வீட்டில் தீ விபத்துக்களைத் தவிர்த்தல்
ஒரு கதை சொல்கிறப்பிரகாரம், திருமதி பாட்ரிக் ஓனலரி என்பவரின் பசு தானியக்களஞ்சியத்தில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை உதைத்துவிட்டு, 1871-ன் மிகப்பெரிய சிகாகோ தீயை ஆரம்பித்தது. பொருள் மற்றும் உயிர்ச் சேதத்தின் மதிப்பு சமாளிக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருந்தது. ஓர் அறிக்கை சொன்னபிரகாரம், 1,00,000 பேர்களை வீடிழக்கச் செய்தது, 17,400 கட்டிடங்களை அழித்தது, மேலும் 250 பேரைக் கொன்றது.
இன்று, 120 ஆண்டுகளுக்குப் பின்பு, அநேக பெரிய தீ விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு நவீன கால தீயணைப்பு முறைகள் உதவிச் செய்திருக்கின்றன. எனினும், வீட்டுத் தீ விபத்துக்கள் அபாயகரமான அச்சுறுத்தல்களை இன்னும் தருகின்றன. ஐக்கிய மாகாணங்களில் ஒரு வருடத்தில் ஏறக்குறைய ஐந்தாயிரம் ஜனங்கள் வீட்டுத் தீ விபத்துகளினால் கொல்லப்படுகிறார்கள் என தேசீய தீயணைப்பு அமைப்பு (NFPA) வலியுறுத்துகிறது. தி வான்கூவர் சன் (The Vancouver Sun) செய்தித்தாளில் பதிவுசெய்யப்பட்ட பிரகாரம், வீட்டுத் தீ விபத்துக்கள் ஆரம்பிப்பதற்குமுன் அதைத் தவிர்ப்பதற்கு NFPA ஒரு சில எளிதான குறிப்புகளைக் கொடுத்தது. அவற்றின் முக்கியக் கருத்துக்கள்:
◻ வீட்டில் புகைபிடிப்பதை அனுமதிக்காதீர்கள். அசட்டை மனதுடையப் புகைபிடிப்பவர்களை உட்படுத்துகிற விபத்துக்கள், வீட்டுத் தீ விபத்துகளில் உண்டாகும் மரணத்தின் மூல காரணமாக தொடர்ந்திருக்கிறது.
◻ அறையை அல்லது கட்டிடத்தை வெப்பமாக்கும் எடுத்துச்செல்லத்தக்கக் கருவியை, கவனியாத நேரத்தில் அல்லது நீங்கள் தூங்கும் சமயத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.
◻ மின்சுற்றின் மின்அளவைப் பாரமாக்காதீர்கள் அல்லது பழுதான மின்கம்பிகளைப் பயன்படுத்தாதீர்கள். சரியான மின்இணைப்பு உருகுகம்பிகளையே (ஃபியூஸ்) பயன்படுத்துங்கள்.
◻ கணப்பு அடுப்புள்ள இடம் மற்றும் புகைப்போக்கிளைச் சுத்தமாக வையுங்கள். வருடத்திற்கு ஒருமுறை அவைகளைச் சோதனையிடுங்கள்.
◻ காற்றில் புகையளவு இருப்பதை அறிந்தவுடன் எச்சரிக்கை ஒலி எழுப்பும் புகை அளவுக்காட்டிகளை ஒழுங்கான முறையில் சோதனையிடுங்கள், மேலும் இந்தப் புகை அளவுக்காட்டியின் மின்கலங்களை ஒவ்வொரு வருடமும் மாற்றுங்கள். இந்தப் புகை அளவுக்காட்டியின் சப்தத்தைக் குடும்பத்தில் உள்ள அனைவரும் அடையாளம் கண்டுகொள்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
◻ தீ வந்தால் வெளியேறவேண்டிய வழியைக் குடும்பத்தில் உள்ள அனைவரும் தெரிந்திருக்கிறார்களா என்பதை சோதித்தறியுங்கள், மேலும் அந்த வழிகளைத் தடங்கலற்று வைத்துக்கொள்ளுங்கள். (g91 8⁄8)