உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிரிட்டிஷ் சர்ச் திருடுகள்
  • கனடாவில் அதிக கருக்கலைப்புகள்
  • எய்ட்ஸை உடைய குழந்தைகள்
  • வன்முறையான பெண்கள் அதிகரிக்கிறார்கள்
  • பாதிரிமாரும் திருமணமும்
  • “பொறுமையான கொலையாளிகள்”
  • பாலங்களிலிருந்து தற்கொலைகள்
  • போக்குவரவு-தொடர்பான சாவுகள்
  • பிள்ளைகள் புகைத்தல்
  • வயதானோருக்கு வாய் சார்ந்த சுத்தம்
  • அழியாமை விற்பனைக்கா?
  • மரபணு சிகிச்சை தாக்குதலில்
  • உங்களை “உங்களாக்குவது” எது
    விழித்தெழு!—1995
  • கட்டளைகள் எங்கிருந்து வந்தன?
    உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
  • ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்—டிஎன்ஏ
    விழித்தெழு!—2014
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/22 பக். 28-29

உலகை கவனித்தல்

பிரிட்டிஷ் சர்ச் திருடுகள்

“வழிபாட்டுக்குரிய இடங்கள் இனிமேலும் புனிதமானவையாகக் கருதப்படுகிறதில்லை,” என்று லண்டனின் தி ஸன்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள், பிஷப்புகளின் நாற்காலிகள், பித்தளையாலான சாய்வு மேசைகள், இடைக்காலத்து குவளைகள், ஞானஸ்நானத்திற்கு நீர் வைக்கும் பண்டைய கலங்கள் ஆகியவை இங்கிலாந்தின் சர்ச்சுகளிலிருந்து திருடப்பட்டு, தோட்டத்தின் அலங்காரப் பொருட்களாக விற்கப்படுகின்றன. கலைவேலைப்பாடுள்ள பொருட்கள் தேவைக்கேற்ப திருடப்படும், சட்டவிரோதமான இந்த வியாபாரம் சர்வதேசிய அளவிலானது. காணமற்போன வண்ணம்-தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல் ஒன்று டோக்கியோவிலுள்ள உணவகம் ஒன்றில் காணப்பட்டது. சர்ச்சுகளில் கிட்டத்தட்ட $70 லட்சம், வருடாந்தர நஷ்டமாக இருந்தது. தற்போது, சர்ச் சார்ந்த இடங்களை காவல் காப்பதற்காக, நுணுக்கமான கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டும், பாதுகாப்பு நிறுவனங்கள் பணியில் அமர்த்தப்பட்டும் வருகின்றன.

கனடாவில் அதிக கருக்கலைப்புகள்

கனடாவில் 1,04,403 கருக்கலைப்புகள் என்ற உயரளவு பதிவு ஏற்படுத்தப்பட்டது; இது கடந்த வருடத்தின்மேல் 2.3 சதவீத அதிகரிப்பாகும். தி டோரன்டோ ஸ்டார் சொல்லுகிறபடி, “உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 100 பிறப்புகளுக்கும் 26.9 கருக்கலைப்புகள் என்ற கணக்கில் அது இருக்கிறது.” ஏன் இந்த அதிகரிப்பு? அந்த நாட்டில் தனியார் கருக்கலைப்பு கிளினிக்குகளின் அதிகரிப்பை சிலர் இதற்குக் காரணமாக காண்பிக்கிறபோதிலும், கனடாவின் திட்டமிட்டு பெற்றோராகும் கூட்டிணைக் கழக (Planned Parenthood Federation of Canada) அதிகாரிகள், “கருக்கலைப்புகள் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட முதன்மையான காரணம்” என்பதாக பொருளாதார அழுத்தங்களைச் சுட்டிக்காண்பிக்கிறார்கள். “கருக்கலைப்பு செய்வதற்கான வழி எளிதாக இருப்பது, மக்கள் அதை அரசாங்க செலவில் பிறப்பு கட்டுப்பாட்டுக்கென பயன்படுத்துவதற்கு வழிநடத்துகிறது,” என்று உயிருக்கான ஒப்பந்தம் (Alliance for Life) என்ற உயிரை ஆதரிக்கும் குழு ஒன்றின் செயலாண்மை இயக்குநராகிய ஆனா டிஸிலீ கருதுகிறார்.

