உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 9/8 பக். 30
  • மதத்தின் பிளவுற்ற குடும்பம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதத்தின் பிளவுற்ற குடும்பம்
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • முஸ்லீம்களை சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • பன்முனை குண்டு வீச்சுகளின் மத்தியில் மதம்
    விழித்தெழு!—1986
  • பகுதி 14: பொ.ச. 622 முதல்கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்
    விழித்தெழு!—1991
  • எல்லா மொழியினருக்கும் மதத்தினருக்கும் சாட்சிகொடுத்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 9/8 பக். 30

மதத்தின் பிளவுற்ற குடும்பம்

உலகில் உள்ள எல்லா மதங்களிலும், ரோமன் கத்தோலிக்க, இஸ்லாம், மற்றும் இந்து மதங்கள், மிகப்பெரியவைகள். முழுஉலக மக்கள் தொகயாகிய 524 கோடியில், 98.5 கோடி அல்லது 18.8 சதவீதம் ரோமன் கத்தோலிக்க சமயத்தினர் இருப்பதாக உரிமை கொண்டாடுகின்றனர், இதே சமயத்தில் 91.2 கோடி (17.4 சதவீதம்) இஸ்லாமியர்கள் இருப்பதாக உரிமைபாராட்டுகின்றனர், மேலும் 68.6 கோடி (13.1 சதவீதம்) இந்துக்களாக இருக்கிறார்கள்—புத்த மதத்தைச் சேர்ந்த 32 கோடி எண்ணிக்கையைவிட இரண்டுமடங்குக்கும் அதிகம்.

“அனைத்து மதங்களில் கிறிஸ்தவ மதமே பரவலாக பின்பற்றப்படுகிறது” என்பதாக ஏஷியாவீக் குறிப்பிடுகிறது. “ஆனால் அநேக ஜனங்களுக்கு, இவையெல்லாம் ஒரே மதம் என்று நினைப்பது மிகவும் கடினமாயிருக்கும் அளவிற்கு, இது அவ்வளவு முரண்பாடுள்ள மதப்பிரிவுகளாக வரலாற்றுமுறையில் முழுமையாக பிளவுப்பட்டு இருக்கிறது—வட ஐயர்லாந்தின் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினர் இதற்கு முதன்மைவாய்ந்த சான்றுகளாக தொடர்ந்திருக்கின்றனர். . . . கிறிஸ்தவர்களை விட குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றனர், ஆனால் ஒருபோதும் ஒத்திராத வரலாற்றை உடைய, சுனி (Sunni) மற்றும் ஷியா (Shia) என்ற இரண்டு வித்தியாசமான இயக்கங்கள் இருக்கின்றன.” இஸ்லாமியர்களில் பெரும் எண்ணிக்கையை உடைய பிரிவு சுனி ஆக இருக்கிறது.

இதற்கும் மேலாக, உலக மக்கள் தொகையின் ஒரு பெரிய எண்ணிக்கை மத நம்பிக்கை இல்லை என வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அதிகமான பகுதியினர் சீனா, கிழக்கு ஐரோப்பா, மற்றும் சோவியத் யூனியனில் இருக்கின்றனர். மதசார்பற்ற இவர்கள் 89.6 கோடி என இலக்கமிடப்படுகின்றனர், மேலும் நாத்திகர்கள் இன்னும் கூடுதலான 23.6 கோடியை உருவாக்குகின்றனர். (g91 10⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்