உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 11/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • அஸ்தெக்குகளின்—அசரவைக்கும் எதிர்நீச்சல்
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 11/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

மாதவிடாய் முடிவுறும் பருவம் “மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்” (பிப்ரவரி 22, 1995) என்ற தொடர்கட்டுரைக்காக எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு 43 வயதாகிறது, என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் திருப்திகரமான பதில்களை அளித்தீர்கள். என்னோடு வேலை செய்யும் இரண்டு பெண்கள் பிரதிகள் வேண்டுமென்று கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு என்னுடைய சொந்தப் பிரதியைத்தான் கொடுக்கவேண்டும். எங்களுடைய சபையில் அவை தீர்ந்துபோய்விட்டன!

எம். ஹெச். எஸ்., பிரேஸில்

என்னுடைய அம்மாவுக்கு என்ன மாதிரியான மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள என் மனதையும் இருதயத்தையும் உங்களுடைய கட்டுரைகள் திறந்திருக்கின்றன. அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் இந்த மாற்றத்தை நான் தொடர்ந்து புரிந்துகொண்டு அதிகம் உதவிசெய்யமுடியும் என்று நம்புகிறேன்.

ஏ. கே., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு 47 வயதாகிறது. விழித்தெழு!-வின் அந்தப் பிரதியைப் பெற்றதுவரை, டாக்டர்களுடைய ஆலோசனையைப் பெற்றபின்பும் இந்த விஷயத்தை நான் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இந்த மாற்றங்களெல்லாம் இயற்கையானவைதான் என்று புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். பிரச்சினைகளை சமாளிக்க நான் இப்போது தயாராக இருக்கிறேன்.

இ. எம்., சியர்ரா லியோன்

இந்த விஷயத்தின் பேரில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மூன்று-மணி நேர கருத்தரங்குக்குப் போயிருந்தேன். இது இரண்டு பெரிய மருத்துவமனைகளின் கல்வித்துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சி மிகவும் அதிக தகவல்களை அளித்தது. ஆனால், அந்தக் கருத்தரங்கில் மூன்று மணி நேரத்தில் கற்றுக்கொண்டதைவிட, இந்த விழித்தெழு!-வை வாசிப்பதன்மூலம் 30 நிமிடங்களில் அதிகத்தைக் கற்றுக்கொண்டேன்.

ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்

கட்டுரைகள் காணாமல் போய்விட்டனவா? நான் 11 வயது நிறைந்த பெண். “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடர்கட்டுரைகளை வெளியிடுவதை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள் என்பதை நான் கவனித்தேன். ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அந்தப் பகுதியை நான் உண்மையிலேயே வாசித்து மகிழ்ந்ததுண்டு. அவற்றில் சில கேள்விகள் எனக்குப் பொருந்தின, ஆகவே அவற்றை வாசிப்பது எனக்கு இஷ்டமாக இருந்தது! விழித்தெழு! எங்கள் கைக்குக் கிடைத்ததும் நான் முதன்முதலில் தேடுவது இதுவாகவே இருந்தது. மற்ற பிள்ளைகளும் இப்படித்தான் உணருகிறார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் பகுதியை நீங்கள் எதிர்காலத்தில் பிரசுரிக்கப் போகிறீர்களா?

இ. கே., ஐக்கிய மாகாணங்கள்

“இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகள் மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பிரசுரிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதியிட்ட இதழில் இது தோன்றும். இந்தத் தொடர்கட்டுரை 1982-ல் தொடங்கியமையால், 300-க்கும் அதிகமான கட்டுரைகள் இந்தத் தொடரில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பழைய கட்டுரைகளில் சிலவற்றைப் பார்க்கும்படி எங்களுடைய இளம் வாசகர்களுக்கு நாங்கள் உற்சாகமளிக்கிறோம். இருப்பினும், இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளின்பேரில் நாங்கள் தொடர்ந்து அக்கறை காட்டுவோம் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்.—ED.

கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை “மெக்ஸிகோவில் கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணை—அது எப்படி நேரிட்டது?” (அக்டோபர் 8, 1994) என்ற உங்களுடைய கட்டுரையில், “அஸ்டெக்குகளின் ராஜாவாகிய நெட்சாயுவால்காயாட்டில்” பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இருப்பினும் நெட்சாயுவால்காயாட்டில் அஸ்டெக்குகளின் ராஜாவாக இல்லாமல் சீச்சமெக்கின் ராஜாவாகவே இருந்தார்.

இ. ஆர். சி. எல்., மெக்ஸிகோ

நெட்சாயுவால்காயாட்டில் அஸ்டெக்கை அல்ல, ஆனால் சீச்சமெக்கைச் சேர்ந்தவராக இருந்தார். இருப்பினும் ஆர்வமூட்டும் வகையில், “நியெவா என்ஸிக்ளோப்பேடியா குல்ச்சூரால் IEPSA” போன்ற சில ஆராய்ச்சி நூல்கள் இவரை “அஸ்டெக்குகளின் ராஜா” என்பதாகவே குறிப்பிடுகின்றன. “இஸ்டோர்யா தெ மெஹிக்கோ” என்ற புத்தகம் விளக்குகிறபடி, சீச்சமெக் மக்களை ஏற்கெனவே ஆதிக்கம் செய்துவந்த நெட்சாயுவால்காயாட்டில் “அஸ்டெக்கோடு கூட்டு சேர்ந்து” ஆட்சி செய்தார்.—ED.

“சீரழிந்து திருந்திய” இளைஞர்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் வாழ்க்கையை எப்படி நான் சரிசெய்து கொள்ளமுடியும்?” (ஜனவரி 8, 1995) என்ற கட்டுரையை வாசித்த பின் நான் பெற்ற ஆவிக்குரிய எழுச்சியைப்பற்றி உங்களிடம் சொல்ல ஆரம்பிக்கக்கூட என்னால் முடியவில்லை. யெகோவாவிடம் ஜெபம் செய்து கடந்த காலத்தில் நான் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பதற்கான தைரியத்தை இது எனக்குக் கொடுத்தது. இந்தக் கட்டுரையை வாசித்ததற்கு முன், இந்தப் பாவங்களை நினைத்து இரவும் பகலும் என் இருதயம் துயரப்பட்டது. பல ராத்திரிகள் நான் படுக்கையில் படுத்து தற்கொலை மட்டுமே இதற்குப் பரிகாரம் என்று நினைப்பேன். யெகோவாவின் நியமங்கள் நம்முடைய பலனுக்காகத்தான் இருக்கின்றன என்று இப்போது தெரிந்துகொண்டேன். மேலும் என்னுடைய கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வேன்.

க்யூ. பி., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு வாலிபனாக, நான் யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டு வெளியே சென்றேன். நான் திரும்பவும் வந்து இப்போது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிற போதிலும், யெகோவா என்னை ஒருபோதும் முழுமையாக மன்னிக்கமாட்டார் என்று சிலசமயங்களில் உணர்ந்தேன். நான் தவறாக நினைத்திருந்திருக்கிறேன் என்று இப்போது எனக்குத் தெரிகிறது; எனது மனதில் இருந்த ஆழமான, கவலைதரும் சந்தேக உணர்வு கடைசியில் தணிந்தது.

ஆர். டி., ட்ரினிடாட்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்