உலகை கவனித்தல்
கத்தோலிக்கர்கள் போப்பிடம் விண்ணப்பித்தனர்
1995-ன் பிற்பகுதியில், ஜெர்மானிய கத்தோலிக்கர்கள் சர்ச்சை சீர்படுத்த கோரி விண்ணப்ப பத்திரம் ஒன்றை முறைப்படி தயாரித்தனர் என்பதாக ஸுயெடோய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. கிட்டத்தட்ட 16 லட்சம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த விண்ணப்பம், பாதிரிமார் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும்படியும் பெண்களை பாதிரிமாராக்கும்படியும் பாலுறவு மற்றும் கருத்தடையின் பேரிலுள்ள மனப்பான்மையை மாற்றிக்கொள்ளும்படியும் சர்ச்சை கேட்டுக்கொண்டது. “நாங்கள் உண்மையில் நேரடியாக இதைப் போப்பிடம் தெரிவிக்கிறோம்,” என்பதாக விண்ணப்பத்தை தயாரித்தவரான க்ரிஸ்ட்யேன் வைஸ்னர் விளக்கினார். ஜெர்மன் பிஷப்ஸ் கான்ஃபரன்ஸின் அக்கிராசனரான கார்ல் லேமான், பழமைவாத மற்றும் சீர்திருத்தவாத கத்தோலிக்கர்களுக்கிடையே பிளவு ஏற்படுவதற்கு இந்த விண்ணப்பம் வழிநடத்தும் என அதை உண்மையிலேயே ஆட்சேபித்தார் என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது. இருந்தபோதிலும், லேமான் வாடிகனுக்கு சென்று சுமார் 16 லட்சம் நபர்களுடைய கையெழுத்தைக்கொண்ட விண்ணப்பத்தை போப்பிடம் கொடுத்தார்.
“லீப் வினாடி” 1995-ந்தோடு சேர்த்தல்
பூமியின் சுழற்சி, அதிக நம்பத்தகாத கடிகையாய் இருப்பதாகத் தோன்றுகிறது. தி நியூ யார்க் டைம்ஸ்-ன்படி, நேரத்தை கணக்கிட இதைக்காட்டிலும் துல்லியமான முறையை விஞ்ஞானிகள் கொண்டிருக்கின்றனர், அதுதான் சீசியம் அணு. அணு கடிகையின் மையப்பொருளாக பயன்படுத்தப்படும் சீசியம் அணு ஒரு வினாடிக்கு சரியாகவே 9,19,26,31,770 தடவை ஊசலாடுகிறது. இந்த வேகத்தில், இவ்வணுக் கடிகை பெருமிதங்கொள்ளும் காரியம் என்னவென்றால் “அது காட்டும் நேரத்தில் ஏற்படும் பிழை கிட்டத்தட்ட 3,70,000 வருடங்களில் ஒரு வினாடியே.” ஒப்பிடும்போது, பூமியின் சுழற்சி கிட்டத்தட்ட பத்து லட்சம் மடங்கு குறைந்தளவில் துல்லியமானதாய் இருக்கிறது, ஆகவேதான் ஒரு “லீப் வினாடி” அவ்வப்போது அணுக்கடிகையுடன் சேர்க்கப்பட வேண்டும். காலவர்களின் ஒரு சர்வதேச குழு அப்படிப்பட்ட ஒரு “லீப் வினாடியை” 1995-ன் இறுதியில் சேர்க்கும்படி தீர்மானித்தது. இது “நம் கிரகத்தின் சுழற்சியும் சீராகச் செல்லும் நேரமும்” ஒரே காலத்தில் நிகழ்வதற்கு வழிநடத்தியது. எனினும், விஞ்ஞானிகள் இந்தக் கண்டுபிடிப்புக்கு தங்களுக்கே நற்பெயரை எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில், “கடிகையின் அணு உட்கூறுகள், சிறிய அளவில், கிரக அமைப்பின் பிரமாண்டமான ஒழுங்குமுறையை ஒத்திருக்கின்றன” என்பதாக டைம்ஸ் சொல்கிறது.
