இரத்த ஒழுக்கு நோயாளிகளுக்கு மாசுபடுத்தப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டது
இரத்தம் ஆண்டுக்கு-200-கோடி-டாலர் வியாபாரமாக ஆகிவிட்டிருக்கிறது. அதிலிருந்து இலாபம் தேடும் முயற்சி பிரான்ஸில் ஒரு பெரும் துயரத்தில் விளைவடைந்திருக்கிறது. HIV-யால் மாசுபடுத்தப்பட்ட இரத்தம் 250 இரத்த ஒழுக்கு நோயாளிகள் (hemophiliacs) எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்க காரணமாக இருந்தது. மேலும் கூடுதலாக நூற்றுக்கணக்கானோர் நோய் தொற்றப்பெற்றனர்.—தி பாஸ்டன் க்ளோப், அக்டோபர் 28, 1992, பக்கம் 4.
மருத்துவ அலட்சியம் மற்றும் வியாபார பேராசையின் “அசுத்த கூட்டு” சுமார் 400 ஜெர்மானிய இரத்த ஒழுக்கு நோயாளிகளின் மரணத்துக்கு வழிநடத்திற்று. கூடுதலாக குறைந்தது 2,000 பேராவது HIV-யால் மாசுபடுத்தப்பட்ட இரத்தத்தால் நோய் தொற்றப்பெற்றனர்.—கார்டியன் உவீக்லி, ஆகஸ்ட் 22, 1993, பக்கம் 7.
கனடா தனக்கேயுரிய இரத்த அவதூறைக் கொண்டிருக்கிறது. 700-க்கும் மேற்பட்ட இரத்த ஒழுக்கு நோயாளிகள் HIV-யால் மாசுபடுத்தப்பட்ட இரத்தத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. எய்ட்ஸால் மாசுபடுத்தப்பட்ட இரத்தத்தை செஞ்சிலுவை சங்கத்தினர் கனடாவைச் சேர்ந்த இரத்த ஒழுக்கு நோயாளிகளுக்கு விநியோகம் செய்துகொண்டிருந்தனர் என்று 1984 ஜூலையில் அரசாங்கத்திற்கு எச்சரிப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப்பிறகு ஒரு வருடம்வரை, அதாவது ஆகஸ்ட் 1985 வரை, மாசுபடுத்தப்பட்ட இரத்தம்-கலந்த பொருட்கள் விற்பனையிலிருந்து அகற்றப்படவில்லை.—தி க்ளோப் அண்ட் மெயில், ஜூலை 22, 1993, பக்கம் A21, மற்றும் தி மெடிக்கல் போஸ்ட், மார்ச் 30, 1993, பக்கம் 26.
சுகாதார அமைச்சகத்தின் பிரகாரம், 1980-களில் இரத்தம் மற்றும் ஊனீர் ஏற்றுதல்கள் மூலம் எய்ட்ஸ் தொற்றப்பெற்ற 1,147 இரத்த ஒழுக்கு நோயாளிகளுக்கு ஸ்பெய்ன் நஷ்ட ஈடு வழங்கப்போவதாக, ஏப்ரல் 21, 1993-ல், ஸ்பெய்னின் மாட்ரிட்டிலிருந்து அனுப்பப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை சொன்னது. 400-க்கும் அதிகமானோர் ஏற்கெனவே ஏய்ட்ஸ் வரப்பெற்று இறந்தனர்.—தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 22, 1993, பக்கம் A13.
இரத்தம் உறைதல் அம்சம் VIII-ன் அபாயங்களைப்பற்றி, 1982-ன் இறுதியில், நோய்க்கட்டுப்பாட்டு மையம் NHF-ஐ ([National Hemophilia Foundation] தேசிய இரத்த ஒழுக்கு நோய் சங்கம்) எச்சரிக்கத் தொடங்கியது. அதாவது, அந்த அம்சத்தைக்கொண்ட ஒரே ஒரு இரத்தமேற்றுதல் இரத்ததானம் செய்த 20,000 பேரின் அடர்ந்த கூட்டாக இருக்கலாம். ஊசி மருந்தை மாசுபடுத்த, அந்தக் கூட்டில் ஒன்றில் மட்டும் எய்ட்ஸ் இருந்தால் போதுமானது. மார்ச் 1983-ல் ஒரு கடுமையான எச்சரிப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த வருடம் மே மாதத்தில், “உறைதல் அம்சத்தைத் தொடர்ந்து உபயோகிக்கும்படி NHF வற்புறுத்துகிறது,” என்ற தலைப்பிட்ட ஒரு செய்தி வெளியீட்டை NHF வெளியிட்டது. அதற்குள் மரண எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கானோர் இன்னும் ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இரத்த ஒழுக்கு நோயாளிகள் உயிர் பிழைக்க இந்த உறைதல் அம்சம் அவசியமேயில்லை. மற்ற மாற்று சிகிச்சை முறைகள் இருந்தன. ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அந்த அம்சத்தை சூடேற்றுவதன் மூலம் அது பாதுகாப்பானதாக ஆக்கப்பட்டதை 1985-ன்போது மருந்து கம்பெனிகள் கண்டுபிடித்தன. அதன்பிறகும்கூட, இருப்பில் இருந்த சூடேற்றப்படாத அம்சம் இன்னும் விற்பனை செய்யப்பட்டுவந்தது.—டேட்லைன் NBC, டிசம்பர் 14, 1993.