உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 4/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒப்பற்ற ஒரு கிரகம்
  • திருத்தமான செய்திகளுக்குத் தொலைக்காட்சியா செய்தித்தாளா?
  • பெற்றோர்/பிள்ளை உறவு?
  • அறுவை மருத்துவ பிரசவம் அதிகமாகிறது
  • மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தைக் கொடுக்க முயற்சி
  • ஆசிரியர்களைப் பிரபலமாக்குவது எது?
  • கவனிக்கப்படாத பிள்ளைகள்
  • நம்முடைய குப்பை பேசுகிறது
  • எய்ட்ஸ் தடுப்பு ஊசி “லாபமற்றது”
  • பெற்றோரின் வழிநடத்துதல் தேவை
  • 62 வயதில் தாயானாள்
  • குப்பைக் குவியல்—அதில் நாம் புதைந்து விடுவோமா?
    விழித்தெழு!—1991
  • நல்ல கல்விக்குத் திறவுகோல்கள்
    விழித்தெழு!—1995
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • மக்கவைத்து—குப்பைக் குவியலுக்குத் தீர்வு காணுதல்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 4/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

ஒப்பற்ற ஒரு கிரகம்

மற்ற கிரகங்களில் உயிர் இருக்கக்கூடிய சாத்தியத்தைப்பற்றி விஞ்ஞானிகள் நீண்டகாலமாகவே யோசித்து வந்திருக்கின்றனர். பூமியில் உயிர் வாழ்வதை சாத்தியமாக்கும் அதே போன்ற நிலைமைகள் பிரபஞ்சத்திலுள்ள கோடிக்கணக்கான பால்வீதி மண்டலங்களில் இருக்கவேண்டும் என்பதாக ஊகிக்கப்பட்டுவந்தது. என்றபோதிலும், பிரெஞ்சு பத்திரிகை ல நோவெல் ஆப்சர்வேட்டர், “பூமியில் மனிதன் தோன்றுவதற்கு முன்பாக யதேச்சியாய் ஏற்பட்ட ஒத்த நிகழ்ச்சிகள் மிகப் பல அற்புதமாக நிகழ்ந்தன,” என்பது அதிகமதிகமாய் இப்பொழுது தெளிவாகி வருகிறது, மேலும் பிரபஞ்சத்தையும் பூமியையும் பற்றிய அண்மைக்கால கண்டுபிடிப்புகள், “படிப்படியாக ஏற்பட்ட அதே வளர்ச்சி வேறு இடங்களிலும் நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற ஏற்கெனவே மிகச் சிறியதாக இருந்த சாத்தியத்தைப் பேரளவாக குறைத்துவிட்டிருக்கிறது,” என்பதாக சொல்கின்றன. வேறொரு கிரகத்தில் கணிதப்பூர்வமாக எல்லா வகையிலும் ஒத்த நிலைமைகள் இருக்கமுடியாத தன்மையைக் குறித்து குறிப்புச் சொல்கையில், உயிர் குறைந்தபட்சம் ஒரு கிரகத்திலாவது இருக்கிறது என்பதைப் பற்றியதில் விஞ்ஞானிகள் உறுதியாக இருக்கிறார்கள்—அது நம்முடையது—என்பதாக பத்திரிகை குறிப்பிடுகிறது.

திருத்தமான செய்திகளுக்குத் தொலைக்காட்சியா செய்தித்தாளா?

