உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 8/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2002
  • “இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 8/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வார்த்தை துர்ப்பிரயோகம் “புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு” (அக்டோபர் 22, 1996) என்ற தொடர்கட்டுரை, எந்தளவுக்கு யெகோவா நம்மிடம் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதைக் காட்டியிருக்கும் பல கட்டுரைகளில் ஒன்றே ஒன்றுதான். “குடிவெறியர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவி” (மே 22, 1992, ஆங்கிலம்), “பெண்கள்—மரியாதைக்குரியவர்கள்” (ஜூலை 8, 1992, ஆங்கிலம்), “மணவிலக்குக்கு உட்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி” (ஏப்ரல் 22, 1991, ஆங்கிலம்), “குடும்பத்தில் வன்முறை எப்போதாவது முடிவடையுமா?” (மே 8, 1993) ஆகிய தலைப்புகளில் வெளிவந்திருந்த கட்டுரைகள் அனைத்துமே, குடிகார கணவனிடம் ஆண்டுக்கணக்கில் உணர்ச்சிப்பூர்வ துர்ப்பிரயோகத்துக்கு உட்பட்டிருக்கும் என்னைத் தாங்கி நிலைபெறச் செய்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை ஆனந்தக் கண்ணீரோடும் வருத்தத்தோடும் நான் வாசித்திருக்கிறேன். நம்முடைய வெகு அந்தரங்க பயங்களையும், வேதனைகளையும், அதிர்ச்சிகளையும் பற்றி அறிந்துள்ள ஒரு கடவுளுக்கான போற்றுதலால் என் நெஞ்சம் நிறைந்து வழிகிறது.

ஜே. சி., கனடா

அந்தக் கட்டுரைகள் என்னை மிகவும் நெகிழச்செய்தன. என் கணவருடன் எனக்கிருந்த சூழ்நிலையை அவை தத்ரூபமாய் விளக்கின. ஒவ்வொரு வாக்கியத்தையும் நான் வாசிக்க வாசிக்க, உடனே அவற்றை என்னால் ஒத்துக்கொள்ள முடிந்தது. நீங்கள் பெண்களை மிகவும் அன்பான விதத்தில் நடத்துகிறீர்கள்; இதுவே, இந்த அமைப்பு யெகோவாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எனக்கு உறுதிப்படுத்துகிறது.

பி. எஸ்., ஜெர்மனி

என் நாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் என் பலவீனத்துக்கெதிராக தொடர்ந்து போராட இந்தக் கட்டுரைகள் என்னை உற்சாகப்படுத்தின. என் கணவரை எவ்வாறு நடத்திவர வேண்டும் என்று இப்போது எனக்குத் தெரியும். என் கண்களில் கண்ணீர் மல்க இந்தக் கட்டுரைகளை நான் வாசித்தேன்.

ஜி. ஐ., ஆஸ்திரியா

நான் வருடக்கணக்கில் என் கணவருடைய வன்முறையான வார்த்தைகளுக்குப் பலியாகி இருந்திருக்கிறேன். கடவுளுடைய ஆவியின் கனிகளை வளர்ப்பதன் மூலமாகவும், முழுநேர பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக என்னை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலமாகவும் நம்பிக்கையிழந்த நிலைக்குள்ளாவதைத் தவிர்க்க என்னால் முடிந்தளவு சமாளித்திருக்கிறேன். நான் தனிமையாய் இல்லை, இந்தப் பிரச்சினையை ஒருவர் புரிந்துகொள்கிறார் என்று உங்கள் கட்டுரைகள் என்னை உணரச்செய்தன.

எம். என்., இத்தாலி

உங்கள் கட்டுரைகள் பலவற்றை நான் முன்பு வாசித்திருக்கிறேன். ஆனால் இவை, என்னை வெகுவாய் பாதித்தன. பக்கம் 9-ல் உள்ள போட்டோவைப் பார்த்தது, தங்களுடைய கணவன்மார்களிடம் பல ஆண்டுகளாய் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் என் அம்மாவையோ, என் சகோதரியையோ பார்ப்பதைப்போல் இருந்தது. நான் இந்தக் கட்டுரைகளின் நகலெடுத்து, இதைப் போன்று கொடுமைப்படுத்தப்படுபவர்களாய் எனக்குத் தெரிந்த மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தேன். எந்தவித துர்ப்பிரயோக பேச்சுக்களும் இல்லாத கடவுளுடைய புதிய உலகை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.

பி. பி., கென்யா

தன் மனைவியை வார்த்தையால் துர்ப்பிரயோகம் செய்த என் மாமாவுக்கு நான் இந்தப் பத்திரிகையைக் கொடுத்தபோது, அவர் பல தடவை அதை வாசித்தார். அதற்குப் பிறகு, அவர் தன் மனைவியை துர்ப்பிரயோகிக்கவேயில்லை; வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. மாமாவும் அத்தையும் தாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்படி உதவினதற்காக எனக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்கின்றனர். அந்த நன்றியை, விழித்தெழு!-வுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன்.

எஃப். எஃப்., நைஜீரியா

போதைப்பொருளின் முன்னாள் அடிமை “சத்தியம் என்னை மீண்டும் உயிரடையச் செய்தது” (அக்டோபர் 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்கு வயது 19; நான் ஓர் ஒழுங்கான பயனியராக, அல்லது முழுநேர பிரசங்கியாக இருந்தபோதிலும், ஏதோ சிலவற்றை நழுவவிட்டுக் கொண்டிருப்பதாக சிலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இந்த உலகின் கவர்ச்சி வெறும் ஒரு பிரமையே எனக் காண்பதற்கு டாலீ ஹாரீயின் அனுபவம் எனக்கு உதவியது.

ஆர். எம். ஏ., பொலிவியா

இந்தக் கட்டுரையால் நான் எந்தளவுக்கு உந்துவிக்கப்பட்டேன் என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். டாலீ ஹாரீயின் வாழ்க்கை சரிதையை நான் வாசிக்கையில், என் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. டாலீயின் முன்னாளைய வாழ்க்கை வழியைப் பின்பற்றும் மற்றவர்கள் இப்போது அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழத் திரும்பும்படி இந்தக் கட்டுரை அவர்களுக்கு உதவ நான் பிரார்த்திக்கிறேன்.

ஓ. எஸ். ஓ., நைஜீரியா

யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவனாக, டாலீ ஹாரீ ஒரு கிறிஸ்தவ சகோதரியாக எனக்கிருப்பதை கௌரவமாய் நான் எண்ணுகிறேன். நான் பருவவயதில் இருக்கையில், என் வாழ்வில் யெகோவாவுக்கு இரண்டாம் இடத்தையே கொடுத்தேன். ஆனாலும், என் அம்மா என்மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை; கடந்த வருடத்தில் என் முழுக்காட்டுதல் சமயத்தில் அவர்கள் சொல்ல முடியாத அளவுக்கு குதூகலம் அடைந்தார்கள்.

பி. பி., ஆஸ்திரேலியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்