சிறு குழந்தைகளும் தொழில்நுட்பமும்
“அதிகமதிகமான சிறுபிள்ளைகள் எழுத்தறிவுள்ளவர்களாக ஆவதற்கு முன்பாகவே கம்ப்யூட்டரைப் பற்றிய அறிவுள்ளவர்களாக ஆகிவருகிறார்கள்,” என்பதாக கனடாவின் தி க்ளோப் அண்ட் மெயில் அறிக்கை செய்கிறது. நடக்கவும் பேசவும் இன்னும் கற்றுக்கொள்ளாத சிறு குழந்தைகளில் சில, ஏற்கெனவே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றன. தாங்களாகவே உட்கார இயலாத குழந்தைகளும்கூட தங்கள் பெற்றோரின் மடியில் உட்கார்ந்திருக்கும்போது தொழில்நுட்ப திறமைகளைக் குறித்து கற்பிக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் அவசரம், பள்ளியில் தங்கள் பிள்ளைகள் மேம்படுவதில் ஆர்வமாயிருக்கும் பெற்றோர்களிடமிருந்து உண்டாகிறது. கூடுதலாக, தங்கள் உற்பத்திப் பொருட்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கான கருவிகள் என்பதாக அநேக ஸாஃப்ட்வேர் கம்பெனிகள் அதிகமாக விளம்பரப்படுத்துகின்றன. எனினும், ஒருசில பெற்றோர் அவ்வளவு சிறிய வயதில் ஜனங்களுக்கு பதிலாக இயந்திரங்களோடு செயலாற்றுவதன்பேரில் காண்பிக்கப்படும் அழுத்தத்தைக் குறித்து சந்தேகமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஒரு தாய் இவ்வாறு சொன்னாள்: “நாம் கம்ப்யூட்டர்களோடு தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்வதில்லை, எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறு செய்யவும் கூடாது என்று நினைக்கிறேன்.”
சுலபமான தீர்வு
ஜப்பானில் மருத்துவ ஆராய்ச்சிக்காக அளிக்கப்படும் மனித சடலங்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. தி டெய்லி யோமியுரி-ன் பிரகாரம் “ஒவ்வொரு இரண்டு மருத்துவ மாணாக்கர்களுக்கு ஒரு சடலமும், ஒவ்வொரு நான்கு பல்மருத்துவ மாணாக்கர்களுக்கு ஒரு சடலமும் தேவைப்படுகிறது. இது நாடு முழுவதுமாக ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் சடலங்களின் எண்ணிக்கையை 4,500-க்கு உயர்த்துகிறது,” என்பதாக கல்வி அமைச்சகம் சொல்கிறது. ஆனால் தேவைப்படுவதற்கும் அதிகமாக தங்கள் சடலங்களை அளிக்க முன்வரும் ஜனங்கள் ஏன் இத்தனை அநேகர் இருக்கின்றனர்? பிரேதக்குழிகளுக்கான இடப் பற்றாக்குறையும் குடும்ப பிணைப்புகளில் பலவீனமும் சொல்லப்படும் காரணங்களில் சில.
ஐக்கிய மாகாணங்களில் எய்ட்ஸ் 5,00,000-ஐத் தாண்டுகிறது
முதல் முறையாக, அக்டோபர் 31, 1995-ல், ஐக்கிய மாகாணங்களில் அறிக்கை செய்யப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியது என்பதாக தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் சொன்னது. இந்த எண்ணிக்கையில், 3,11,381 பேர்—62 சதவீதத்தினர்—ஏற்கெனவே அந்த நோயினால் இறந்துவிட்டிருந்தனர். ஈரினப்புணர்ச்சி தொடர்பின் மூலம் உண்டான எய்ட்ஸின் சீரான வளர்ச்சி மற்றொரு விசனகரமான முன்னேற்றமாக இருந்தது. 1981-லிருந்து 1987-வரை பெண்களுக்கிடையே எய்ட்ஸின் விகிதம் வெறும் 8 சதவீதமாகவே இருந்தது, ஆனால் 1993-லிருந்து 1995 வரை அந்த எண்ணிக்கை 18 சதவீதமாக உயர்ந்தது என்பதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது.
ஆன்-லைனுக்கு அடிமையாபவர்கள்
தொலைபேசி லைனின் மூலம் கம்ப்யூட்டர்களை தொடர்புபடுத்தும் பழக்கம், “இன்டர்நெட் அடிமை கோளாறு” என்று அழைக்கப்படும் ஒரு புதிய இன்னலை உருவாக்கியிருக்கிறது. நியூ ஸைன்டிஸ்ட்-ன்படி, “குடிவெறிப் பழக்கத்திற்கு சரிசமமாய் இருக்கும் ஆன்-லைனினால் துன்பப்படுகிறவர்கள், வலிந்து உந்துவிக்கப்படுவதிலிருந்து குணமடைவதற்காக ஆதரவு மற்றும் நோய்நீக்கல் வகுப்புகளிடம் அதிகரிக்கும் எண்ணிக்கையில் திரும்புகின்றனர்.” நியூ யார்க் உளநோய் மருத்துவரான டாக்டர் ஐவன் கோல்ட்பெர்க், இந்த இன்ஃபர்மேஷன் சூப்பர்-ஹைவேயிலிருந்து “விடுபட போராடிக்கொண்டிருக்கும்” ஆட்களுக்கு உதவுவதற்காக இன்டர்நெட் அடிமைகளுக்கான ஆதரவு குழுவை ஆரம்பித்திருக்கிறார். இக்கோளாறின் அறிகுறிகள், “இன்டர்நெட்டைக் குறித்து திருப்தியையும் கனவு அல்லது கற்பனையையும் அடைவதற்கு அதிகமதிகமான நேரத்தை அதற்காக செலவிட ஏற்படும் தேவை” ஆகியவற்றை உட்படுத்துகின்றன. “தங்கள் வாழ்க்கையை இன்டர்நெட் நாசமாக்கியிருக்கிறது என்பதாக சொல்லும் 20-க்கும் மேற்பட்ட பிரதிபலிப்புகளை ஜனங்களிடமிருந்து” கோல்ட்பெர்க் பெற்றிருக்கிறார் என்பதாக பத்திரிகை சொல்கிறது.