எய்ட்ஸை உடைய குழந்தைகள்

எய்ட்ஸை உடைய வெனிசுவேலா குழந்தைகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வீதத்தில் அதிகரித்து வருகிறது என்று காரகாஸின் எல் யூனிவெர்ஸால் அறிக்கை செய்கிறது. “முன்பு வருடாந்தரமாக இரண்டிலிருந்து ஆறுக்கு இடைப்பட்ட குழந்தைகள் எய்ட்ஸைக் கொண்டிருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது, ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும் இரண்டிலிருந்து ஆறு பேர் என அறிக்கை செய்யப்படுகிறது,” என்று ஒரு நிபுணர் விளக்குகிறார். நோய் தொற்றப்பட்டு, பின்னர் அந்த வைரஸை தங்கள் குழந்தைகளுக்குக் கடத்தும் தாய்மாரின் சதவீத எண்ணிக்கை தினசரி அளவில் அதிகரிக்கிறது. “உடல்நல அமைச்சகத்தால் கையாளப்படும் புள்ளிவிவரங்கள், உண்மையில் சம்பவிக்கும் உயரளவுகளில் ஒரு சிறிய பாகத்தையே பிரதிபலிக்கின்றன என்பதை நினைவில் வைப்பது முக்கியமானது,” என்று நிறைவுசெய்கிறது அந்த செய்தித்தாள் அறிக்கை.

வன்முறையான பெண்கள் அதிகரிக்கிறார்கள்

“பெண்கள் கடந்தகாலத்தைவிட அதிகப்படியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர்,” என்று ஒட்டாவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் ஆய்வாளர் டாம் கேபர் கூறுகிறார். “சார்ந்திருந்து செயல்படும் பாகத்தை வகிப்பதற்கு மாறாக, முன்னின்று செயல்படும் பெண்களாலேயே வன்முறை அதிக அளவில் செய்யப்படுகிறது,” என்பதாக தி க்ளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. “கெட்ட புத்தியுள்ள ஓர் ஆணின் கைப்பாவைகளாகச் சேவிப்பவர்களல்ல இவர்கள்.” வயதுவந்த பெண்களுக்கு எதிரான வன்முறையான-குற்றச்செயல் குற்றச்சாட்டுகள், 1983-ல் 6,370-லிருந்து 1993-ல் 14,706-ஆக உயர்ந்திருக்கின்றன. இருந்தாலும், பெரும்பாலான வன்முறையான குற்றச்செயல்கள் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. க்ளோப் சொல்லுகிறபடி, “1993-ல், வன்முறையான குற்றச்செயல்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட வயது வந்தவர்களில் 88.6 சதவீதத்தினரும் இளைஞர்களில் 76.3 சதவீதத்தினரும் ஆண்களே.”

பாதிரிமாரும் திருமணமும்

“கட்டாய மணத்துறவை முடிவுக்குக் கொண்டுவருவது, பாதிரிமாரின் குறைவைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்” என்று அதிகரிக்கும் எண்ணிக்கையான செல்வாக்குள்ள கத்தோலிக்கர்கள் வாதாடுவதாக ஆஸ்திரேலிய செய்தித்தாள் தி சிட்னி மார்னிங் ஹெரல்ட் அறிக்கை செய்தது. இளம் வாலிபர் குருத்துவத்தில் சேருவதைத் தடுக்கும் பிரதான தடங்கல் மணத்துறவு என்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினையை சிறப்பித்துக் காட்டும் விதத்தில், சில காரியங்களை வெளிப்படுத்தும் எண்ணிக்கைகளை ஹெரல்ட் அளித்தது. நியூ சௌத் வேல்ஸின் பிரதான குரு-பயிற்சி மையத்தில் 1955-லிருந்து 1965 வரையாகச் சேர்ந்தவர்களின் உச்ச சராசரி எண்ணிக்கை 60. ஆனால் 1988-க்கும் 1994-க்கும் இடையில், ஒரு வருடத்திற்கு ஒன்பது பேர் மட்டுமே சேர்ந்திருந்தார்கள். சிட்னியிலுள்ள மற்றொரு குரு-பயிற்சி கல்லூரியின் துணை இயக்குநர் குறிப்பிட்டது என்னவென்றால், அவருடைய கருத்தின்படி, மதக் குருமாரை திருமணம் செய்ய அனுமதிப்பது ஓர் “உடனடி தீர்வாக” நிரூபிக்கக்கூடுமே தவிர, ஆஸ்திரேலியாவின் அவசர தேவையாகிய பாதிரிமாரின் குறைபாட்டுக்கு ஒரு நெடுங்கால பரிகாரமாக அது இருக்காது.

