நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?
கிறிஸ்தவமண்டல மதங்களிலிருந்து முஸ்லீம்களையும் யூதர்களையும் பிரிக்கிற பெரிய முட்டுக்கட்டைகளுள் ஒன்று என்ன? “மகா பரிசுத்த திரித்துவம்” என்ற கொள்கையே. இந்தக் கொள்கை என்ன சொல்கிறது? அதனேசிய விசுவாசப்பிரமாணத்தில், “ஒரே கடவுளைத் திரித்துவத்தில்” வணங்குவது, “பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள்; எனினும், அவர்கள் மூன்று கடவுட்களல்லர், ஒரே கடவுளே” என்று திரித்துவம் வரையறுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் நித்தியராகவும் சர்வேசுவரராகவும் ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இல்லாதவர்களாகவும் பேசப்படுகின்றனர்; ஒவ்வொருவரும் கடவுளாக பேசப்பட்டபோதிலும் எல்லாரும் சேர்ந்து ஒரே கடவுளாக பேசப்படுகின்றனர். இறையியல் வல்லுநர்கள் இதை விளங்காப்புதிராக விவரிக்கின்றனர். திரித்துவத்தைப் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?a பின்வரும் கேள்விகள் சில நல்ல முடிவுகளுக்கு வர உங்களை வழிநடத்தும். பைபிள்பூர்வ பதில்கள் 12-ம் பக்கத்தில் இருக்கின்றன.
1. கடவுள் திரித்துவமாக இருக்கிறாரென்றால், எப்போதுமே இருந்துவருகிறாரென்றால், எபிரெய வேதாகமங்களில் (“பழைய ஏற்பாடு”) அந்தக் கொள்கையை யூதர் பார்த்தார்களா?
2. கடவுளைப்பற்றி எபிரெய வேதாகமங்கள் என்ன சொல்கின்றன?—உபாகமம் 6:4; சங்கீதம் 145; சகரியா 14:9.
3. பரிசுத்த ஆவியைப் பற்றி எபிரெய வேதாகமங்கள் குறிப்பிடுகின்றனவா?—நியாயாதிபதிகள் 15:14; சகரியா 4:6.
4. எபிரெய வேதாகமங்களில், பரிசுத்த ஆவி ஒரு நபராகச் சொல்லப்பட்டிருக்கிறதா, அல்லது கடவுளின் கிரியை நடப்பிக்கும் சக்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா?—நியாயாதிபதிகள் 14:6; ஏசாயா 44:3.
5. எபிரெய வேதாகமங்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவையோ அபிஷேகம்பண்ணப்பட்டவரையோ பற்றி சொல்கின்றனவா?—தானியேல் 9:25, 26.
6. எபிரெய வேதாகமங்களில் உள்ள எந்த வசனமாவது மேசியாவைக் கடவுளுக்குச் சமமானவராக பேசுகிறதா?—சங்கீதம் 2:2, 4-8; ஏசாயா 45:18; 61:1.
7. யெகோவா, ஒரே கடவுளில் மூன்று நபர்கள் என்று நம்புவதற்கு எந்த எபிரெய வசனமாவது நல்ல ஆதாரத்தைக் கொடுக்கிறதா?—ஏசாயா 44:6; 46:9, 10.
8. இயேசுவை யார் பூமிக்கு அனுப்பினார்? அவ்வாறானால், யார் உயர்ந்தவர்?—யோவான் 5:19, 23, 30; 8:42; 14:28; 17:3.
9. தம்மைக் கடவுள் என்பதாக இயேசு எப்பொழுதாவது சொன்னாரா?—யோவான் 7:28, 29; 14:6.
10. இயேசுவைப் பலர் பார்த்தாலும், எந்த மனிதனாவது கடவுளை எப்பொழுதாவது பார்த்திருக்கிறாரா?—யோவான் 1:18; 6:46.
11. தம்மை ‘கடவுளின் குமாரன்’ என்று சொன்னாரா, அல்லது ‘குமாரனாகிய கடவுள்’ என்று இயேசு சொன்னாரா?—யோவான் 10:36; 1 யோவான் 4:15; 5:5, 13.
12. தம்மைக் கடவுளுக்குச் சமமானவராக இயேசு எப்பொழுதாவது சொன்னாரா?—யோவான் 14:28; 20:17.
13. “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்ற வார்த்தைகள் திரித்துவத்தை நிரூபிக்கிறதா?—யோவான் 10:30; 17:21; மாற்கு 13:32.
14. இயேசுவைத் தொடக்க கால சீஷர்கள் எவ்வாறு கருதினார்கள்?—யோவான் 1:29, 34, 41, 49; 6:69, திருத்திய மொழிபெயர்ப்பு; 1 கொரிந்தியர் 11:3.
15. இயேசுவைக் கடவுள் எவ்வாறு கருதினார்?—மாற்கு 9:7; லூக்கா 2:9-11.
16. பரிசுத்த ஆவி கடவுளின் கிரியை நடப்பிக்கும் சக்தியாக இருப்பதைப் பற்றி கிரேக்க வேதாகமங்கள் (“புதிய ஏற்பாடு”) எபிரெய வேதாகமங்களோடு முரண்படுகின்றனவா?—மத்தேயு 3:11; லூக்கா 1:41; யோவான் 14:26; அப்போஸ்தலர் 1:8; 4:31; 10:38.
17. இயேசு முழுக்காட்டுதல் எடுத்த சமயம், பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் எங்கிருந்தனர்? அவர்கள் ஒருவரில் மூவராக இருந்தனரா?—மத்தேயு 3:16, 17.
18. பரலோகங்களில் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு என்ன பதவி வகிக்கிறார்?—அப்போஸ்தலர் 7:55, 56; ரோமர் 8:34; கொலோசெயர் 3:1; எபிரெயர் 12:1, 2.
19. அந்த மேம்பட்ட பதவியை இயேசுவுக்கு கொடுத்தது யார்?—பிலிப்பியர் 2:9-11.
20. அது இயேசுவை கடவுளாக செய்கிறதா அல்லது சர்வலோகத்தில் உள்ள கடவுளுக்கு அடுத்தவராகவே செய்கிறதா?—1 கொரிந்தியர் 11:3; பிலிப்பியர் 2:9-11.
21. சர்வலோக உன்னதப் பேரரசர் யார்?—உபாகமம் 3:24, NW; அப்போஸ்தலர் 4:24-27, NW; 1 கொரிந்தியர் 15:28.
[அடிக்குறிப்புகள்]
a இந்த விஷயத்தைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 380-1, 405-25 பக்கங்களையும் நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? சிற்றேட்டையும் தயவுசெய்து எடுத்துப் பாருங்கள். இந்த இரண்டு பிரசுரங்களையும் உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்தது.