உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • ஓரினச்சேர்க்கையை நியாயப்படுத்த முடியுமா?
    விழித்தெழு!—2012
  • இவ்வுணர்ச்சிகளை எவ்வாறு நான் போக்க முடியும்?
    விழித்தெழு!—1995
  • ஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் சொல்வதை நான் எப்படி விளக்குவேன்?
    விழித்தெழு!—2011
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

காணாமல்போகும் பிள்ளைகள் “காணாமல்போகும் பிள்ளைகள்—இத்துயரம் எப்போது முடியும்?” (பிப்ரவரி 8, 1995) என்ற தொடர் கட்டுரைகளை வாசித்து முடித்ததும் என் முகத்தில் கண்ணீர் வடிந்தது. அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்த அனுபவங்களில் சில என்னுடையதைப் போலவே இருந்தன. சகிப்பதற்கான பலத்தைக் கொடுத்தமைக்காக யெகோவாவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவருடைய வார்த்தையின் மூலம், இனிமேலும் மக்கள் இத்தகைய துன்பங்களை அனுபவிக்காத பரதீஸுக்கான நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன்.

டி. ஓ., பிரேஸில்

ஜப்பானிய சிறைக்கைதி “என் தந்தை ‘அணுகுண்டு தாக்குதலால் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்’” (அக்டோபர் 8, 1994) என்ற கட்டுரையை வாசித்து நான் உற்சாகம்பெற்றேன். நான் சமீபத்தில் ஒரு கிறிஸ்தவளாக முழுக்காட்டப்பட்டேன். சோதனையின்கீழ் என்னுடைய உத்தமத்தன்மையை காத்துக்கொள்வேனோ என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். சகோதரர் காட்ஸுயோ மியூராவின் பாறைபோன்ற விசுவாசத்தைப்பற்றி வாசித்தபோது என் உள்ளத்திலிருந்து உறுதியான உணர்ச்சிகள் மேலெழும்பின. என்னுடைய சொந்த விசுவாசத்தில் குறைவுபடுவது எது—யெகோவா தேவனை எனது நம்பிக்கையின் ஊற்றுமூலமாக்கிக்கொள்ள வேண்டும்—என்பதை உணர அது உதவிற்று.

கே. டி., ஜப்பான்

மரபியல் பள்ளியில் நாங்கள் மரபியல் குறியீட்டைப்பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். ஆகவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு “மனித மரபியல்—உங்களை ‘உங்களாக்குவது’ எது” (மார்ச் 22, 1995) என்ற பொருளின்பேரில் வெளிவந்த பத்திரிகையை என்னுடைய பயிற்சிப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டேன். என்னுடைய அறிவியல் ஆசிரியை அந்த கட்டுரையை என்னோடு கலந்து ஆராய்ந்தார்கள். அவர் ஒரு உயிரியல் வல்லுநராக இருந்தாலும், பல வருடங்களாக DNA சம்பந்தமாக படித்திருந்தாலும், இந்தக் கட்டுரையில் வெளிப்படும் அறிவின் ஆழத்தால் கவரப்பட்டதாக அவர் என்னிடம் கூறினார்.

பி. என்., இத்தாலி

சிக்கலான ஒரு விஷயம் எப்படி புரிந்துகொள்ள முடிகிற ரீதியில் விளக்கப்படலாம் என்பதை அந்தக் கட்டுரைகள் காண்பித்தன. உயிரியல் வகுப்பில் நான் படிக்கும் பாகங்களை நன்கு புரிந்துகொள்ள அது உதவிற்று. இருந்தபோதிலும், கட்டுரையிலுள்ள மேற்கோள்களை என்னால் உபயோகிக்க முடிவதில்லை; காரணம் அதில் ஆசிரியர், வெளியிடுவோர் போன்ற நோக்கீட்டுத் தகவல்களை நீங்கள் கொடுப்பதில்லை.

எம். ஜி., ஜெர்மனி

இடம் பற்றாக்குறையின் காரணமாக, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பத்திரிகைகளில் செய்வதுபோல நாங்கள் வழக்கமாக உலகப்பிரகாரமான நோக்கீடுகளின் அட்டவணையை வெளியிடுவதில்லை. “விழித்தெழு!” வல்லுநர்களுக்காக அல்ல, ஆனால் சாதாரண பொதுமக்களுக்காக எழுதப்படுவதால், அத்தகைய துணைநூற்பட்டியல் ஒருசில வாசகர்களுக்கே அக்கறையுடையதாய் இருக்கும் என்று நினைக்கிறோம்.—ED.