“பொறுமையான கொலையாளிகள்”

64 நாடுகளில் நிலத்தில் வைக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கும் 11 கோடி கண்ணிவெடி அகற்றுதலைத் தொடங்குவதற்காக ஐக்கிய நாடுகள் $7 கோடியே 50 லட்ச தொகையை திரட்ட முயலுவதாக இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. ஒரு சிகரெட் பாக்கெட்டை விடவும் பெரிதாக இல்லாத, இராணுவத்திற்கெதிரான [antipersonnel (AP)] கண்ணிவெடி ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் $3 மட்டுமே செலவாகிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு கண்ணிவெடி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அதை நிலத்திலிருந்து அகற்றுவதற்கு $300-லிருந்து $1,000 வரை செலவாகிறது. அந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மற்றொரு பிரச்சினை தடை ஏற்படுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் சார்புரிமைப் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஏற்கெனவே இருக்கும் பத்து கோடிக்கும் அதிகமான AP கண்ணிவெடிகளுடன்கூட ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் புதியவை வைக்கப்படுகின்றன.” “ஒருபோதும் தவறாத பொறுமையான கொலையாளிகள்” என்பதாக கம்போடிய படைத்தலைவர் ஒருவரால் விவரிக்கப்பட்ட அவற்றை இந்த உலகிலிருந்து நீக்குவதற்கு பல பத்தாண்டுகள் செல்லும் என நிபுணர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.

பாலங்களிலிருந்து தற்கொலைகள்

சான் பிரான்ஸிஸ்கோவின் பிரபல கோல்டன் கேட் பாலம், 1937-ல் திறக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பாலத்திலிருந்து குதித்து ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் தற்கொலை செய்திருக்கின்றனர். “கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்து தன்னை கொல்லுவது, அதற்கே உரித்தான உணர்ச்சிவசப்பட்ட துணிச்சலை, ஒரு கவர்ச்சியை உடையதாய் இருக்கிறது. அங்கு மிகவும் அழகாக இருக்கிறது. அங்கோர் குறிப்பிட்ட கற்பனை உணர்வு உட்பட்டிருக்கிறது,” என்று தற்கொலை நிபுணர் ரிச்சர்ட் ஸைடன் சொன்னார். விவரமறிவிப்பதற்கு, அங்கு குதிப்பவர்களில் வெகு சிலரே தப்பிப்பிழைக்கின்றனர்; இதில் ஆச்சரியமொன்றுமில்லை ஏனென்றால், ஒரு மணிநேரத்திற்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் அவர்கள் தண்ணீரை மோதி, பெரும்பாலும் தங்கள் உள் உறுப்புகளைக் கிழிவுறச் செய்துவிடுகின்றனர். குதிக்கவேண்டாம் என்பதாக கேட்டுக்கொள்ளப்பட்ட 500 பேரைப் பற்றிய ஆய்வு, அவர்களில் 5 சதவீதத்திற்கு குறைவானவர்கள் பின்னர் தங்களைத்தாங்களே கொன்றுவிட்டதாகக் காண்பித்தது.

