உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 1/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “பாதுகாப்பான பாலுறவு”—பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதல்ல
  • உங்கள் மூளைக்குப் பயிற்சி கொடுத்தல்
  • இரயில்வண்டிகளின் கழிவறை-காகிதச்சுருள் செய்தி
  • ஐ.மா. துப்பாக்கி முரணுரை
  • ஜப்பானில் ஒற்றுக்கேட்டல்
  • எய்ட்ஸ் ஆப்பிரிக்காவை பேரளவில் அழிக்கிறது
  • அளவுக்கு மீறி மீன்பிடிப்பது கடலை வெறுமையாக்குகிறது
  • சிறந்த தூங்கும் பழக்கங்கள்
  • கத்தோலிக்க திருப்பலியைப் பகிர்ந்தளிக்க ஆல்டர் பெண்கள்
  • அலிகள் அடங்கிய ஒரு வழிபாட்டு மரபு
  • எய்ட்ஸ் வருவதை நான் எவ்வாறு தவிர்க்கலாம்?
    விழித்தெழு!—1994
  • எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • எய்ட்ஸ் ஏன் இவ்வளவு பரவலாகப் பரவியிருக்கிறது?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 1/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

“பாதுகாப்பான பாலுறவு”—பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதல்ல

“பாதுகாப்பான பாலின உறவு,” எய்ட்ஸ் தொற்றிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு கருத்தடை உறைகளை உபயோகிப்பது ஆகியவற்றுக்கு ஆதரவாக செய்திப்பரப்பு அதிகம் இருந்தபோதிலும், அப்படிப்பட்ட புத்திமதியின் ஞானத்தைக் குறித்து மருத்துவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். கருத்தடை உறைகள் எய்ட்ஸ்-க்கு எதிராக ஆண்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கிறபோதிலும், பெண்களுக்கு அதிகக் குறைவாகவே அவை பாதுகாப்புத் தருகின்றன என்று பாரிஸ் செய்தித் தாளான லி ஃபிகரோ-லில் வெளிவந்த ஒரு மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஏனென்றால் நோயுடைய துணைவர் கருத்தடை உறையின் வெளிப்புறத்தை எளிதாக கறைபடுத்தக்கூடும். மாதவிடாய் சமயத்தின் போதும், கருப்பை வாய்க் குழாயில் ஏதாவது நோய் அல்லது புண் இருக்கும் போதும் பெண்களும்கூட விசேஷமாய் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர். புள்ளிவிவரங்களின்படி, எய்ட்ஸ்-க்கு எதிராக பெண்களைப் பாதுகாப்பதில் கருத்தடை உறைகள் 69 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதுகாப்பாய் உள்ளன. இந்தக் குறைவான “பாதுகாப்பு” காரணத்தைக் குறித்து ஒரு மருத்துவர் இவ்வாறு சொன்னார்: “ஒரு வருடத்தில் விபத்துக்குள்ளாகாமால் இருப்பதற்கு 69 சதவீத வாய்ப்பே உள்ள ஒரு விமானத்தைக் குறித்து நாம் என்ன சொல்லக்கூடும்?”

உங்கள் மூளைக்குப் பயிற்சி கொடுத்தல்

“ஞாபகமறதி விதியின் விளைவல்ல, ஆனால் நல்ல பயிற்சி குறைவுபடுவதன் காரணமாக ஏற்படுகிறது,” என்று ஒரு ஜெர்மன் சுகாதார காப்புறுதி பிரசுரம், DAK மாகட்சென் அறிக்கை செய்கிறது. செயலற்று இருக்கும் போது தசைகள் தோய்ந்து போவது போல, மூளைக்கும்கூட பயிற்சி குறைவாக இருந்தால் அது துருப்பிடித்து குறைவான தகவலையே சேமித்து வைக்கிறது. இப்பிரச்சினை முக்கியமாக முதியோருக்கு மட்டும் உள்ளதா? நிச்சயமாகவே இல்லை! “சிந்தனை நமக்கு சுலபமாக ஆக்கப்படுவதாலும் மேலோட்டமாகவும் ஆகிவிடுவதாலும்,” இளைஞரும்கூட தங்கள் மனதை சரியான செயல்பாட்டில் வைத்திராததன் காரணமாக துருப்பிடித்த ஞாபகசக்தியை உருவாக்கிக் கொள்ளும் ஆபத்தில் உள்ளனர் என்று அப்பத்திரிகைக் குறிப்பிடுகிறது. எது உதவி செய்யக்கூடும்? மனதையும் ஞாபகசக்தியையும் தூண்டுவிப்பதற்கு, எண்கள், எழுத்துத்தொகுதியின் எழுத்துக்கள் ஆகியவை உட்பட்ட புதிர்கள் போன்ற மனசம்பந்தமான விளையாட்டுக்களை உபயோகித்து மூளைக்குப் பயிற்சி கொடுக்கும்படி அப்பத்திரிகை சிபாரிசு செய்கிறது. மேலும் “குறுக்கெழுத்துப் போட்டிகள் உதவியாயிருக்கக்கூடும்.”

