உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 12/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தவறாக புரிந்துகொள்ளுதல் ஆபத்தானது
  • பைசா நகர சாய்ந்த கோபுரம் ஸ்திரப்படுத்தப்பட்டுவிட்டதா?
  • உலகளாவிய சட்டவிரோத போதைப்பொருள் உபயோகம்
  • தொற்றுநோய்கள் அதிகரிக்கின்றன
  • “கும்பல் ஆட்சி”
  • “பரிசுத்த நகரம்”—குறைந்துவரும் அதன் பக்தி
  • இந்தியாவை தாக்கும் காசநோய்
  • நல்ல எலியா?
  • உறுப்பறுக்கப்பட்ட சிறுமிகளும், பருவ வயது பிள்ளைப்பேறும்
  • காசநோயை எதிர்க்க புதிய கவசம்
    விழித்தெழு!—1999
  • வெற்றியும் அவலமும்
    விழித்தெழு!—1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • காச நோய் திரும்பவும் தாக்குகிறது!
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 12/8 பக். 28-29

உலகை கவனித்தல்

தவறாக புரிந்துகொள்ளுதல் ஆபத்தானது

1977-ல், ஒரு சிறிய வார்த்தையின் அர்த்தத்தை தவறாக புரிந்துகொண்டது உலகின் மிகமோசமான விமான விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது என தி யுரோப்பியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. 747 விமானத்தின் டச் விமானி ஒருவர், தான் “மேலெழும்பும் தருவாயில்” (at take-off) இருப்பதாக செய்தி அனுப்பினார்; விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்த, கானரித் தீவுகள், டெனரிஃபேவைச் சேர்ந்தவர் இதை, அந்த விமானம் நின்றுகொண்டிருப்பதாக அர்த்தப்படுகிறது என புரிந்துகொண்டார். என்றபோதிலும், மூடுபனி நிறைந்த ரன்வேயில் மேலெழும்புவதற்காக தன் விமானம் வேகமாகச் செல்வதாக அந்த விமானி அர்த்தப்படுத்தினார். அதன் விளைவாக, அது மற்றொரு 747 விமானத்துடன் மோதி 583 பேர் இறந்துபோனார்கள். அவ்வாறே, 1996-ல் இந்தியாவிலுள்ள டில்லிக்கு அருகில் நடுவானில் விமானங்கள் மோதியதற்கும் மொழி அறிவு குறைவுபட்டதே முக்கிய காரணமாகும்; அதில் 349 பேர் இறந்தனர். வினைமையான தவறுகள் குறைவாக இருந்தபோதிலும்கூட, விமானப் பயணம் சார்ந்த பொது ஆங்கிலத்தில் விமானிகள் கடுமையான பயிற்சி பெற்றிருந்தும், விமானப் பயணம் சார்ந்த விசேஷித்த வார்த்தைகள் சிலவற்றையே சில விமானிகள் அறிந்திருக்கின்றனர். அவசரநிலை ஏற்படும்போது அவர்களின் மொழி அறிவு உதவாமல் போய்விடலாம். விமானப் பயணம் சார்ந்த சரியான தகவல் பரிமாற்றத்திற்கு விமானிகளின் அறையில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உபயோகிக்கும்படி வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

பைசா நகர சாய்ந்த கோபுரம் ஸ்திரப்படுத்தப்பட்டுவிட்டதா?

பல நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாய் சாய்ந்துகொண்டிருந்த பைசா நகர சாய்ந்த கோபுரம், நிச்சயமாக விழுந்துவிடும் என தோன்றியது; ஆனால், அதன் அடிப்புறத்தில் சரிசம எதிர் எடையாக ஆயிரம் டன் எடையுள்ள ஈய வார்ப்புக்கட்டிகளை வைத்ததினால், கடைசியில் ஸ்திரப்பட்டு விட்டதைப்போல் தோன்றுகிறது. அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேச கமிஷனின் தலைவரான பேராசிரியர் மிகெலே ஜமையல்காவ்ஸ்கி இதை அறிவித்தார். “என்றாலும், அது விழாமல் இருக்குமா என்ற பிரச்சினை இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது; ஏனென்றால் அது நிலைத்திருந்த கடந்த எழுநூறு வருடங்களில், அதன் செங்குத்தான நிலையிலிருந்து ஐந்து மீட்டர் [16 அடி] சாய்ந்திருப்பதானது மிகவும் கவலைக்குரிய நிலையில் இருக்கிறது” என லா ஸ்டாம்பா என்ற இத்தாலிய செய்தித்தாள் கூறுகிறது.

