உறைந்த வெண்பனி—அதன் கலையழகிற்குப் பின்னிருப்பது யார்?
நீராவியால் செறிந்திருக்கும் காற்று மாலையில் குளிர்ச்சியடையும்போது, இனிமேலும் எல்லா நீரையும் ஏந்த முடியாததாக இருக்கிறது. அதில் விஞ்சியிருப்பவை பனித்துளிகளாக உதிர்கின்றன. ஆனால் காற்றின் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழாகக் குறையும்போது, எஞ்சிய தண்ணீர் உறைபடிவமாகி—அதாவது, திரவமாகிய பனித்துளி நிலையை விட்டுவிட்டு, பனிக்கட்டியாகப் படிந்துவிடுகிறது. அவ்வாறு உருவான உறைபனி படிகங்கள் தகடுபோன்று இருந்து, வெண்பனி படிகங்களை ஒத்திருக்கின்றன. ஜன்னல் கண்ணாடிகளில் இவை படிந்திருந்து, அவற்றின் கண்கவர் வடிவியல்சார்ந்த உருவமைப்புகளுக்காகவும் பூப்பின்னல்போன்ற மாதிரிகளுக்காகவும் போற்றப்படுகின்றன. மிகவும் கலையழகு வாய்ந்தவை.
ஆனால் அதிகமாக மனதில் பதியவைக்கும் உறைவெண்பனி என்ற மற்றொரு வகையான உறைபனி படிகங்களும் இருக்கின்றன. அவை மேல்நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும் குழிவுள்ள ஆறு பக்க முனைகளை உடைய பனிக்கட்டி ஈட்டிகள்; திறந்த வெளி சூழல்களில் அவை கொத்தாக ஒன்றுசேர்க்கப்படுகையில், அழகிய கண்கொள்ளா காட்சிகளை அளிப்பதால், பொருத்தமாகவே பனிக்கட்டி பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. கலிபோர்னியாவிலுள்ள யோஸமட்டி தேசிய பூங்காவில் பொன்னொளி வீசிய ஒருநாள் காலையில், யோஸமட்டி பள்ளத்தாக்கினூடே ஓடும் மர்ஸட் ஆற்றின் தண்ணீர்களிலுள்ள பாறைகளின் உச்சியில் இந்தப் பனிக்கட்டி பூக்கள் வளர்ந்திருப்பது காணப்பட்டது. மிகவும் கலையழகுள்ளவையாகவும், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரால் நிறுவப்பட்ட இயற்பியல் சட்டங்களால் உருவாக்கப்பட்டும் இருந்தன. “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.