ஆஸ்திரேலியாவில், நம்பக்கூடியத் தன்மையைத் தொலைக்காட்சி செய்திகள் இழந்துவருகையில் செய்தித்தாள்கள் அதைப் பெற்றுவருகின்றன. தி ஆஸ்ட்ரேலியன்-ல் பிரசுரமான ஒரு செய்தித்துறை ஆய்வின்படி, “தொலைக்காட்சி அறிக்கையைக் கவர்ச்சியாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் ஆக்குவதற்காக, எடுத்துக்கொண்ட பொருளின்பேரில் திருத்தமானத்தன்மை, நம்பத்தக்கத்தன்மை, பாரபட்சமின்மை ஆகியவற்றை வெகுவாக தியாகம்செய்துவிடுகிறது.” உதாரணமாக அதிக பரபரப்பான செய்தியாக்குவதற்காக பழைய கோப்பு டேப்புகளைக்கொண்டு ஒருசில டிவி செய்திகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆராயப்பட்ட 500 செய்தித்தொகுப்புகளில், கோப்புகளில் ஒருசில அடிகளை 260 செய்திகள் பயன்படுத்தியதை ஆய்வு கண்டுபிடித்தது. டிவி செய்தி அறிக்கைகள் கோப்பு டேப்புகளைப் பயன்படுத்தினால், அது பெற்றுக்கொள்ளப்பட்டது தெரிவிக்கப்பட வேண்டும் என்று மக்கள் பொதுவாக எதிர்பார்க்கின்றனர். அறிக்கை சொல்கிறது: “தொலைக்காட்சி ‘திருத்தமான மற்றும் நம்பத்தகுந்த செய்திகளுக்கு’ மிகச் சிறந்த சாதனம் என்பதாக நம்பிய ஆட்களின் எண்ணிக்கை 12-க்கும் அதிகமான சதவீத குறிப்புகளாக குறைந்துவிட்டது, 1986-ல் 53.7 சதவீதமாக இருந்தது” 1993-ல் “41.5 சதவீதமாக குறைந்துவிட்டது. . . . என ரே மார்கன் ஆய்வு மையத்தின் ஆய்வு காட்டுகிறது.”

பெற்றோர்/பிள்ளை உறவு?

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சகாக்களைப் போல நடத்தவேண்டுமா? சாவோ பாலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் லிஸாண்டிரி மரியா காஸ்டெல்லோ ப்ரான்கோ, பிரேஸிலியன் செய்தித்தாளான ஓ எஸ்டாடோ டி எஸ். பாலோ-வில் சொல்வதாவது: “பெற்றோர் ஒருபோதும் தங்கள் பிள்ளைகளுக்குச் சமமாயில்லை, இது கட்டாயமாக தெளிவாக்கப்பட வேண்டும். . . . அதிகாரத்துக்குரிய ஸ்தானம் காலியாக இருக்கையில், இளைஞன் கைவிடப்பட்டவனாக, ஓர் அனாதையாக ஆகிவிடுகிறான். ஒரு பிள்ளை எப்பொழுதும் தன்னுடைய பெற்றோர் தங்கள் பிள்ளைக்குக் கல்விபுகட்டும் பெரியவர்களின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆட்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.”

அறுவை மருத்துவ பிரசவம் அதிகமாகிறது

“பத்தாயிரம் பெண் நோய் மருத்துவர்கள் இத்தாலியைக் குற்றஞ்சாட்டுகின்றனர்: மிக அதிக அறுவை மருத்துவ பிரசவங்கள்,” என்பதாக ரோமின் செய்தித்தாள் இல் மெசாஜேரோ அறிவிக்கிறது. அறுவை மருத்துவத்தின் மூலமாக பிறப்புகளின் எண்ணிக்கைக்கு, ஐரோப்பாவில் இத்தாலி முதலிடத்தையும் உலகில் ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பிரேஸிலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது. 1980 முதற்கொண்டு, அறுவை மருத்துவ பிரசவங்கள் இத்தாலியில் இரண்டு மடங்காகிவிட்டிருக்கின்றன; இப்பொழுது ஏறக்குறைய 4-ல் 1 குழந்தை அறுவை மருத்துவத்தின் மூலமாக பிரசவிக்கப்படுகிறது. ஏன் இந்த அதிகரிப்பு? இல் மெசாஜேரோ-வின் படி, மருத்துவ காரணங்களைத் தவிர இரண்டு காரணங்கள் உள்ளன: பெண்கள் நோவோடுகூடிய பிரசவத்தைத் தவிர்க்க விரும்புகின்றனர், மருத்துவர்கள், நீதிமன்ற நடவடிக்கைக்கு அஞ்சி குறைந்த அபாயமுள்ள முறையைத் தெரிந்துகொள்கின்றனர். என்றபோதிலும், அறுவை மருத்துவ பிரசவம் பாதுகாப்பானது என்பதாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தபோதிலும், அது அடிக்கடி செய்யப்படுகிறது என்றும் எப்போதும் நல்ல காரணங்களுக்காக அது செய்யப்படுவதில்லை என்றும் அநேக மருத்துவர்கள் நினைக்கின்றனர். ரோமில், லா சாப்பியான்ஸா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்லோ சினோரலி இவ்வாறு சொன்னார்: “அறுவை மருத்துவ பிரசவமும் பிரசவ காலத்தில் ஏற்படக்கூடிய உயிரிழப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இருப்பதாக தெரியவில்லை.” போலாக்னோவில், எஸ். ஆர்சாலா மருத்துவமனையைச் சேர்ந்த லூசியானோ மாவிசெல்லி பின்வருமாறு குறிப்பிட்டார்: “அறுவை மருத்துவ பிரசவம் அதிக பாதுகாப்பானது என்ற நம்பிக்கை தகர்த்தெறியப்பட வேண்டும், ஏனென்றால் அது முற்றிலும் பொய்யானது.”

மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தைக் கொடுக்க முயற்சி

திருமணங்களின் போதும் சவ அடக்கங்களின்போதும், நல்ல அபிப்பிராயத்தைக் கொடுக்க ஒரு ஜப்பானிய மனிதனுக்குப் போதுமான உறவினர்கள் அல்லது நண்பர்கள் இல்லாவிட்டால் அவன் என்ன செய்ய வேண்டும்? பதில்: அவர்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டும். ஒரு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரே எண்ணிக்கையான விருந்தினரைப் பொதுவாக அழைக்க முயற்சிசெய்வர். எண்ணிக்கையில் இரு சாராரும் சமமாக இல்லையென்றால் அல்லது தகுதியான அபிப்பிராயத்தைக் கொடுக்க எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால், “பயனுள்ள ஆட்கள்,” என்ற நேர்ப்பொருளை உடைய பென்ரியா-வின் சேவைகளுக்காக இரகசியமாக அழைப்புக்கொடுக்கலாம். பென்ரியா உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பதிலாளாக சேவைசெய்வது உட்பட, எந்த விதமான வேலையையும் செய்வர். சவ அடக்க விஷயத்தில், காசு கொடுத்து அழுபவர்களாக அல்ல ஆனால் பதிலாட்களாகவே அவர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகிறார்கள், உதாரணமாக மரித்துப்போனவரோடு வேலைசெய்த சகாக்கள் வரமாட்டார்கள் என்பதை அயலகத்தார் கண்டுபிடிக்காதபடி இருக்க இவ்விதமாகச் செய்யப்படுகிறது. ஒரு பென்ரியா கம்பெனியின் முதலாளி, தான் சென்றிருந்த, ஒரு கம்பெனியில் உயர் பதவியிலிருந்த ஒருவரின் சவ அடக்கத்துக்கு வந்திருந்த 100 பேரில் 60 பேர் பென்ரியாவாக இருந்தனர் என்று சொன்னதாக மேய்னிச்சி டேய்லி நியூஸ் அறிவிப்புசெய்திருந்தது. “அந்தக் குடும்பத்தார் 3 அல்லது 4 பென்ரியா கம்பெனிகளை அழைத்திருக்க வேண்டும்,” என்பதாக அவர் சொன்னார்.

ஆசிரியர்களைப் பிரபலமாக்குவது எது?

“அநேக பிள்ளைகள் அடிக்கடி, அதிகமதிகமாக, பள்ளியைப் பற்றி புலம்பிக்கொண்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் பிடித்தமான ஒரு ஆசிரியரைக் கொண்டிருக்கின்றனர்,” என்பதாக ஜெர்மன் செய்தித்தாள் நஷாச்சி நோயி பிரஸி அறிவிப்பு செய்கிறது. ஆம், 91 சதவீத பெண் பிள்ளைகளும் 83 சதவீத பையன்களும் பிடித்தமான ஒரு ஆசிரியரைக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆசிரியரின் எந்தக் குணங்கள் அவருடைய மாணவர்களிடம் அவரைப் பிரபலமாக்குகிறது என்பதை 7 மற்றும் 16 வயதுகளுக்கிடையே உள்ள 2,080 மாணவர்களை வைத்து கண்டுபிடிக்க ஒரு ஆய்வு முற்பட்டது. “சிறிதளவே வீட்டுப்பாடம் கொடுக்கும் ஒரு ஆசிரியர் அவசியமாகவே பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்பதில்லை,” என்பது அநேகருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆசிரியர் பாரபட்சமில்லாதவராக, நகைச்சுவையுணர்வைக் கொண்டவராக, பாடங்களை அதிக சுவாரசியமாக ஆக்குபவராக இருப்பது அதைவிட அதிக முக்கியமானது, மேலுமாக, காரியங்களை நன்றாக விளக்க முடிகிறவராக, அமைதியாக இருந்து, புரிந்துகொள்ளுதலைக் காண்பிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் போற்றுகின்றனர்.

