உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 5/22 பக். 11-13
  • செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா?
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது இரத்தத்தை உட்கொள்கிறது
  • அது மிருகங்களைக் கொன்றுபோடும்
  • அது ஜனங்களைக் கொல்லுகிறது
  • எதிர்வாத வார்த்தை
  • விமானத்தை விஞ்சும் ஈ!
    யாருடைய கைவண்ணம்?
  • குட்டி ‘ஜிம்னாஸ்டிக் மன்னர்கள்’
    விழித்தெழு!—1999
  • பூச்சிகளால் பரவும் நோய்கள் பூதாகரமாகி வரும் பிரச்சினை
    விழித்தெழு!—2003
  • குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 5/22 பக். 11-13

செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா?

நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமப் பகுதிக்கு நாங்கள் சமீபத்தில் குடிபெயர்ந்து சென்றிருந்தோம். உஷ்ணக்காடு எங்களை சூழ்ந்திருந்தது. ஒருநாள் பிற்பகலில் துணியறைக்குள் என் மனைவி நுழைந்து, “இதோ இங்கே ஒரு குதிரை ஈ!” என்று அலறினாள்.

அந்த ஈ துணியறையிலிருந்து வெளியே பறந்துசென்று குளியலறைக்குள் நுழைந்தது. பூச்சிக்கொல்லி டப்பாவை நான் வேகமாக எடுத்துக்கொண்டு, அதன் பின்னாலேயே உள்ளே சென்று கதவை மூடிவிட்டேன். ஈ எங்கேயும் தென்படவில்லை. திடீரென அது என் முகத்தருகே பறந்துவந்தது. அது என்னை தாக்குகிறது! கைகளால் விரட்டி, அதைக் கீழே தள்ளிப்போட நான் செய்த முயற்சி கைகூடாமல் போயிற்று. அது ஜன்னலிடம் பறந்து சென்றது. தப்பித்துச்செல்வதை ஜன்னல்வலை தடுத்தது. அதன்மீது ஈ அமர்ந்தது.

நான் குறிவைத்து, ஈயை பூச்சிக்கொல்லியால் தாக்கினேன். வழக்கமாக அப்படிப்பட்ட ஒரு நேரடியான தாக்குதல் எந்த விதமான பூச்சியையும் உடனடியாக கொன்றுவிடும். ஆனால் இந்த ஈயை கொல்லவில்லை. அது பறந்து சென்று, குளியலறைக்குள் சுற்றிப்பறந்து தொடர்ந்து ரீங்காரமிட்டது.

இது முரட்டுத்தனமான ஒன்று! பூச்சிக்கொல்லி வேலை செய்யும், ஈயும் சீக்கிரத்தில் தரையில் விழுந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அது விழவில்லை. அடுத்தமுறை அது உட்கார்ந்தபோது, இரண்டாவது முறையாக நான் அதன்மீது ஸ்ப்ரே செய்தேன். அது மறுபடியும் பறந்து சென்றுவிட்டது.

என்ன விதமான இமாலய-ஈ இது? இன்னும் இரண்டு நேரடியான தாக்குதல்கள் அதைக் கடைசியாக கொன்றுபோட்டன.

நான் என்னுடைய கண்ணாடியை போட்டுக்கொண்டு அந்த உயிரினத்தை கவனமாக ஆராய்ந்தேன். அது ஒரு குதிரை ஈயைப் போன்று பெரியதாக இல்லாவிட்டாலும்கூட, வீட்டு ஈயைவிட பெரியதாக இருந்தது. அதனுடைய சிறகுகள் அதன் பின்புறத்தில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்ததானது, ஒரு சாதாரண ஈயைக் காட்டிலும் அதிக இழைவரி வடிவத்தை இதற்கு கொடுத்தது. நீளமான, ஊசிபோன்ற ஒரு தூண்டிழை அதனுடைய வாய் பாகத்திலிருந்து நீட்டிக்கொண்டிருந்தது.

“இது குதிரை ஈ அல்ல. இது ஒரு செட்ஸி ஈ,” என்பதாக என் மனைவியிடம் நான் சொன்னேன்.

