மலேரியாவுக்கு எதிரான புதிய ஆயுதம்
விழித்தெழு! ஆகஸ்ட் 8, 1993-ல் அறிவித்தபடி மலேரியா உலகளாவிய ஒரு கொள்ளைநோயாக திரும்பவருகிறது. “கடந்த வருடம், பிரேஸில் 5,60,000 மலேரியா நோயாளிகளைப் பதிவுசெய்தது,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் (மார்ச் 23, 1993) அறிக்கை செய்தது. ஆண்டுதோறும் 8,000 பிரேஸில் நாட்டவர் மலேரியாவால் மரிக்கின்றனர். இப்போது கொலம்பியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், டாக்டர் மானுவேல் எல்கின் பாட்டாரோயோ, வித்தியாசமான ஓர் அணுகுமுறையைக் கொடுத்தார். அது மூன்று வேளை மருந்துக்கு 30 செண்ட்டுகள் மட்டுமே செலவாகும் ஒரு செயற்கை ரசாயன தடுப்பூசி மருந்தாகும். “[கொலம்பியாவில்] ஒரு கொக்கோ கோலாவின் விலையைவிட சற்றுக் குறைவு,” என்றார் டாக்டர் பாட்டாரோயோ. தற்போதைய நிலைமையைப் பொருத்தவரை சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 67 சதவீதத்தினருக்கு இது பலனளிப்பதாக நிரூபித்துள்ளது. சாவுக்கேதுவான மலேரியாவுக்கு இது ஒரு முழு விடையாக இல்லாவிடினும், மலேரியாவிற்கெதிரான போராட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்ற படியாகத் தோன்றுகிறது. (g93 11/08)