உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 8/22 பக். 24-25
  • ஆபத்து!—நான் நச்சுள்ளவன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆபத்து!—நான் நச்சுள்ளவன்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நகரங்களில்?
  • ஜாக்கிரதை! பாம்புகள்!
  • நான் கடிவாங்கினால் என்ன செய்வது?
  • எந்தளவுக்கு ஆபத்து?
  • எறும்பின் வேடத்தில் சிலந்தி
    விழித்தெழு!—2002
  • வெண்கலப் பாம்பு
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா?
    விழித்தெழு!—1996
  • சிலந்தி பட்டுநூல்
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 8/22 பக். 24-25

ஆபத்து!—நான் நச்சுள்ளவன்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

நச்சுள்ள பாம்புகளும் சிலந்திகளும் இப் பரந்த நாட்டில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன என்று ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாறினவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் அடிக்கடி சொல்லப்படுகிறது. என்றாலும், அறியப்பட்ட சிலந்தி இனங்களில் சுமார் 1,700 இனங்கள் மட்டுமே இங்குக் காணப்படுகின்றன. “ஆபத்து! நான் நச்சுள்ளவன்” என்ற முத்திரையை ஓரளவானவை உண்மையிலேயே தாங்கியுள்ளன, ஆனால் பெரும்பாலானவை தீங்கற்றவை.

பாம்புகளைப் பொறுத்தவரை, சுமார் 2,500 இனங்கள் நம்முடைய கோளமாகிய பூமியில் வசிக்கின்றன. இவற்றுள் சுமார் 140 இனங்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன, சுமார் 20 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மையுள்ளவை. இந் நச்சுத்தன்மையுள்ள பிராணிகளில் ஒன்றை எதிர்ப்படும் ஒரு சாத்தியம் உண்மையிலேயே இருக்கிறதா?

நகரங்களில்?

சந்தேகமின்றி, பெரும்பான்மையான நச்சுத்தன்மையுள்ள பாம்புகளும் சிலந்திகளும் நாட்டுப்புறத்தில், அல்லது புதரில் வசிக்கின்றன. என்றபோதிலும், விசேஷமாக சிலந்திகளைக் குறிப்பிடுகையில், சில கடற்கரையோர நகரவாசிகள் நியாயமான கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, அதன் பெயர்தானே குறிப்பிட்டுக் காட்டும்விதமாக, சிட்னியில் காணப்படும் ஃபனல்-வெப் சிலந்தி (funnel-web spider) எனப்படும் ஒருவகை சிலந்தி ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரான சிட்னியிலும், அதைச் சுற்றியும் வாழ்கிறது. நீட்டிக்கொண்டிருக்கும் கரிய நிறமுள்ள விஷப்பற்களைக் கொண்ட அது, கொடுங்கனவு காண்போரின் மனதில் ஒரு மறக்கமுடியாத உருவத்தை விட்டுச் செல்லக்கூடும்.

 ஆண் ஃபனல்-வெப், அதன் இரண்டாவது காலில் நன்கு தெரியும் முள்ளால் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது, அது அபாயமானது—அதன் நச்சு பெண்ணினத்தினுடையதைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக நச்சுத்தன்மையுள்ளது. அட்ராக்ஸ் ரோபஸ்டஸ் என்பது இச் சிலந்தியின் லத்தீன் முறைப்படியான பெயர். தி ஃபனல்வெப் புத்தகம் 1980-ல் கூறினது: “கடந்த எழுபது ஆண்டுகளின்போது சுமார் பத்தொன்பது பேர் ஃபனல்-வெப் சிலந்திகள் கடித்ததால் இறந்திருப்பதாக அறியப்பட்டுள்ளனர்.” 1980-ல் ஃபனல்-வெப் சிலந்திக் கடிகளுக்கு முதல் எதிர்நச்சு வெற்றிகரமாய்க் கண்டுபிடிக்கப்பட்டது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மற்றொரு சிலந்தி ரெட்பேக் (redback) என்பது. அதன் வழவழப்பான, கரிய நிறமுடைய வயிற்றுப்பகுதியின் குறுக்கே ஆரஞ்சு கலந்த சிவப்புக் கோட்டை உடையதால் அப் பெயர் பெற்றது. சில சமயங்களில் அக்கோடு ரோஜா நிறம் அல்லது வெளிறிய சாம்பல் நிறமாயும் இருக்கும். பெண் ரெட்பேக்தான் அபாயகரமானது. உயிரிழக்கச் செய்வதற்கு சாத்தியமுள்ள அதன் கடிக்கு எதிர்நச்சு 1956-ல் கிடைத்தது. இந்த ரெட்பேக் ஆஸ்திரேலியா எங்கும் காணப்படுகிறது, பிளாக் விடோ (black widow) என்று நன்கறியப்பட்டிருக்கும் சிலந்திக்கு உறவாகவும் உள்ளது.