உலகளாவிய சட்டவிரோத போதைப்பொருள் உபயோகம்

சர்வதேச வணிகம், விளைபொருள் ஆகியவற்றின் வருவாயில் சட்டவிரோத போதைப்பொருட்கள், 8 சதவீதம்—ஏறக்குறைய 40,000 கோடி டாலர்—வரைக்கும்கூட காரணமாக இருப்பதாக ஒரு ஐநா அறிக்கை கூறுகிறது. அந்த 332 பக்க அறிக்கைதான், சட்டவிரோத போதைப்பொருட்களின் உலகளாவிய பாதிப்பைப் பற்றிய முதல் முழுமையான ஆராய்ச்சியாகும். உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய 2.5 சதவீதத்தினர்—கிட்டத்தட்ட 14 கோடி மக்கள்—மரிஜுவானாவை அல்லது அதிலிருந்து பெறப்படும் ஹஷீஷை புகைக்கின்றனர் என அது காட்டுகிறது. மூன்று கோடிப் பேர் ஆம்ஃபிடமைன் போன்ற தூண்டுதலளிக்கும் மருந்துகளையும், 1.3 கோடிப் பேர் ஏதோ ஒருவகை கோகெயினையும், 80 லட்சம் பேர் ஹெராயினையும் பயன்படுத்துகின்றனர். சட்ட அமலாக்க பிரிவுகள், பல ஆயிரக்கணக்கான டன் மரிஜுவானா, கோகெயின், ஹெராயின், மார்ஃபீன் போன்றவற்றை கைப்பற்றியபோதிலும், இன்னும் அநேகம் அகப்படாமலேயே போய்விடுகின்றன. கைப்பற்றப்படும் விகிதமானது கோகெயினுக்கு 30 சதவீதமாகவும், ஹெராயினுக்கு வெறுமனே 10 முதல் 15 சதவீதமாகவும்தான் இருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறியது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கள் மிக சிக்கலானவை. ஐநா போதைப்பொருள் கட்டுப்பாட்டு திட்டத்தின் பொது மேலாளரான ஜோர்ஜோ ஜாகோமெல்லி இவ்வாறு கூறுகிறார்: “தனிப்பட்ட விதமாக தேசங்கள் இதைக் கையாள முடியாத அளவிற்கு, இந்தப் பிரச்சினை உலகளாவிய ஒன்றாகிவிட்டிருக்கிறது.”

தொற்றுநோய்கள் அதிகரிக்கின்றன

“கடந்த 20 வருடங்களுக்குள், முற்றிலும் புதிய, அதிக தொற்றும் தன்மையுள்ள 30 வியாதிகள் தோன்றியிருக்கின்றன” என்று நாசாயுஷ நாய ப்ரெஸெ அறிவிக்கிறது. இவற்றுள், இபோலா, எய்ட்ஸ், ஈரலழற்சி-சி போன்ற பெரும்பாலான வியாதிகளுக்கு சிகிச்சையே கிடையாது. மேலுமாக, மலேரியா, காலரா, காசநோய் போன்ற தொற்றுநோய்களும் அதிகரிக்கின்றன. ஏன்? உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO), “அதிகளவான நோயுயிர் முறிகளுக்கு அதிக எண்ணிக்கையான வைரஸ்கள் எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதே அநேக வியாதிகள் மறுபடியும் தோன்றுவதற்குக் காரணம். அந்தச் செயல்முறை அதிக செலவுபிடிக்கும் ஒன்றாக இருப்பதால் வெகு சில புதிய நோயுயிர் முறிகளே தயாரிக்கப்படுகின்றன.” இந்தப் போக்கை முற்றிலும் மாற்றும் ஒரு முயற்சியாக, “புதிய நோயுயிர் முறிகளை தயாரிப்பதற்கும், தொற்றுநோய்களை கண்டறிவதற்கான மேம்பட்ட வழிமுறைகளை கண்டறிவதற்கும் அதிகத்தை முதலீடு செய்யும்படி” அரசாங்கங்களுக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் WHO அழைப்பு விடுத்திருக்கிறது. 1996-ல் உலகமுழுவதிலும் தொற்றுநோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 5.5 கோடியாகும்.