இரயில்வண்டிகளின் கழிவறை-காகிதச்சுருள் செய்தி

இத்தாலியில் உள்ள எல்லா இரயில்களிலும் நவீன சாதனம் அறிமுகப்படுத்தப்படும் வரை, ஒரு அவசர நிலையைக் குறித்து இரயில்வண்டி நடத்துநர் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்கு ஒரே வழி பின்வருமாறு இருப்பதைப் போல் தொடர்ந்து இருக்கும்: செய்தியை ஒரு தாளில் எழுதி, அதைக் கழிவறை-காகிதச்சுருளுக்குள் வைத்து, சுருளை ஓடும் இரயிலிலிருந்து அடுத்த இரயில் நிலையத்தில் எறிந்துவிட வேண்டும். அது கண்டுபிடிக்கப்பட்டு, செய்தியை அதிகாரிகள் அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு. “இரயில்வே ஆரம்பித்ததிலிருந்து இருந்து வரும் இம்முறை” இரயில்வேயின் அதிகாரப்பூர்வமான விதிமுறைகளில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. இது “இன்னும் திறம்பட்ட, பரிசோதிக்கப்பட்ட முறையாக இருக்கிறது,” என்று இத்தாலி தேசத்து இரயில்வே அதிகாரி சொல்கிறார், இருப்பினும், “இரயில்களில் செய்தித்தொடர்பு ஒரு வினைமையான பிரச்சினை” என்பதையும்கூட அவர் அறிந்திருக்கிறார். பிரயாணியின் உடல்நலக்கேடு, வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்கள் உள்ள சாமான்கள், போராட்டச் செயல் அல்லது களவு போன்றவற்றை எதிர்ப்படும்போது “மாவட்ட இரயில்வேக்களின் சிப்பந்திகள் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றனர்,” ஏனென்றால் குறுக்கிடுவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை என்று இத்தாலிய செய்தித்தாள், கொரியரி டெல்லா செரா சொல்கிறது. செய்தித்தொடர்பு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லத்தக்க மூடிய சர்க்யுட் தொலைபேசிகளை விரைவில் கொண்டு வரப்போவதாக இத்தாலி மாவட்ட இரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஐ.மா. துப்பாக்கி முரணுரை

ஐக்கிய மாகாணங்களில் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் கைத்துப்பாக்கி கொலைகளும், அதோடுகூட ஒட்டுமொத்தமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுதலும், குற்றவாளிகளிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களையும், தாங்களே துப்பாக்கி ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களையும் உருவாக்கியிருக்கிறது. “அநேக மக்கள் இந்த இரண்டு எண்ணங்களையும் ஒருசேர யோசித்துக் கொண்டிருக்கலாம்,” என்று டைம் பத்திரிகை சொல்கிறது. துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகமான அழுத்தம் இருந்தபோதிலும், முன்பிருந்ததைக் காட்டிலும் அநேக மக்கள் துப்பாக்கிகளை வாங்குகின்றனர். பிரேடி சட்டம் (துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம்) நிறைவேற்றப்பட்ட போது, அந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன் துப்பாக்கிகளின் விற்பனை வானளவு உயர்ந்ததாக விற்பனையாளர்கள் அறிவித்தனர். இப்போது ஐக்கிய மாகாணங்களில் 21 கோடி 10 இலட்சம் துப்பாக்கிகள் உள்ளன. இவற்றைக் குறைப்பதற்கு ஒரு துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்து—எவ்வித கேள்வியும் கேட்கப்படாமல்—100 டாலர் மதிப்புள்ள ஒரு பரிசுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் பொதுமக்களின் கைவசத்திலிருந்து நீக்கப்பட்டன, ஆனால் சிலர் விலைமலிவான துப்பாக்கிகளை வாங்கி அதன் மூலம் இலாபமடையவும் தூண்டியது. துப்பாக்கிக் கடை சொந்தக்காரர் ஒருவர் சொன்னார்: “காலையில் துப்பாக்கியைத் திருப்பி தந்தவர்கள் மறுபடியும் மாலையில் துப்பாக்கியை வைத்திருப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்லமுடியும்.”