ஈயை எதிர்ப்பட்டதானது, ஐக்கிய மாகாணங்களைவிட பெரியதாயிருக்கும், 1 கோடியே 17 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைப் பெற்றுள்ள ஆப்பிரிக்க எல்லைப்பரப்பிலிருந்து அந்த ஈயை அடியோடு ஒழிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி கடினமானது என்பதை என் மனதில் பதியவைத்தது. அதை அழித்துப்போட ஏன் ஜனங்கள் விரும்புகின்றனர்? அதற்கெதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முதலாவது குற்றச்சாட்டு:

அது இரத்தத்தை உட்கொள்கிறது

செட்ஸி ஈக்களில் 22 வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஆப்பிரிக்காவின் தெற்கு சஹாராவில் வாழ்கின்றன. அவை அனைத்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டும், முதுகெலும்புடைய விலங்குகளின் இரத்தத்தை பேராசையுடன் குடிக்கின்றன, ஒரே ஒரு கடியில் அவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக அளவான இரத்தத்தை உறிஞ்சுகின்றன.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றும் ஆப்பிரிக்காவைச் சேராத பரந்த வகையான மேய்ச்சல் விலங்குகளைக் கொண்டு அவை விருந்துண்கின்றன. மனிதர்களையும்கூட அவை கடிக்கின்றன. கடி, ஆழமான, இரத்தம் உறிஞ்சும் ஒரு குத்துக்காயம், கூர்மையானதாகவும், வலியுண்டாக்குவதாகவும் இருக்கிறது. அது ஒரே சமயத்தில் அரிக்கவும் செய்யும் வலியுண்டாக்கவும் செய்யும். அது ஒரு கட்டியையும் உண்டாக்கும்.

செட்ஸி ஈக்கள் அவற்றின் வேலையில் திறமையுள்ளவை. உங்கள் தலையைச் சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டு நேரத்தை அவை வீணாக்குவதில்லை. எவரையாவது நோக்கி புல்லட் வேகத்தில் பறந்து, எப்படியாவது பிரேக் போட்டு, உணரமுடியாத அளவுக்கு அவ்வளவு மென்மையாக முகத்தின்மேல் வந்து அவற்றால் அமரமுடியும். அவை திருடர்களைப்போல் இருக்கக்கூடும்; சிலசமயங்களில் அவை சென்ற பிறகுதான்—சேதத்தை மதிப்பிடுவதைத் தவிர வேறெதையும் நீங்கள் செய்யமுடியாதபோதுதான்—கொஞ்சம் இரத்தத்தை அவை திருடியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பொதுவாக துணியால் மூடப்படாத சரீரத்தை அவை விரும்புகின்றன. (என் கழுத்தின் பின்புறத்தை அவை விரும்புவதாகத் தோன்றுகிறது!) எனினும், சில சமயங்களில், ஒரு இரத்தக் குழாயை துளையிட்டு உறிஞ்சுவதற்கு முன்பாக காற்சட்டையின் மீதோ அல்லது சட்டையின் கைமீதோ ஊர்ந்து செல்ல அவை முடிவு செய்கின்றன. அல்லது அவை விரும்பினால், துணியின்மீதிருந்துகொண்டே அவற்றால் கடிக்கமுடியும்—காண்டாமிருகத்தின் கெட்டியான தோலையும்கூட துளையிடும் ஒரு பூச்சிக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

சாமர்த்தியமுள்ள ஒன்றாக மட்டுமல்ல ஆனால் தந்திரமுள்ள ஒன்றாகவும்கூட இருப்பதாக செட்ஸி ஈயை ஜனங்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி அதில் ஒன்றைக் கொன்றுபோட நான் ஒருமுறை முயற்சி செய்தபோது, அது என் துணியறைக்குள் பறந்து சென்று என் நீச்சல் உடைக்குள் மறைந்துகொண்டது. இரண்டு நாட்களுக்கு பின்பு நீச்சல் உடையை அணிந்துகொண்டபோது, இரண்டு முறை அது என்னை கடித்தது! மற்றொரு சமயத்தில் ஒரு செட்ஸி ஈ என் மனைவியின் பர்ஸுக்குள் மறைந்துகொண்டது. பர்ஸை ஆபீஸுக்கு எடுத்துச்சென்றாள், அதனுள்ளே கைவிட்டபோது ஈ அவள் கையைக் கடித்தது. பின்பு அது அறையைச் சுற்றி பறந்து, ஆபீஸில் இருந்த வேலையாட்களுக்குள் அதிக குழப்பதை ஏற்படுத்தியது. அதை அடித்துப்போடும் முயற்சியில் அனைவரும் வேலையை நிறுத்தினர்.

