எமது வாசகரிடமிருந்து
பள்ளிகள் நெருக்கடியில் நான் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தபோது, “பள்ளிகள் நெருக்கடியில்” (டிசம்பர் 22, 1995) என்ற பிரதியை யாரோ ஒருவர் என்னிடம் கொடுத்தார். அந்தப் பொருளின்பேரில் நான் சமீபத்தில் வாசித்த ஒரு முழு புத்தகத்தைவிடவும் அது எனக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது. விழித்தெழு! பத்திரிகைக்கான ஒரு சந்தா என் வீட்டிற்கு அனுப்பப்பட்டால் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
வி. சி., ஐக்கிய மாகாணங்கள்
தேவராஜ்ய ஊழியப் பள்ளியைப் பற்றிய பிரிவு, நான் பள்ளியில் இருந்த காலத்தை எனக்கு நினைவுபடுத்தியது. நான் ஒரு வாய்மொழி அறிக்கையைக் கொடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அப்போது எனக்குக் குறைந்தளவு ஆங்கிலமே தெரியும். என்னுடைய அளிப்பை நான் கொடுத்ததும், என்னுடைய ஆசிரியர், தான் மிகவும் கவரப்பட்டதாகவும் நான் மட்டுமே நல்ல தோற்றநிலையையும் கேட்போருடன் கண் தொடர்பையும் கொண்டிருந்ததாகவும் சொன்னார். இராஜ்ய மன்றத்தில் தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் பெற்ற மிகச் சிறந்த பயிற்றுவிப்பால் இதைச் செய்ய என்னால் முடிந்தது.
ஜி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரைகள் என்னில் அவ்வளவு பலமான உணர்ச்சிப்பூர்வ பிரதிபலிப்பை வெளிவரச் செய்யும் என்று நான் நினைக்கவில்லை. நான் பள்ளிக்குப் போன காலத்தில், என் பெற்றோர் அவர்களுடைய சொந்த பிரச்சினைகளில் அவ்வளவு மூழ்கி இருந்ததால் எனக்கு ஆதரவாளராக இருக்க அவர்களுக்கு நேரமில்லை. அதன் விளைவாக, பள்ளியிலிருந்த காலத்தில், மிக தனிமையான சில நேரங்களை நான் கொண்டிருந்தேன். இந்த வகையான கட்டுரைகளின் காரணமாக, யெகோவா இளைஞரை நேசிக்கிறார் என்றும் இந்த உலகில் அவர்கள் தனிமையாக உணர்வதை அவர் விரும்பவில்லை என்றும் உணர்கிறேன்.
எம். எம்., ஐக்கிய மாகாணங்கள்
மாலி “மாலியில் முதன்முதலில் நிகழ்ந்தது” (டிசம்பர் 22, 1995) என்ற கட்டுரை அபாரமாக இருந்தது. நான் அதை மூன்று முறை வாசித்துவிட்டேன். என்னுடைய சூழ்நிலைகள் என்னை ஒரு மிஷனரியாகும்படி அனுமதிக்க வேண்டும் என்று எவ்வளவாக விரும்புகிறேன்! அநேக மக்கள், நாம் அனுபவிக்கிற வசதிகளைக் கொண்டிராதபோதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் அந்தக் கட்டுரை என்னை உணர வைத்தது. எவ்வளவு சமயோசிதமான நினைப்பூட்டுதல்!
டி. எல்., ஐக்கிய மாகாணங்கள்
பறக்கும் பாறைகள் ஒருசில நாட்களுக்கு முன்னர்தான், ஓர் எரிநட்சத்திரத்துக்கும் ஒரு விண்கல்லுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இந்தக் குறிப்பைத்தானே விவரித்த “பறக்கும் பாறைகள்” (டிசம்பர் 8, 1995) என்ற கட்டுரையை வாசித்தபோது நான் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பேன் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் படைப்பைக் குறித்து அதிகத்தைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவும் கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்காக உங்களுக்கு நன்றி.
ஆர். பி., ஸ்விட்ஸர்லாந்து
ஆன்ட்ரூவிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பை உடைய இளைஞனைப் பற்றிய “ஆன்ட்ரூவிடமிருந்து நாங்கள் கற்றவை” (டிசம்பர் 8, 1995) என்ற கட்டுரையை சற்றுமுன்னர்தான் வாசித்தேன். மனவளர்ச்சி குறைபாடுள்ள ஒரு பிள்ளை எங்களுக்கும் இருக்கிறது, ஆன்ட்ரூவின் பெற்றோரின் குறிப்புகள் பல, நாங்கள்தாமே எவ்வாறு உணர்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கின்றன. மனவளர்ச்சி குறைபாடுள்ள ஒரு பிள்ளையைக் கொண்டிருப்பதுடன் கூடவரும் தனிப்பட்ட கஷ்டங்களையும் அந்தக் குடும்பத்தின்மீது வைக்கப்படும் உணர்ச்சிப்பூர்வ அழுத்தங்களையும் மதித்துணர்வது நம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பெரும்பாலும் கடினமாக இருக்கிறது. ஆகவே அந்தக் கட்டுரைக்காக நன்றி.
ஜே. பி., இங்கிலாந்து
நீங்கள் பிரசுரித்திருப்பவற்றில் மிகவும் அருமையானதும் உணர்வுத்திறம் படைத்ததுமான கட்டுரைகளில் ஒன்று இது என்று நான் உணர்கிறேன். மூன்றே பக்கங்களுக்குள், அந்தக் குறைபாடுள்ளவர்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பது குறித்து ஒரு முழு ஆய்வுக் கட்டுரையே அளிக்கப்பட்டது. மனித உறவுகள் பற்றி ஒரு மிக ஆழ்ந்த பாடத்தை அது தெரியப்படுத்தியது.
எம். எல்., ஸ்பெய்ன்
இந்த வருடத்தின் ஆரம்பத்தில், டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்புள்ள ஒரு பையனை என் மனைவி பெற்றெடுத்தாள். ஆன்ட்ரூவின் பெற்றோரைப் போலவே, தங்கள் குழந்தை குறைபாடுள்ளது என்பதை அறிந்ததும் அநேக பெற்றோர் அனுபவிக்கும் உணர்ச்சியையே—வேதனையும் துக்கமும் அதோடுகூட தற்காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி பல கேள்விகளையே—நாங்களும் அனுபவித்தோம். எங்களுடைய பாகத்தில், எங்கள் குழந்தையின் குறைபாட்டை ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்டோம். அவனுக்கு சீக்கிரத்தில் ஆறு மாதமாகிவிடும், அவன் நன்கு முன்னேற்றமடைந்து வருகிறான். அவன் பிறந்ததற்கு அடுத்த நாள், எங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பலமுறை வந்து பார்த்தபோது என் மனைவி சொல்லர்த்தமாக உணர்ச்சியில் ஆழ்த்தப்பட்டாள். ஓர் ஆவிக்குரிய குடும்பத்தைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாங்கள் உண்மையாக உணர்ந்தோம். மேலும் எங்கள் சகோதர சகோதரிகளின் அன்பு மட்டுமல்லாமல், யெகோவாவும் இருக்கிறார். இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி.
ஜி. சி., பிரான்ஸ்