உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwwd கட்டுரை 1
  • விமானத்தை விஞ்சும் ஈ!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விமானத்தை விஞ்சும் ஈ!
  • யாருடைய கைவண்ணம்?
  • இதே தகவல்
  • குட்டி ‘ஜிம்னாஸ்டிக் மன்னர்கள்’
    விழித்தெழு!—1999
  • செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா?
    விழித்தெழு!—1996
  • குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
    விழித்தெழு!—2003
  • பூச்சிகளின் விந்தை உலகம்
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
யாருடைய கைவண்ணம்?
ijwwd கட்டுரை 1
பழ ஈ

யாருடைய கைவண்ணம்?

விமானத்தை விஞ்சும் ஈ!

ஈயை அடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். நம் கையில் அகப்படாமல் மின்னல் வேகத்தில் தப்பித்துவிடுவதில் அது பெரிய கில்லாடி.

பழ ஈ என்ற ஒருவகையான ஈ செய்யும் சாகசத்தைப் பார்த்து விஞ்ஞானிகளே அசந்துபோயிருக்கிறார்கள். போருக்குப் பயன்படுத்தப்படும் ஜெட் விமானத்தைப் போல அது எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்புகிறது, அதுவும் ஒரு கனநொடிக்குள்! பிறந்தவுடனேயே “சாம்பியன்போல் அது பறக்கிறது” என்று பேராசிரியர் மைக்கேல் டிக்கின்சன் சொல்கிறார். “பிறந்த குழந்தை ஒரு போர் விமானத்தைச் சர்வசாதாரணமாக ஓட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும்” என்று அவர் சொல்கிறார்.

இந்த ஈ செய்யும் சாகசங்களை ஆராய்ச்சியாளர்கள் வீடியோ எடுத்துப் பார்த்தார்கள். அது ஒரு விநாடிக்கு 200 தடவை சிறகுகளை அடிப்பதாக அவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால், ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் சட்டென்று வேறு பக்கமாகத் திரும்பித் தப்பித்துக்கொள்ள அது ஒரேவொரு தடவை சிறகுகளை அடித்தாலே போதுமாம்!

ஆபத்திலிருந்து தப்பிக்க அந்த ஈக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? மனிதர்கள் கண்சிமிட்டும் நேரத்தைவிட 50 மடங்கு வேகமாக இந்த ஈக்கள் ஆபத்திலிருந்து தப்பித்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். “எந்தப் பக்கத்திலிருந்து ஆபத்து வருகிறது, எந்தத் திசையில் தப்பிக்கலாம் என்பதையெல்லாம் இந்த ஈ அதிபுத்திசாலித்தனமாகவும் அதிவேகமாகவும் கணக்கு போட்டுவிடும்” என்று சொல்கிறார் டிக்கின்சன்.

குட்டி மூளையை வைத்துக்கொண்டு இந்த ஈயால் எப்படி இந்தளவுக்குத் திட்டம் போட்டுத் தப்பிக்க முடிகிறது? ஆராய்ச்சியாளர்களால் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாத ஒரு புதிர் இது!

பழ ஈ பறக்கும்போதே திசையை மாற்றுகிறது

பழ ஈ, கனநொடியில் தன் திசையை மாற்றிக்கொண்டு ஆபத்திலிருந்து தப்பித்துவிடுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? விமானத்தை விஞ்சிவிடும் திறமை பழ ஈக்குத் தானாக வந்திருக்குமா? அல்லது அந்தத் திறமையை யாராவது அதற்குக் கொடுத்திருப்பார்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்