உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 10/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • சிநேகபாவமான ராபின்
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 10/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டிப்பிழைப்பது

எனக்கு வயது 14, “பணக்கார நாடுகள் எப்போதும் ஏழை நாடுகளைச் சுரண்டிப்பிழைக்குமா?” (நவம்பர் 22, 1995) என்ற தொடர்கட்டுரைக்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். “துன்பம்” என்ற பொருளின்பேரில் எழுதும்படி என் புவியியல் ஆசிரியர் ஒரு நியமனத்தை எங்களுக்குக் கொடுத்திருந்தார். செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் தேடிப்பார்த்தேன், ஆனால் பயன்படுத்துவதற்கு எங்களுக்குப் பொருத்தமான எதையும் காணவில்லை. பிறகு, தக்க சமயத்தில், என் அறிக்கைக்கு அடிப்படையாக விளங்கும் இப் பத்திரிகை வந்துசேர்ந்தது. வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எனக்குக் கிடைத்தது; இக்கட்டுரைகளுக்காக நான் மிகவும் நன்றியுடனிருக்கிறேன்.

ஏ. ஓ., பிரேஸில்

கட்டுப்படுத்த இயலா நடத்தை “கட்டுப்படுத்த இயலா நடத்தை—அது உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறதா?” (பிப்ரவரி 8, 1996) என்ற உற்சாகமூட்டும் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் கட்டுப்படுத்த இயலா நடத்தையினால் துன்புறுகிறேன்; நான் மட்டும் தனிமையில் இல்லையென்பதை அறிகையில், அது எனக்கு உற்சாகமளிப்பதாய் இருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே அது எனக்குத் தொல்லை கொடுத்திருக்கிறது. பைபிளைப் படித்ததிலிருந்து, பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் நான் பாவம் செய்திருக்கிறேன் என்ற எண்ணம் என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. படிப்படியாக, என் பிரச்சினைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறேன். யெகோவா தம் அபூரணமான ஊழியர்களைப் புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது எவ்வளவு நன்றாயிருக்கிறது!

ஏ. பி., ஜெர்மனி

நம் படைப்பாளர் இச் சீர்குலைவைப் புரிந்துகொள்கிறார், அதோடு, “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்பதை நான் மிகவும் போற்றினேன். (1 யோவான் 3:20) தயவுசெய்து இதுபோன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்; அவை எங்களுக்கு மிகவும் உற்சாகமளிப்பவையாய் இருக்கின்றன.

டபிள்யூ. இ., ஸ்விட்ஸர்லாந்து

இக் கட்டுரை எனக்கு எவ்வளவு ஆறுதலளித்தது என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியாது. மோசமான தேவதூஷண எண்ணங்கள் எனக்கு இருந்திருக்கின்றன, அவை மனச்சோர்வுக்கும், சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களுக்கும் வழிநடத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது, யெகோவா என்னை ஒதுக்கிவிடவில்லையென்றும், மிகவும் நேசிக்கிறார் என்றும் நான் உணருகையில், ஒரு பெரிய பாரம் என் தோளிலிருந்து இறக்கப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கிறது.

ஐ. பி., பிரான்ஸ்

நான் சிறுமியாய் இருந்ததிலிருந்து, என் கைகளைத் திரும்பத்திரும்ப சுத்தம் செய்திருக்கிறேன். நான் வெளியிலிருந்து திரும்பிவர வேண்டியிருந்தாலும்கூட, ஸ்டவ்வை மூன்று தடவைகள் சரிபார்ப்பேன். பாத்திரங்களின் மீது மூடிகள் போடப்பட்டிருக்கின்றனவா என்றும், கதவுகளையெல்லாம் நான் சரியாக மூடியிருக்கிறேனா என்றும் சரிபார்ப்பதுண்டு. கட்டுப்படுத்த இயலா நடத்தைகளோடு போராடுவதால் களைப்புடன் படுக்கைக்குச் செல்கிறேன். உங்கள் கட்டுரைக்காக நன்றி.

எம். பி., வெனிசுவேலா

ராபின்கள் “சிநேகபாவமான ராபின்” (பிப்ரவரி 8, 1996) என்ற கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, தோட்டத்தில் ஒரு குழி தோண்டிக்கொண்டிருக்கையில், என்னைக் கவனித்துக்கொண்டே, அருகிலிருந்த புல்வெளியின்மீது நின்றுகொண்டிருந்த ஒரு ராபினின் இன்புறச்செய்யும் பாடலைக் கேட்டேன். அதன் குரலைப்போலவே குரலெழுப்ப நான் முயன்றவுடனேயே, அது குழியில், எனக்கருகே வந்து நின்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் மண்வெட்டியிலுள்ள மண்ணின் மேற்பரப்பிலிருந்த பூச்சிகளைக் கொத்துவதில் ராபின் மகிழ்ச்சியடைந்தது. தயவுசெய்து விலங்குலகைப் பற்றிய விஷயங்களைத் தொடர்ந்து பிரசுரிப்பீர்!

எஃப். எஸ்., ஜெர்மனி

பனிப்பாறைகள் “கடலின் படிக அரண்மனைகள்” (டிசம்பர் 8, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அவ்விஷயத்தை வாசித்துக்கொண்டும், மிகப்பெரிய அந்த பனிக்கட்டிகளின் ஒன்றுக்கு முன்னால் இருப்பதுபோன்று நானாகவே கற்பனைசெய்துகொண்டும் இருக்கும்போதே, நமக்கு இன்பமளிப்பதற்காக நம்முடைய படைப்பாளர் யெகோவா தேவன் அளித்துள்ள ஆச்சரியமான பொருள்கள் என்னைக் கவர்ந்தன. யெகோவாவைப் பற்றி சங்கீதம் 104:24-ல் சங்கீதக்காரன் கூறியிருப்பதைப்போலவே, ‘பூமி [அவருடைய] பொருள்களினால் நிறைந்திருக்கிறது.’

ஏ. ஐ. பி., பிரேஸில்

பள்ளிக் கட்டுரை “கால ஓட்டத்தில் ஒரு கணத்தை நான் மாற்ற முடிந்திருந்தால்” (பிப்ரவரி 22, 1996) என்ற எரிக்கின் பள்ளிக் கட்டுரையைப் பற்றிய சரிதை நிஜமாகவே என்னைக் கவர்ந்தது. அவனுடைய பெற்றோருக்கு பாராட்டையும் நன்றியையும் சொல்ல வேண்டும் என்ற ஓர் உணர்வு எனக்குள் எழுந்தது. தான் இளம் வயதினனாய் இருந்தபோதிலும், யெகோவாவுக்காக அப்பேர்ப்பட்ட குறிப்பிடத்தகுந்த தைரியத்தையும் அன்பையும் கொண்டிருக்கும் ஒரு மகனை வளர்ப்பதற்கு அதிக நேரத்தையும் சக்தியையும் அவர்கள் அர்ப்பணித்திருந்திருக்க வேண்டும்.

சி. என்., இத்தாலி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்