ஒத்த பாலின புணர்ச்சி நான் ஒரு உதவி ஊழியனாகவும் பயனியராகவும், அதாவது பிரசங்க வேலையை முழு நேரம் செய்பவனாகவும் சேவை செய்கிறேன். ஒத்த பாலின புணர்ச்சியின் பேரிலான “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகள் எனக்காகவே எழுதப்பட்டவையாகத் தோன்றுகின்றன! (பிப்ரவரி 8, பிப்ரவரி 22, மற்றும் மார்ச் 22, 1995) என்னுடைய பருவ வயதின் துவக்கத்திலும் மத்திபத்திலும், நான் ஒத்த பாலின புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் நிறுத்திவிட்டேன், ஆனாலும் அதிலிருந்து இந்த உணர்ச்சிகளுக்கு எதிராக போராடுவதை கடினமாகக் கண்டிருக்கிறேன். எனினும், இந்தக் கட்டுரைகளைப் படித்தப்பின், இறுதியில் நான் என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறேன். ஆகவே தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதற்கு நான் உதவியைப் பெற்றுக்கொண்டேன்!

பெயர் வெளியிடப்படவில்லை, டென்மார்க்

நான் பருவவயதை அடைந்ததிலிருந்தே எனக்கு ஒத்த பாலின புணர்ச்சிக்கான உணர்ச்சிகள் வந்திருக்கின்றன. நான் ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன், ஆகவே இந்த உணர்ச்சிகள் என்னை உண்மையிலேயே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. நான் அவ்வளவு வெட்கப்பட்டதாலும் குழப்பமடைந்ததாலும், யாரிடமும் மனம்திறந்து சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை, என்னுடைய சொந்த பெற்றோர்களிடமும்கூட சொல்லவில்லை. இப்பொழுது அழகான ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன், ஆனாலும் இன்னும் அவ்வப்போது இந்தத் தவறான ஆசைகள் எனக்கு வருகின்றன. கடைசியில், என்னுடைய ரகசியத்தை என் மனைவியிடம் சொன்னேன், சபை மூப்பர்களிடம் சென்று பேசும்படி அவள் எனக்கு உற்சாகம் கொடுத்தாள். அவர்கள் நன்கு புரிந்துகொள்ளுபவர்களாயும் ஆதரவளிப்பவர்களாயும் இருந்தனர். இந்த உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருக்கும் எவருக்கும் நான் ஏதாவது சொல்லவேண்டி இருந்தால், அது இதுவாகத்தான் இருக்கும்: இதை ஒரு ரகசியமாக வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் துணைவரிடம் சொல்லுங்கள், உங்கள் பெற்றோர்கள், ஒரு மூப்பர், அல்லது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நண்பனிடம் சொல்லுங்கள்—ஆனால் ரகசியமாக மட்டும் வைத்துவிடாதீர்கள்.

பெயர் வெளியிடப்படவில்லை, ஐக்கிய மாகாணங்கள்

குழந்தைப் பருவத்திலிருந்தே, நான் பாலினத் துர்ப்பிரயோகத்திற்கு பலியானேன். அன்போ பாசமோ எனக்கு ஒருபோதும் காண்பிக்கப்பட்டது கிடையாது. நான் ஒத்த பாலின புணர்ச்சி பழக்கத்தை உடையவனாய் இருந்தேன், ஆனால் ஒத்த பாலின புணர்ச்சி மனநிலைகள் கொண்டுவரும் வெட்கம், வேதனை, வருத்தம், ஏமாற்றங்கள் ஆகியவற்றை மட்டும் இளைஞர்கள் அறிந்திருந்தார்களேயானால், அவர்கள் அவற்றைவிட்டு விலகி ஓடுவார்கள். அநேகர் இந்த விஷயத்தைப்பற்றி பேசுவதைத் தவிர்க்கிறார்கள், ஆனால் நீங்களோ இதை தெளிவாக விளக்கியிருந்தீர்கள். இத்தகைய விஷயங்களை வெளியிடுவதற்காக உங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெயர் வெளியிடப்படவில்லை, பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்