உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 1/8 பக். 21
  • சாதாரண குப்பை அல்ல!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சாதாரண குப்பை அல்ல!
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • உங்களுக்குச் சேவை செய்யும் எண்ணெய் ஒருவேளை!
    விழித்தெழு!—1990
  • கடலில்பேரழிவு கரையில் சீரழிவு
    விழித்தெழு!—2003
  • பல்வகை பயனுள்ள ஒலிவ எண்ணெய்
    விழித்தெழு!—1993
  • மரம் தரும் பரிசு பாம்—ஆயில்
    விழித்தெழு!—1999
விழித்தெழு!—1993
g93 1/8 பக். 21

சாதாரண குப்பை அல்ல!

வெள்ளிக்கிழமை, மார்ச் 24, 1989, அந்த எக்ஸன் வால்டீஸ் என்ற எண்ணெய்க்கப்பல், அலாஸ்காவின் பிரின்ஸ் வில்லியம் கடலிடுக்கில் உள்ள ஒரு கடற்பாறைத்தொடரின் மீது மோதியது. இதன் விளைவாக 4.2 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் கடல்நீருக்குள் பொங்கிவழிந்தது. இந்த விபத்து அந்த ஊர் மீனவர்களின் பிழைப்பை பாதித்தது, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு கரையோரப்பகுதியை மாசுப்படுத்திற்று, கூடுதலாக, ஆயிரக்கணக்கான பறவைகளையும் கடல் பாலூட்டிகளையும் சாகடித்தது.

இந்த எக்ஸன் வால்டீஸ் சம்பவம், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி அக்கறை உள்ள மக்களிடம் உணர்ச்சிவேகங்களை இன்னும் தூண்டிவிடுகிறது. எனினும் மிக ரகசியமான “எண்ணெய் சிந்துதல்” தினந்தோறும் நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலும், இது உங்களுடைய சொந்த சுற்றுப்புறத்திலேயே நடக்கலாம்!

நுகர்வோர் அறிக்கைகள் (Consumer Reports) காண்பிக்கிறப் பிரகாரம், தங்களுடைய மோட்டார் வண்டிகளின் இயந்திர எண்ணெய்யை தாங்களாக மாற்ற முயற்சிசெய்யும் மக்கள், 75 கோடி லிட்டரிலிருந்து 150 கோடி லிட்டர் வரை கழிவு எண்ணெய்யை ஒவ்வொரு வருடமும் வெளியேற்றுகிறார்கள். அறிக்கை காண்பிக்கிறபடி, “இந்த எண்ணெய்யில் 10 முதல் 14 சதவிகிதம் மட்டும் தான் சரியான முறையில் கழிவுநீக்கம் செய்யப்படுகிறது.” கழிவு எண்ணெய்யின் இந்தச் சிறிதளவு சதவிகிதமே மறுபடியும் சுத்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து மற்ற பயன்தரும் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மீதி எண்ணெய்யை என்ன செய்கிறார்கள்? கார் வைத்திருப்பவர்கள் அதை உதவாக் குப்பையாக தூக்கியெறிகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் லட்சோபலட்சம் லிட்டர் கழிவு எண்ணெய், நிலத்தில், நீரோடையில், பொதுச்சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இந்தளவு எண்ணெய்யை உற்பத்திசெய்ய, 25 எக்ஸன் வால்டீஸ் சிந்துதல்களைத் தேவைப்படுத்தும்! ஆனால் பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மேலும் சூடுபடுத்தும் எண்ணெய், வேகத்தடைக் கருவியின் திரவம், விசைமாற்று எண்ணெய் போன்ற மற்ற மோட்டார் வாகன கழிவுகள், ஒரு சாதாராண குப்பை அல்ல. நுகர்வோர் அறிக்கைகள் குறிப்பிடுகிறது, எண்ணெய் “குடி நீருக்குள்” சென்றுவிட்டால், “மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படும் அங்கே: பயன்படுத்தப்பட்ட ஒரு லிட்டர் எண்ணெய், 10 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீரை குடிக்கப்பட முடியாததாக மாற்றிவிடும், மேலும் அரை லிட்டர் எண்ணெய், ஓர் ஏக்கர் நீர் பரப்பளவிற்கு வழுவழுப்பான மேற்பரப்பை உண்டாக்க முடியும்.” (g92 9/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்