உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 8/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • ட்யூரட் நோய்க்குறித் தொகுதியோடு வாழ்வதற்கான சவால்
    விழித்தெழு!—1995
  • ராக் இசைநிகழ்ச்சிகளுக்கு நான் போகலாமா?
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 8/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ராக் இசைநிகழ்ச்சிகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . ராக் இசைநிகழ்ச்சிகளுக்கு நான் போகலாமா?” (டிசம்பர் 22, 1995) என்ற கட்டுரை சற்று ஒருதலைப்பட்சமானதாய் இருந்தது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. என் அம்மாவோடு நான் ராக் இசைநிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அது ஒரு பழைய குழுவினருடையதாக இருந்தது, கூட்டத்தாரும் நன்கு நடந்துகொண்டனர். ஆனால் அந்தக் கட்டுரை கண்ணியமான இசைநிகழ்ச்சியைக் காண்பதன் சாத்தியத்தைக்கூட சிறப்பித்துக் காண்பிக்கவில்லை.

எஸ். ஏ., ஐக்கிய மாகாணங்கள்

ராக் இசைநிகழ்ச்சிகளால் ஏற்படும் ஆபத்துக்களின் சாத்தியத்தை கட்டுரை முக்கியப்படுத்திக் காண்பித்தது உண்மைதான். எனினும், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதை நாங்கள் முழுமையாகவே கண்டனம் செய்யவில்லை. “நீங்கள் ஒருவேளை ராக் இசைநிகழ்ச்சிக்குப் போக நினைத்தால், அது சம்பந்தமான விவரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்பதாக நாங்கள் வாசகர்களுக்கு சொன்னோம். இவ்வாறு ஒரு சமநிலையான தெரிவை செய்ய இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் உதவுவதற்கு தகவல் கொடுக்கப்பட்டது.—ED.

கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பத்திரிகையை பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்புதானே, நாங்கள் அநேகம்பேர் ஓர் இசைநிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அது கட்டுப்பாடற்றதாக இருந்தது, அங்கிருந்த அநேகர் குடித்திருந்தனர்; அது கிறிஸ்தவர்களுக்கான ஓர் இடமே இல்லை. நிச்சயமாகவே நான் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களும் கற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எம். இ., ஐக்கிய மாகாணங்கள்

கோஸ்டா ரிகா “கோஸ்டா ரிகா—சிறிய நாடு, பல்வகை வித்தியாசங்கள்” (ஜூலை 8, 1995) என்ற கட்டுரையைக் குறித்ததில் ஒன்றை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன். “நாட்டின் கிட்டத்தட்ட 27 சதவீதம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இது உலகிலுள்ள எந்த நாட்டைக் காட்டிலும் மிக அதிகமான வீதமாக இருக்கிறது” என்பதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எனினும், உவர்ல்ட் அல்மானக்-ன்படி, ஈக்வடார் தன் முழு நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதத்தை பாதுகாப்பிற்காக ஒதுக்கிவைத்திருக்கிறது.

எம். இ., ஈக்வடார்

இதைத் தெளிவுபடுத்தியதற்காக நன்றி.—ED.

மாலி “மாலியில் முதன்முதலில் நிகழ்ந்தது” (டிசம்பர் 22, 1995) என்ற கட்டுரையை வாசித்தபோது நான் ஆனந்த கண்ணீர்விட்டேன். மாலியிலுள்ள உங்களது அங்கத்தினர்களின் ஒத்துழைப்பு, விசுவாசத்தைப் பலப்படுத்துவதாய் உள்ளது. பைபிளை கற்றுக்கொடுக்குமாறு கேட்க, நான் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டேன். கடவுளை வணங்குவதில் உங்கள் அங்கத்தினர்களோடு தோழமைகொள்வதே என் தீர்மானம்.

டி. சி. ஏ., நைஜீரியா

ட்யூரட் நோய்க்குறித் தொகுதி “ட்யூரட் நோய்க்குறித் தொகுதியோடு வாழ்வதற்கான சவால்” (டிசம்பர் 22, 1995) என்ற உங்களது கட்டுரைக்கு நன்றியை தெரிவிக்க நான் விரும்புகிறேன். வளரிளமைப் பருவத்தின் முடிவில் எனக்கிருந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன. ஆனால் எல்லாருமே அதேவிதமாய் பாக்கியவான்களாக இருந்திருக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக் கட்டுரை மதிப்புள்ள ஓர் உதவியாக இருக்கும்.

ஒய். எல்., பிரான்ஸ்

அந்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுவனை எனக்கு தெரியும். அவனுடன் இருப்பதில் நான் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்ததன் காரணமாக இந்த நாள்வரையாக நான் அவனை தவிர்த்து வந்திருக்கிறேன். என்னைவிட அவன் அதிக தர்மசங்கடமாக உணருவான் என்பதை நான் ஒருபோதும் புரிந்துகொள்ளவே இல்லை!

பி. எம்., இத்தாலி

ஐந்து வயதிலிருந்தே எனக்கு இந்தக் கோளாறு இருந்திருக்கிறது. அது என்னை மிகவும் வருத்தமடையச் செய்திருக்கிறது. எனக்கு குரல் வலிப்புகளும் தசை வலிப்புகளும் இருக்கின்றன. இந்த வலிப்புகள் ஏன் ஏற்பட்டன என்பதை என் பெற்றோராலும் புரிந்துகொள்ள முடியவில்லை, என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை; என்னை வளர்த்த முறையில் ஒருவேளை ஏதோ தவறு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து அவர்கள் கவலைப்பட்டனர். புரிந்துகொள்ள வைக்கும்படி யெகோவாவிடம் நான் ஜெபித்திருக்கிறேன், அவர் இந்தக் கட்டுரையின்மூலம் என் ஜெபத்திற்கு பதிலளித்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அதே கோளாறைப் பெற்றிருக்கும் மற்றவர்களின் அனுபவங்களை வாசிப்பதிலிருந்து நான் மிகவும் உற்சாகமடைந்தேன்.

ஒய். கே., ஜப்பான்

கிட்டத்தட்ட என் வாழ்க்கை முழுவதுமாகவே நான் இந்தக் கோளாறோடு வாழ்ந்திருக்கிறேன். ஆனால் 1983 முதற்கொண்டுதான் அது என்ன என்பதையே அறிந்திருக்கிறேன். நான் பிள்ளையாக இருந்தபோது, மற்றவர்கள் அடிக்கடி என்னை கேலி செய்வர். ஆனால் ராஜ்ய மன்றத்தில் இருந்த சகோதர சகோதரிகள் எப்போதுமே மிகவும் அன்பாகவும், அதை என்னில் ஒரு பாகமாகவும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின், கிறிஸ்தவ இளைஞர் ஒருவரை நான் காதலித்தேன். என் பிரச்சினையை அவர் முழுமையாகவே அறிந்திருந்தார். எங்கள் திருமணம் நிலைத்திருக்காது என்று என் அப்பா நினைத்தபோதிலும், 30 வருடங்களுக்குப் பிறகும்கூட நாங்கள் இன்னும் சந்தோஷமான திருமணத்தம்பதிகளாக இருக்கிறோம் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் கணவர் என்னை எப்போதும் தங்கத்தைப் போல் நடத்துகிறார். என் கோளாறு அவரைத் தொல்லைப்படுத்தவோ அல்லது தர்மசங்கடப்படுத்தவோ அவர் ஒருபோதும் அனுமதித்ததே இல்லை.

எஃப். ஹெச்., கனடா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்