பவழப் பாறைகளைக் காக்க என்ன செய்யப்படலாம்?
உலகளாவிய வெப்பம் மனிதகுலத்தைப் பாதித்துவருகிறது என்றும், வளர்முக நாடுகள் தொழில் விரிவாக்கத்தில் முன்னேற்றம் அடைந்துவருவதால் தொடர்ந்து அது மோசமடையும் என்றும் உலக முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் பலர் நம்புகின்றனர். ஆற்றலுக்காக, நிலக்கரி, எண்ணெய், மரம் போன்ற எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும், காடுகளை அழிப்பதற்காக அவற்றை எரிப்பதன் மூலமாகவும், ஆண்டுக்கு சுமார் முன்னூறு கோடி மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) பூகோள அளவிலான வளிமண்டலத்தில் கக்கப்படுகிறது. சில விஞ்ஞானிகள் கூறுவதன்படி, எரிபொருட்களின் உள்ளெரிதலிலிருந்து வெளிவரும் வாயுக்களினால் விளைவடையும் கண்ணாடி அறை விளைவு என்றழைக்கப்படுவது, அடுத்த நூற்றாண்டின் மத்திபப் பகுதிவாக்கில் வளிமண்டலத்தை 3-லிருந்து 8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமடையச் செய்யுமாறு அச்சுறுத்துகிறது. இவ் வெப்ப அதிகரிப்பு, பவழங்களுக்கும் பவழப் பாறை சமுதாயங்களுக்கும் அபாயத்தை விளைவிப்பதாய் இருக்கும்.
ஆனால் பவழப் பாறைகளின் மறைவு, நிலத்தில் வாழ்பவற்றைச் சாதகமற்ற விதத்தில் பாதிக்கவும் செய்யும். நேச்சுரல் ஹிஸ்ட்ரி பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “என்றபோதிலும், கண்ணாடி அறை விளைவு சம்பந்தப்பட்ட விவரத்தில் பவழப் பாறைகளே முக்கியக் காரணிகளாய் இருக்கின்றன; மேலும், கண்ணாடி அறை விளைவு வாயுக்களைக் குறைப்பதில் வெப்ப மண்டலம் சார்ந்த மழைக் காடுகளைப் போலவே முக்கியம் வாய்ந்தவையாயும் இருக்கலாம். அவற்றின் எலும்புக்கூடுகளுக்காக கால்சியம் கார்பனேட்டைப் படியச் செய்கையில், பவழங்கள் சமுத்திரங்களிலிருந்து அதிகளவான CO2-வை நீக்குகின்றன. மஞ்சள் பழுப்பு நிறப் பாசிகள் [பவழங்களின் கூட்டுயிரியான பாசிகள்] இல்லாமல், பவழங்கள் உயிரியல் மாறுபாட்டை உண்டுபண்ணும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு தீவிரமாகக் குறைக்கப்படுகிறது. எதிர்பார்ப்புக்கு முரணாக, கடலுக்கடியிலுள்ள இச் சூழல் மண்டலத்திற்கு சேதம் விளைவிப்பது, அதன் மறைவையே துரிதப்படுத்தும் ஒரு செயலை அதிகப்படுத்தலாம்.”
உள்ளெரிதலால் வெளியிடப்பட்ட பிற வாயுக்கள், கண்ணாடி அறை விளைவைக் கூட்டுகின்றன என்று சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவ் வாயுக்களில் ஒன்று, நைட்ரஸ் ஆக்ஸைடு; மற்றொன்று குளோரோஃபுளூரோகார்பன்கள் (CFCs). உண்மையில், வெப்பத்தை எடுத்துக்கொள்வதில், ஒவ்வொரு CFC மூலக்கூறும் ஒரு CO2 மூலக்கூறைவிட 20,000 மடங்கு திறனுடையது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியிலுள்ள உயிர்களைப் பாதுகாக்கும் ஓஸோன் அடுக்கை மெல்லியதாக்குவதற்கு CFC-களும்கூட முக்கியக் காரணமாய் இருப்பதாகக் குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றன. வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓஸோன், துளையேற்படுமாறு போதியளவு மெல்லியதாகியுள்ளது. அது பவழங்களுக்கு மிகவும் கெடுதல் விளைவிப்பதாகும். வெப்பமான நீரால் ஏற்கெனவே அழுத்தமுற்ற சிறிய பவழப் பாறைகளை மிகக் குறைவாக உயர்த்தப்பட்ட புற ஊதா ஒளியில் காப்பின்றி இருக்குமாறு செய்யப்பட்ட பரிசோதனைகள், வெளிறுவதை அதிகப்படுத்தின. சயன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை வருத்தத்துடன் குறிப்பிட்டது: “குளோரோஃபுளூரோகார்பன்கள் வெளியாவது இன்று நிறுத்தப்பட்டாலும், மீவளிமண்டல ஓஸோனின் அழிவுக்குக் காரணமான வேதி வினைகள் குறைந்தபட்சம் ஒரு நூற்றாண்டுக்காவது தொடரும். அதன் காரணம் எளிது: குளோரோஃபுளூரோகார்பன்கள் வளிமண்டலத்தில் அவ்வளவு காலம்வரை நீடிக்கும், மேலும், வெளியேறுவது நின்றுவிட்டிருந்ததிலிருந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் அடிவளிமண்டலத்தில் சேர்க்கப்பட்டிருந்ததிலிருந்து மீவளிமண்டலத்திற்குள் தொடர்ந்து பரவும்.”