ஜப்பானில் ஒற்றுக்கேட்டல்

ஒற்றுக்கேட்பது ஜப்பானின் தேசிய பொழுதுபோக்கு என்று அழைத்து மெய்நிச்சி டெய்லி நியூஸ் அறிக்கை செய்வதாவது, “உலகிலேயே மிக விரிவான அளவில் ஒற்றுக்கேட்கும் தேசம் ஜப்பான் ஆகும். ஒவ்வொரு வருடமும் 60,000 சிறு ரேடியா மைக்ரோஃபோன்கள் விற்கப்படுகின்றன.” ஒற்றுக்கேட்கும் இக்கருவிகள் அவ்வளவு சிறியவையாக இருப்பதால், அவை எழுதும் பேனாக்களில் பொருத்தப்பட முடியும். 15 மீட்டர் தொலைவிலுள்ள உரையாடலை கண்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு அதைக் கடத்தக்கூடிய கருவிகள் உள்ளன. ஜப்பானின் ஒற்றுக்கேட்பவர்கள் யார்? ஒற்றுக்கேட்பவர்களில் பெரும்பான்மையர் “வீண்பேச்சுக்களில் கிடைக்கும் சுவாரசியமான துணுக்குகளைக் கேட்பதற்காக ரிசீவரின் டயலை சுற்றிக்கொண்டிருக்கும் ஆட்களே.” ஆனால் அவர்களில் அநேகர் “தங்கள் பெற்றோரின் அன்பைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பும் பொறாமையான பிள்ளைகளும் அல்லது மணமாகாத தங்கள் மகளின் நடத்தையைக் கண்காணிக்க விரும்பும் தந்தைகளுமே.”

எய்ட்ஸ் ஆப்பிரிக்காவை பேரளவில் அழிக்கிறது

உலக சுகாதார நிறுவனத்தால் செய்யப்பட்ட மதிப்பீடுகளின்படி, உலகமுழுவதும் அறியப்பட்டிருக்கும் 1 கோடி 50 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகளில் 1 கோடி பேர் ஆப்பிரிக்காவில் உள்ளனர், உலகத்திலேயே மிக மோசமாய்த் தாக்கப்பட்ட கண்டமாக அது ஆகியிருக்கிறது. எய்ட்ஸ் கொள்ளைநோயை எதிர்க்க இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை பேராசிரியர் நேதன் க்ளுமெக் “பொங்கிவரும் ஆற்றுவெள்ளத்தைத் தடுக்க எழுப்பப்படும் சிறு மணல்மேடுகளுக்கு” ஒப்பிடுகிறார். லி மான்ட் என்ற பாரிஸ் தினசரியில் வெளியான ஒரு பேட்டியில், ஆப்பிரிக்காவில் இந்த விஷக்கிருமி விளைவிக்கப் போகும் அழிவைக் குறித்து இன்னும் முழுமையாக ஆப்பிரிக்கத் தேசத் தலைவர்கள் உணரவில்லை என்று பேராசிரியர் க்ளுமெக் சொன்னார். அக்கண்டத்தின் 10 சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவர் என்று 1987-ல் பேராசிரியர் க்ளுமெக் மதிப்பிட்டபோது, அநேகர் அவர் மிகைப்படுத்துவதாகக் கூறினர். இன்று ஆப்பிரிக்காவின் ஜனத்தொகையில் 20 முதல் 40 சதவீதம் வரையுள்ள ஆட்கள் சாவுக்கேதுவான எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்படுவர் என்று மதிப்பிடப்படுகிறது.