சூரிய ஒளி மனநிலையை மேம்படுத்துகிறது
கட்டிடத்திற்குள் அதிக சூரிய ஒளி உட்புகும்படி செய்வது “அதிக வேலைதிறத்திலும் குறைந்த நாட்கள் விடுப்பு எடுப்பதிலும்” விளைவடையும் என்பதாக தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை செய்கிறது. வேலை செய்யும் இடத்தில் சூரிய ஒளியை உட்புகச் செய்யும் கட்டிடத்தைக் கட்டுவது, ஆற்றலைப் பாதுகாக்கும் ஒரு வழியாக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொழிலாளிகளின் மனநிலையை மேம்படுத்துவதில் அதிக பலன்களைக் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஏரோஸ்பேஸ் ஜயன்ட் லாக்ஹிட் கார்ப்பரேஷன் கலிபோர்னியாவிலுள்ள சன்னிவேலில் ஒரு புதிய அலுவலகத்தை துவக்கியபோது, ஆற்றலை மிச்சப்படுத்தும் அதன் கட்டிட அமைப்பு “ஒட்டுமொத்தமான ஆற்றல் செலவுகளை பாதியளவு குறைத்தது.” எனினும், 15 சதவீதத்திற்கு “விடுப்பில் குறைவு ஏற்படும்” அளவுக்கு தொழிலாளிகள் தங்கள் புதிய சுற்றுப்புறத்தை அவ்வளவாக அனுபவிப்பார்கள் என்பது லாக்ஹிட் எதிர்பார்த்திராத ஒன்று. ஒரு கட்டிடத்திற்குள் அதிக சூரிய ஒளி புகும்படி அனுமதிப்பதன் அனுகூலங்கள் சில்லறை விற்பனையாளர்களாலும் கவனிக்கப்படுகிறது. செயற்கை ஒளியைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை ஒளியை பயன்படுத்தும் கடைகளில் விற்பனை “குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகமாக” இருந்ததாய் ஒரு வியாபாரி கண்டார்.
தண்ணீரைக் குறித்து விழிப்புடன் இருக்கும் உலகம்
“அடுத்த நூற்றாண்டின் போர்கள் தண்ணீருக்கானவையாக இருக்கும்,” என்பதாக உலக வங்கியின் சுற்றுப்புற துணைத் தலைவரான இஸ்மாயில் சரேஜில்டிங் எச்சரிக்கிறார். சரேஜில்டிங்கின்படி, உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் தண்ணீர் பற்றாக்குறையை 80 நாடுகள் ஏற்கெனவே பெற்றிருக்கின்றன. ஆனால் போதுமான தண்ணீர் பூமியில் இல்லை என்பது பிரச்சினை அல்ல. “பூமியிலுள்ள சுத்தமான தண்ணீரின் மொத்த அளவு ஜனத்தொகையின் எண்ணிப்பார்க்கக்கூடிய எல்லா தேவைகளுக்கும் வேண்டியதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கிறது,” என்பதாக நீராய்வாளரான ராபர்ட் ஆம்ப்ராஜி சொல்கிறார். தண்ணீரை திறனற்ற விதத்தில் உபயோகிப்பதன் காரணமாகவே பெரும்பான்மையான நெருக்கடி நிலைகள் ஏற்படுகின்றன. நீர்ப்பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு பூமிக்குள் கசிந்து சென்றுவிடுகிறது அல்லது ஆவியாகிவிடுகிறது. நகர நீர் வழங்கீட்டு முறைகள் 30-லிருந்து 50 சதவீதம், சில சமயங்களில் இதைக் காட்டிலும் அதிகமான, தண்ணீர் கசிவை ஏற்படுத்துகின்றன. “காற்றைப்போல் தாராளமாக பயன்படுத்தாமல் எண்ணெய்யைப் போல் ஒரு விலைமதிப்புள்ள வளமாக தண்ணீரைக் கருத வேண்டிய காலம் வரப்போகிறது,” என்பதாக தி எகானமிஸ்ட் சொல்கிறது.