தனிப்பட்ட அளவில், குப்பைக்கூளங்களை அல்லது மாசுபடுத்தும் பொருட்களைக் கொண்டு சமுத்திரங்களையோ, கடற்கரைப் பகுதிகளையோ மாசுபடுத்தாமலிருப்பதன் மூலம் தனி நபர்கள் பொறுப்புடன் செயல்படலாம். நீங்கள் ஒரு பவழப் பாறையைப் பார்வையிட்டால், பவழத்தைத் தொடாமலிருப்பது அல்லது அதன்மீது நிற்காமலிருப்பது தொடர்பான கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். பவழ நினைவுப் பொருட்களை எடுக்கவோ, விலைக்கு வாங்கவோ செய்யாதீர்கள். வெப்ப மண்டலம் சார்ந்த பவழப் பாறைகளுக்கு அருகில் படகோட்டினால், மணற்பாங்கான அடித்தளத்தின்மீது நங்கூரம் போடுங்கள், அல்லது கடல் சார்ந்த அதிகாரத்துறையினரால் வழங்கப்படும் மிதவைப் பிணிப்பிடங்களின்மீது நங்கூரம் போடுங்கள். உங்களது படகின் இயக்குறுப்பால் அடித்தளத்தில் விரைவாகச் செலுத்தவோ கலக்கவோ செய்யாதீர்கள். படகின் கழிவுநீரை சமுத்திரத்திற்குள் கழிக்காதீர்கள்; அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் துறைமுகங்களையும் வடிநிலங்களையும் தேடிச் செல்லுங்கள். லூயி கீ நேஷனல் மரைன் சேங்க்சுரியின் (ஃப்ளாரிடா, அ.ஐ.மா.) மேலாளர், பில் காஸி குறிப்பிட்டார்: “சமநிலையின்மைக்குக் காரணமான பிரச்சினையை ஒருவேளை மனிதன் உருவாக்கிவருகிறான். உலகளாவிய விதத்தில் நாம் அதை உணருபவர்களாய் ஆக வேண்டும். ஒரு பெரிதளவான சூழல் மண்டலத்தை இழக்கும் அச்சுறுத்தலைப் பற்றிய பொது அறிவை நாம் தொடர்ந்து பெருக்கும்போது, ஒருவேளை நாம் சூழ்நிலையை முன்னேற்றுவிக்கலாம்.”
வட்டார அளவில், பவழப் பாறைகளைக் காக்க சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு அமலாக்கப்படுகின்றன. ஃப்ளாரிடா மாநிலம் பவழப் பாறைகளைச் சேதப்படுத்தும் கப்பல் உரிமையாளர்கள்மீது வழக்குத் தொடர்கிறது. பல ஏக்கர் பரப்பிலிருந்த பவழத்தின்மீது அடிப்பாகம் உரசிச் சென்றபோது, அதைக் கிழித்துவிட்ட சரக்குக் கப்பல் ஒன்றின் உரிமையாளர்கள் 60 லட்சம் டாலர் அபராதம் செலுத்தினர். அப் பணத்தில் ஒரு பகுதி, கடல் வாழிடத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, விசேஷ ஒட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, 1994-ல் ஒரு கப்பலால் சேதப்படுத்தப்பட்ட பவழத்தை மீண்டும் சேர்ப்பதற்கு உயிரியலாளர்கள் முயன்றுவருகின்றனர். சரக்குக்கப்பல் ஒன்றால் ஃப்ளாரிடா பவழப் பாறையொன்றுக்குச் சேதமிழைத்த ஒரு கம்பெனிக்கு எதிராக மற்றொரு அபராதமான, 32 லட்சம் டாலர் விதிக்கப்பட்டது. பிற நாடுகள் அதுபோன்ற தண்டனைகளைச் சட்டமாக்கிவருகின்றன. கரிபியன் கடலைச் சேர்ந்த கேமேன் தீவுகள் போன்ற, முக்குளிப்பிற்கு பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் முக்குளிப்புக்கு அனுமதியளிக்கப்படும் பகுதிகளை மட்டுப்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியா, அங்குள்ள நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பார்க்கை உருவாக்கினது. ஆனால் அனைவரும் பார்த்திருக்கும் வண்ணமாக, முக்குளிப்போர் அதிகரிக்க அதிகரிக்க, பவழப் பாறைகளுக்கு அதிக சேதம் இழைக்கப்படுகிறது.