கவனிக்கப்படாத பிள்ளைகள்

பெற்றோர் வேலைக்குச் சென்றிருக்கையில் அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கையில் அதிகமதிகமான ஆஸ்திரேலிய பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளைக் கவனிப்பார் இல்லாமல் வீட்டில் தனியாக விட்டுச் செல்கின்றனர். கவலைக்குரிய இந்தப் போக்கு, பிள்ளைகளுக்கான தேசிய நேரடி தொலைபேசி இணைப்பு நிறுவப்பட்டது முதற்கொண்டு வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. கடுந்துயரத்திலிருக்கும் இளைஞரிடமிருந்து வாரத்துக்கு சுமார் 35,000 அழைப்புகளை இது பெற்றுக்கொள்கிறது. சிட்னியில் வெளியாகும் தி ஸண்டே டெலிகிராப்-ன் பிரகாரம், உதவி தொடர்பின் இயக்குநர் சொல்கிறார்: “வரிசையாக உச்ச அளவு பிரச்சினைகளிலுள்ள பிள்ளைகளை—உணவோ எந்த வகையான பெற்றோரின் கவனமோ இல்லாமல் தனிமையாக விட்டுச்செல்லப்படும் பிள்ளைகளை—நாங்கள் ஒரே சீராக வரிசையாக கொண்டிருக்கிறோம்.” செய்தித்தாள் மேலுமாகச் சொன்னதாவது: “நாம் அறிந்திருக்கிறபடி [இது] நவீன குடும்ப வாழ்க்கையின்மீது ஒரு குற்றச்சாட்டாகும்.” உண்மையில் இந்தப் பிள்ளைகளில் சிலர் சிறு குழந்தைகளைக் காட்டிலும் சற்று பெரியவர்களாக இருக்கின்றனர், அவசர எண்ணோடு தொடர்புகொண்ட, மிரண்டுபோயிருந்த ஒரு அழைப்பாளர் நான்கு வயது சிறுமி ஆவாள்.

நம்முடைய குப்பை பேசுகிறது

நம்முடைய குப்பை நம்மைப் பற்றி என்ன சொல்கிறது? எப்படிப்பட்ட மனித நடத்தை மாதிரியைப் பின்பற்றுகிறோம் என்பதை அது நமக்குச் சொல்கிறது. நாம் என்ன உட்கொள்கிறோம், என்ன வீணாக்குகிறோம் என்பதைக் குப்பை வெளிப்படுத்துகிறது. “சாதாரணமான ஒழுங்குதவறாத வாழ்க்கையை நடத்துபவர்கள் குறைவான அளவே வீணாக்குகின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கவும், வாங்கியதை உட்கொள்ளவும் செய்கின்றனர்,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் சொன்னது. ஏதோவொன்று குறைவுபடுகையில், “மக்கள், இயல்புக்கு மாறாக அது ஏராளமாக கிடைக்கும் போது செய்வதைவிட அதிகமாக வீணாக்குகின்றனர்,” என்று ஸ்டார் மேலுமாகச் சொன்னது ஆச்சரியமாயிருக்கிறது. இது ஏன் அப்படி? மக்கள் பதுக்கி வைக்கின்றனர். அவர்கள் தேவைக்கு மேலாக வாங்கி பின்னர் உபயோகிக்காதவற்றை தூக்கியெறிகின்றனர். சூடான காரச் சோமாசிகள்—அதிகமான சூடான காரச் சோமாசிகள்—ஈரமான குப்பைகளில் காணப்படும் அதிக பொதுவான உணவுபொருட்களாக இருக்கின்றன. பேப்பர், ஏராளமான பேப்பர், குறிப்பாக செய்தித்தாள் அச்சிடுவதற்கானவை தாழ்வான நிலப்பகுதிகளில் காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் சகாப்தம் நம்முடைய காய்ந்துபோன குப்பையோடு குறைவாக அல்ல, அதிகமான பேப்பரையே கூட்டியிருக்கிறது. நம்முடைய குப்பையின் அனைத்தையும் உள்ளிட்ட செய்தியானது, நாம் ஊதாரித்தனமான ஒரு சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே.

