உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 3
  • கடவுளின் பெயரில் கொல்லுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் பெயரில் கொல்லுதல்
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • அன்று இஸ்ரவேலர்கள் போர் செய்தார்கள்—நாம் ஏன் செய்வதில்லை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • பன்முனை குண்டு வீச்சுகளின் மத்தியில் மதம்
    விழித்தெழு!—1986
  • எந்த மதம் கடவுளின் சம்மதத்தைப் பெறுகிறது?
    விழித்தெழு!—1997
  • முஸ்லீம்களை சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 3

கடவுளின் பெயரில் கொல்லுதல்

பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்

“கடவுளின் பெயரில், நாங்கள் கொல்லுகிறோம், கொன்றுகொண்டே இருப்போம்”

மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள மேலே உள்ள தலைப்புச் செய்தியின்கீழ், இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் செய்தித்தாள் குறிப்பிட்டதாவது: “அவ்வப்போது தோன்றும் நன்னம்பிக்கைவாதிகளுக்கு இந் நூற்றாண்டு அறிவொளியூட்டப்பட்ட ஒரு நூற்றாண்டாக இருக்கப்போவதாய் எண்ணத் தோன்றுகையில், இது அதற்கு முந்திய நூற்றாண்டுகளைப் போலவே கறை படிந்ததாய் இருந்திருக்கிறது. எப்படியென்றால், கடவுளின் பெயரில் மனிதர் ஒருவரையொருவர் கொல்லும் பயங்கரமான மனச்சாய்வு கொண்டுள்ளனர்.”

அந்த ஆசிரியர் முந்தின நூற்றாண்டுகளில் நடைபெற்றிருந்த மதப் படுகொலைகளின் உதாரணங்களை மேற்கோள் காட்டினார். பிறகு, 20-வது நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கும் படுகொலைகளைச் சுட்டிக்காட்டி, முடிவாகக் கூறினதாவது: “கடந்த காலங்களில் இருந்துவந்த அநாகரிகமான சகிப்புத்தன்மையின்மையே தொடர்ந்து பயமுறுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். அரசியல் சார்ந்த வன்முறைக்கும் எல்லைத் தகராற்றிற்கும் வழிபாட்டு முறையையே சாக்காகச் சொல்லிக்கொள்ளும் நிலை தொடர்ந்து வழக்கமாய் இருந்துவருகிறது.”

பண்டைய இஸ்ரவேலர் கானானியர்களைக் கொன்றதற்குக் கடவுள் சம்மதம் தெரிவித்ததையே, மதத்தின் பெயரில் செய்யப்பட்டு வரும் இன்றைய போர்களுக்குச் சாக்காகச் சொல்லிக்கொள்ள முயலுகின்றனர். ஆனாலும், கிறிஸ்தவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் இன்று போரிடுவதற்கு அதைச் சாக்காகச் சொல்லிக்கொள்ள முடியாது. ஏன்? ஏனெனில், இஸ்ரவேலர் கடவுளால் நேரடியாக கற்பிக்கப்பட்டனர். பேய் வணக்கத்தாருக்கு எதிராகத் தம்முடைய நீதியான நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுபவர்களாகச் செயல்பட அவர்கள் கடவுளால் பயிற்றுவிக்கப்பட்டனர்; அந்த ஜனங்களுடைய வழிபாட்டு முறையில், வினைமையான பாலியல் ஒழுக்கக்கேடு, குழந்தைகளைப் பலிசெலுத்துதல் ஆகியவையும் அடங்கியிருந்தன.—உபாகமம் 7:1-5; 2 நாளாகமம் 28:3.

பண்டைய இஸ்ரவேலர் செய்த போர்கள் சாதாரணமானவையல்ல என்பதற்கான ஒரு நிரூபணம், அத் தேசத்தாருக்குக் கடவுளால் கிடைத்த அற்புதத் தன்மைவாய்ந்த வெற்றிகளே ஆகும். உதாரணமாக, பண்டைய இஸ்ரவேலர் ஒரு சந்தர்ப்பத்தில் எக்காளங்கள், பானைகள், தீவட்டிகள்—ஒரு போருக்குரிய ஆயுதங்களாக நிச்சயமாகவே கருதப்படாதவை—ஆகியவற்றைப் பயன்படுத்தும்படி வழிநடத்தப்பட்டனர்! மற்றொரு சந்தர்ப்பத்தில், இஸ்ரவேலருடைய படையொன்றின் முன்னணியில் பாடகர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். அந்தப் படைக்கு எதிரே, பல்வேறு தேசங்களிலிருந்து வந்து முற்றுகையிட்ட சேனைகளின் திணறவைக்கும் படைபலம் இருந்தது.—நியாயாதிபதிகள் 7:17-22; 2 நாளாகமம் 20:10-26.

மேலுமாக, அவ்வப்போது, கடவுளால் உத்தரவிடப்படாத போர்களில் இஸ்ரவேலர் கலந்துகொண்டபோதோ, அவர்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படவில்லை; அதோடு, அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். (உபாகமம் 28:15, 25; நியாயாதிபதிகள் 2:11-14; 1 சாமுவேல் 4:1-3, 10, 11) ஆகவே, இஸ்ரவேலர் போர்களில் ஈடுபட்டதை சாக்குப்போக்காக சொல்லிக்கொண்டு, கிறிஸ்தவ மண்டலம் போரில் ஈடுபட முடியாது.

மதத்தின் பெயரில், இந்துக்கள் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிராகவும் போரிட்டிருக்கின்றனர்; ஷையா பிரிவைச் சேர்ந்த முஸ்லீம்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராகப் போர் செய்திருக்கின்றனர்; இலங்கையில், புத்த மதத்தினரும் இந்துக்களும் ஒருவரையொருவர் கொன்றிருக்கின்றனர்.

பிரான்ஸில் 16-வது நூற்றாண்டின்போது நடந்த போர்களிலிருந்து, கடவுளின் பெயரில் கொல்லுவது எங்கும் பரவலாய் இருந்துவருவது தெரியவருகிறது. இந்தப் போர்களைப் பற்றிய கதை, ஐரோப்பாவைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க, புரொட்டஸ்டண்ட் மதங்களின் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க இரத்தஞ்சிந்தும் நிகழ்ச்சிகளை உள்ளடக்குகிறது. இந்தப் போர்களைப் பற்றிப் பரிசீலித்து, அவற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று காண்போம்.

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

U.S. Army போட்டோ

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்