“கும்பல் ஆட்சி”

கடந்த மார்ச் மாதத்தில், யெகோவாவின் சாட்சிகள் கற்களாலும் செங்கற்களாலும் தாக்கப்பட்டு, அவர்களுடைய மன்றம் உடைத்து நொறுக்கப்பட்டு, அவர்கள் பிரசுரங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களைப் பற்றி த ஜெரூசலம் போஸ்ட்-ன் பதிப்பாசிரியர் குழுவில் இருக்கும் ஒருவரான கைம் ஷாப்பீரோ இந்தத் தலைப்பில் அறிவிக்கிறார். “சென்ற வருடம், ஜாஃபாவில் ஒரு கத்தோலிக்க சர்ச் தாக்கப்பட்டபோது, இஸ்ரேலிலும் வெளிநாடுகளிலும் இருந்து உடனடியாகவும் நியாயமாகவும் எதிர்ப்புகள் எழுந்தன. லாட்-ல் உள்ள மன்றம் தாக்கப்பட்டபோதோ, பேச்சுமூச்சே இல்லை” என்று அவர் கூறினார். தனிப்பட்டவிதமாக அவர் யெகோவாவின் சாட்சிகளை ‘விரும்பாமலும் நிராகரித்தாலும்’ “நாசி ஜெர்மனியில் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களுள் அவர்களும் ஒரு தொகுதியினர்” என்று ஷாப்பீரோ நினைவுகூருகிறார். “அப்படிப்பட்ட ஆட்களை, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போக்குடைய எவரும் தாக்கி, அவர்களுடைய வணக்க ஸ்தலத்தைத் தகர்த்து, புத்தகங்களை எரிப்பதைப் பற்றி கற்பனைசெய்வது, கொடுங்கனவுகளை ஏற்படுத்தி, இதற்குமுன் சரித்திரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிதரும் நிகழ்ச்சிகளை திரும்பவும் மனதிற்குக் கொண்டுவருகிறது” என்று அவர் எழுதுகிறார்.

“பரிசுத்த நகரம்”—குறைந்துவரும் அதன் பக்தி

பரிசுத்த நகரம் என்று அழைக்கப்பட்டும், கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் அதன் பிஷப்பாக இருந்தும்கூட, சிலர் நினைக்குமளவுக்கு ரோம் நகரம் மதப்பற்றுள்ளதாக இல்லை. ரோமிலுள்ள த்தேர்ட் யூனிவர்சிட்டி செய்த ஒரு தேசிய ஆய்வின்படி, இத்தாலியர்களில் ஏறக்குறைய 10 சதவீதத்தினர் தங்களுக்கு கிறிஸ்தவத்தில் “கொஞ்சம்கூட” அக்கறையில்லை என்றனர்; ஆனால் ரோமில் இந்த எண்ணிக்கை 19-ஆக உயர்கிறது. கத்தோலிக்க சர்ச்சில் “கொஞ்சம்” அக்கறை இருப்பதாக கூடுதலான 21 சதவீத ரோமர்கள் கூறியதாக லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள் கூறுகிறது. மறுபட்சத்தில், வெறும் 10 சதவீதத்தினரே மதத்தில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர். சமூகவியலரான ரோபெர்டோ ச்சீபிரியனியின்படி, நடத்தை மற்றும் மனப்பான்மை பற்றிய சர்ச்சின் கட்டளைகளை ரோமிலுள்ள ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் மட்டுமே முழுமையாகப் பின்பற்றுகிறார்.

இந்தியாவை தாக்கும் காசநோய்

காசநோய் (டிபி) நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த எடுக்கும் கடுமையான முயற்சிகள் மத்தியிலும், இந்தியாவில் வயதுவந்தவர்களில் இரண்டு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் மத்தியில் ஒவ்வொரு வருடமும் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர டிபியால் தாக்கப்படுகின்றனர்; அதனால் 5,00,000 பேர் வரை இறக்கின்றனர் என்று தி ஏஷியன் ஏஜ் செய்தித்தாள் அறிவிக்கிறது. WHO-வின்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அந்த வியாதியால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும். டிபியால் தாக்கப்படுகிறவர்கள் அதன் விளைவை சமாளிக்கும் பிரச்சினையோடுகூட, அந்த வியாதியுடன் பொதுவாக சம்பந்தப்பட்ட சமூக இழுக்கோடும் களங்கத்தோடும் வாழவேண்டும். அயலகத்தார், முதலாளிகள், உடன்வேலை செய்பவர்கள் ஆகியோரால் ஒதுக்கப்படுவதில் இது விளைவடையலாம். திருமணமான இளம் பெண்களில் டிபியால் தாக்கப்பட்டவர்களாக கண்டுபிடிக்கப்படுகிறவர்கள், தாய்மைக்கு தகுதியற்றவர்கள் என்று தங்கள் பெற்றோரிடம் திரும்பி அனுப்பிவிடப்படுகின்றனர்.

நல்ல எலியா?

