உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 7/22 பக். 30
  • எமதுவாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமதுவாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • ஆக்கீ—ஜமைக்காவின் தேசிய உணவுவகை
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 7/22 பக். 30

எமதுவாசகரிடமிருந்து

வானொலி “வானொலி—உலகை மாற்றிய ஒரு கண்டுபிடிப்பு” (அக்டோபர் 8, 1996) என்ற அருமையான கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. எனக்கு 18 வயது ஆகிறது, வானொலியை அதிகம் விரும்பி கேட்பேன். வானொலியின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. முற்காலங்களில் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதற்கு யெகோவாவின் சாட்சிகள் வானொலியைப் பயன்படுத்தினார்கள் என்று அறிவது அதிக அக்கறைக்குரியதாக இருந்தது.

எஃப். பி., இத்தாலி

பட்டாம்பூச்சிகள் ஒரு பண்ணை பகுதியில் நான் தனியாக ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, “மென்மையான ஆனால் திடமான ஒரு பயணி” (அக்டோபர் 8, 1996) என்ற கட்டுரையை சிறப்பித்துக் காட்ட தீர்மானித்தேன். ஒரு கம்பீரமான விவசாயியை சந்தித்தேன். சாதாரணமாக, அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் பட்டாம்பூச்சிகளைப் பற்றி பேசியிருக்க மாட்டேன்! ஆனால், கவர்ச்சியூட்டும் அந்தப் படங்களைப் பார்த்தபிறகு, அவர் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய பண்ணையில் அநேக அரிய பட்டாம்பூச்சிகளைப் பார்க்கமுடியும் என்று சொன்னார். நான் அவருடைய வீட்டைவிட்டு வந்தபோது, அவருடைய மனைவி அந்தப் பத்திரிகையில் மூழ்கிப்போயிருந்தார். ஆகவே, பட்டாம்பூச்சியைப் போல, நான் மறுபடியும் திரும்பிப்போய் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்களுக்கு அதிகம் சொல்லுவேன்!

பி. பி., இங்கிலாந்து

நான் மிகவும் அதிகமாக அனுபவித்து வாசித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. அந்தப் பத்திரிகை வந்த ஒருசில நாட்கள் கழித்து, எங்கள் மரங்கள் முழுவதும் மொனார்க்குகள் நிறைந்திருக்கக் கண்டேன்! அவருடைய அருமையான சிருஷ்டிப்பிற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

எஸ். எம்., ஐக்கிய மாகாணங்கள்

தீமைகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன “இளைஞர் கேட்கின்றனர் . . . தீமைகள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?” (அக்டோபர் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. பெண்களை மதிக்காத, விசுவாசமற்ற ஒரு கணவனுடன் வாழ்ந்த 18 வருட திருமண வாழ்க்கையில் தனிமை, அவமானம், தாங்கமுடியாத துக்கம் ஆகியவற்றை அனுபவித்த எனக்கு, யெகோவா நம்மீது அக்கறையுள்ள ஒரு அன்பான கடவுளாக இருக்கிறார் என்பதை வாசிப்பது சுகப்படுத்தும் மருந்தைப்போல இருந்தது. யெகோவா தாமே என்னை ஆறுதல்படுத்துவதைப் போல அது இருந்தது.

ஹெச். டி., ஐக்கிய மாகாணங்கள்

சிகரெட்டுகள் “சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?” (அக்டோபர் 22, 1996) என்ற கட்டுரையை பற்றி கூற விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு அந்தக் கட்டுரை கிடைக்காமல் போனது எவ்வளவு வருந்தத்தக்கது! நுரையீரல் புற்றுநோயால் என் கணவர் இந்த வருடம் இறந்துபோனார். 50 வருடங்களாக அவர் மிகவும் அதிகமாக புகைத்துக்கொண்டிருந்தார். சிகரெட்டுகள் இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை நானும்கூட அறியாமலிருந்தேன்.

ஹெச். ஜி., ஜெர்மனி

ஆக்கி “ஆக்கி—ஜமைக்காவின் தேசிய உணவுவகை” (அக்டோபர் 22, 1996) என்ற உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. ஜமைக்காவில் , ஆக்கியை விரும்பாத ஒருவருக்கும் அதை நான் பரிமாறினது இல்லை. ஜமைக்காவிற்கு போகும் எவரும் ஆக்கியை சாப்பிட்டு பார்க்கும்படி உற்சாகப்படுத்துகிறேன்.

இ. பி., ஐக்கிய மாகாணங்கள்

நம்முடைய சிருஷ்டிகரின் வேலைகளில் மற்றொன்றை பற்றிய கலந்தாலோசிப்பை காண்பது எவ்வளவு நன்றாக இருந்தது! இங்கு கானாவில் ஆக்கி மரங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன; மேலும் சில நகரங்களிலும் கிராமங்களிலும் நிழல் தரும் மரங்களாக சேவிக்கின்றன. காட்டிலோ அவை மிகவும் உயரமாக வளர்கின்றன. வௌவால்கள், கிளிகள், இன்னும் மற்ற பறவைகள் அவற்றின் கிளைகளில் வந்து தங்கும். ஆக்கி மரம் கடவுளிடமிருந்து வந்த மற்றொரு அற்புதமான பரிசு.

பி. ஏ. ஈ., கானா

குதிரைகள் “குதிரைகளால் அவர்கள் இன்னும் நிலத்தை உழுகின்றனர்” (அக்டோபர் 22, 1996) என்ற கட்டுரைக்கான போற்றுதலை தெரிவித்து எழுத நான் அதிகமாக தூண்டப்பட்டேன். நான் மிருகங்களை விரும்புபவள்; அந்தக் கட்டுரை என் இதயத்தை தொட்டது. மனிதன் மிருகங்களுடன் கொண்டிருக்கக்கூடிய உறவை பற்றி நீங்கள் சொன்ன விதம், முக்கியமாக, ஒருவர் தன் குதிரைகளுடன் “சம்பாஷணை” கொள்வதை அனுபவிக்கும் அந்தப் பகுதி, எனக்குப் பிடித்திருந்தது.

வி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

என்னுடைய முழு வாழ்க்கையையும் ஒரு மாநகரப் பகுதியிலேயே வாழ்ந்துவிட்டேன். யெகோவாவின் சிருஷ்டிப்பிற்கு அருகில் இருக்கவேண்டும் என்ற என் ஆசை இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. உங்கள் கட்டுரையை வாசிப்பதன் மூலம், என்னுடைய கற்பனையில் குதிரைகளுடன் வேலைசெய்ய முடிந்தது. அப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிகவும் நன்றி.

எல். ஏ. டி., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்