ஆகவே செட்ஸி ஈக்கு எதிராக உள்ள முதல் குற்றச்சாட்டு, அது வலியுண்டாகக் கடிக்கும் ஓர் இரத்த உறிஞ்சி என்பதாகும். இரண்டாவது குற்றச்சாட்டு:

அது மிருகங்களைக் கொன்றுபோடும்

ட்ரைபனோசோம்ஸ் என்று அழைக்கப்படும் சிறிய ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு வியாதியை செட்ஸி ஈக்களின் சில வகைகள் பரப்புகின்றன. அந்த வியாதியுள்ள ஒரு மிருகத்தின் இரத்தத்தை செட்ஸி ஈ உறிஞ்சும்போது, அந்த ஒட்டுண்ணிகளைப் பெற்றிருக்கும் இரத்தத்தை அது விழுங்குகிறது. இவை அந்த ஈயின் உடம்பில் வளர்ந்து, பெருகுகின்றன. ஈ மற்றொரு மிருகத்தைக் கடிக்கும்போது, ஒட்டுண்ணிகள் ஈயிலிருந்து மிருகத்தின் இரத்த ஓட்டத்திற்குள் செல்கின்றன.

ட்ரைபனோசோமியேஸிஸ் என்பதுதான் வியாதி. மிருகங்களில் ஏற்படுவது நகானா என்று அழைக்கப்படுகிறது. நகானா ஒட்டுண்ணிகள் அநேக ஆப்பிரிக்க மிருகங்களின், முக்கியமாக மறிமான், தென் ஆப்பிரிக்க எருமை, புதர்பன்றிகள், தென் ஆப்பிரிக்க மான்கள், மஞ்சளான பழுப்பு நிறமுள்ள மறிமான், வார்ட்ஹாக்ஸ் போன்ற மிருகங்களின் இரத்த ஓட்டத்தில் விருத்தியடைகின்றன. ஒட்டுண்ணிகள் இந்த மிருகங்களைக் கொன்றுபோடாது.

ஆனால் ஆப்பிரிக்க மிருகங்களல்லாத ஒட்டகங்கள், நாய்கள், கழுதைகள், வெள்ளாடுகள், குதிரைகள், கோவேறு கழுதைகள், எருதுகள், பன்றிகள், செம்மறியாடுகள் போன்ற கால்நடைகளை இந்த ஒட்டுண்ணிகள் அழித்துப்போடுகின்றன. நேஷனல் ஜியோக்ரஃபிக் பத்திரிகையின்படி, ஒவ்வொரு வருடமும் நகானா 30 லட்சம் கால்நடைகளைக் கொன்றுபோடுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் மசையினரைப் போன்ற கால்நடை மேய்ப்பர்கள், செட்ஸி ஈக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் இடங்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை கற்றறிந்திருக்கின்றனர், ஆனால் வறட்சி இருப்பதனாலும், புல்வெளி இல்லாததனாலும் சிலசமயங்களில் இது முடியாத காரியமாகிறது. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு வறட்சியின்போது, தங்கள் 600 கால்நடைகளையும் ஒன்றாக வைத்திருந்த நான்கு குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மிருகத்தை, ஈயுக்கு அவை பலியானதன் காரணமாக இழந்துகொண்டு வந்தனர். அவர்கள் மத்தியிலிருந்த லெஸாலான் என்ற ஒரு குடும்பப் பெரியவர் இவ்வாறு சொன்னார்: “மசையினர்களான நாங்கள் தைரியமுள்ள ஜனங்கள். நாங்கள் சிங்கத்தை ஈட்டியால் குத்தி, தாக்க வரும் தென் ஆப்பிரிக்க எருமையை வீரத்துடன் எதிர்ப்படுவோம். ஆப்பிரிக்க கறுப்பு நச்சுப்பாம்பைக் கனத்த தடியால் தாக்கி, உக்கிரத்துடன் இருக்கும் யானையை நேருக்கு நேர் சந்திப்போம். ஆனால் ஆர்கிம்பை [செட்ஸி ஈ] குறித்ததிலோ? நாங்கள் உதவியற்று இருக்கிறோம்.”

நகானாவை குணமாக்க மருந்துகள் இருக்கின்றன, ஆனால் சில அரசாங்கங்கள் ஒரு கால்நடை மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் மட்டும்தான் அவற்றை உபயோகிப்பதை அனுமதிக்கின்றன. அதற்கு நல்ல காரணம் இருக்கிறது, பகுதியளவான மருந்து கொடுப்பது மிருகத்தை அழிப்பது மாத்திரம் அல்ல ஆனால் மருந்துகளை எதிர்க்கும் ஒட்டுண்ணிகளை விருத்தியடையவும் செய்யும். மரித்துக்கொண்டிருக்கும் தன் மிருகங்களுக்கு சிகிச்சையளிக்க சரியான நேரத்தில் ஒரு கால்நடை மருத்துவரை புதர்காட்டுக்குள் கண்டுபிடிப்பது கால்நடை மேய்ப்பருக்கு கடினமானதாக இருக்கலாம்.