“எலிகளைப் பற்றி நிலவும் கருத்து கெட்டதாகவே இருக்கிறது” என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது. “அவர்கள் நன்றிகெட்ட வேலையாட்கள், குப்பை மேட்டில் வாழ்பவர்கள், அரசாங்க பொறுப்பிற்கான வேட்பாளர்களாகவும்கூட இருக்கின்றனர்.” ஆனால், உயிர்-இயற்பியலரான ஜூடி ரிவஸுக்கு சொந்தமான, சோதனைக்கூட எலியாகிய ரேட்டி வித்தியாசப்பட்ட ஒன்று. அநேக பள்ளிகளில் கம்ப்யூட்டர் நெட்வர்குகள் நிறுவப்படுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான மீட்டர் கம்ப்யூட்டர் ஒயர்களை இணைக்க ரேட்டி உதவியிருக்கிறது. “சுவர்களிலும் தரைக்கு கீழும் கூரைகளிலுமுள்ள உத்திரங்கள், குழாய்கள் ஆகியவற்றின் வழியாக, கம்பியைத் தன் வாயில் கவ்விக்கொண்டு புகுந்து செல்கிறது” என்று அந்த ஜர்னல் விளக்குகிறது. “வெளியே வரும் வழியை கண்டுபிடிக்க, தட்டும் சத்தங்கள், ருசியான பூனை உணவு ஆகியவற்றால் அவள் வழிநடத்தப்படுகிறாள். வெளியே வரும்போது, அவள் இழுத்துவந்த கம்பியின் உதவியால் கம்ப்யூட்டர் ஒயர்கள் அந்த வளைந்து நெழிந்து செல்லும் பாதையில் இழுக்கப்படுகின்றன.” ரேட்டி புகழ்பெற்ற நட்சத்திரத்தைப்போல ஆகிவிட்டாள்; மேலுமாக இன்டர்நெட்டில், “அவளிடமிருந்து” வரும் ஒரு பத்தியும் ஒரு பாட்டும் இருக்கின்றன. திடீரென்று அவள் இறக்க நேர்ந்தால், “நாங்கள் மற்றொன்றை பழக்குவிப்போம். அது வெறுமனே ஒரு எலிதானே” என்று டாக்டர் ரிவஸ் கூறுகிறார்.

உறுப்பறுக்கப்பட்ட சிறுமிகளும், பருவ வயது பிள்ளைப்பேறும்

“ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 20 லட்சம் சிறுமிகள் உறுப்பறுக்கப்படுகின்றனர்” என்று பிள்ளைகளின் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றிற்கான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி வெளியீடான த புராகிரஸ் ஆஃப் நேஷன்ஸ்-ன் 1996 பதிப்பு கூறுகிறது. “எகிப்து, எதியோபியா, கென்யா, நைஜீரியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகள் மொத்த சம்பவங்களில் 75 சதவீதத்திற்கு காரணமானவையாக இருக்கின்றன. ஜிபௌதி மற்றும் சோமாலியாவில் 98 சதவீத சிறுமிகள் உறுப்பறுக்கப்பட்டிருக்கின்றனர்.” வலி உண்டாக்குவதோடுகூட, தொற்று ஏற்படுவது, தொடர்ந்த இரத்தப்போக்கு, மலட்டுத்தன்மை, மரணம் ஆகியவற்றையும் அது ஏற்படுத்தலாம். “உறுப்பறுத்தலை எந்த மதமும் தேவைப்படுத்துவது இல்லை. அது, கன்னித்தன்மையைப் பாதுகாக்கவும் திருமணமாவதை உறுதிப்படுத்தவும் பாலினத்தை கட்டுப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரியமாகும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் பழக்கத்தை சட்டவிரோதமான ஒன்றாக ஆக்கும்படி பெண்கள் உரிமைகளிலும் குழந்தை நலனிலும் அக்கறையுள்ள குழுக்களும் அமைப்புகளும் அரசாங்கங்கள்மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.

அநேக நாடுகளில் பருவ வயது பிள்ளைப்பேறு தொடர்ந்திருக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என மற்றொரு அறிக்கை காட்டுகிறது. உதாரணமாக, வளர்ந்த நாடுகளில் மிகவும் அதிகமான விகிதத்தை உடையது ஐக்கிய மாகாணங்களே: ஒரு வருடத்தில், 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் மத்தியில், ஒவ்வொரு 1,000 பேருக்கும் 64 பிள்ளை பிறப்புகள் ஏற்படுகின்றன. ஒரு வருடத்தில் நான்கு பிறப்புகள் என்ற மிகவும் குறைந்த விகிதமே ஜப்பானில் இருக்கிறது. பருவ வயது பிள்ளைப்பேறு ஒரு இளம் பெண்ணின் வளர்ச்சி, கல்வி, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை பாதிப்பதோடுகூட குழந்தைகளுக்கும் பிரச்சினைகளை—அதாவது, தரம் குறைந்த கவனிப்பு, ஏழ்மை, நிலையற்ற குடும்ப சூழ்நிலை போன்றவற்றை—ஏற்படுத்தலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்