அளவுக்கு மீறி மீன்பிடிப்பது கடலை வெறுமையாக்குகிறது

“ ‘கடலில் ஏகப்பட்ட மீன்கள் உண்டு’ என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆனால் அது தவறு” என்று தி எக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. “கடலில் அதிக மீன்கள் உள்ளன. ஆனால் அவை அளவுக்கு மீறி பிடிக்கப்பட்டிருக்கின்றன.” 1989-ல் மீன்பிடிப்பு உச்சநிலையை அடைந்த பின்பு, உலகத்தில் பிடிக்கப்படும் கடல் மீன் அளவு குறைந்துகொண்டே வருகிறது. காரணம் தெளிவாக இருக்கிறது: “போதிய மீன்வளத்தை காத்துக்கொள்ள முடியாதபடி வெகு சில மீன்களே கடலில் மீதியாக விடப்படுகின்றன. மீன் உற்பத்திக்குத் தேவையான மீனை மீனவர்கள் பிடித்து விடுகின்றனர்.” ஐக்கிய நாட்டு சங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்படி, உலகத்திலுள்ள 17 பிரதான மீன்பிடிப்பு துறைகளில் 13 பிரச்சினையில் இருக்கின்றன—அவற்றில் 4 வணிக மீன்பிடிப்பு செய்யமுடியாதபடி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டிருக்கின்றன. உயர்தொழில்நுட்பம்—சோனார் மற்றும் செயற்கைக் கோள் செய்தித்தொடர்பு—ஆகியவை மீனவர் வெகு தொலைவிலுள்ள மீன்களையும் கண்டுபிடித்து மீன்வளம் அதிகமாயுள்ள இடங்களுக்கு வரும்படி உதவியிருக்கின்றன. பிரமாண்டமான மீன்பிடிக்கும் கப்பல்கள் கால் பந்தாட்ட களத்தைவிட பெரிய வலைகளைக் கொண்டு பெருவாரியான மீன்களை அள்ளிக்கொள்கின்றன. வீண் செய்யப்படுவதற்குக் காரணம் அரசாங்கங்களே என்று தி எக்கானமிஸ்ட் சொல்கிறது, ஏனெனில் உலகின் மீன்பிடிப்பில் 90 சதவீதம் சில தேசங்களில் கரையை விட்டு கப்பல்துறை சார்ந்த 370 கிலோமீட்டருக்குள்ளேயே, அவர்களுக்குரியதாக உரிமைபாராட்டும் கடல் பிராந்தியத்திற்குள்ளேயே கிடைத்து விடுகிறது. அரசாங்கங்கள் மற்ற தேசங்களின் படகுகளைத் தடைசெய்து விட்டு தங்கள் தேசத்து படகுகள் அதிகரிக்க அனுமதிக்கின்றனர், பொது நிதிகள் கொடுத்தும்கூட உதவுகின்றன.

சிறந்த தூங்கும் பழக்கங்கள்

“தூக்கமின்மை அதிக வேலைகளை செய்துமுடிக்க உதவுவதாய் அநேகருக்குத் தோன்றலாம். என்றாலும், மணிக்கணக்கில் உடலுக்குத் தூக்கத்தைத் தர மறுப்பது இறுதியில் வேலைகளை அதிகம் செய்யமுடியாதபடி ஆக்கிவிடும்” என்று பிரேஸிய பத்திரிகை எக்ஸமே கூறுகிறது. நரம்பியல் மருத்துவர் ரூபன்ஸ் ரேமான் விளக்குகிறார்: “ஒரு நபர் தன் உடலுக்குக் கொடுக்கத் தவறிய மணிக்கணக்கான தூக்கத்தை உடல் மறந்துபோகாது. அதை மறக்காமல் வைத்திருந்து, திடீரென்று ஞாபக மறதி, கவனம் செலுத்துவதில் கஷ்டங்கள், மந்தமான சிந்திக்கும் திறன் போன்ற அதற்கான செலவை செலுத்தும்படி உடல் நிர்ப்பந்தப்படுத்தும்.” அளவுக்கு மேற்பட்ட கவலைகளைத் தவிர்க்க, டாக்டர் ரேமான் சிபாரிசு செய்கிறார்: “வேலையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது அல்லது அவற்றைப் பற்றி யோசிப்பது போன்றவற்றை வேலை சமயத்தின்போது செய்யுங்கள்.” நன்கு தூங்கி இளைப்பாறுவதற்கு எக்ஸமே ஒழுங்கான உடற்பயிற்சி, மெல்லிசை, மங்கிய வெளிச்சம், நல்ல எண்ணங்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கிறது.