செட்ஸி ஈக்கு எதிராக உள்ள முதல் இரண்டு குற்றச்சாட்டுகள் விவாதத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன—அது இரத்தத்தை உட்கொள்ளும், மிருகங்களைக் கொல்லும் வியாதி ஒன்றையும் பரப்பும். ஆனால் இன்னும் அதிகமிருக்கிறது. மூன்றாவது குற்றச்சாட்டு:

அது ஜனங்களைக் கொல்லுகிறது

மனிதர்கள் நகானா ட்ரைபனோசோமினால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் மனிதர்களுக்கிடையே மற்றொரு வகையான ட்ரைபனோசோமை செட்ஸி ஈ ஏற்படுத்துகிறது. இந்த வகையான ட்ரைபனோசோமியேஸிஸ் தூக்க வியாதி என்று அழைக்கப்படுகிறது. தூக்க வியாதியுள்ள ஒரு நபர் வெறுமனே அதிகமாக தூங்குவார் என்று நினைக்காதீர்கள். இந்த வியாதி ஒரு சந்தோஷமான தூக்கமல்ல. உடல்நலக்குறைபாடு, மயக்கம், லேசான காய்ச்சல் ஆகியவற்றுடன் அது ஆரம்பமாகிறது. நீடித்திருக்கும் மந்தம், அதிக காய்ச்சல், மூட்டு வலி, திசுக்கள் வீக்கம், கல்லீரல் மற்றும் மண்ணீரலின் பெருக்கம் ஆகியவை அதன்பின் வரும். கடைசி கட்டங்களில், ஒட்டுண்ணிகள் நரம்பு மண்டலத்தின் நடுப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது மன சம்பந்தமான சீரழிவு, திடீர் நோய்ப்பிடிப்பு, கோமா மற்றும் மரணத்தினால் நோயாளி பாதிக்கப்படுவார்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், தூக்க வியாதியின் எழுச்சி ஆப்பிரிக்க கண்டத்தை நாசமாக்கியது. 1902-க்கும் 1905-க்கும் இடையே, விக்டோரியா ஏரியின் அருகே இந்த வியாதி கிட்டத்தட்ட 30,000 ஜனங்களைக் கொன்றது. அதைப் பின்தொடர்ந்த பத்தாண்டுகளில், அந்த வியாதி காமரூன், கானா, நைஜீரியா ஆகிய இடங்களுக்கு பரவியது. அநேக கிராமங்களில் மூன்றில் ஒரு பகுதி ஜனங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், அநேக ஆற்றோர கிராமங்களில் இருந்த ஜனங்களை அங்கிருந்து பெருமளவில் வெளியேற்றிவிடுவதை இது தேவைப்படுத்தியது. ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நடமாடும் குழுக்கள் சிகிச்சை அளித்தன. 1930-ன் முடிவின்போதுதான் அந்தக் கொள்ளைநோய் குறைந்து, அழிந்துபோனது.

இன்று இந்த நோய் ஒவ்வொரு வருடமும் சுமார் 25,000 ஜனங்களைப் பாதிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின்படி, 36 தென்சஹாரா நாடுகளிலுள்ள ஐந்து கோடிக்கும் அதிகமான ஜனங்கள் வியாதிப்படும் அபாயத்தில் இருக்கின்றனர். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தூக்க வியாதி சாவுக்குரியதாக இருக்குமென்றாலும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இருக்கின்றன. இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக சமீபத்தில் இஃப்ளோனிதின் என்ற ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது, 40 வருடங்களிலேயே முதல் முறையாக இப்படிப்பட்ட மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செட்ஸி ஈயுக்கு எதிராகவும் அது கடத்தும் வியாதிக்கு எதிராகவும் மனிதர்கள் ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். 1907-ல், செட்ஸி ஈயை அழிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் எழுதினார்: “அவனைச் சுற்றி ஒரு மெல்லிய வலை இரக்கமின்றி பின்னப்படுகிறது.” பின்னோக்கிப் பார்க்கும்போது, சர்ச்சிலுடைய “மெல்லிய வலை” பெரிய ஓட்டைகளைக் கொண்டிருந்தது என்பது தெளிவாக தெரிகிறது. “இதுவரையாக, செட்ஸியை அழிப்பதற்கான 80 வருட நடவடிக்கைகள், அது பரவுவதன்பேரில் சிறிதளவான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன,” என்பதாக ஒட்டுண்ணியியலின் ஆதாரங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

