எமது வாசகரிடமிருந்து
புற்றுநோய் சிகிச்சைகள் “உலகத்தைக் கவனித்தல்” பகுதியில் (அக்டோபர் 8, 1992) தோன்றிய “சிகிச்சைகள் ஒப்பிடப்படுகிறது” என்ற செய்தி மிகவும் தவறாக வழிநடத்துவதாக இருந்தது என்று நான் நம்புகிறேன். புற்றுநோயினால் துன்பப்படுகிற மக்கள், ஏற்படுத்தப்பட்ட ஒரு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவதைப் போலவே ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவத்திலிருந்து பிரயோஜனமடைகிறார்கள் என்று அது மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. புது இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையிலுள்ள (The New England Journal of Medicine) கட்டுரையின் கருத்தில் அடிப்படையிலான உங்கள் செய்தி, உங்களுடைய செய்தியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
A. R., M.D., ஐக்கிய மாகாணங்கள்
எங்களுடைய சுருக்கமான செய்தி திருத்தமாக இருந்தது, ஆனால் அந்த ஆராய்ச்சியின் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை அறிவிப்பதற்கு நாங்கள் தவறிவிட்டோம். அதாவது, ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவ சிகிச்சையைப் பெறுகிற முற்றியநிலையிலுள்ள வியாதிப்பட்ட நோயாளிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைகளைப் பெறுகிறவர்களைப் பார்க்கிலும் “குறிப்பிடத்தக்க மேம்பட்ட வாழ்க்கை நிலையை” அறிக்கைசெய்தார்கள். இருப்பினும், எங்களுடைய செய்தி காட்டியபடி, நோயாளியின் வாழ்க்கையை நீடிப்பதில் எந்தச் சிகிச்சைமுறையும் பயனுள்ளதாக நிரூபிக்கவில்லை. ஆகவே, சில முற்றிய நிலையிலுள்ள வியாதிப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்படுவதற்காக “மாற்று சிகிச்சைமுறை இல்லை” என்பதைச் சிந்திக்குமாறு ஆராய்ச்சி கருத்து தெரிவித்தது. ஆராய்ச்சியாளர்களின்படிதாமே, இந்தக் கண்டுபிடிப்புகளை “[புற்றுநோய்] குறைந்தளவு முற்றிய நிலைகளிலுள்ள நோயாளிகளுக்குப் பொதுக்கருத்தாக உருவாக்க முடியாது,” என்பதையும் வாசகர்கள் கவனிக்கவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படாத சில சிகிச்சைமுறைகள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் “பொருத்தமான சோதனைகளுக்கு உறுதியளிக்கலாம்” என்று இந்த ஆராய்ச்சியின் எழுத்தாளர்கள் முடிவுக்கு வருகின்றனர்.—ED.
எமது வாசகரிடமிருந்து நான் எப்பொழுதும் “எமது வாசகரிடமிருந்து” வருகிற அம்சத்தை வாசிப்பதற்கு எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன். உங்களுடைய பதில்களில் நீங்கள் காட்டுகிற சாதுரியத்தைக் குறித்து நான் உண்மையில் ஆச்சரியப்படுகிறேன். அச்சுப்பிழை அல்லது தவறு இருந்தால், நீங்கள் தாழ்மையுடன் அதை ஒப்புக்கொள்கிறீர்கள். இருப்பினும், வாசகர் எவ்வளவு நிலைகுலைந்துபோனாலும்சரி, கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திலிருந்து நீங்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. மேலும் நீங்கள் நகைச்சுவையுணர்வையுங்கூட கொண்டிருக்கிறீர்கள்! “தவறாகக்கொள்ளப்பட்ட அடையாளம்” என்ற பிப்ரவரி 22, 1991 இதழின் செய்தியிலுள்ள உங்களுடைய பதிலிலிருந்து நான் நன்றாக உள்ளூரச் சிரித்துக்கொண்டேன்.