எல்லா தேசங்களும் போராட்டத்தில் சேருமா?
உலகளவில், ஒரு தனி தேசத்தாலோ அல்லது தேசங்களின் ஒரு தொகுதியாலோகூட தீர்க்கப்படமுடியாததாக இருக்கிறதென்று எச்சரிக்கப்பட்ட விஞ்ஞானிகளும் தலைவர்களும் முடிவெடுக்கின்றனர். காற்று, மற்றும் நீரின் சுழலோட்டங்களால், பவழப் பாறைகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தூய்மைக்கேடு பூமி முழுவதும் பரவுகிறது. தனி தேசங்களுக்கு, அவற்றின் எல்லைக்குட்பட்ட நீருக்கு அப்பால் ஆதிக்கம் செலுத்த முடியாது. எல்லைக்குட்பட்ட நீருக்கு அப்பால் குவிக்கப்பட்ட தூய்மைக் கெடுக்கும் பொருள்கள் கரைகளை வந்தடைகின்றன. ஒற்றுமைப்பட்ட உலகளாவிய முயற்சியும் தீர்வும் தேவைப்படுகின்றன.
உலகிலுள்ள உள்ளார்ந்த மற்றும் திறனுள்ள மக்கள் பூமியின் மலைக்கவைக்கும் பவழப் பொக்கிஷங்களைக் காக்கத் தொடர்ந்து போராடுவர் என்பதில் சந்தேகமில்லை. பூமியினுடைய சுற்றுச்சூழலின் மென்மைத்தன்மையைப் புரிந்து செயலாற்றும், அக்கறையுள்ள ஓர் உலக அரசாங்கம் தேவைப்படுவது தெளிவாயும் அத்தியாவசியமாயும் இருக்கிறது. மகிழ்ச்சிகரமாக, படைப்பாளர்தாமே உலகளாவிய சுற்றுச்சூழலை மீட்பார். கடவுள் முதல் மனிதரைப் படைத்தபோது கூறினார்: ‘அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் [மற்றும் கடல் உயிரிகள் அனைத்தையும்] ஆளக்கடவர்கள்.’ (ஆதியாகமம் 1:26) கடல் உயிரிகளைக் கடவுள் துர்ப்பிரயோகிக்கவோ, தன்னலத்துக்காகப் பயன்படுத்தவோ இல்லையாதலால், மனிதகுலத்துக்கு அவர் கொடுத்த சட்டமானது, மனிதன் உலகளாவிய சுற்றுச்சுழலின்மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். பைபிள் முன்னுரைக்கிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [கடவுளுடைய பரலோக ராஜ்யம்] புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) சமீப எதிர்காலத்தில், அப் பரலோக ராஜ்யம் சமுத்திரங்களை உள்ளிட்ட, இத் தூய்மைக்கேடான பூமியை முற்றிலும் தூய்மைப்படுத்தும். பிறகு, கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள், அழகிய சமுத்திரங்களின்மீதும் அவற்றின் கடல்வாழ் குடிகளின்மீதும் முழுமையாக அக்கறைகொள்ளவும் அனுபவிக்கவும் செய்வர்.
[பக்கம் 18-ன் படங்கள்]
பின்னணி: ஃபிஜிக்கு அருகில், பசிபிக் பெருங்கடலில் உள்ள ஓர் அழகிய பவழப் பாறை
உள்படங்கள்: 1. நீருக்கு அடியில் அருகிலிருந்து படம் பிடிக்கப்பட்ட கோமாளி மீன், 2. ஒரு மேஜையைப் போன்று காணப்படும் பவழம், 3. பவழத்தின்மீது சுத்தம் செய்யும் ஒரு ஷிரிம்ப்
[படத்திற்கான நன்றி]
Page 18 background: Fiji Visitors Bureau