கத்தோலிக்க திருப்பலியைப் பகிர்ந்தளிக்க ஆல்டர் பெண்கள்

திருப்பலி பூசை நடத்தப்படும்போது குருக்களுக்கு உதவியாக பெண்களைப் பயன்படுத்துவது இதுவரை சில சர்ச் அதிகாரிகளால் பொறுத்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இரண்டாவது போப் ஜான் பால் என்பவரால் அங்கீகரிக்கப்பட்டு கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாட்டின் உலகமுழுவதுமுள்ள தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், திருப்பலி பூசையை பகிர்ந்தளிப்பதில் உதவ ஆல்டர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தெரிவைத் தனிப்பட்ட பிஷப்புகளுக்குத் தெய்வீக வணக்க சபையும், சாக்கிரமந்துகளின் ஒழுங்கும் கொடுத்திருக்கின்றன. கொரியரி டெல்லா செரா-வின்படி, வாடிகனின் பிரதிநிதி ஹோகன் நவாரோ இந்த அறிவிப்பை செய்கையில், “பெண்கள் இயக்கங்களின் லேசான நம்பிக்கைக்கும் இடமளிக்காதபடி,” சாதுர்யமாக, இந்தப் புதிய ஏற்பாடு எவ்விதத்திலும் பெண் பாதிரிகள் சம்பந்தமாக சர்ச் கொண்டுள்ள மனப்பான்மையை மாற்றுவதில்லை என்று தெளிவாக சொன்னார். அப்படியானால், ஆல்டர் பெண்களை சர்ச் ஏன் உபயோகிக்கிறது? ஃபிரான்கோ பெர்ரரோடி என்ற சமூக நிபுணர் கூறுகிறார்: “இது எனக்கு ஆச்சரியமூட்டுவதில்லை. பாதிரிகளாவதற்கு ஆட்களைக் கண்டுபிடிக்க சர்ச்சினால் முடியவில்லை என்றால், ஆல்டர் பையன்களாக இருப்பதற்கும் அதால் ஆட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.”

அலிகள் அடங்கிய ஒரு வழிபாட்டு மரபு

இந்தியாவில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட அலிகள் இருக்கின்றனர் என்று பம்பாயின் இண்டியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை செய்கிறது. இதில் 2 சதவீதத்தினர் மட்டுமே இந்நிலையில் பிறந்துள்ளனர். மற்றவர்கள் விதையகற்றப்பட்ட ஆண்கள். எக்ஸ்பிரஸ்-ன்படி இந்தியாவில் நல்ல-தோற்றமுள்ள பையன்கள் தவறான வழியில் தூண்டப்பட்டோ கடத்திச் செல்லப்பட்டோ அலிகளை உருவாக்கும் மையம் ஒன்றுக்குக் கொண்டுபோகப்படுகின்றனர். அங்கு பையன்களுக்குச் சமயச் சடங்கு செய்யப்படுகிறது, “இராஜரீக சிகிச்சை” அதில் உட்பட்டிருக்கிறது, பின்பு விதைகள் நீக்கப்படுவதில் அது முடிவடைகிறது. அதற்குப் பின்பு புதிதாக அலியாக மாற்றப்பட்டவர், வயதில் பெரியவராயிருக்கும் அலியால் தத்து எடுத்துக்கொள்ளப்படுகிறார், “தாய்-மகள்” என்ற உறவை இது ஏற்படுத்துகிறது. இந்த அலிகளுக்குப் பெண்களின் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. அதற்குப் பின்பு அவர்கள் பெண்களைப் போல் உடுத்திக்கொள்ளவும் பழகவும் செய்கின்றனர். பெரும்பாலான அலிகள் தலைமைத் தாங்கி நடத்தும் ஒரு தெய்வத்தையுடைய வழிபாட்டு மரபு முறைக்குள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு வருடாந்தர பண்டிகையின்போது அலிகள் கோவில்களில் தெய்வீகமானவர்களாக பூஜிக்கப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றனர், இத்தகைய கோவில்கள் இந்தியா முழுவதும் அநேகம் இருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்