உலகின் மிகப் பெரிய முந்திரி மரம்
பிரேஸிலிலுள்ள விழித்தெழு! நிருபர்
உலகின் மிகப் பெரிய மரமா? கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட் ரெக்காட்ஸ் 1994-ன் பிரகாரம், அது ஒருவேளை மிகப் பெரியதாக இருக்கலாம். ரியோ கிராண்டி டோ நார்டியின் கரைக்கு அருகில் அமைந்துள்ள, இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள முந்திரி மரம் நிச்சயமாகவே பிரேஸிலில் மிகப் பெரிய மரமாகும். ஆம், இந்தத் தனி ஒரு மரம் தற்போது நகரின் ஒரு பெரிய கட்டடத்தை உள்ளடக்கும் இடத்தை—சராசரி அளவுள்ள 70 முந்திரி மரங்களுக்கு சமமான இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது!
முந்திரி மரம் பொதுவாக அளவில் சிறிய புதர்ச்செடியிலிருந்து உயரத்தில் சுமார் 20 மீட்டர் அளவு வரையாக இருக்கும் இலையுதிரா மரமாகும். முந்திரி மரத்தின் சிறிய மலர்கள் அதனுடைய பெரிய தோல்போன்ற தோற்றமுள்ள இலைகளுக்கு எதிர்மாறாக இருக்கின்றன. சாப்பிடக்கூடிய அதன் விதையே சுவையான முந்திரிப் பருப்பாகும், இது முந்திரிப் பழம் என்பதாக அழைக்கப்படும் பேரிக்காய் வடிவத்தில் பலமாக அமுக்கி வைக்கப்பட்டது போல தோற்றமளிக்கிறது. முந்திரி மரம் ஒரு விஷக் கொடியோடு சம்பந்தப்பட்டிருப்பது விநோதமாக இருக்கிறது, மேலும் அதைக் கையாளுகிறவர்கள் அதிக கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பருப்பு இரண்டு ஓடுகளைக் கொண்டிருக்கிறது, இந்த ஓடுகளுக்கிடையில் உள்ள எண்ணெய், சருமத்தில் கொப்புளங்களை உண்டுபண்ணக்கூடும். வறுத்தெடுக்கையில் பருப்பின் விஷத்தன்மையுள்ள பண்புகள் நீக்கப்பட்டுவிடுவதற்காக நன்றி தெரிவிக்கப்பட வேண்டும்.
சிறு நீரகம் வடிவிலுள்ள பருப்பு பழத்துக்கு வெளியே வளருவது விசித்திரமாக உள்ளது, அதன் படைப்பாளர் பருப்பை மறந்துவிட்டு அதற்குப் பின்பாக அதை ஒட்டவைத்தது போல அது இருக்கிறது. முந்திரிப் பழம் பருப்பைத் தாங்கியிருக்கிறது. ஆகவே, சிலர் பருப்பை மரத்தின் உண்மையான பழம் என்பதாக அழைக்கின்றனர். எப்படியிருந்தாலும், நீங்கள் அடுத்த முறை முந்திரிப் பருப்பைச் சாப்பிடுகையில்—உலகின் மிகப் பெரிய முந்திரி மரத்தின் விளைச்சலை நீங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!