ஜாக்கிரதை! பாம்புகள்!

புல்வெளிகளிலோ, புறநகர்ப்பகுதிகளிலுள்ள வீடுகளில் உள்ள புதர்ச்செடிகளுக்குள்ளேயோ, குறிப்பாக இரவு நேரங்களில் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சில—புலிப்பாம்பு (tiger snake), டெத் ஆடர் (death adder), தைப்பான் (taipan) போன்றவை—அபாயகரமானவை. புலிப்பாம்பு சுமார் 1.5 மீட்டர் நீளமுடையது. அதன் முதுகுப்பகுதியில் குறுக்காக உள்ள அடர்ந்த கோடுகளினால் அதை அடையாளம் கண்டுகொள்ளலாம். அதற்குச் சினம் வந்தால் இருமுவதைப் போன்று உரக்க சீறுகிறது.

டெத் ஆடர் பல நிறமுடையது, ஆனால் மஞ்சள் கலந்த வெள்ளை நிற இணைப்பு ஒன்றை அதன் வாலின் முடிவுப் பகுதியில் பெற்றுள்ளது, இரைவிலங்கைக் கவருவதற்காக அதைக் குலுக்குகிறது. மணல் நிறைந்த பகுதிகளில் அது அடிக்கடி காணப்படுகிறது; அங்கே ஒரு குதிரைலாடத்தின் வடிவில் அது படுத்துக்கிடக்கும். டெத் ஆடர் சுமார் 60 சென்டிமீட்டர் நீளமுடையதாயும் தடியாயும் உள்ளது.

மறுபட்சத்தில், தைப்பான் மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடும்! அது வெளிறிய வண்ணமுடைய மூக்குடன், பழுப்பு நிறமுடையது. அதற்கு பெரிய நச்சு சுரப்பிகள் உள்ளன, மேலும் சிலவற்றுக்கு கிட்டத்தட்ட ஒரு சென்டிமீட்டருக்கும் மேலான நீளமுடைய நச்சுப் பற்கள் உள்ளன. ஒரு தைப்பானால் கடிக்கப்பட்ட ஒரு குதிரை, கடிபட்ட ஐந்து நிமிடத்திற்குள் இறந்துவிட்டது!

நான் கடிவாங்கினால் என்ன செய்வது?

