கும் இடத்தில் மு செப்ஹி (Mu Cephei) என்ற நட்சத்திரத்தை வைத்தால் அது இந்தச் சனி கிரகத்தையே விழுங்கிவிடும்.

நம்முடைய நட்சத்திர மண்டலமான பால்வீதி மண்டலம் ஒரு பெரிய சுருள் வடிவ நட்சத்திர மண்டலம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமாகவே அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. ஆகாய விரிவின் இருளில் கம்பீரமாக சுற்றிவரும் 1,00,00,00,00,000-ற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் இந்தப் பெரிய பிரகாசமான நட்சத்திர கூட்டத்தின் மிகப் பெரிய பரிமாணம் மானிட மனதுக்கு திகைப்பூட்டுகிறது. நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் ஒரு முனையில் நின்றுகொண்டு எதிர்முனை நோக்கி ஒளிக் கற்றை ஒன்றை நாம் செலுத்தக்கூடுமானால், அந்த ஒளிக்கற்றை ஒரு நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர் என்ற பிரமிக்கத்தக்க வேகத்தில் அதனுடைய இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்டாலும் அந்த ஒளி நட்சத்திர மண்டலத்தைக் கடக்க 1,00,000-ற்கும் மேலான ஆண்டுகள் எடுக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் பால்வீதி மண்டலம் 1,00,000 ஒளி-ஆண்டுகள் விட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், நமக்கு அருகாமையிலுள்ள சுருள் வடிவ நட்சத்திர மண்டலமாகிய அண்ட்ரோமிடா (Andromeda) நம்முடைய நட்சத்திர மண்டலத்தைக் காட்டிலும் அளவில் இரண்டு மடங்கிற்கும் கூடுதலானது. சுமார் 6,00,00,00,00,000 நட்சத்திரங்களைத் தன்னில் அடக்கியிருக்கலாம். இன்னும் அதிகமாக, விண்வெளி வீரர்கள் மாபெரும் நட்சத்திர மண்டலம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்; அதற்கு மார்காரியன் 348 (Markarian 348) என்று பெயரிட்டிருக்கிறார்கள். அது நம்முடைய பால்வீதி மண்டலத்தைக் காட்டிலும் குறுக்களவில் சுமார் 13 மடங்குகள் பெரியது; சுமார் 13,00,000 ஒளி-ஆண்டுகள் குறுக்களவைக் கொண்டிருக்கிறது!

இந்த மார்காரியன் 348 நட்சத்திர மண்டலமும்கூட, நட்சத்திர மண்டலங்களின் தொகுதியொன்றின் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏபெல் 2029 (Abell 2029) என்றழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தோடு ஒப்பிட சிறியதாகவே தென்படும். விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்திருப்பவற்றுள் இதுவே மிகப் பெரிய நட்சத்திர மண்டலம் என்று நம்புகின்றனர். இது நம்முடைய நட்சத்திர மண்டலத்தைக் காட்டிலும் 60 மடங்குகளுக்கும் மேல் பெரிய அளவிலானது. இது சுமார் 60,00,000 ஒளி-ஆண்டுகள் குறுக்களவைக் கொண்டிருக்கிறது மற்றும் திகைப்படையச் செய்யும் எண்ணிக்கையாக சுமார் 10,00,00,00,00,00,000 நட்சத்திரங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது. தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஓர் அறிக்கை பிரகாரம், எக்காலத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திர மண்டலங்களுக்குள் அதிக பிரகாசமான நட்சத்திர மண்டலமாகவும் இது இருக்கிறது. தாறுமாறாக செல்லும் சக்திகளின் ஒழுங்கற்ற விளைபொருளாக இது இல்லை. இது பற்றிய ஒரு கண்டுபிடிப்பாளர் இவ்வாறு சொல்லுகிறார்: “இது ஒளி மற்றும் சக்தியின் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டமாக இருக்கிறது. இது மிகப் பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட நட்சத்திர மண்டலமாகும்.”

இந்த நட்சத்திர தொகுப்புகள் அல்லது அவற்றிற்கிடையே அடங்கியுள்ள தூரங்களின் மிகப்பெரிய பரிமாணத்தை நம்முடைய மூளை கிரகிக்கவும் கூட முடியாது. ஆகவே, இவை எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள சிருஷ்டிக்கக்கூடிய, ஒழுங்கமைக்கக்கூடிய அந்தச் சக்தியைப் பற்றியதில் என்ன? “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.” (ஏசாயா 40:26) சிருஷ்டிப்பே பிரமிக்கத்தக்கதாக இருக்கிறதென்றால் சிருஷ்டிகர் இன்னும் எவ்வளவு பிரமிக்கத்தக்கவர்! (g91 8/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்