வலியில்லாமல் தூங்குவது
மருந்து சீட்டு இல்லாமலேயே பெறமுடிந்த சில வலி நிவாரண மருந்துகள் உறக்கமின்மையில் விளைவடையக்கூடும் என்பதாக டஃப்ட்ஸ் யூனிவர்ஸிடி டையட் அண்ட் நியூட்ரிஷன் லெட்டர் அறிவிக்கிறது. “இது ஏனென்றால், வலி நிவாரணிகளின் முதன்மையான பிரான்டுகள் ஒரு கப் காபியில் இருப்பதற்கு சமமான அல்லது அதற்கும் அதிகமான காஃபினை (Caffeine) கொண்டிருக்கின்றன.” காஃபின்—ஓர் மிதமான ஊக்கி—ஆற்றலை அதிகரிப்பதற்காக ஆஸ்பிரினுடனும் மற்ற வலிநீக்கிகளுடனும் அடிக்கடி சேர்க்கப்படுகிறது. உண்மையில், பிரபலமான சில பிரான்டுகள் இரண்டு மாத்திரைக்கு 130 மில்லிகிராம் வரையாக காஃபினைக் கொண்டிருக்கின்றன. அது காபியின் “ஓர் சராசரி கப்பில் இருக்கும் 85 மில்லிகிராமைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாய்” உள்ளது. ஆகவே, காஃபின் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள “செயல்படு பொருட்கள்” உள்ளனவா என்பதை வலிநீக்கியின் லேபிலில் தேடிப்பார்க்கும்படி அந்தச் செய்திமடல் பரிந்துரைக்கிறது.
“TB டைம் பாம்”
அநேக மருந்துகளை எதிர்க்கும் புதிய வகை காச நோய்கள் (TB) ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் 10,000 ஜனங்களைக் கொல்லுகிறது என்பதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த க்ரேக் க்ளாயுடினின்படி, இந்தியா “TB டைம் பாமின்மேல் உட்கார்ந்திருக்கிறது.” உலகம் முழுவதுமாக, 175 கோடி ஜனங்கள் காச நோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பான்மையான நோயாளிகள் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதன் காரணமாக, புதிய மருந்துகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்த தேவைப்படும் பணத்தை முதலீடு செய்ய மருந்து கம்பெனிகள் மனமில்லாதிருக்கின்றன என்பதாக தி லான்செட் என்ற பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திற்கு 40 நாடுகளிலிருந்து ஒன்றுகூடியிருந்த நிபுணர்களின் ஒரு குழு சொல்கிறது.
தண்டிக்கப்படாத திருடர்கள்
1994-ன் புள்ளிவிவரத்தின்படி, இத்தாலியில் “திருடுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான 94 சதவீத வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர், வன்முறையைப் பயன்படுத்தி திருடுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான 80 சதவீத சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றனர்,” என்பதாக லா ரேப்பூப்ளிக்கா அறிக்கை செய்கிறது. சட்ட-செயலாக்க ஏஜென்ஸிகளிடமிருந்து நீதித்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்ட அறிக்கைகளிலிருந்து இந்த எண்ணிக்கை பெறப்பட்டது. அறிக்கை செய்யப்படாத அநேக திருட்டுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், தண்டனை அளிக்கப்படாத குற்றங்களின் சதவீதம் இன்னுமதிகமானதாக இருக்கும்.
இத்தாலிய குடும்பங்கள் மாறுகின்றன
இத்தாலிய குடும்பத்தைப் பற்றிய ஒரு சுற்றாய்வின்படி, திருமணமாகாத அதிக நபர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர், திருமணமான அதிக தம்பதிகள் பிரிகின்றனர் அல்லது விவாகரத்து செய்கின்றனர் என்பதாக லா ரேப்பூப்ளிக்கா என்ற இத்தாலிய செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 18,000 திருமணங்கள் முறைப்படி சடங்குகளோடு நடத்தப்படுகின்றன, இந்த எல்லா திருமணங்களிலும் ஒரு திருமணத்துணையாவது மறுமணம் செய்துகொள்கிறார். இந்தப் புதிய திருமண இணைப்புகள், முதல் திருமணத்தின் மூலம் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளை உட்படுத்தும் பெரிய குடும்பங்களை அடிக்கடி உண்டுபண்ணுகின்றன. இந்தப் பாணி, ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் அதிகரிப்பையும் சேர்த்து, பாரம்பரிய இத்தாலிய குடும்பத்தின் அமைப்பை வேகமாகவும் தீவிரமாகவும் மாற்றிவருகிறது.