போக்குவரவு-தொடர்பான சாவுகள்

குடியிருக்கும் ஒவ்வொரு 1,00,000 பேருக்கும் 26 சாவுகள் என்ற வீதத்தில், போக்குவரவு-தொடர்பான மரணங்களின் எண்ணிக்கையில் தற்போது அர்ஜன்டினா உலகில் முதன்மையாக இருக்கிறதென அர்ஜன்டினா செய்தித்தாள் க்லாரின் சொல்லுகிறது. 1993-ல் அந்த நாட்டில் அப்பேர்ப்பட்ட 8,116 மரணங்கள் ஏற்பட்டன. 1994-ல் அந்த எண்ணிக்கை 9,120-ஆக உயர்ந்தது. ஆனால் 1995-ன் முதல் ஆறு மாதங்களின்போது, 5,000 போக்குவரவு-தொடர்பான மரணங்கள் ஏற்கெனவே சம்பவித்துவிட்டன. 1994-ல், சுமார் 25 சதவீத பலியாட்கள், பாதசாரிகளாக இருந்தார்கள். போன்ஸ் அயர்ஸ் மாகாணத்தில் மட்டும், போக்குவரவு-தொடர்பான மரணங்கள் 79 சதவீதம் அதிகரித்தன. வாகன ஓட்டுநர்கள் மற்ற வாகனங்களைக் கடந்து செல்கையில் சரியான கணிப்பு செய்ய தவறுவதன் காரணமாகவே பெரும் சதவீத விபத்துக்கள் ஏற்பட்டன.

பிள்ளைகள் புகைத்தல்

பிரிட்டனில் அதிகமான பிள்ளைகள் புகைப்பதாக 1993/94 அறிக்கை ஒன்று காண்பிக்கிறது. 11-லிருந்து 15 வயதுக்குட்பட்டவர்களில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரையாக அதிகரித்திருக்கிறது. அரசாங்க சுகாதார அதிகாரிகள் 1994-க்கு எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பானதாக இருந்ததென்று இன்டிப்பென்டன்ட் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. வயதுவந்தவர்கள் புகைத்தலில் வீழ்ச்சி இருந்திருக்கிறபோதிலும், பிரிட்டிஷ் ஆண்களில் சுமார் 29 சதவீதமானோரும் பெண்களில் 27 சதவீதமானோரும் இன்னும் புகைக்கிறார்கள். “பருவவயதுள்ளவர்களின் மனநிலைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் பாதிக்கப்படுவதற்கு முன்பு, வயதுவந்தவர்கள் புகைத்தலில் அதிகமாக கவனிக்கத்தக்க குறைப்பு அவசியப்படக்கூடும்,” என்று அந்த அறிக்கை முடிக்கிறது.

வயதானோருக்கு வாய் சார்ந்த சுத்தம்

“வாய் சார்ந்த சுத்தம் முதியோருக்கு, வாழ்வு அல்லது சாவு என்பதற்குரிய பிரச்சினையாக இருக்கலாம்,” என்று ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்லுகிறது. “வயதான மக்கள் வெறுமனே பல் துலக்குவதன் மூலமாக நுரையீரல் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கலாம்,” என்று ஜப்பானிய அறிவியலாளர்கள் முடிவாகக் கூறினர். வயதான 46 ஆட்களைப் பற்றிய ஆய்வு ஒன்றில், 21 பேர் அடங்கிய ஒரு தொகுதியினர் தினமும் மதிய உணவுக்குப் பின் தாதிமாரால் தங்கள் பற்கள் முழுமையாக துலக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறைகள் பற்களின் சுத்தத்திற்கான சோதனைகளும் அவர்களுக்குச் செய்யப்பட்டன. இந்த ஒழுங்கைப் பின்பற்றாத 25 பேரைவிட பத்து நாட்கள் குறைவாக, அந்த 21 பேருக்கும் காய்ச்சல் வந்திருந்ததாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணப்பட்டது. வாய் சார்ந்த பாக்டீரியா இல்லாததே மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு காரணமாகக் காட்டப்பட்டது. “எச்சில் அல்லது உணவு துணுக்குகள் தற்செயலாக நுரையீரலுக்குள் உள் இழுக்கப்படுகையில், அடிக்கடி நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது,” என்பதாக முந்தைய ஆய்வு ஒன்று இறுதியில் கூறியது.

அழியாமை விற்பனைக்கா?