எய்ட்ஸ் தடுப்பு ஊசி “லாபமற்றது”

எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்துகளுக்குச் சாதகமாக ஒரு எய்ட்ஸ் தடுப்பூசிக்கான ஆய்வைப் பொருளாதார காரணங்களுக்காக சில மருந்தக ஆய்வுக்கூடங்கள் கைவிட்டு விட்டிருக்கின்றன என்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இயக்குநர் டாக்டர் பிஜோ தெரிவித்தார். பயனுள்ள எய்ட்ஸ் தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், இலாபத்துக்கே இடமில்லாதபடி அந்தப் பொருளைப் பொதுமக்களுக்கு கொடுத்துவிடும்படி அரசாங்கத்திடமிருந்து வரும் அழுத்தம் அவற்றை வற்புறுத்தும் என்பதாக ஆய்வுக்கூடங்கள் பயப்படுகின்றன என அறிவிக்கப்பட்டது.

பெற்றோரின் வழிநடத்துதல் தேவை

கம்ப்யூட்டர்கள் வழியாக பேச்சுத்தொடர்பு கொள்ளும்போது, பிள்ளைகள் அடிக்கடி பால் சம்பந்தமான சாடையான குறிப்புகள் நிறைந்த பேச்சு அல்லது நேரடியாக தகாவுறவு கொள்ள விருப்பம் தெரிவிக்கும் செய்திகளைப் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் உடை மாறி அணிபவர்கள் மற்றும் ஒத்தப்பாலினத்தவரோடு தொடர்புகொள்ள முடிகிறது. அணுகுண்டை செய்வது எவ்வாறு, கடன் அட்டை எண்களைத் திருடுவது எவ்வாறு, மற்றும் அனுமதியின்றி மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்குள் நுழைவது எவ்வாறு மற்றும் குற்றச்செயல்களைப் புரிவது எவ்வாறு என்பதையெல்லாம் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். ஒருசில கம்ப்யூட்டர் விளையாட்டுகள் பிள்ளைகளை நிஜத்திலிருந்து வரையறையின்றி விலகிக்கொள்ளும்படியாக கவர்ச்சிக்கின்றன, அநேகர் அவற்றுக்கு அடிமையாகிவிடுகின்றனர். சிலர், “அந்த அதிக மலைப்பூட்டும் வேலையில்: மதிப்பீடுகளைக் கற்பிப்பதில் பரிகாரம் காணமுடியும்,” என்பதாக சொல்கின்றனர் என்று தி வாஷிங்டன் போஸ்ட் நேஷனல் வீக்லி எடிஷன் குறிப்பிடுகிறது.

62 வயதில் தாயானாள்

ஒரு இத்தாலிய பெண்மணி 62 வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயும், 3 கிலோகிராமும் 270 கிராமும் எடையுள்ள சேயும் சுகமாக இருக்கின்றனர். மகிழ்ச்சியான இந்தச் சம்பவத்தையொட்டி வாழ்த்துக்களோடுகூட, ஒழுக்கவியல் துறையில் இது ஒரு அமளியையும் எழுப்பிற்று. ஏன்? அந்தத் தாய் செயற்கை முறையில் விந்து ஏற்றப்பட்டதன் மூலம் கர்ப்பமானாள். “இந்தச் சம்பவம் வீண்குழப்பத்தை உண்டுபண்ணுமென்பது எனக்குத் தெரியும், ஆனால் அது அளவு மீறிய நடவடிக்கையாக கருதப்படவேண்டும்,” என்பதாக பிரசவத்தில் உதவிசெய்த பெண் நோய் மருத்துவர் பேராசிரியர் செரினோ அன்டிநோரி குறிப்பிட்டார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்