உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 5/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்—நான் துணிந்திறங்க வேண்டுமா?
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எய்ட்ஸ் பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டியது
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 5/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஆதரவாயிருக்கும் பெற்றோர் “பெற்றோரே—ஆதரவாயிருங்கள்!” (ஆகஸ்ட் 8, 1994) என்ற தொடர்கட்டுரைகளுக்காக உங்களுக்கு விசேஷித்த நன்றி. சமீபத்தில், என்னுடைய கடைசி மகளின் பள்ளி முதல்வர், பெற்றோர்-ஆசிரியருக்கான ஒரு நல்ல பேச்சுத் தொடர்பைப்பற்றிய விஷயத்தைப் பெற்றோரடங்கிய ஒரு தொகுதியுடன் கலந்துபேசினார். நான் அந்தப் பத்திரிகையை முதல்வரிடம் எடுத்துச் சென்றேன், அதை அவர் உடனடியாக வாசித்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மாதாந்திர பள்ளி செய்திமடலை என்னுடைய மகள் என்னிடம் கொண்டுவந்தாள். அந்தத் தகவலிலிருந்து முழு சமுதாயத்தினரும் பயனடையும்படிக்கு, நல்ல பேச்சுத் தொடர்பின்பேரிலான அந்தக் கட்டுரைப் பகுதி மறுபதிப்பு செய்யப்பட்டிருந்தது.

டபிள்யு. பி., ஐக்கிய மாகாணங்கள்

உவால்ஃபின்கள் டால்ஃபின்/திமிங்கல கலப்பினத்தைப் பற்றிய, “திமிங்கலமா? டால்ஃபினா?—இல்லை, அது உவால்ஃபின்!” (பிப்ரவரி 22, 1994 [ஆங்கிலம்]) என்ற கட்டுரையை நான் அனுபவித்து மகிழ்ந்தேன். முடிவில், “கடவுள் தம்முடைய படைப்பில் இயல்பாக அமைத்திருக்கிற பல்வகை உயிரினங்களில் இருக்கும் வியக்கத்தக்க உள்ளூர சக்திக்குள் ஒரு கணநேரப் பார்வை” என்பதாக நீங்கள் இதை அழைக்கிறீர்கள். இந்தக் குறிப்பை நான் ஒத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் அவற்றினுடைய இயல்பான சூழ்நிலைமையில் புணர்ச்சி ஏற்பட்டிருக்காது.

கே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

இப்படிப்பட்ட புணர்ச்சி இயல்பானது என்றோ அதற்கு கடவுள் காரணர் என்றோ நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. இருப்பினும், இப்படிப்பட்ட கவர்ந்திழுக்கும் ஜீவராசி உயிர்வாழ்வதற்கான புகழை மனிதனுக்குக் கொடுக்க முடியாது. ‘கடவுள் தம்முடைய படைப்பில் இயல்பாக அமைத்திருக்கிற பல்வகை உயிரினங்களில் இருக்கும் உள்ளூர சக்தியின்’ காரணமாகவே கலப்பினங்கள் உயிர் வாழ்கின்றன. இதனால் எமது கட்டுரை கடவுளுக்குச் சேரவேண்டிய புகழைக் கொடுத்தது.—ED.

கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்—நான் துணிந்திறங்க வேண்டுமா?” என்ற கட்டுரையில், பன்ஜி குதித்தலில் ஏற்பட சாத்தியமுள்ள ஆபத்துக்களைக் குறித்து இளைஞரை எச்சரிக்கிற விஷயத்தை நன்றாக எழுதியிருந்தீர்கள். (ஜூலை 8, 1994) நான் அதை வாசித்துமுடித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, பன்ஜி குதித்தலின் காரணமாக நான்கு இளைஞர்கள் மோசமான கண் பாதிப்பை அனுபவித்தார்கள் என்பதாக பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் அறிக்கை செய்தது. உங்களுடைய அற்புதகரமான பத்திரிகைக்கு நன்றி.

