துன்பத்தின் பதையில் சவைத்தல்
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ரேடியோவில் கவனத்தைக் கவரும் விளம்பரப்பாடல்கள், மக்கள் அதைப் பயன்படுத்த உற்சாகமளிக்கின்றன. கிளர்ச்சியூட்டும், கௌரவமிக்க வாழ்க்கையைக் கொண்டிருப்பதற்கு வழிநடத்துவதாய், டிவி, பத்திரிகைகள், மற்றும் செய்தித்தாள்களில், சினிமா நட்சத்திரங்கள் அதை முன்னேற்றுவிக்கின்றனர். ஆனால் அச் சிறிய எழுத்துக்களில் இருப்பது, அப் பொருளை உபயோகிப்பது, உங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம் என்று எச்சரிக்கிறது. அது என்ன? அடிமைப்படுத்தும், தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளான பீடா (pan).
பீடா ஆசியாவில் பயன்படுத்தப்படுகிறது—இந்தியாவில் வெகு பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. அதன் பாரம்பரிய உருவில், பொடித்த வெற்றிலை பாக்கு, புகையிலை, பிற சுவையைக் கூட்டும் பொருள்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டது. புகையிலையும் வெற்றிலை பாக்கும் அப் பீடாவை அடிமைப்படுத்தும் பொருளாக ஆக்குகின்றன. சுண்ணாம்பு, துவர்ப்பான தாவரத்திலிருந்து பெறப்படும் காசிக்கட்டி ஆகியவற்றாலான பசைகள் தடவப்பட்ட ஒரு வெற்றிலை மீது இவை வைக்கப்படுகின்றன. அவ் வெற்றிலை, அப் பொருள்களை மூடும்படியாக மடக்கப்பட்டு, அந்த முழு பேக்கேஜும் வாய்க்குள் போடப்படுகிறது. ஒரு பிரசித்தி பெற்ற உருவானது, பான் மஸாலா; அதே பொருள்கள் காய்ந்த நிலையில் கலக்கப்பட்டு, எங்கும், எப்பொழுதும் உபயோகிக்குமாறு எடுத்துச்செல்லக்கூடிய சிறு நறுமணப்பைகளில் வைக்கப்படுகின்றன.
அது நீண்ட நேரம் சவைக்கப்படுகிறது, அவ்வாறு செய்கையில் எச்சில் அதிகளவு ஊறும்படி செய்கிறது, இடைவெளி விட்டுவிட்டு அதைத் துப்ப வேண்டியுள்ளது. அதிகமாக பீடாவைப் பயன்படுத்தும் பெரும்பாலான வீடுகளில், எச்சில் உமிழும் பாத்திரம் இருக்கிறது; ஆனால் வீட்டுக்கு வெளியே, நடைபாதையொன்று, அல்லது ஒரு சுவரே எச்சில் உமிழும் பாத்திரமாகிவிடுகிறது. இதுவே, பல கட்டடங்களின் படிக்கட்டுகளிலும், நடைபாதைகளிலும் காவி நிற கறைகள் காணப்படுவதற்குக் காரணமாய் இருக்கிறது.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்ட்டல் ரிஸர்ச் ஆய்வொன்றின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாய்ப் புற்றுநோயாகும்—உலக சராசரியைப் போல் இரு மடங்காகும். வாய், முகம் மற்றும் தாடை சம்பந்தமான அறுவை மருத்துவரான, டாக்டர் ஆர். குணசீலன், இந்தியா முழுவதிலுமுள்ள அறுவை மருத்துவர்கள் சொல்லும் விதமாகவே, அதற்கான பழியை முக்கியமாக பீடா சவைப்பதன்மீது போடுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல், அவர் இவ்வாறு கூறுகிறார்: “எல்லாவித பீடாக்களும் வாய்க்குத் தீங்கு விளைவிப்பதே.” பீடா “குறிப்பாக வாய்ப் புற்றுநோய்க்கு வழிநடத்தலாம்,” மேலும் “அதைச் சவைப்பது முகத்தை விகாரமாக்கிக் கொள்வதைப் போன்றது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆகவே, பீடாவைப் பயன்படுத்துவது, ஒருவர் துன்பத்தின் பாதையில் சவைப்பதை அர்த்தப்படுத்தலாம்.
[பக்கம் 31-ன் படம்]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாய்ப் புற்றுநோயாகும்
[படத்திற்கான நன்றி]
WHO photo by Eric Schwab