சிலந்திக்கடிகளுக்கும் பாம்புக்கடிகளுக்கும் எதிர்நச்சு அடங்கிய மருந்து கிடைக்கிறது, மேலும் ஆஸ்திரேலியா முழுவதிலும் நச்சுத் தொடர்பான தகவல் மையங்கள் நாள் முழுவதும் தயார்நிலையில் செயல்படுகின்றன. பாம்புக்கடிகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. உடனடியாக காயம்பட்ட இடம் வெட்டப்பட்டு, அதிலுள்ள நச்சு உறிஞ்சப்படவேண்டும் என்ற கருத்து, நடைமுறையில் இல்லாததாய்க் கருதப்படுவதோடு மட்டுமன்றி, தீங்கிழைப்பதாயும் கருதப்படுகிறது. மருத்துவ அதிகாரிகளால் இப்போது கொடுக்கப்படும் ஆலோசனைகள் என்னவெனில், கடிபட்டவரை அசையாமல், அமைதியாய் இருக்கவைத்து, கடிபட்ட இடத்துக்கும் இதயத்துக்கும் இடையே இறுக்கிக் கட்டவோ, பேண்டேஜ் போடவோ வேண்டியது. பிறகு, ஓர் அழுத்தமான பேண்டேஜைக் கட்டி, ஒரு பட்டையான, மூங்கில் போன்ற பொருளை வைத்து பாதிக்கப்பட்ட உடற்பகுதியை அசையாமல் இருக்கச் செய்வது. இதற்குப் பிறகு கடிபட்டவர் ஒரு மருத்துவரைக் காண வேண்டும், அல்லது கூடிய விரைவில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஃபனல்-வெப் மற்றும் ரெட்பேக் சிலந்திகள் வீட்டிற்குள்ளே அரிதாகவே காணப்படுகின்றன. கார் நிறுத்துமிடங்களின், அல்லது கொட்டகைகளின் மூலைகளில், அல்லது, ஒரு பழைய கார், குப்பைக் குவியல், அல்லது ஒரு வெளிக்கழிவறை போன்ற ஏதாவதொரு அமைதியான, தொந்தரவில்லாத பகுதிகளில் ரெட்பேக் பதுங்குகிறது. அஜாக்கிரதையாக அவை வீட்டுக்குள் எடுத்துச் செல்லப்பட்டுவிடாதபடி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எந்தளவுக்கு ஆபத்து?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரும்பாலானோர், ஒரு ரெட்பேக்கையோ, ஒரு டெத் ஆடரையோ ஒருபோதும் பார்த்ததேயில்லை, மேலும் அதில் ஒன்றால் கடிபட்ட எவராவது ஒருவரைத் தனிப்பட்ட வகையில் அறியவும் இல்லை. உண்மையென்னவெனில், போதியளவு கவனம் செலுத்தினால், நச்சுத்தன்மையுள்ள ஒரு சிலந்தி அல்லது பாம்பால் கடிபடும் அபாயம் கிட்டத்தட்ட இல்லவேயில்லை. நச்சுத்தன்மையுள்ள பெரும்பாலான பிராணிகள் உங்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயலுகின்றன, மேலும் சினமூட்டப்படும்போதோ, மூலைக்கு அடித்துவிரட்டப்படும்போதோதான் வலியத்தாக்கும் தன்மையுள்ளவையாகின்றன.

இருந்தபோதிலும், எச்சரிப்புடன் இருப்பது ஞானமானது. நச்சுத்தன்மையுள்ள பிராணிகளைப் பற்றி ஆய்வு செய்யும் நிபுணரான ஓர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி, “கையுறை அணிந்துகொண்டு தோட்டவேலை செய்வதையும், பூட்ஸ் மாட்டிக்கொண்டு மீன் பிடிக்கச் செல்வதையும் கவனமாகப் பயணம் செய்வதையும்” அனுபவிக்கிறார். பூட்ஸ் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்? அது ஒருவேளை, பல்வகையான ஆக்டோபஸ் மற்றும் ஜெல்லிஃபிஷ், ஸ்டோன்ஃபிஷ் (stonefish) ஆகியவற்றுக்காக அவ்வாறு மாட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.

ஒருவேளை அவற்றைப் பற்றி மற்றொரு சமயத்தில் இன்னும் அதிகத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

[பக்கம் 24-ன் படம்]

பெண் ரெட்பேக் சிலந்தி

[படத்திற்கான நன்றி]

Top: By courtesy of Australian International Public Relations

[பக்கம் 24-ன் படம்]

வடக்கத்திய டெத் ஆடர்

[பக்கம் 25-ன் படம்]

[படத்திற்கான நன்றி]

By courtesy of Australian International Public Relations

ஃபனல்-வெப் சிலந்தி

[பக்கம் 25-ன் படம்]

தைப்பான்

[படத்திற்கான நன்றி]

By Courtesy of J. C. Wombey, Canberra, Australia

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்