“$35-க்கு அழியாமை உங்களுடையதாக இருக்கலாம்,” என்பதாக அ.ஐ.மா.-ன், ஆரிகானிலுள்ள யூஜினின் ரெஜிஸ்டர்-கார்ட் உரிமைபாராட்டுகிறது. அந்தச் செய்தித்தாள் சொல்கிறபடி, நுண்ணுயிரியல் ஆய்வாளர் ஜேம்ஸ் பிக்னல், உங்கள் DNA-வை “ஏதாவது வருங்கால நூற்றாண்டில், உங்கள் மரபில் தோன்றிய அன்பானவர் ஒருவர், உங்களுடைய நகலை உருவாக்குவதற்காக உயிரியல் சார்ந்த தகவலைப் பயன்படுத்தத்தக்கதாக” பாதுகாத்து வைக்க முன்வருகிறார். இரண்டு துண்டு தூய்மையான வலைத் துணியையும் ஒரு சிறிய கொள்கலத்தில் திரவத்தையும் உடைய DNA கிட் ஒன்றை டாக்டர் பிக்னல் விற்பனை செய்கிறார். “நீங்கள் அந்த வலைத் துணியை உங்கள் கன்னங்களின் உள்ளே உரசி, அந்தத் திரவத்தில் அந்த வலைத் துணியை திணித்து அதை என்னிடம் அனுப்பி விடுங்கள்,” என்கிறார் அவர். பின்னர் அவர் அந்த வலைத் துணியில் உரசப்பட்ட செல்களிலிருந்து DNA-வை பிரித்தெடுத்து, அந்த DNA-வை ஒரு வடிகட்டு தாளில் படிய வைக்கிறார். பின்னர் அந்தத் தாள் ஒரு குழாய்க்குள், உங்கள் விருப்பத்திற்கு இசைவாக காட்சியளிக்கும்படி உங்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய அலுமினிய பெட்டிக்குள் பத்திரமாக வைக்கப்படுகிறது. கார்ட் மேலுமாகச் சொல்லுகிறது: “இறந்தவர்களின் சாம்பலையும், முடிக் கொத்துகளையும், விரல் நகத் துண்டுகளையும் மக்கள் பத்திரப்படுத்துகிறார்கள். ஒரு பெட்டியில் DNA, பேரக் குழந்தைகளுக்கு கடத்துவதற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது என்று அவர் முடிவாகக் கூறுகிறார்.”

மரபணு சிகிச்சை தாக்குதலில்

ஆறு வருடங்களுக்கு முன்பு, மனிதரில் மரபணு சிகிச்சை முதலாவதாகத் தொடங்கியபோது, பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. தங்கள் நோயாளிகளுக்குள் சரிப்படுத்தக்கூடிய மரபணுக்களை உட்செலுத்துவதன் மூலம் பிறப்பில் பெற்ற மரபணு நோய்களை காலப்போக்கில் குணப்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் எதிர்பார்த்தனர். புற்றுநோய் செல்கள் போன்ற கேடு விளைவிக்கும் செல்கள் தங்களைத்தாங்களே அழித்துக்கொள்ளச் செய்யும் மரபணுக்குரிய பொருளை உட்செலுத்தலாம் என்றும் அவர்கள் நம்பினர். இருந்தாலும், அதிகப்படியான ஆர்வமிக்க ஆராய்ச்சிக்குப் பின்னர், அந்தச் சிகிச்சை தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இத்தனை பரபரப்பு இருந்தபோதிலும், மரபணு மருத்துவத்தால் உதவப்பட்ட ஒரு நோயாளியைப் பற்றிய பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையும் இல்லை.” நோயாளிகளின் பேரிலுள்ள அக்கறையால் அந்த ஆராய்ச்சி செய்யப்படுவதற்கு மாறாக வியாபார மற்றும் தனிப்பட்ட அக்கறைகளால் மிக விரைவில் செய்யப்படும்படி அவசரப்படுத்தப்படுவதாக பிரபல அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர். ஒரு பிரச்சினை என்னவென்றால், மரபணு மருத்துவத்தால் சிகிச்சை செய்யப்பட்ட செல்கள், அவற்றை அந்நியமானவையாக நோக்கும் உடலின் நோய்த்தடைகாப்பு அமைப்பால் தாக்கப்பட்டு அழிக்கப்படக்கூடும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்