டி. எஃப்., இங்கிலாந்து

மரணத்தை ஏளனம் செய்யும் விளையாட்டுகள் பேரிலான அந்தக் கட்டுரை அதிக விழிப்புணர்ச்சியை என்னில் விட்டுச்சென்றது! நான் ஒரு முறை செங்குத்தான மலைப் பாறைமீது ஏறினபோது, நான் முன்னேயும் பின்னேயும் போகமுடியாத நிலையில் இருந்தேன். மரணத்திற்கு எவ்வளவு அருகில் இருந்தேன் என்பதைக் கண்டு இன்றைக்கும் திகிலடைகிறேன். என் உயிரை அழிப்பது எவ்வளவு மடத்தனமாக இருந்திருக்கும்!

எல். டி., ஐக்கிய மாகாணங்கள்

நான் அந்தக் கட்டுரையை மிகவும் போற்றினேன். நான் வசிக்கிற இடத்தில் உள்ள பையன்கள் அந்தக் கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள் பெரும்பாலானவற்றில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் கலந்துகொள்ளும்படி எப்பொழுதும் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இருந்தாலும், வேடிக்கையான விளையாட்டு என்று அவர்கள் என்னிடம் சொல்கிற அதே விளையாட்டுகளினால் ஆட்கள் சாவதைப் பற்றிய அல்லது பயங்கரமான காயமடைவதைப் பற்றிய அறிக்கைகளைச் செய்திகளில் நான் அடிக்கடி பார்க்கிறேன். அந்தக் கட்டுரையை வாசித்த பிறகு, குறுகியநேர கிளர்ச்சிக்காக, யெகோவா தந்த என்னுடைய உயிரை ஆபத்திற்குள்ளாக்குவது விவேகமற்றதாயிருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

எய்ட்ஸ் நான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முழுநேர சுவிசேஷகனாய் சேவைசெய்தேன். என்றாலும், இப்பொழுது என்னால் செய்ய முடியாது. எனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. “எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு உதவுதல்” (மார்ச் 22, 1994 [ஆங்கிலம்]) என்ற கட்டுரையில் இந்தக் கடினமான பொருளை வெளிப்படையாக கலந்தாலோசித்ததற்காக உங்களுக்கு நன்றி. உங்களுடைய மனதில் எல்லாரையும் குறித்து அக்கறைகொள்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டோருக்காக இரக்கவுணர்ச்சியைத் தூண்டிய அந்தக் கட்டுரைப் பகுதிகளை அநேகர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டு, கொடுக்கப்பட்ட “நியாயமான முன்னெச்சரிக்கைகள்” பேரில் கவனத்தை ஊன்றியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அந்தக் கட்டுரை, சிலர் உணர்வின்றி வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு உரிமம் அளித்ததைப்போல இருக்கிறது. என்னால் உதவ முடியாது, ஆனால் நான் மிகவும் கவலைக்கிடமாகி, என்னுடைய சகோதரர்களின் அன்பும் ஆதரவும் எனக்குத் தேவைப்படுகையில் என்ன நடக்குமோவென்று யோசிக்கிறேன். கிருமிகள் தொற்றக்கூடும் என்று அவர்கள் பயப்படுவதன் காரணமாக சிலர் என்னைச் சந்திப்பதற்கு மறுப்பார்களா?

எம். என்., ஐக்கிய மாகாணங்கள்

இந்த வெளிப்படையான குறிப்புகளுக்காக நாங்கள் போற்றுகிறோம். எய்ட்ஸுக்கு பலியானவர்களுக்கு உதவியளிப்பதைத் தடைசெய்வது எங்களுடைய நோக்கம் அல்ல. உண்மையில், நாங்கள் குறிப்பிட்டதாவது: “தற்போதைய அறிக்கைகளின்படி, தற்செயலான தொடர்பு எய்ட்ஸ் பரவும்படி செய்கிறதில்லை. . . . எய்ட்ஸ் உள்ள ஆட்கள் மத்தியில் இருப்பதைப் பற்றி தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமில்லை.” கொடுக்கப்பட்ட முன்னெச்சரிப்புகள், அவர்கள் எய்ட்ஸுக்குப் பலியானவர்களுடன் தயவாக நடந்துகொள்கையில் ஓரளவு பாதுகாப்பை உணரும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யக்கூடும்.—ED.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்