எமது வாசகரிடமிருந்து
உலகை கவனித்தல் உங்கள் பத்திரிகைகள் அதிகமதிகமாக ஆர்வத்தைத் தூண்டுபவையாய் ஆகிவருகின்றன. எல்லா வகையான பொருட்களின்பேரிலும் அவை இருக்கின்றன—இன்றைய நிலவரங்கள், விளையாட்டு, அறிவியல் போன்றவை. “உலகை கவனித்தல்” மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. இந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு டிவி செய்தி இருக்குமானால் அது இன்னுமதிக ஆர்வத்திற்குரியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஆர். எஸ்., இத்தாலி
“உலகை கவனித்தல்” என்பதன்கீழ் உட்படுத்தப்படும் பொருள்களை நான் நிஜமாகவே போற்றுகிறேன். எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது, ஏப்ரல் 22, 1995 பிரதியில் இருந்தது. அந்தப் பொருள், “ஆசிரியர்களைப் பிரபலமாக்குவது எது?” சிறிதளவே வீட்டுப் பாடம் கொடுக்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பிடித்தமானவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, ஆனால் தயவுள்ளவர்களாக, அக்கறையுள்ளவர்களாக, பாரபட்சமில்லாதவர்களாக இருக்கும் ஆசிரியர்களையே அவர்கள் விரும்புகிறார்கள் என்று அந்தக் கட்டுரை சொன்னது. அதுவே உண்மை! பிரபலமாக இருப்பதற்கான முயற்சியில், பிரபலமாக இருக்கும் மாணவர்களுக்கு சலுகை காண்பிக்கும் ஆசிரியர்கள் பலருடன் எனக்கு எத்தனையோ அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் காலப்போக்கில், அப்படிப்பட்ட ஆசிரியர்கள் பிரபலமாக இருப்பதில்லை. மதிப்புள்ள இந்தத் தகவலுக்காக மீண்டும் நன்றி.
எல். கே., ஐக்கிய மாகாணங்கள்
பொய் முன்னறிவிப்புகள் “பொய் முன்னறிவிப்புகளா அல்லது உண்மை தீர்க்கதரிசனமா—வித்தியாசத்தை உங்களால் எப்படி அறியமுடியும்?” (ஜூன் 22, 1995) என்ற தொடர்கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. நான் 42 வருடங்களாக தினசரி பைபிளை வாசிக்கிறவளாக இருந்து, கடைசி நாட்களின் அடையாளத்தைப் பற்றிய தகவலைக் கிரகித்துக்கொள்ள முயன்றிருந்தபோதிலும், இந்தப் பொருளின் பேரில் நீங்கள் கொடுத்திருந்த தெளிவான சுருக்கத்தொகுப்பு உண்மையிலேயே எனக்கு உதவியது. இந்தப் பொருளை நினைவில் வைப்பதை நீங்கள் எளிதாக்கி இருக்கிறீர்கள். அது அருமையான ஆவிக்குரிய உணவு!
எம். பி., ஐக்கிய மாகாணங்கள்
திருடுதல் எனக்கு வயது 13; எனக்கு இருந்த பிரச்சினை திருடுதல். நான் பணத்தைத் திருடுவேன், அல்லது ஒரு கடைக்குப் போய் பபிள் கம் திருடுவேன். அதை நிறுத்தவேண்டும் என்று விரும்பினேன்; ஆனால் ஜூன் 22, 1995, விழித்தெழு! பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர் . . . திருடுதல்—ஏன் கூடாது?” என்ற கட்டுரையை வாசிக்கும் வரையாக வேறெதுவும் உதவவில்லை. அது உண்மையிலேயே என் மனதைத் தொட்டது. யெகோவாவிடம் ஜெபிக்கவும், அவர் பெரிய அளவில் என்னை மன்னிப்பார் என்றறியவும் உதவியது. கடவுளுடைய ராஜ்யத்தில் இருக்க நான் விரும்புகிறேன், ஆனால் திருடுகிறவர்கள் அங்கு இருக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததற்காக நன்றி.
ஜே. ஏ., கனடா
எனக்கு வயது 23; திருடியதற்காக நான் சிறையில் இருக்கிறேன். சகாக்களின் அழுத்தம் காரணமாகவே அது தொடங்கியது. அவர்கள் என்னை யாரிடமாவது ஒரு குறும்பு செய்ய வைத்தனர்; இதிலிருந்து தொடங்கி நிலைமை மோசமானது. அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது அவ்வளவு உண்மையாக இருக்கிறது. மிகவும் தாமதமாவதற்கு முன்பாக இளைஞர் அந்த அறிவுரைக்கு செவிசாய்த்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு செய்வதன் மூலம், நான் இருக்கும் இடத்தில்—அதாவது சிறையில்—அவர்கள் சென்றடைவதைத் தவிர்க்கலாம்.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
வாழ்க்கை சரிதை “கடவுளுடைய கவனிப்பினால் நான் எப்படி நன்மையடைந்தேன்” (ஜூன் 22, 1995) என்ற கட்டுரையை நான் இப்போதுதான் வாசித்து முடித்தேன். குடும்ப அங்கத்தினர்களால் செலஸ்ட் ஜோன்ஸ் எப்படி மோசமாக நடத்தப்பட்டார் என்றும்—இருந்தாலும் அவரது விசுவாசத்தையும் சகிப்பையும் காத்துக்கொண்டார் என்றும்—வாசித்தது, நான் இனிமேல் ஒருபோதும் என்னுடைய சொந்த உடல்நல பிரச்சினைகளைப் பற்றி குறைகூறாமல் இருக்க கடினமாக முயற்சி செய்வேன் என்று எனக்கு நானே உறுதியளிக்க வைத்தது.
ஜே. பி., ஐக்கிய மாகாணங்கள்
செலஸ்ட் ஜோன்ஸைவிட சற்று குறைந்த அளவில் ஊனமுற்றிருக்கும் ஒருவனாக, உறுதியாக நிலைத்திருக்க அவருக்கிருந்த தைரியத்தில் ஒரு துளிதான் எனக்கு இருக்கிறது. செலஸ்ட்டுக்கு ஆரவாரமின்றி அடக்கத்துடன் உதவி செய்து, அவரது ஊழியத்திற்குத் தேவையான கவனிப்பைக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் விசேஷித்த நன்றி.
டபிள்யூ. ஆர்., கனடா
அந்தக் கட்டுரை என்னைத் தொட்டது. அது என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி, நம் அயலாருக்கு உதவுவதற்கான மிகச் சிறந்த வழி என்னவென்றால், அவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்துவதாகும் என்பதை உணருவதற்கு உதவியிருக்கிறது.
பி. ஹெச். பி., நைஜீரியா
செலஸ்ட்டின் அனுபவத்தால் நான் மிகவும் நெகிழ்விக்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டேன். எனக்கு வயதாகிக்கொண்டு வருகிறது; ஆகவே வயதாவதுடன் சேர்ந்து வரும் எல்லா வலிகளையும் வேதனைகளையும் நான் அனுபவிக்கிறேன்; ஆனால் அவற்றைச் சமாளிப்பதற்கு அவரது அனுபவம் கூடுதலான பலத்தை எனக்கு அளிக்கிறது.
எம். ஆர்., ஜமைக்கா