எமது வாசகரிடமிருந்து
பிள்ளைகளை வளர்த்தல் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியனாக, “உங்கள் பிள்ளைகள்—அவர்களுக்கு மிகச் சிறந்ததைச் செய்தல்,” (ஜனவரி 8, 1993) என்ற கட்டுரைகளை நான் பெரிதும் போற்றினேன். ஆசிரியர்கள் இன்று எதிர்ப்படும் சவால்களில் ஒன்று, பிள்ளைகளில் ஓர் உண்மையான அக்கறை காட்டுவதற்கு அதிக வேலையாக இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளைக் கையாளுவதேயாகும். எங்கள் பள்ளியில் சமீபத்தில் நடந்த ஒரு வருடாந்தர பெற்றோர் இரவில், இந்தப் பிரதியின் கருத்துக்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். பெற்றோர், எங்கள் கலந்தாலோசிப்பு உட்பார்வை நிறைந்ததாயும் எண்ணத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருந்ததாகக் கண்டனர்.
M. P., ஐக்கிய மாகாணங்கள்
நீங்கள் உங்கள் இலக்கின் மையத்தை அடைந்துவிட்டீர்கள். அவை நான் இதுவரை படித்த கட்டுரைகளிலேயே மிகச்சிறந்த கட்டுரைகளாக இருந்தன. கெட்ட உதாரணங்களை மட்டும் நீங்கள் எடுத்துக் காட்டாமல், பரிகாரங்களையுங்கூட சுட்டிக் காட்டுகிறீர்கள்.
M. R., ஜெர்மனி
கட்டுரைகள் நன்கு எழுதப்பட்டிருந்தன. ஆனால் குழந்தை துர்ப்பிரயோகத்தைப்பற்றிய விவரமான உங்கள் குறிப்புகளுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். அது என்னை அதிர்ச்சியுறச் செய்தது.
F. M., கனடா
குற்றமற்ற, எதிர்க்கமுடியாத குழந்தைகள்மீது வயதுவந்தோர் செய்யும் துர்ப்பிரயோகங்களை வாசிப்பது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டுவதாகத்தான் இருக்கிறது. அத்தகைய விஷயங்களை வாசிப்பது சில வாசகர்களுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அதேசமயம் இன்று குழந்தைகள் எதிர்ப்படும் அதே உண்மையான ஆபத்துக்களைப்பற்றி பெற்றோருக்கும் தெரிவிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. (2 கொரிந்தியர் 2:11-ஐ ஒப்பிடவும்.) ஆகவே அத்தகைய விஷயங்களில் குறிப்பாக—முடிந்தவரையில் விரும்பக்கூடிய வகையில்—எழுத வேண்டிய ஒரு கடமையை நாங்கள் உணர்ந்தோம்.—ED.
பெற்றோருக்குக் கடிதம் “அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு கடிதம்,” (ஜனவரி 8, 1993) என்ற கட்டுரை என் கண்களில் கண்ணீரை வரவைத்தது. என் பெற்றோர் தங்களுடைய எட்டுப் பிள்ளைகளை வளர்ப்பதில் எவ்வளவு கஷ்டங்களைக் கொண்டிருந்தனர் என்பதை எனக்கு உணர்த்தியது. எனவே என்னுடைய 42-ம் வயதில் என்னுடைய சொந்த நன்றி கடிதத்தை என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எழுதிவிட்டேன்.
J. D., ஐக்கிய மாகாணங்கள்
அதை வாசிப்பது எனக்கு மிக வேதனை தருவதாக இருந்தது. ஏனென்றால், அந்த இளைஞன் பட்டியலிட்டிருக்கும் காரியங்களில் ஒன்றையும் என் பெற்றோர் எனக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை நான் திரும்ப வாசிக்கும்போது, நம் பரலோகத் தந்தை, யெகோவா தேவன் எனக்கு எவ்வளவு அதிகம், மற்ற அநேகக் காரியங்களையும் செய்திருக்கிறார் என்று நான் உணர்ந்தேன். எனக்கு அன்பைப் போதித்து, எனக்குத் தேவையான சமயத்தில் சிட்சையையும் தந்திருக்கிறார். இவ்வாறு நான் அல்லல்பட்டுக்கொண்டிருந்த வேதனை நிறைந்த குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு ஓரளவு விடுதலையளித்திருக்கிறார்.
C. A., ஐக்கிய மாகாணங்கள்
ஒலிவ எண்ணெய் ஜனவரி 8, 1993 பிரதியில் வெளிவந்த “பல்வகை பயனுள்ள ஒலிவ எண்ணெய்” என்ற நல்ல கட்டுரைக்காக நன்றி. நான் மருத்துவமனை ஒன்றில் ஓர் உணவு வல்லுநராக பணியாற்றுகிறேன். கொழுப்பு மற்றும் கொழுப்பினி குறைந்த உணவுகளின்பேரில் நான் மக்களுக்கு ஆலோசனை கொடுக்கிறேன். என் போதனையில் இந்தக் கட்டுரை மிகத் திருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
D. S., ஐக்கிய மாகாணங்கள்
உலகத்தைக் கவனித்தல் “உலகத்தைக் கவனித்தல்” என்ற தலைப்பில் செய்தித் துணுக்குகளை வெளியிடுவதற்கு உங்களுக்கு நன்றி. நான் ஒரு பாதுகாப்பான சிக்கலற்ற வாழ்க்கையைக் கொண்டிருந்ததன் காரணமாக, இவை கடைசி நாட்கள்தான் என்று நான் எனக்கே தொடர்ந்து உறுதிப்படுத்தவேண்டியிருக்கிறது. இந்தப் பழைய உலகம் எவ்வளவு வியாதிப்பட்டிருக்கிறது, மற்றும் தரங்குறைந்திருக்கிறது என்று எனக்கு நம்பிக்கையூட்டுவதில், “உலகத்தைக் கவனித்தல்” எனக்குப் பெருந்துணையாக இருந்துவந்திருக்கிறது. தயவுசெய்து அதைத் தவறாது தொடர்ந்து வெளியிடுங்கள்.
M. G., ஐக்கிய மாகாணங்கள்
புதிய உலகம் “எல்லாருக்கும் திருப்தியளிக்கும் ஒரு புதிய உலகம்” (பிப்ரவரி 8, 1993) என்ற தொடர்கட்டுரை, சமீப வருடங்களில் இந்தப் பொருள்மீதான கட்டுரைகளிலெல்லாம் தலைசிறந்த ஒன்றாக இருந்தது. மேற்கோள் காட்டப்பட்டிருந்த வசனங்கள், அழகிய படங்கள் போன்றவை ஆழ்ந்த போற்றுதல் உணர்ச்சியை என்னில் தூண்டின. அது அநேக வாசகர்களின் நெஞ்சங்களைத் தொடும் என நம்புகிறேன்.
I. Z., இத்தாலி