எதிர்வாத வார்த்தை

“கடவுள் தம்முடைய ஞானத்தால் ஈயை படைத்தார், பின்பு ஏன் அதைப் படைத்தார் என்பதை நமக்கு சொல்ல மறந்துவிட்டார்,” என்பதாக ஓக்டென் நாஷ் என்ற அமெரிக்க கவிஞர் எழுதினார். யெகோவா தேவன் எல்லா பொருட்களையும் சிருஷ்டித்தவர் என்பது உண்மையாயிருக்கிறபோதிலும், அவர் மறந்துவிடுபவர் என்பது நிச்சயமாகவே உண்மையில்லை. அநேக காரியங்களை நாமே கண்டுபிடிப்பதற்காக அனுமதிக்கிறார். அப்படியென்றால் செட்ஸி ஈயைப் பற்றி என்ன? இந்தத் தெளிவான வில்லனின் சார்பாக எதிர்வாதம் செய்ய ஏதாவது இருக்கிறதா?

கால்நடைகளை அழிப்பதில் அது வகிக்கும் பாகம், ஆப்பிரிக்க வனவிலங்கு சரணாலயங்களைப் பாதுகாக்க உதவியிருப்பது ஒருவேளை இதுவரையிலேயே மிகவும் பலம்பொருந்திய எதிர்வாதமாக இருக்கலாம். ஆப்பிரிக்காவின் பரந்த பகுதிகள் மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களின் மேய்ச்சல் வெளிகளைப்போல் உள்ளன, நிலம்தானே வீட்டுக் கால்நடைகளை ஆதரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. ஆனால் செட்ஸி ஈயின் உதவியால், உள்நாட்டு மேய்ச்சல் விலங்குகளைக் கொல்லாத ட்ரைபனோசோம்ஸினால் வீட்டுமிருகங்கள் கொல்லப்படுகின்றன.

செட்ஸி ஈ மாத்திரம் இல்லையென்றால், ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயங்கள் கால்நடையின் மந்தைகளால் எப்போதோ மாற்றீடு செய்யப்பட்டிருக்கும் என்பதாக அநேகர் நம்புகின்றனர். “நான் செட்ஸியின் அதிகரிப்பை ஆதரிக்கிறேன்,” என்பதாக போட்ஸ்வானா வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு வழிகாட்டியான வில்லி ஃபான் நிகர்க் சொன்னார். “செட்ஸியை நீக்கிவிட்டால் கால்நடை படையெடுக்கும், கால்நடைகள் ஆப்பிரிக்காவை அழிப்பவை, கண்டத்தை ஒரு பெரிய வறண்டநிலமாக மாற்றுபவை.” அவர் கூடுதலாக இவ்வாறு கூறினார்: “ஈ கண்டிப்பாக இருக்க வேண்டும்.”

சந்தேகமில்லாமல் எல்லாருமே அதை ஒப்புக்கொள்வதில்லை. ட்ரைபனோசோமியேஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய கால்நடையையோ அல்லது தன்னுடைய பிள்ளையையோ பார்க்கும் ஒரு நபரை திருப்திப்படுத்த இந்த விவாதம் சிறிதளவும் உதவாது. தன்னையே காத்துக்கொள்ள ஆப்பிரிக்காவிற்கு கால்நடை தேவைப்படுகிறது என்பதாக விவாதிப்பவர்களையும் இது திருப்திப்படுத்துவதில்லை.

இருந்தபோதிலும், செட்ஸி ஈ இயற்கையில் வகிக்கும் பங்கைக் குறித்து கற்றுக்கொள்வதற்கு சந்தேகமில்லாமல் இன்னும் அதிகம் இருக்கிறது. அதற்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகள் வலுவாக இருந்தாலும், ஒரு முடிவை எடுப்பதற்கு இன்னும் அதிக காலம் தேவை.

ஈக்களைக் குறித்து பேசும்போது, ஒன்று இப்போதுதான் அறைக்குள் பறந்துசென்றிருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள், அது ஒரு செட்ஸியா என்பதை நான் நிச்சயித்துக்கொள்கிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்