C. W., ஐக்கிய மாகாணங்கள்
கடத்திச்செல்லுதல் “முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே அல்லது உன்னைக் கொன்றுவிடுவேன்” என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. (டிசம்பர் 8, 1992) ஒரு வழிப்பறிக் கொள்ளைக்கு நானும்கூட பலியானேன், அதில் நான் என்னுடைய காரில் பலியாளாகப் பிடிக்கப்பட்டேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்பதை என்னைக் கடத்திச்செல்பவன் அறிந்திருந்தான், ஏனென்றால் நான் தொடர்ச்சியாக யெகோவாவின் நாமத்தில் சப்தமாக கத்தினேன். அதிர்ஷ்டவசமாக, கட்டப்பட்டிருந்ததினால் மணிக்கட்டில் உண்டான வீக்கத்தையும், பயணப்பேழைக்குள் வீசியெறியப்பட்டதால் ஒரு சில காயங்களையும் தவிர வேறெந்த சரீர துன்பத்தையும் நான் அநுபவிக்கவில்லை. நான் அமைதலாக இருந்தேன், என்னுடைய காரின் பின் இருக்கையினூடே பயணப்பேழையிலிருந்து வழி உண்டுபண்ணி என்னால் வெளிவரமுடிந்தது. இந்தச் சம்பவமும் விசாரணையும் உள்ளூர் செய்தியானது. என்னுடைய வழக்கறிஞர், அயலகத்தார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னுடைய தப்பிப்பிழைத்தலுக்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
E. M., ஐக்கிய மாகாணங்கள்
இன்று கடவுளின் ஜனங்கள் அற்புதகரமாகப் பாதுகாக்கப்படுவதைப் பைபிள் வாக்களிப்பதில்லை. என்றபோதிலும், உயிரை அச்சுறுத்தக்கூடிய ஒரு சூழ்நிலைமையிலிருந்து ஒரு கிறிஸ்தவன் விடுவிக்கப்படும்போது, கடவுளுக்கு நன்றி தெரிவிப்பது முற்றிலும் பொருத்தமானதாயிருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:18)—ED.
வேண்டாத பொருட்கள் “வேண்டாத பொருட்கள் சேருவது கட்டுக்கடங்காமல் போகும்போது” என்ற உங்களுடைய அழகான கட்டுரைக்கு ஆயிரக்கணக்கான நன்றி. (ஆகஸ்ட் 8, 1992) என்னுடைய 12 ஆண்டுகால விவாக வாழ்க்கையின்போது, எதுவும் ஒருக்காலும் கண்டுபிடிக்கப்பட முடியாதவாறு மூட்டையாகக் கட்டப்பட்டு, புடைத்துக்கொண்டிருக்கிற சிறு தனியறைகளுடன் நான் போராடியிருக்கிறேன்! (பொருட்களைக் கொண்டிருப்பதற்கு எல்லா விதமான காரணங்களையும் நான் கொண்டிருந்தேன்.) உங்களுடைய கட்டுரையை வாசித்த பிறகு, நன்கு குவிக்கப்பட்ட மூட்டை முடிச்சான வேண்டாதப் பொருட்களடங்கிய பைகளின் ஒரு குவியலை என்னால் சேர்க்க முடிந்தது. என்னுடைய சுத்தம் செய்யப்பட்ட சிறு தனியறைகள், முன்பு செய்திராத வண்ணம் என்னை நோக்கி புன்முறுவலிட்டன. மீண்டும் ஒருக்காலும் ஒரு குப்பைகூளமாக ஆகாதபடி தவிர்ப்பதற்கு இந்தக் கட்டுரையை என்னுடைய தனி அறையில் நான் பார்க்கும்படிக்கு ஒட்டுவேன்!
L. W., நெதர்லாந்து
என்னுடைய அம்மாவும் என்னுடைய சகோதரியும் நானும் வேண்டாத பொருட்களைக் களையும் நடவடிக்கையை மேற்கொண்டோம். எங்களுடைய ஆடை அலமாரியிலிருந்து ஏராளமான ஆடைகளை இலவசமாக அளித்துவிட்டோம். இந்தக் கட்டுரைக்காக என்னுடைய இருதயப்பூர்வமான நன்றி.
Z. M., ஜமைக்கா